Monday 25 June 2018

மாத்தூர் கொண்டாட்டங்கள்😍

ப்ரசன்யா:  ப்ரியா...வெளில போலாம்டி...
ப்ரியா:வெயிலா இருக்குடி....
ப்ரசன்யா: அதுக்கு?...
ப்ரியா:வரலனா...விடவா போற...கெளம்புறேன்..

அளவா சாப்ட்டுட்டு அழகா ஒரு ரயில் பொட்டில ஏறி.....(உக்காருலானுதான் பாத்தோம்...ஆனா சீட் இல்லீயே...)..அப்டியே ஒரு ஓரமா நின்னாச்சு....
(முறுக்கு...சிப்ஸ் போன்ற இதர பலகாரங்களும் வாங்கி பைய நிரப்பிக்கணும்னு தான் ஆசை...ஆனா நம்ம மாடசாமி சார் மெஸ்ல கிடைச்ச சூஸ் பாட்டிலும்...முட்டாயும்தான்...)

பூவுக்கின்னைக்கு பொறந்தநாளு..அது இதுனு அப்பி எப்டியோ extra அழகாகிட்டா....(தட் கலை matters...)



நாளா பக்கமும் புள்ளைய வளைச்சு வளைச்சு பாக்குறானுவ...(ஏய்...பக்கத்துல நானும் இருக்கேன்ல...மொமெண்ட்)...







சரின்னு மனச தேத்திட்டு...ஒரு குட்டி பாப்பாட்ட பேசலானு பாத்தா...அந்த பாப்பா..எந்தா?ன்னு கேக்குறா...அய்யடா..மலையாளமோ.?...
(அம்மா சத்தியமா...அதுக்கு மேல மலையாளம் தெரியாது...அவளுக்கும் தமிழ் தெரியாது...இருந்தும் விடலயே....)...

இந்தாடி பாப்பு...சாக்லேட்...நீ எப்டியும் வேணானுதான் சொல்லுவ...இருந்தாலும் நா தருவேன்...இந்த அக்காக்கு birthday விஷ் பண்ணிடு...
உடனே புள்ள புடிக்க வந்தவங்க மாறியே பாத்துட்டு...அம்மா சரின்னு சொன்னதும் வாங்கிட்டு வாழ்த்துச்சு புள்ள....

நீ என்னவாக போறன்னு...கேட்டேன்...யோசிக்கவே இல்ல...உடனே..நா இன்ஸ்பெக்டர் ஆக போறேன்னா...(பெண் பிள்ளைகள் இப்டி சொல்றது அவ்ளோ சந்தோஷமா இருக்குல..)

ஜன்னல் சீட்ல உக்காந்து நாகர்கோவில் போற வழியலாம் ரசிக்கிறது அவ்ளோ இதம்....(நாய்...டீ,வடை வாங்க உக்காந்துருக்கும்னு நினைச்சாலும் உங்கள் நினைப்பில் துளியளவும் தப்பில்லை என்பதை நிர்வாகம் அப்பட்டமாக ஒத்துக்கொள்கிறது)...




பஸ் ஏறியாச்சு...ஒரு துடுக்கான ராவ்வான மாடர்ன் பாப்பா...(அழகிய மண்டபம்ல இறங்குவேன்னு சொன்னா..கண்டிப்பா அவ ஊரு பேரு அவளுக்காக கூட இருக்கலாம்)..வழி சொல்லுச்சு..அத அப்டியே சைட் அடிச்சுக்கிட்டே தக்கல வந்தாச்சு...

இடம்:தக்கலை பேருந்து நிலையம்
நேரம்..:சரியாக....(சரியாலாம் தெரில..)ஆனா ஏறக்குறைய சரியாக 11.30 am..
பங்கேற்பாளர்கள்: நானும் நாயும்..ரெண்டு பாப்பங்க...
அப்றம் கண்ணு முன்னாடியே கண்டுபுடிக்க முடியாத 13 ம் நம்பர் பஸ்...

பாப்பா...இந்த 13ம் நம்பர் பஸ் எங்க நிக்கிது...

கேவலமா பார்த்துட்டு...முன்னாடி நிக்கிற பஸ்ச காட்டுச்சு...
(கேவலமா பாத்ததுல எந்த தப்பும் இல்லனு பஸ் ஏறியாச்சு)...

Cooling climate started...அந்த வெயிலுக்கு...ரொம்ப தேவையா இருந்தது அந்த இதமான குளிர தவிர வேற எதுவும் இல்ல....
(சோறு கூட வேணானா பாத்துக்கோங்களேன்..எப்ப பாரு சோறு சோறுன்னு மண்டைல அடிக்க வரவங்கலாம் ஒரு நிமிஷம் பிரியாணியையும் தந்தூரியையும் நினைத்துக்கொள்ளுங்கள்...)..


