Tuesday 23 January 2018

காதலுக்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லை...

Sightகள் பலவிதம் ...ஒவ்வொன்றும் ஒரு விதம்...
Sight அடிக்காதவங்க யாருமே இல்ல..நாம நிறைய பேர sight  அடிப்போம்...🙌🙌

குட்டியா cuteஆ இருக்க பையன்..😜

Manly ஆ handsomeஆ இருக்க பையன்...😜

Rosy lips,chubby cheeks பையன்...😜

முடிதான் அழகுக்கலாம் அழகு...foot board -ல நின்னுட்டு பறக்குற முடிய கோதி விடுறத ரசிக்காத பொண்ணுங்களே இருக்க மாட்டாங்க..😄😄.(இனிமேல் try பண்ணி கால உடைச்சுக்கிட்டா company பொறுப்பேற்காது)😵😵

முறுக்கு மீசை...கள்ளச்சிரிப்பு😉...அப்பட்டமா நம்மளதான் பாக்குறானு காட்டிக்குடுக்கிற கண்ணு...
அரும்பு மீசை..குறும்பு பார்வை...
தாடி வைச்ச பசங்களுக்கு extra marks..

பழம் மாறி இருக்க பசங்களுக்கு அந்த வெகுளித் தனம் கூட அழகுதான்...

இந்த பையன்லாம் நம்ம காலேஜ்லதான் படிக்கிறானங்கிற அளவுக்கு இருக்கும் campus interview getup...
இவ்ளோ நல்ல பையனா ,பால் வடியிற முகம்லாம் பாக்கனும்னா practical exam ஹால் side போனாலே போதும்...

மடிச்சு கட்டுன வேஷ்டி...மடிச்சு விட்ட sleeve...அம்சமான தோரணை.(அதுலயும் முட்டிக்கு மேலையும் இல்லாம கீழயும் இல்லாம லுங்கி கட்டுற style கூட அழகு தான்)..👌👌👌

எவ்ளோ திட்டு வாங்கனாலும் ஈஈஈன்னு இளிக்கிற கெத்தே தனிதான்...😁😁.

விரைப்பா வீராப்பா  திரியுற பசங்க பொண்ணுங்கள்ட பேசும் போது தயங்குற தயங்கு இருக்கே...ப்பா...💖

அதுலயும் பசங்க வெட்க படுறத பாக்க தவமே இருக்கலாம்....💕

ஓரக்கண்ணழகன்கள்தான் அதிகம்....
நாங்களும் ரசிப்போம்...
அழக அழகா ரசிப்போம்...💝


Makeupக்கு மெனக்கெடாம likes அள்ளுவாங்க...(Facebook likesஅ சொல்லல)....💟💟💟

காதலுக்கும் இதற்கும்
சம்மந்தமில்லை என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி முடிக்கிறேன்...👊👊👊👊


Thursday 18 January 2018

கொல்லி மலை-ஒரு நாள் ஜாலி பயணம்

கொல்லி மலை...(சின்னதுதான் ..( மலை பெருசுதான்).வாசிச்சிடுலாம்....(என்னடா எடுத்தோனே மொக்கையா ஆரம்பிக்கிதுனுலாம் யோசிக்காம மேட்ருக்கு போவோம்))



"கொல்லு மலை"யோட திரிபுதான் கொல்லி மலை...(என்னடா இந்தப்புள்ள STDலாம் பேசுதுனு பாக்றீங்களா.😳😳..அது சும்மா ...ரெண்டு லைன் தான்😜😜.)...

பக்கத்து ஊர்தான்னு போய்டு வந்தர்லானு பாத்தோம்..இதுல ஒரு நாய் 2 மணி நேரம் தான் ஆகும்னு சொல்லுச்சு..ஆனா போகவே 4 மணி நேரம்...

எழில்மிகு கொல்லி மலை உங்களை வரவேற்கிறது...(எஸ்...பைய நிரப்பிட்டு கிளம்பியாச்சு...வேறென்ன snacksதான்)...

மலை முழுசும் பனி...பனிய சுத்தி மரம்...(என்ன ஒரே பனிமூட்டமா இருக்குங்கிறதுலாம் பழசு....இந்த season-ல பங்குனி வெயில் பல்ல காட்டிட்டா அடிக்கும்னு நீங்க சொல்றதெல்லாம் புரியுது.👍....இருந்தாலும்😐)...





