Tuesday 23 April 2019

புத்தக தின வாழ்த்துக்கள் 🐾



எழுத்து,உலக தத்துவங்களுக்கும் சட்டை மாட்டுவதாய் இருக்க கூடாது-சு.ரா..

எழுத்தின் நடையும்,வார்த்தைகளின் லாவகமும் உபயோகிக்க உபயோகிக்கதான் பழக்கத்திற்கு வரும்.


தாம் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும்.பாராட்ட வேண்டும் என்றெல்லாம் இல்லை.(ஆனால் அப்ப்டி நடந்தால் மகிழ்ச்சிதான்...இல்லையென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை..)
அதற்கெல்லாம் மேல் எழுத்தின் மேலுள்ள பித்து அவர்களை ஆட்டி வைக்கும் போது ,அணைத்து முத்தமிடும் போதும்,தேனீர் கோப்பையே நீட்டி அவனை எழுத வைத்தேத் தீரும்..(உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் தேனீர் கோப்பை பெற்ற இடத்தை,பிரியாணி தட்டுகளால் கூட பெற முடியவில்லை...)


தரமான எழுத்துக்களை தேடி படிக்கலாம்.  
மேதாவிகள்..சரி மேதைகள் பரிந்துரைக்கும் எழுத்துகளைப் படிக்கலாம்...மற்றவர்கள் விருதளித்து கொண்டாடுவதை வாசிக்கலாம் என்று இல்லாமல்,
அதையெல்லாம் ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு எந்த வகையான எழுத்துகளில் விருப்பம் என்று தெரிந்தறிந்து ,புத்தகங்களை தேர்வு செய்து வாசியுங்கள்...(எல்லா புத்தகத்தையும் வாசிக்க முடியாதுல நம்மளால).
(மற்றவர்களுக்கு பிடித்திருக்கும் எழுத்துக்கள் தங்களுக்கும் பிடித்திருக்கும் என்றெல்லாம் இல்லை..)


கலைகளில் வழி வலிகள் தீரும்..மாயும்..
புத்தக வாசிப்பு ஒரு வகையான கலைதான்...
வலிகளை தீர்க்கும்.மாய்ந்தே விடும்..
(கலைகளை தேர்ந்தெடுப்பதும்,அதுவே தேடி வருவதும் சுயம் சார்ந்ததே..).

புத்தக வாசிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவெல்லாம் இல்லை..
பிடித்தால் வாசியுங்கள்..(நேரமில்லை என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லாதீர்கள்..பிடித்த விஷயங்களுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்க நம்மால் முடியும்..)


புத்தகங்கள்
பேசும்,தொண்டை வறளச் செய்து அழ வைக்கும்,அரவணைக்கும்,அதட்டும்,கிண்டல் செய்யும்,கிச்சு கிச்சு மூட்டும்,பித்தனாக்கும்,புத்தனாக்கும்..
புத்தகங்களை காதலித்து பாருங்கள்..


எழுத்தாளனை , இறந்த பிறகுதான் கொண்டாட வேண்டுமெல்லாம் இல்லை..

வாசகர்களாவோம்..

பிடித்த எழுத்துக்களையும்,எழுத்தாளனையும் கொண்டாடுவோம்..

புத்தக தின வாழ்த்துக்கள்...


-இப்படிக்கு வாசகி..


No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...