Sunday 24 May 2020

சந்திரிகை...


சந்திரிகையின் கதை...

நீண்ட நாட்களுக்கு பின் நிகழ்ந்த ஏகாந்த வாசிப்பு...
பெரும்பாலும் பாரதியாரின் புத்தகங்களை வாசிப்பது வழக்கமில்லை என்றாலும் சந்திரிகை என்ற பெயர் ஈர்த்து விட்டதால் ,இவ்வாசிப்பு நிகழ்ந்தேறியது...
1904-1905களில் இப்புத்தகத்தின் கதை பெரிய புரட்சியாக நிச்சமிருந்திருக்கும்...
இந்த புத்தகம் அந்த காலத்தின் சமூக நிலையை ,கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எழுதியுள்ளார்...
பெண்...பெண்களைப் பற்றி ,அவர்களின் உரிமை,தைரியம்,பொறுமை,தெய்வீகத் தன்மையை பேசியுள்ளார்...
ஆனால் சந்திரிகை கதை,என்ற தலைப்புதான் எதற்கென்று தெரியவில்லை...
விசாலாட்சிதான் கதையின் நாயகி...
முத்தம்மா துணை நாயகி ....

ஜீவ காருண்யம் ,மகா சுந்தரி, காதலி ராணி,குதலைச் சொல், ரோஜா பூ நகை,பொன் வினை நாதம்,நாகணவாய் புற்கள்,மைக்கூடு,
முகமொற்றி முத்தமிடுதல்,சுவர்க்க போகம்...
வாசித்தலின் சுவைகள் இவைகள்...

திருக்குறள், பகவத் கீதை ,சீவக சிந்தாமணி மேற்கோள் கொண்டு மேலும் இனிமையாக்கியுள்ளார்...
உணவினும் உண்டதறலினிது காமம் புணர்தலின் ஊட லினிது....
இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்."...
கலப்பு திருமணம்,விதவை மறுமணம்,பெண்ணின் பெருமை,பெண்களை பூஜித்தல்,துறவறம் ,இல்லறமன்றி நல்லறமில்லை, மெய்யறிவு,வைத்தியம், பசியின்றி உண்ணுதலின் தீமைகள்,ஊடல்,கூடல்...அனைத்தையும் தெளித்திருக்கிறார்....
பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், "சந்திரிகையின் கதை" முற்றுப்பெற இயலாமல் போனது...
உயிரோடி இருந்திருந்தால்,சந்திரிகையின் கதை தயாராகி இருக்கலாம்....


No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...