மொத்தம் 70 பெண்ட் ( சுத்தி சுத்தி..சொய்ங் சொய்ங்....முழுசும் பச்சை...)
பச்சைனாலே ஒரு போதைதான்....💖💖💖💖

வழி-ல ரோஸ்வுட் மரமும்...அத பத்தி ஏறுல மிளகு கொடியும்தான்(மிளகு பறிச்சுக்கிட்டே கையாட்டிகிட்டே சிரிச்சான்....ப்பா...காரத்துலையும் ஈரம்...(கேவலமா இருக்குனு தெரியுது...துப்புனாலும்...😁😁😂ஈஈஈ...)





மூங்கில் தோட்டம் ...மூலிகை வாசம்...மலையோரம் வீசும் காத்து...தென்றல் வந்து தீண்டும் போது....அம்புட்டும் அம்சமா அமைஞ்ச feeling..ப்ப்பா.(என்ன்னா peelinggu-லாம் நோ.....😐😐.)மலை அவ்ளோ அழகு...அம்புட்டும் பச்சை...

கதைச்சுக்கிட்டும் நொறுக்கிக்கிட்டும் 70 பெண்டையும் கடந்தாச்சு....😀

"ஆகாய கங்கை" போய்டு அப்டியே "செம்மேடு" அங்க இருந்து "சீக்குபாறை view point" அப்றம் நேரா மாசிலா அருவி ,சந்தன அருவி,நம்ம அருவிலாம் பாத்துட்டு...............
 வரனும்னுதான் எங்களுக்கும் ஆசை...(ஆனா அன்னைக்கு அமைஞ்சது ஆகாய கங்கையும் அறப்பளீஸ்வரரும் தான்😍😍)











மொத்தம் 1086 படி...ஆக up nd down 2000த்தி சொச்சம் படி....(கூட்டல் கணக்கும் மட்டும்..😁😁.வராது ..அவ்ளோதான்...)
(சிலதுலாம் நீளமா கட்டிட்டு படியா எண்ணியிருக்காங்க பாவிங்க..😢.).

சித்தர்கள் வாழுமிடம்-னு போர்டு..(ஒரு சித்தர் கூட தரிசனம் குடுக்கலப்பா...சரி விடுங்க ..நல்லவங்க கண்ணுக்குதான் படுவாங்க போல...உங்களுக்கும்தான் ..வாய்ப்பே இல்ல😲)....


தோழி ஒருத்தி ஒரு dialogue சொல்லி சேர்த்துக்க சொன்னா..(ஆனா வெரி சாரி மொன்ன...மறந்துருச்சு...😜😜)

ஒரு பாப்பாட்ட இன்னும் எத்தன படினு கேட்டதும் தெய்வம் 20 stepsதான்க்கா-னு சொல்லுச்சு..(ஆனா அது போது 100-அ தாண்டி..என்னா ஒரு வில்லத்தனம்...😠😠)

போய் இறங்குனா worthப்பா..😻👌👌
அருவி...அருவிசாரல் ஏத்துற போதை இருக்கே💖💖..அங்கேயே இருந்தர்லானு தோணும்..(குளிர்ல நடுங்கி செத்துருவனு சொல்றதுலாம் புரியுதுங் சாமி..🙏.)...

தோழிகள் அருவியில் சிட்டுக்குருவியாய் சிறகடித்து மகிழ(இப்டிலாம் எழுதுலனா அடிப்பாளுங்கப்பா😷😷)....

மேல ஏறுறப்ப ஒரு uncle பின்னாடியே வந்தாரு(ன்)...சரி அவரு போகட்டும் ..நாம போலானு நின்னா அந்தாளும் நிக்கிறான்..(இதன் கடுப்பாகுறது...வீட்ல வெளில விட்ட பயப்படுறதே இதான்...சாவடிக்காதிங்கயா...நிம்மதியா வந்துட்டு  போகனும் நாங்களும்🙏)...

மூச்சு வாங்குதுனு நின்னா ஒரு எரும 'வீட்ல நிறைய சாப்டா இப்டிதான் மூச்சு வாங்கும்னு சொல்லுது...(ஆனா அந்த மூதேவியே மூச்சு வாங்குதுனுதான் நிக்குது..இதுல comment ம... வேற.✋👊👊👊.)

