Wednesday 20 February 2019

மை பேனா....✒😍😘



பேனாவென்றால்  அவளின் நீள் விருப்பம்...
யார் வைத்திருந்தாலும் கூச்சமே இல்லாமல் வாங்கி எழுதிப்பார்த்து விட்டுதான் தருவாள்...இல்லையென்றால் உங்கள் நியாபகமாக வைத்துக்கொள்கிறேன் என்று தனதாக்கி கொள்வாள்...(பயித்தியம்....அப்டினுலாம்.....நோ....ஷ் ஷ்.....😂)

ஈஈஈஈஈ...அந்த அவள்...வேறாருமில்லை...நாதான்...😋

சிலேட்டு குச்சி,காயித குச்சில இருந்து promotion கிடைச்சது.....இன்க் பேனா...ஹப்பாடா நாமளும் பெரிய புள்ளையாகிட்டோம்..(ஒவ்வொரு கட்டத்துலையும் எதோ ஒன்னு நமக்கு பெரிய புள்ளையாகிட்டோம்ங்கிற உணர்வ உண்டாக்கும்....அதுல ஒன்னுதான் இந்த பேனாவும்..).💃💃💃📝✏

இன்க் பாட்டில்-லாம் வீட்ல இருக்காது...
தாத்தா கடைல வரிசைல நின்னு இன்க் ஊத்தனும்...🙋💁
அரை பேனா நிரப்ப 25 காசு..முழு பேனா நிரப்ப 50 காசு..🙄
புது பேனா வாங்குனா ink free...(வீட்ல குடுக்கிற 1 ரூவால பாதி அதுக்கே போய்டும்..)🙁
(சில்றையா குடுத்தா...தப்பிச்ச...இல்லனா மீதிக்கும் சில்ற இல்லனு எதோ முட்டாய் குடுத்து விட்டுருவாரு அந்த வெள்ள மீசை)😏

Ink சுதி சுத்தமா ஊத்துறது எவ்ளோ பெரிய டாஸ்க் தெரியுமா...ஊத்திப்பார்....
....(கண நேர கவனச்சிதறலும்  கததான் அப்றம்..)💯

...

நிப்-ஆ  அ அ ஆ அப்டி பதுசா கீறி விடுறது...🎶

இன்க் ஒழுகிட்டுனா...
அச்சோ! கிச்சோலாம் இல்ல...தலைல தேச்சுட்டு அசால்ட்டா நகந்துருவோம்.....😎

சொட்டு சொட்டா கடன் வாங்குறது..குடுக்கிறது....நாம உறிஞ்சனும்-னு நினைக்கிறதுக்குள்ள பேப்பர் உறிஞ்சுறும்....எல்லாம் விதி!!!! அடுத்த பக்கம் இருக்க புள்ளைய பாக்கனும்....அது என் கிட்டையே கொஞ்சம் தான் இருக்குனு பஞ்ச பாட்டு பாடும்....நாம கெஞ்சனும் வேற...🤗🤗😅

ஒவ்வொரு முழாண்டு பரிட்சை முடிஞ்சதும்....இங்க் அடிச்ச சட்டையோட தான் வீட்டுக்கு போனும்....(இல்லனா பரிச்சைல பெயில்தாண்டி மவனே....)😅😅😅

வகை வகையான பேனாக்கள்...😻😻

5 ரூவா பேனா..
கண்ணாடி பேனா..
கலர் கலர் பேனா...
குண்டு காம்லின் பேனா...😻
குச்சி காம்லின் பேனா...


இதலாம் கடந்ததான் அந்த hero பேனா....(பணக்கார பேனானுலாம் நினைச்சதுண்டு)...
🕵🕵

அந்த பள்ளிக்காலத்தில் பால் பாய்ண்ட் பேனாவென்றால் ஆசையாக இருக்கும்...🙆

பன்னாடாங்க் கிளாஸ் பப்ளிக் பரிட்சையோட இங்க் பேனாவின் அத்தியாயமே முடிந்திருக்கும் நம்மில் பலருக்கு...🙆🙆🙆

பிறகு....கல்லூரி...
இங்க நோட் வச்சுருக்கிறதே பெரிய விஷ்யம்...இதுல பேனா வேறவாக்கும்..💆💆

இங்க் ஊத்துற பேனாலாம்...ஜோல்னா பை...காட்டன் வேஸ்டி...குர்த்தா....எண்ணெய வச்சு  வகிடு எடுத்த தலை...இந்த வரிசைலதான் இருக்கும்னு நினைப்பு வேற...(அராத்து சாரு போன்றோர்களையெல்லாம் யான் அறியவில்லை பராபரமே)..🙇🙇🙇

