Wednesday 15 January 2020

🚲 மிதிவண்டி பயணங்கள்...💝

 ஈருருளி...(சைக்கிள்)


(History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க...
)
சைக்கிள் பெல்...

அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்னு கொஞ்சம் கூச்சத்தோட கூச்சல் கலந்தாற்போல படபடப்பான ஒரு வகையான நல்ல ஓசை...

அத கேட்டதும் அட்ரீனலின் சுரக்க ஆரம்பிச்சுடும்..(இது இப்போதைக்கு தேவ இல்ல..நாம விஷ்யத்துக்கு போவோம்..).

இப்போ இருக்க கிட்ஸ் பத்தி அவ்ளோவா தெரில..
நா கிட்-டா இருந்தப்பலாம்...இதான்...

அப்பாயி ஊர்ல,பிரபு அண்ணானு ஒருத்தர் இருப்பாரு..நல்ல உயரம் ..வாட்ட சாட்டமா இருக்க ஒரு வாலிபர்னு கூட சொல்லலாம்..
எப்பவும் கைல ரெண்டு மகாலேக்டோ சாக்லேட்னாச்சும் வச்சுருப்பாரு...(அவரு ஆளு பேரு மகா..💙)..அந்த அக்கா வீட்ட தாண்டி போகும் போதெல்லாம் அந்த சைக்கிள் பெல் அடிப்பாரு...அந்த அக்காவும் கரெக்ட்டா வந்து பாக்கும்..


நா குட்டி புள்ள..சைக்கிள் பெல் அடிச்சதும் ,ப்ரியானு கூப்டுவாரு...
சொல்லு பிரபுனு சொன்னா...சும்மா கூப்டேனு சொல்லிட்டு போய்டுவாரு...

காலாண்டு அரையாண்டு லீவுலாம் இதான் நடக்கும்..
என்னோட லீவு முழுக்க அப்பாயி ஊர்லதான்..
பெரிய புள்ள ஆகுற வரைக்கும்..

இப்போ பிரபுக்கு சொட்டலாம் வந்துருச்சு..மாமா வீட்டு விஷேசத்துல ,மகா இல்ல அந்த அக்கா,வேறொரு அக்கா கூட வந்திருந்தாரு...

ஆனா அதே சைக்கிள் பெல் சத்தம்..மகா லேக்டோ வாசம் இன்னும் ரெண்டு பேருக்கும் நினைவுல இருக்கு...

குட்டி குட்டி பசங்கலாம்,வேற மாதிரி அந்த பீம்பாம் சவுண்ட் வர மாதிரிலாம் செட் பண்ணிப்பாங்க...பாட்டுலாம் ஓடுற மாதிரி.. ஆசையா இருக்கும்..

எட்டாங்கிளாஸ் படிக்கும்போது ,சைக்கிள் வாங்கி தந்தாதான்  ஸ்கூல்க்கு போவேனு அடம் புடிச்சு சைக்கிள் வாங்குனேன்...

குட்டி வாடகை சைக்கிள்-லதான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்...1மணி நேரத்துக்கு நாலு ஒரூவா..தாத்தா கடைக்கு பக்கத்து கடை..

சைக்கிள் ஓட்றதே ஒரு நல்ல உணர்வுல...அதும் கைய விட்டு ஓட்டி பாக்றது..இந்த வித்தக்காட்ற வேலலாம்..எதோ பெருசா சாதிச்ச மாதிரி...

அப்பாவோட பெரிய சைக்கிள்-ல குரங்கு பெடல் போட்டு ஓட்டி கீழ விழுந்த தழும்பு 90% 90ஸ் கிட்ஸ்க்கு இருக்கும்ல...

பெல் அடிக்கனும் அவசியமே இருக்காது..ஆனாலும் சும்மா அடிச்சுக்கிட்டே போறது...
காலைல 6 மணிக்கு டியூசன்..நீயூஸ் பேப்பர் போடுற பையன் பெல் அடிச்சுதான் நியூஸ்பேப்பர் போட்டுட்டு போவான்...

அந்த பால் ஊத்த வர அண்ணா வண்டி சவுண்ட் ... அத்தைப் பொண்ணோட கொலுசு சத்தம்... அம்மாவோட நடை சத்தம்..அதுலாம் பதிஞ்சு போய் இருக்கும்.. தனியா கேக்கும்ல காதுல..

சைக்கிள் பெல்...சைக்கிள் பெல்..மறந்துட்டேன் பாருங்க...

கோவம் வந்தா டொக்க் டொக்குனு அதேயே தட்றது..
அம்மா ஸ்கூல்க்கு லேட் ஆச்சு,சீக்கிரம் லன்ச் பேக் எடுத்துட்டுவானு அடிச்சுக்கிட்டே இருக்றது...
சைட் அடிக்கிற பையன் வீட்ட தாண்டிப்போகும்போது ரெண்டு தட்டு தட்றது....
ரோட்ல அவ்ளோ கும்பல் இருக்காது..என்னமோ நாமதான் எல்லாரையும் காப்பாத்த போற மாதிரி அத்தன தட்டு தட்றது....
Frnd முன்னாடி போனான சைக்கிள் பெல் அடிச்சுதான் கூப்பிடுறது...

இப்டியே நிறைய...

ஸ்கூல் cycle stand ல நின்னுட்டுதான் அவ்ளோ கத பேசுவோம்..அவ்ளோ நேரம் இருக்கும்..ஆனா கெளம்பும்போது நேரமே பத்தாது கத பேசி முடிக்க...

காத்து புடுங்கி விட்றது..பஞ்சர் பண்ணி விடுறது...கை புடிக்கிற இடத்துல மெஹந்தி தடவி விட்றது...சைக்கிள் கூடைல லெட்டர் போட்டு விளையாட்றது...(க்ளாஸ்ல இருக்க எல்லோரோட கையெழுத்தும் இருக்கும்..).
சைக்கிள் ல sticker ஒட்றது...வீல்க்குலாம் ஜிகு ஜிகு பேப்பர்லாம் ஒட்டுவாங்க...
சைக்கிள் jewellery... ம்ம்ம்ம்..
சைக்கிள் செயின்ல ஷால் மாட்டி,அத எடுத்துவிட்டுலாம் நட்பு அமைந்ததெலாம் வரலாறில் உண்டு.

குழந்தைகள உக்கார வச்சுட்டு போக ஒரு கூட இருக்கும்...
குட்டி புள்ளைல அப்பா அதுலதான் உக்கார வச்சு கூட்டிட்டு போவாரு...அந்த குட்டி சீட்ல...அவரோட முன்னாடி ஹேண்ட்பர்ல மாட்டிருக்கும்..கதை சொலிக்கிட்டே கூட்டிட்டு போவாரு...
(அந்த தவமாய் தவமிருந்து படத்தெல்லாம் யோசிக்காதிங்க...அத விட கம்மிதான்)...ஊருக்கு போன தாத்தா இருந்த வரைக்கும் சைக்கிள்-லதான் வந்து கூட்டிட்டு போவாரு பஸ்ஸ்டாப்ல இருந்து வீட்டுக்கு..


எல்லாரோட வீட்லையும் சைக்கிள் இருக்கும்ல..(எதுக்கு இந்த குட்டி இப்ப நெஞ்ச நக்குதுனு பாக்காதிங்க... நேரம் போகனும்ல...)..



இந்த லேடி பேர்ட் சைக்கிள் வாங்கிடனும் இன்னும் ஆசை...வாங்கனும் கண்டிப்பா...

வாங்கி sticker ஒட்றோம்ம்...











No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...