அப்டியே மீன் கோவில்-ல (அதான் பா அறப்பளீஸ்வரர் கோவில்-ல) விசிட் அடிச்சுட்டு...ம்ம்ம்..போட்டோ எடுத்து திட்டு வாங்கிட்டு...(சண்டைல கிளியாத சட்டை எங்க இருக்கு)..👚


அப்றம் சொல்ல மறந்துட்டேன்...சித்தர்கள் இன்னும் வாழ்றாங்கனு நம்ப படுற மலை🎆🎆...கோவில் சுவர்-ல பதினென் சித்தர்கள்...(இடைக்காரர் மட்டும்  bigboss -ல task குடுத்த மாதிரி நின்னாருப்பா..நீங்களே பாருங்களேன்..🙇.)



பஸ் ஏறியாச்சு...(ash கலர் சட்டை..சிங்க வெள்ளி மோதிரம்,மூணு நாள் தாடி,முகம் முழுக்க சிரிப்பு,கண்ணுல அவ்ளோ தெளிவு,இன்னும் ஆறு மாசத்துல Himalayas போறான்...இவ்ளோதான் தெரியும் அந்த ஊர்சுத்தி பத்தி....செம்மேடுலையே மனசும் இறங்கிருச்சு🎀🎀)...
வீடு வந்தாச்சு...

Jerkin கேட்டதுக்கு ஜட்டி எடுத்து குடுத்ததுலாம் வேற கதை...💁🙊🙊🙅


(பயணிகள் ஓய்வதில்லை)....






Saturday 13 January 2018

காப்பு கட்டு..

போகி இன்னைக்கு நாள் காப்பு கட்டுறது-ல தான் முடியும்.... தமிழர்கள் அன்னைக்கே எவ்ளோ பெரிய மருத்துவத்த காப்பு கட்டுறதுல வச்சுருந்தாங்கனு பெரிய கதலாம் சொல்லல....சின்னதுதான்...

காப்பு -தற்காப்பு தான் அது   ...அதுல
சிறு பீளை,ஆவாரம் பூ, வெட்பாலை, வேம்பு ல ஒரு ஒரு கொத்து எடுத்து சேர்த்து வீட்டுக்கு முன்னாடி கட்டி வைப்போம்...

வேம்பு -ஆண்டிபயாடிக் நமக்கு நல்லாவே தெரியும்.  ..
வெட்பாலை-தோல் நோய் விரட்டும்...
ஆவாரம் பூ-சக்கரை நோய குறைக்கும்.  உடம்ப பொன்னாக்கும்..
சிறு பீளை- சிறுநீரக கல்ல கரைக்கும்...

இந்த மூலிகைலாம் எல்லாரும் வீட்லையும், வீட்டு பக்கத்துலையும் எல்லா நேரத்தலையும் கிடைக்காது...கிடைக்கிறப்பவே எடுத்து வீட்டுல கட்டி காத்து வைச்சுக்கிறதுதான் காப்பு கட்றது....
சிறுநீரக கல் பிரச்சனை கோடைல தான் அதிகம் வரும்...நைட் நேரத்துல வயிறு வலிக்கிறப்ப கொஞ்சம் சிறுபீளைய உருவி கசாயம் வச்சு குடிச்சிட்டா வலி போய்ரும்..காலைல மருத்துவர போய் பாத்துக்கலாம்...
அம்மை சொல்லவே வேணாம்...வேம்ப அரைச்சு போடுற மருத்துவம் உங்களுக்கே தெரியும்.. வெட்பாலையும் தோல்-ல வர அலர்ஜிக்கு பயன்படுத்தலாம்..ஆவாரம் இலை பூ   காஞ்சத போட்டு குளிச்சா கோடைல வர வியர்வ நாற்றம்லாம் உடம்புல நிக்காம ஓடி போய்ரும்...


சம்மர் இஸ் ஆன் தி வே...தோல் நோய்களும் சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்களும் இஸ் ஆல்சோ ஆன் தி வே....

சொல்றத சொல்லிட்டேன்...ஆமா...அம்புட்டுதான்...

Sunday 7 January 2018

தீவிரவாதம் பற்றிய என் புரிதல்...

இந்தியா என்கிற "ஜனநாயக" நாட்டில் தீவிரவாதம் என்றவுடன் நியாபகத்துக்கு வர வைத்திருக்கிற  இரு அமைப்புகள் "நக்சல், மாவோயிஸ்ட்"....