மீண்டும்....அடுத்து ஒரு கல்லூரி....
இங்குள்ள சிறுவர்கள் இங்க் பேனாவில்தான் record நோட் எழுதினார்கள்...🚶🚶🚶
நான் ball point பேனாவில் எழுதி புரட்சி செய்துவிடலாமென்றெல்லாம் எண்ணியதுண்டு...(ச்சிரிக்காதலே)....🏃🏃🏃🏃


அன்னைக்கும் வழக்கம் போல பேனா எடுத்துட்டு போல...ஆனா எழுத சொல்றாங்க...(நோட்டாவது எடுத்து போனியானு கேக்றிங்களா...அதலாம்....ம்ம்ம் ம்ம்ம்ம்...பக்கத்து புள்ளைட்ட நடுப்பக்க பால் பேப்பர் கடன் வாங்கியாச்சுல...)
👭👭
ரோகிணி பேனா குடுத்தா....ம்ம்ம்ம்..புளு கலர் பார்க்கர் பேனா...😍எழுத்து வழுக்கிட்டு போது....அழகா நகருது ஒவ்வொரு நகர்வும்...எதற்கும் பாரமில்லாமல்.....
அன்றிலிருந்தே அதன் மேல் ஒரு ஈர்ப்பு...(திருடலலாம் இல்ல...🙄)✌

நமக்கு புடிச்சவங்க என்ன பண்ணாலும் நம்மல அறியாமலே அந்த பழக்கம் நம்மள ஒட்டிக்கும்..அந்த சாரும் இன் க் பேனாதாம் பயன்படுத்துவாரு....👍👍✌

நானும் அந்த பேனாவை அடிக்கடி பார்ப்பதுண்டு...
அதன் விலை கேட்பதோடு சரி..அதுக்கு நல்லா சாப்பிட்டுகலானு வந்துருவேன்...👯👯

உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டால் புத்தகத்திற்கு அடுத்த இடம் பேனாவிற்குதான்...🙈😻

சாப்டலானுதான் போனேன்...
பேனா வாங்கிட்டு வந்துட்டேன்...😄😄😄

முதல் மை அரங்கேற்றம்..
அவன் தான் ஆடுகிறான்....🐾🐾
மை நிரப்பி
மையல் வரைகிறேன்...




பேனா .....அவளின் நீள் விருப்பம்.....🖋🖋🖋

இப்படிக்கு...
அன்றைய நாளின் பேனா விஞ்ஞானி....









Saturday 16 February 2019

சுய காதல்💗

சுய- நலம்...(சுயத்தை போற்றுதல்)...(self care is not selfish) என்பதை சொல்லிக்கொண்டு....




நமக்காக மட்டும் (ப்ரண்டு, ட்ரீட் ,ஓசி சோறு, நாலஞ்சு பேரு...அப்டினுலாம் இல்லாம)..
ஒரு சாய்ந்தரம் வாக்குல ,காத்தாட நடந்து போய்...
நாலு டேபிள் ,கொஞ்சம் இதமான லைட்டிங்க்ஸ்,ஓரளவுக்கு அமைதியான சூழல்-ல,நமக்கு புடிச்சத நம்ம காசுல (சரி...தம்பி குடுத்தான்)வாங்கி...

அது வர வரைக்கும்,அதோட சுவைக்கு ஏத்தமாரி😋 ,என்சைமலாம் ரெடி பண்ணிட்டு💯,நம்ம மொபைல்-ல நமக்கு புடிச்ச பாட்டு போட்டு🎶🎼🎵 ,நமக்கு மட்டும் கேக்றாப்டி வச்சுட்டு(very important),
சிங்கிளா 🙋...பக்கத்து சேர்லையும் கால வச்சு வசதியா உக்காந்திருக்கும்போது,...அப்டியே சூடா நம்ம ஆர்டர் பண்ணது வரும்......💁💁
வாரே வானு....அப்டியே...கொஞ்சம் பீஸ்-அ மயோனைஸ்ல டிப் பண்ணி கொஞ்சம் அந்த சாலட் வச்சு சாப்டும் போது...😍சொர்கம் சார் அது...💃💃💃

நமக்கு வேணுங்கிறத நம்மதான் கேக்கணும்..(extra salad,extra mayonnaise போன்றவைகள்)...
நம்ம சாப்டுறத பாத்தா செர்வ் பண்றவங்களுக்கே சாப்டனும்னு தோனனும்..✌

கடைசி பீஸ்க்கு இன்னும்.. கொஞ்சம்... கொஞ்சமா,மயோனைஸ் வாங்கி சாப்ட்டுட்டு...மீதி இருந்த வெங்காயம் எலுமிச்சைல plating பண்ணிட்டு ,லைட்டா தண்ணி இறக்கிட்டு நடந்து வந்தாலும் நல்லாதான் இருக்கும்ல...✋👐💗💖
(Self love....)

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...