மாத்தூர் உங்களை அன்புடன் பண்புடன் அரவணைப்புடனும் சில்லுனு வரவேற்கிறது...


ப்ரசன்யா: அக்கா..powder வாங்கலாண்டி...
ப்ரியா:எதுக்குடி...
ப்ரசன்யா: இவ்ளோ செலவு பண்ணி ஊர் சுத்துறோம்...photos நல்லாருக்க வேணமா...அதுக்குதாண்டி...
ப்ரியா:கொஞ்சம் கேவலமான விஷ்யமா இருந்தாலும்...உன் நேர்ம எனக்கு புடிச்சிருக்கு...
(அப்றம் என்ன வாங்கி அப்பி அலப்பறை பண்ணியாச்சு)...
(கூடவே...வாழைப்பழம், சிப்ஸ்லாம் வாங்கிட்டு நடக்க started...)

தொட்டிபாலம் முன்னாடி நிறைய சீனரிஸ்...(எஸ்...ரசிக்கலாம்...போட்டோ எடுக்கலாம்...எடுக்காலும் ரசிக்கலாம்..)..



1966ல  கட்டுனது...
பரளியாறு கீழ ஓடுது...
மேற்கு தொடர்ச்சி மலை ..
நடுவுல ஒரு கிலோமீட்டர்..

வாழைப்பழம் சிப்ஸ் தண்ணி...
மிதமான வெயில்..
இதமான காத்து..
சௌகரியமான நட்பு...
தலையணி கேட்பொறி...(head set-tu head settu)..
இளையராஜா..arr...(இன்னும் நிறைய பேரு...ஆனா இவிங்கதான் அதிகம்)


சுத்தி பச்சை பச்சையாதான் வருது...(ஏய்...அட..முழுக்க பச்சையா இருந்துச்சு....i m a gud girl u know)...


ரப்பர் மர தோட்டம்..
நடு நடுவ போட்டோ..
காதலர் கூட்டம்...
காண்டான மனசு...

நாசமா போங்கடானு ,
தண்ணில விளையாடிட்டு...டான்ஸ் ஆடிட்டு...தண்டட்டி போட்டோ எடுக்க 10 ரூவா தெண்டம் கட்டிட்டு...


வந்தா..
கருகரு கார்மேகம்...

இலேசா சொட்டு சொட்டுன்னு தூரல்...

கை புடிச்சுக்கிட்டே..
கண்டத கதைச்சுக்கிட்டே...
Bus stop வந்தாச்சு...


பஞ்சு பஞ்சா பறக்குது...அப்டியே...என்னடானு பார்த்தா...
(நோ ஹீரோயின் எண்ட்ரி ...பக்கத்துல இலவ பஞ்சு மரம்....ஈஈஈ....)

மினி பஸ்...
மாசி மாசம் ஆளான பொண்ணு பாட்டு..
(அயிட்டம் சாங்க அசால்ட்டா போடுறதுலதான் இருக்கு மினி பஸ்ஸோட கெத்து..)
வயசு பசங்கலாம் காலேஜ்தான் போணும்னு இல்ல...கண்டக்டராவும் வரலாம்...(கேவலம்தான்..இருந்தலும் ஒரு நப்பாச..)
சைட் அடிச்சுக்கிட்டே....பேசிக்கிட்டே ... ஹோட்டல் வந்தாச்சு..
பிரியாணின்னு order பண்ணி சாப்புட்டா...

சோறா சாமி அது...(அந்த conductor கைல கிடைச்சான்...அவ்ளோதான்...மவன் கைமாதான்..)..

பஸ்ச புடிச்சு- நாகர்கோவில் ticket எடுத்துட்டு...
மழைல மலைய வேடிக்கப்பாத்துக்கிட்டே...ஓகி புயலோட சோக கதைய கேட்டுக்கிட்டே வந்தாச்சு...


பொதுவா நாகர்கோவில் பொண்ணுங்க தனி அழகு...
Side வகிடு எடுத்து...
எண்ணெய் வச்ச தலை...
மை வச்ச கண்ணு...
ஒல்லி உடம்பு...
கொஞ்சம் மலையாளம் கலந்த அந்த தமிழ்...
இன்னும் இன்னும்...ஆனா இது போதும்ம்ம்..
(.....)
Train...
ஊர் சுத்த map குடுத்தாரு ஒரு அண்ணா...
அப்டியே...வந்தாச்சு...
ஹாஸ்டல்...
சோறு...
ரெஸ்ட்...















என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...