அரசியல் ஆளுமைகளுக்கு எதிராகவும்,அவர்கள் வாழும் இடத்திற்கும் மக்களுக்கு தீங்கு விளைப்பதை எதிர்ப்பவர்களையும், மக்களுக்கு ஆதரவாகவும் உள்ள அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என்று  அறிவித்துள்ளது இந்த கே.க நாடு..

இயற்கை வளங்கள் கொஞ்சம் எஞ்சியிருப்பது மலைகளிலும் காடுகளிலும் தான்...அங்கு மக்கள் காலம் காலமாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைதான் வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்...

அங்கு இருக்கும் வளங்களை கார்பொரேட் முதலைகளிடம் விற்று பணம் பார்க்க அரசாங்கம் அவர்களை வெளியே போக சொல்வதிலும் ,அவர்கள் மீதும் அவர்களின் வாழ்வாதாராங்களின் மீதும் பெண்களின் கற்பு மீதும் அடக்குமுறை செலுத்துவதில் துளி நியாயமும் இல்லை...

அதை எதிர்த்தவர்கள் தான் இந்த நாட்டில் தீவிரவாத அமைப்புகளாக  அரசாங்கம்  அறிவித்த உள்ள நக்சல்,மாவோயிஸ்டு.. பழங்குடியின மக்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனவற்றின் காரணமும் இதுதான்...

இதை தெளிவாக நமக்கும் சொல்லும் அளவிற்கு ஊடகங்களுக்கும் திராணி இல்லை போலும்...

வன்முறை மூலம் போராடும் போராளிகள் தான்..
வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல...
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அரசாங்கம் வழிவகுத்தாலும்(  கல்வி,உணவு, உறைவிடம்,மருத்துவம்,போக்குவரத்து போன்றவைகளுக்கு வழிவகை செய்தாலே போதும்....)இல்லையென்றால் அவர்களை சுரண்டாமல் வாழ விட்டாலே இந்த இயக்கங்கள் இல்லாமல் போகும்...


ஆனால் அதற்கெல்லாம் நல்ல அரசியல் தலைவர்கள் தேவை...அவர்களெல்லாம் dinosaur காலத்துலயே அழிஞ்சு போய்ட்டாங்க ....
இந்தியா கார்போரேட் முதலாளிகளுக்கும்,அன்னிய சந்தைக்கும் அடிமையாய் இருக்கும் வரை பெரிதாக ஒன்றும் மாற வழியில்லை...

(தொடரும்)



Saturday 6 January 2018

Subscribe list.......



Yes...YouTube subscribe channels தான்....
மங்களகரமா ஆரம்பிப்போம்...
Vidya vox:💃💃
       ப்ப்ப்பா.....அந்த பொண்ணோட western & classic style தான் செம...dressing சொல்லவே வேணாம்..டார்லிங் கலக்கும்...English +தமிழ் மாத்தி மாத்தி பாடுற அழகு இருக்கே...அந்த மொழிக்கே இறக்க முளைச்ச மாதிரி இருக்கும்...(sorry song,kuttandan punjaiyile,pallivaalu badravatakkam லாம் பிண்ணல்ஸ்...)🎆🎇

https://youtu.be/eiGdsH1g20k

Madan gowri:
        இந்த பையன்-ட என்னா topic குடுத்தாலும் பேசுறான்பா....
        ‎short and sweet ah ...திருக்குறள் மாதிரி பத்து நிமிசத்துக்கு மேல video இழுக்காம m.b waste பண்ணலனு திருப்தி இருக்கும்....🎭🎭

https://youtu.be/qB7ZfewzUFs

Fully filmy:
         இந்த channel none other than கார்த்திக் சிவக்குமார்-காக தான்...
         ‎அப்டியே GVM -கிட்ட டியூஷன் படிச்ச பையன் மாதிரியே பேசுவான்...ஆம்பள பசங்களும் ரசிக்கலாம்...🎬🎬🎬

https://youtu.be/xF0GTALosks

Saurav sinha:
        ஒரு குட்டி cute பையன்...பக்கத்துவீட்டு பையன் மாதிரி தான் இருப்பான்...ஆனா பயங்கர சுட்டி...அழகா photography technique சொல்லிக்குடுக்கும்..(வயசு பொண்ணுங்க sight அடிச்சுக்கிட்டே பாக்கலாம்)....📹📷🎥🎬
https://youtu.be/8dj_UZKnO9M

