Thursday 28 May 2020

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்..

பட்டாம்பூச்சி கூட்டத்திலிருக்கும் ஒரு பட்டாம்பூச்சிக்கு பிறந்தநாள்....

மொன்ன....

பட்டாம்பூச்சி அவ...
சிறகடிச்சு பறந்துக்கிட்டே இருப்பா...

மொன்ன நீ, ஊர்குருவிலாம இல்ல...
நீ இன்னும் இன்னும் மேல மேல பறந்துக்கிட்டே இருப்ப...

26 வயசாச்சு மொன்ன..

பொறுப்புகள் கை நீட்டி கூப்டுது...
கைய இருக்கமா புடிச்சுக்கிட்டு வாழ்க்கைல நகந்துக்கிட்டே இரு மொன்ன...

எல்லாத்தையும் நிதானமா  யோசிச்சு முடிவு பண்ணு ....

எல்லாரும் திருப்பி அன்பதான் தருவாங்கனு அதிகமா நம்பிக்க வைக்காத மொன்ன...

உன்னோட உணர்வுகள் ரொம்ப இளகுனது....அத தங்கம் மாதிரி பாத்துக்கிறவங்கள்ட நியாயமா காட்டு மொன்ன...

Fit ஆகிட்ட மொன்ன...
26 வயசுல...(இத ஏன்-டி அடிக்கடி சொல்றனு கேக்றியா...விடு மொன்ன...)..

Single girl child மொன்ன நீ...
நிறைய வளந்துட்ட....

சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அழகா அட்ஜஸ்ட் பண்ணி போற...

சூப்பரா பைக் ஓட்ற மொன்ன அதும் அந்த ஊருல...எனக்கு அந்த ரோட்லாம் பாக்கவே பதட்டமா இருக்கும்...

உடலளவுளையும் மனதளவுளையும் நல்ல தேர்ச்சி அடைஞ்சிருக்க மொன்ன...


அந்த மரத்துக்கு நடுல இருக்க மயில் மாதிரி அழகா இருக்க மொன்ன...

நல்லாருப்ப மொன்ன...

நாங்க இருக்கோம் உனக்காக...

We always love you soooo soooo much monna...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொன்ன...

Tuesday 26 May 2020

மாயமான்..






பொய்மான் கரடு -
அமரர் கல்கி எழுதிய அமர இலக்கியம்தான்...
சாகா இலக்கியம்...யாரையும் சாகடிக்காத,யாரும் சாகாத "கொப்பனாம்பட்டி கொல கேஸ் " -விறுவிறுப்பான கதை...

பொய்மான் என்கிற மாயமானைக் கருவாகக் கொண்டு கதை நகர்கிறது...

வெகுளி,கருமியான நாயகன் செங்கோடன் 
தைரியமான  அழகு சுந்தரி செம்பளவள்ளி....

வேகமான கதைக்களம்...
விறுவிறுப்பான கதை....
Asusual கதை திருப்பங்கள்...


இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் என்ன நிகழுமென்பதை உணர்த்தும் ஒரு கதை...

ஆண்களின் புனை சுருட்டை கபளீபரமாக காட்டியுள்ளார்...

கொஞ்சல்கள்....-இன்னும் கொஞ்சம் மிகப்படுத்திருக்கலாம்...ஆனால் அந்த சூழ்நிலையில் வாழும் கதாநாயகனுக்கு கணக்கச்சிதம் இவைதான்...

"என் கண்மணியே! என் செல்லக் கிளியே ஆடும் மயிலே பாடும் குயிலே உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா?


"காதலுக்கு கண்ணில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்...அறிவுக்கூடவா இல்லை"-யோசிக்கக்கூடிய ஒன்றுதான்...


சேலம் - நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த பொய்மான் கரடு. சேலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள பொய்மான் கரடு அமைந்துள்ளது...இப்பகுதியில் அமைந்துள்ள கரடின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் கரடின் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால், அந்த மலையை நெருங்க நெருங்க அந்த மான் இருப்பது போன்ற மாயத்தோற்றம் மறைந்து விடும். அதனாலேயே இப்பகுதிக்கு பொய்மான் கரடு என்று பெயரிடப்பட்டது.

Sunday 24 May 2020

சந்திரிகை...


சந்திரிகையின் கதை...

நீண்ட நாட்களுக்கு பின் நிகழ்ந்த ஏகாந்த வாசிப்பு...
பெரும்பாலும் பாரதியாரின் புத்தகங்களை வாசிப்பது வழக்கமில்லை என்றாலும் சந்திரிகை என்ற பெயர் ஈர்த்து விட்டதால் ,இவ்வாசிப்பு நிகழ்ந்தேறியது...
1904-1905களில் இப்புத்தகத்தின் கதை பெரிய புரட்சியாக நிச்சமிருந்திருக்கும்...
இந்த புத்தகம் அந்த காலத்தின் சமூக நிலையை ,கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எழுதியுள்ளார்...
பெண்...பெண்களைப் பற்றி ,அவர்களின் உரிமை,தைரியம்,பொறுமை,தெய்வீகத் தன்மையை பேசியுள்ளார்...
ஆனால் சந்திரிகை கதை,என்ற தலைப்புதான் எதற்கென்று தெரியவில்லை...
விசாலாட்சிதான் கதையின் நாயகி...
முத்தம்மா துணை நாயகி ....

ஜீவ காருண்யம் ,மகா சுந்தரி, காதலி ராணி,குதலைச் சொல், ரோஜா பூ நகை,பொன் வினை நாதம்,நாகணவாய் புற்கள்,மைக்கூடு,
முகமொற்றி முத்தமிடுதல்,சுவர்க்க போகம்...
வாசித்தலின் சுவைகள் இவைகள்...

திருக்குறள், பகவத் கீதை ,சீவக சிந்தாமணி மேற்கோள் கொண்டு மேலும் இனிமையாக்கியுள்ளார்...
உணவினும் உண்டதறலினிது காமம் புணர்தலின் ஊட லினிது....
இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்."...
கலப்பு திருமணம்,விதவை மறுமணம்,பெண்ணின் பெருமை,பெண்களை பூஜித்தல்,துறவறம் ,இல்லறமன்றி நல்லறமில்லை, மெய்யறிவு,வைத்தியம், பசியின்றி உண்ணுதலின் தீமைகள்,ஊடல்,கூடல்...அனைத்தையும் தெளித்திருக்கிறார்....
பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், "சந்திரிகையின் கதை" முற்றுப்பெற இயலாமல் போனது...
உயிரோடி இருந்திருந்தால்,சந்திரிகையின் கதை தயாராகி இருக்கலாம்....


என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...