LMES:
         என் Scl,CLG டீச்சர் கூட இவ்ளோ நல்லா சொல்லிக்குடுத்தது இல்ல....(😪😪😪😪)...என்ன மனுசன் யா....
         ‎scinirosh-ம் நல்லார்க்கும்...👔🎓(இவரு பேசுற தமிழ் ....செமயா இருக்கும்ம்..)
https://youtu.be/O37N4Bm4lo8

https://youtu.be/XvSOXj1ikKs

Jeya raveendran:
            இவங்க dance crew-வே செம தான்..Jeya style...அந்த குட்டிப்பொண்ணு twinkle -காகவே பாக்கலாம்...என்ன்ன்ன்னா attitude....💖
💖💖💃
https://youtu.be/qvUoBHaLhbw

M.N. projects:
             இவரு பண்ற எல்லா DIY,அந்த clock பண்றது,கத்தி பண்றதுலாம் worth watching-ஆ இருக்கும்....👍👍👍👍
https://youtu.be/GV1owmHwzJI

Blush with me - parmita:
           Photoக்கு எப்டி எப்டிலாம் pose தர்லானு அழகா சொல்லிக்குடுக்கும் அந்த அக்கா....👏👏👏
https://youtu.be/j-7_FCkD7O0

Viren kariya:
            Anatomy class கட் பண்ணவங்களோட தெய்வம்-னே சொல்லலாம்..அவ்ளோ தெளிவா explain பண்ணும் இந்த தெய்வம்....கொஞ்சம் bore தான்...ஆனா anatomyல...(நீ காட்டும் bone மட்டுமா அழகு....உன் விரல் கூட ஒரு அழகு)....👆
https://youtu.be/7OaCsyi4hZA


Nakshatra productions:
             Agri nandini -பாட்டுக்காகவே extra marks....drums வாசிக்கிற பையன் ப்ப்ப்பா....videography ..editing, blendingலாம் செம...👌👌👌https://youtu.be/EbcdDXEPukk
 
ஏன்-டா இந்த புள்ள சம்பந்தம் இல்லாம் பேசிட்டுருக்குனுலாம் பாக்காதிங்க...😑😑
YouTube -ல இருக்க அம்புட்டு வீடியோவும் பாக்க நம்ம ஜென்மம பத்தாது...அப்டியே உங்களுக்கு புடிச்சதயும் suggest பண்ணா....அல்லாரும் பாத்துக்கலாம்ங்கிற நல்ல எண்ணம்தாம்..🙋🙋🙋🙈🙉🙊



Thursday 4 January 2018

குட்டி பயணம்..குட்டி தேவதைகளோடு.....😘

திரவியங்களைத் தேடிதான்  திடீர் திடீர் பயணங்கள்..(ஆஹான்-லாம் சொல்லப்பிடாது என்னல💁💁)

வழக்கம்போல் "பாப்பின்ஸ் ,ஆரஞ்சு மிட்டாய்" என்ற பரிச்சயமான ராகத்துடன் தான் இனிப்பாய் இனிதாய் தொடங்கியது ...
(எஸ்...சேம் தட் திருநெல்வேலி-2nd platform😴)

வெள்ளி மேகங்களில் துள்ளிக் குதித்துக்கொண்டே குதுகலமாய் குட்டி பேருந்து பயணம்
(மேகம் சத்தியமா கீழ விழல..எப்பூடி..யாருகிட்ட😇💪)

வல்லநாடு-புள்ளி மான் சரணாலய வனத்திலே தொலைந்துபோய் மீண்டும் பயணம் தொடர்ந்தது(அதான் அதே comment  தான்😬😬)

உப்பு காற்றுடன் கலந்த கடல் வாசம்...-தூத்துக்குடி வந்தாச்சு..😁

கடற்கரை செல்லும் வழி-இருபுறமும் கடல் ...நடுவில் பாதை(ஆமா Ecr தான்...ஆனா சின்னது...🌊🗻)

15 நாட்களாக விளையும் உப்பு பற்றிய 15 நிமிட கதை(பக்கத்துல உக்கார்ந்துருந்த அக்காதான்)

மிகப்பெரிய அண்டாவிலுருந்து மேகத்துடன் கலந்த புகை☁☁(அதுதான் அனுமின் நிலையமாம்..எனக்கும் ஆஹான் moment தான்🎅🎅)

ரோச் பூங்காவில்(ரோச் தான்...ரோஸ் இல்ல)
கடல் பாதை குட்டி பாறை தான் உச்சம்...👌👌

கடற்கரை வந்தாச்சு🌊🌊🌊...

ஆதவன் 🌞அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த பொழுதிலும்..
குளிர்ந்த தென்றல் மேனி பூசியது🌌..

பாதி பெயரை எழுதுகையிலே அலை🌊 வந்து ..வந்து..
...
....
வர்லயே ..எழுதிட்டனே💪💪....

குட்டி குட்டி சுயமிகள்📷...
நிறைய நிறைய சிரிப்புகள்😹😹...
கடல் ஆராய்ச்சியாளர்களை மிஞ்சிய தருணங்கள்....(தட் சேம் டயலாக்,இவரு பெரிய கப்பல்⛵ வியாபாரி...

ச்சரி..பரவால.. தொடச்சாச்சு😼😼)

குட்டி சங்கு பித்து கொண்டு சேகரித்த குட்டி குழந்தைகள் கொஞ்சம்💂💂...

கரை ஒதுங்கி மாய்ந்த பல ஆன்மா கண்டு கவலைபட்டு நகர்ந்தும் ..நகராமலும்.😾😾...(நீ ..இத நாங்க நம்பனும்...

வேற வழி இல்ல...நம்பிதான் ஆகனும்👶)..

பறவைகளிடம்  போட்டோக்கு போஸ் கெஞ்சியதெல்லாம் வேற கதை🙅🙇(நாம அவ்ளோ  terror pieceலாம் இல்லீயே...அப்றம் ஏன் moment தான்😭)

சிகை அலங்காரம் 👸பார்த்து "அது எப்டீனு சொல்லி தரியாமானு" கேட்ட அக்கா(...நானாக்கா...இந்தா சொல்லித் தரேன்...🙋🙋)

10 ATM  🏦சென்று 11 வதில் பணம் கிடைத்த மகிழ்ச்சி(மோடி எரும ..உன்னாலதான்😏😏)

நீ நிறைய சாப்டல...நிறைய நேரம்தான் சாப்ட்ற என்று சிதம்பர ரகசியத்தை உடைத்த தோழி😌😌....

நான் எப்பதான் சாப்டு முடிப்பேனு காத்திருந்த சரவணன்🙅...
(அட ,அந்த கடைக்காரன் பையன்பா😿...பில் பில்காக)


காபி🍵 வேண்டும் என்றதும் முடியாது ..அதலாம் வேண்டாம் என்று மறுத்த தோழி👭(எனக்கு பித்தம் அதிகமாம்..
நம்ம health மேல எம்புட்டு அக்கற..எங்கம்மா (not சின்னம்மா😜) இருந்த இவ்ளோ நாளா பீலிங்கு😭😭)

ஜன்னலோர பயணம்🚌...அழகியலாக முடிந்தது💖...

..

இ.புத்தகம்...( E.book)உம் அச்சு புத்தகமும்..


     
 Digital படிப்பினை பற்றியது...(எதுக்குடா....அப்டினா அப்புடியே அடுத்த போஸ்ட்டுக்கு தாவிருங்கோ....ச்ச ச்ச...நா தப்பா நினைச்சுக்க மாட்டேன்)...

          ‎எனக்கு தெரிந்தளவில் 96 க்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு( சரி விடுங்க...இளைஞர் இளைங்கிகள்) கைபேசிலயோ கம்பியூட்டர்லயோ PDF ஆ இருக்க e- book-அ படிக்க நம்மள மாறி ( 95 க்கு முன் பிறந்த குழந்தைகள்) வெசனமெல்லாம் படுற மாதிரி தெரில...அசால்டா படிக்கிறாங்கோ...ஆனா எந்தளவுக்கு உள்ள போகுதுனு தெரில...(நமக்கெதுக்கு....)


புலம்பல்ஸ்:

95: இந்த e- book லாம் மனுசன் படிப்பானா....கண்ணு வலிக்குது...எப்டினாலும் பத்து பக்கம் தாண்டாது...என்னதான் இருந்தாலும் printed book மாதிரி வருமா...அது சுகம்யா..(படிக்கவே புடிக்காது அப்டிங்கிறவங்களாம் தெய்வ நிலை..)...


அலம்பல்ஸ்:


96:PDF இருக்காடி...மச்சி e- book அனுப்பேன்...(exam hall -அ கூடலாம் ஈசியா பிட் அடிக்கிறாங்கயா...பிட்டே ரெடி பண்ணாம)..


            நிறைய plus தான்.. நிறைய புத்தகம் இலவசமாவே தரவிறக்கத்துக்கு கிடைக்குது...சுலபமா அனுப்பிக்கலாம்..காசு தேவை இல்ல...அவ்ளோ பெரிய புத்தகத்த கைல தூக்க தேவ இல்லை..ஆனா கண்ணோட நிலைம-பெரிய zero...(என்னையும் சேர்த்துதான்)...


உடம்ப நல்லா பாத்துக்கிட்டு தேவையானத  முடிஞ்ச வரைக்கும் இரவு நேரத்துல பயன்படுத்தாம (அட ,light off pannitu mobile use பண்ணாதப்பா...)வெளிச்சம் இருக்கப்ப படிச்சுட்டு வச்சுருங்கோ என்ன....


இம்புட்டும் எதுக்குனா இன்னைக்கு எனக்கும் கொஞ்சம் e- book link நண்பர்கள் மூலமா கிடைச்சது...(ஆமா ....free தான் free தான்)...


லிங்க் கீழே( சத்தியாமா புக் லிங்க் தான்...வேறன்னு ஏமாந்து போய்ட்டா நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்)


கட்ட கடைசி புலம்பல் of me:ஆயிரம் இருந்தாலும் printed book மாதிரி வராதுல...ச்ச..(its okay ..u carry-on)


Tamil books:
http://freetamilebooks.com/
http://ilakkiyam.com/
சித்த மருத்துவம்:
http://www.tknsiddha.com/medicine/siddha-books-free/
Engg:travel:arts and photography and etc.....=>
www.pdfdrive.net
மருத்துவ துறை:
*Complete package including links to download all the pdf books you will need :-
Anatomy:
1--> KLM for Gross Anatomy
2--> Snell's Anatomy
3--> BD Churassia
4--> RJ Last
5--> Grey's Anatomy
6--> Langman Embryology
7--> KLM for Embryology
8--> BD For General Anatomy
9--> Dissector
10--> Di Fore Histology
11--> Junqueira's Histology
12--> Netter Atlas of human Aantomy
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LYV9KQ3lxY29FY28
Physiology:-
1--> Guyton
2--> Ganong
3--> Sheerwood
4--> Sembulingam
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LdXlCSjdZM214dEE
Biochemistry:-
1--> Harper
2--> Lippincott
3--> Chatterjea
4--> Satyanarayan
5--> Stryer
6--> MRS Biochemistry
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Ld0o3WnhCR2VEczg
Pathology:-
1--> Big Robins
2--> Medium Robins
3--> Pathoma
4--> Goljan
5--> Harsh Mohan Pathology
6--> Atlas of Histopathology
7--> Levinson
8--> MRS microbiology
9--> Microbiology by Jacquelyn G. Black
10--> Color Atlas of Microbiology
11--> Kaplan Pathology
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LYkRYdjFrTm5MR0U
Pharmacology:-
1--> Big Katzung
2--> Mini Katzung
3--> Kaplan Review
4--> Lippincott
5--> Pocket Katzung
6--> Rang and Dale's Pharmacology
7--> Atlas of Pharmacology
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LMkE1UUVRZGwtTlU
Forensic Medicine:-
1--> Simpson's Forensics
2--> Krishan's Forensics
3--> Atlas of Autopsy
4--> Atlas of Forensic Medicine
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LQXVwOGoyWnFSV2s
Ophthalmology:-
1--> Jogi
2--> Jatoi
3--> Parson's Textbook of Eye
4--> Kanski
5--> AK Khurana
6--> Atlas of ophthalmology
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LOHc5WVZMdkJjX2M
Otorhinolaryngology:-
1--> Dhingra
2--> Logans Turner
3--> Color Atlas of Otorhinolaryngology
4--> Maqbool's Text Book of ENT
5--> Clinical Methods in ENT by PT Wakode
6--> ENT at a Glance
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LaDY2a0lFNDlfTGc
Community Medicine:-
1--> Monica's Text Book Community Medicine
2--> Mahajan And Gupta Text Book of Community Medicine
3--> Bancroft's Text Book of Community Medicine
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Lc1RCMml2NjhFNjA
Medicine:-
1--> Churchill's Pocketbook of DD
2--> MTB Step 2 Ck
3--> Davidson Essentials
4--> Davidson Principals and practice
5--> Harrison's Internal Medicine
6--> Internal Medicine USMLE Nuggets
7--> Internal Medicine on call bt LANGE
8--> Oxfords Specialties
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LeEFJNG5TMlc4eWc
Surgery:-
1--> Bailey_love short practice of Surgery
2--> Churchill's pocketbook of Surgery
3--> Deja Review of surgery
4--> Farquharson's Textbook of Operative General Surgery
5--> Hamilton Bailey’s Physical Signs
6--> Oxford Handbook of Clinical Surgery
7--> Schwartz's Principles of Surgery
8--> Macleod's Clinical Examination
9--> Macleod's Clinical Diagnosis
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LRFpFSG5hZ1pVWkE
Obstetrics & Gynecology:-
1--> Case Discussions in Obstetrics and Gynecology
2--> Deja Review of Obstetrics Gynecology
3--> Obstetrics by Ten Teachers
4--> Gynaecology illustrated
5--> Gynaecology by Ten Teachers
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LMU1LRjFDa1FrbjA
Pediatrics:-
1--> Nelson Essentials of Pediatrics[
2--> Nelson Complete
3--> Pediatrics Review
Folder link--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LUkdTQkVuNV92Yzg
1st Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0Lay1HT1d5Yks5V0U
2nd Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LemtmYXpYMGlydVk
3rd Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LWmlCSHBpUFpPZU0
4th Professional Books--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LbnJvUzk3NHRhWWc

One Link For All eBooks--> https://drive.google.com/open?id=0B3WdpdsqpX0LQW5tbWEtUmJJY0k

Tuesday 2 January 2018

ஆயுஷும் அல்லோபதியும்

ஒரு வருசம் bridge course படிச்சுட்டு ayush மருத்துவர்கள் அல்லோபதி practice பண்ணலாம்ங்கிற ஒரு  NMC..எல்லா M.B.,B.S., மாணவர்களும் பொங்குறாங்க...அப்ப 5 1/2 வருசம் அல்லோபதி மருத்துவம் படிக்கிற நாங்க என்ன சொம்பையானு...அதானே...மருத்துவம்ங்கிறதே ஒரு சேவை..அத வியாபார நோக்குல பாக்க ஆரம்பிக்குரதுல இருக்கு இந்த பொங்கல்ஸ்... எல்லா நேரமும் AYUSH மருத்துவன் அல்லோபதி மருத்துவம் அளிக்கப்போறதில்ல...அது அவன் படிச்ச மருத்துவத்துக்கு பண்ற துரோகம்னு அவனுக்கு தெரியும்...அல்லோபதி உச்சத்துக்கு போனதுக்கு காரணம் அவசர சிகிச்சை முறைங்கிறத மறுக்கவே முடியாது... அவங்களுக்கு ஏத்த மாதிரி விபத்தும் விபத்துக்கான காரணமும் அதிகரிச்சுருச்சு...

அப்ப மத்த துறை (engg. Arts) படிச்சவனும் இந்த ஒரு வருசம் bridge course படிச்சுட்டு டாக்டர் ஆகிருட்டுமே....

ஒரு engg arts படிக்கிறவனுக்கும் ayush படிக்கிறவனுக்கும் வித்தியாசம் இல்லையா...

மக்களுக்கு மருத்துவத்த ஒரு சேவையாவும் இந்த சமூகத்த நோயில்லாம கொண்டு போகனும்னு நினைக்கிற எவனும் இப்டி பேசமாட்டானுங்க...

அல்லோபதில ஒரு ayush(eg.Himalaya company drugs) prescribe  பண்றதில்லனு சொல்லிருங்க பாப்போம்...

கார்ப்பரேட் கம்பெனி owners மாறியும் , businessman மாறியும் பேசுறீங்க....

மறுபடியும் சொல்கிறேன்
மருத்துவம் வியாபாரம் இல்லை.....

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...