Sunday 30 August 2020

XS Gallery..

மேடம் ஒரே பிசி....
Yes..
And finally..
இன்னைக்கும் எழுதலாம் போல...(ஹப்பாடா என்று திருப்தியடைவோர் மண்டைலயே ஒரு மொட்டு...).

நாமளும் எதோ கிறுக்கிறோம்...(ஆணவம்லாம் இல்ல குமாரு...)
அத கொஞ்சம் காட்டலாமேனு தான்...

Colours makes life colourful (சாரல் தெரிக்குது..).

அது என்னவோ தெரில ,என்ன மாயமோ புரில..
வண்ணங்கள்...(மேல சொல்லு...)..

Whenever i see colour,colour,co..lo...ur....அது கலரு...அம்புட்டுதான்..
என்னோட

XS Size gallery...






















ஆனால்,வரைதலில் ஒரு நல்ல உணர்வு..தீர்க்கமான ,ஒழுங்கான அமைப்பு என்றெல்லாம் இல்லை..கனவு போல் அழகான ஒரு அமைவு..மகிழ்தலின் போது வாழ்க்கை இன்னும் வண்ணமுறுகிறது..மன அமைதியின் போது மேலும் அர்த்தமுறுகிறது..ஒரு நல்ல காதலன் போல,வரைதலும் அவ்வாறுதான்..உணர்வுகளை வார்த்தைகளின் வழி உரையாடி யார்தான் வெல்வார்..அது ஒரு அமைதியான உணர்வு..நடு வனம் ,ஆழ்கடல் போன்று...

#Corona holidays...
(இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்கோ..).

Friday 14 August 2020

தாகம்...

காதல் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்....

அதற்கு ஏதாவது ஒரு வழியை காதலே தேடிக் கொள்ளும்...

சுகம் கொள்ளு(ல்லு)ம்..

பகிர்தலின் வழி உயிர்ப்பு பெற்றுக்கொண்டே இருக்கும்.....

காதலர்கள்தான் தனித்துவமானவர்கள்...

காதல் பொதுவானவைதான்...

அதன் ஆழமும்,உச்சமும்...அனைவருக்கும் ஒன்றுதான்....
அது காதலாய் இருக்கும் பட்சத்தில்....

நான் வாசிப்பவைகளனைத்தும் உங்கள் விழி வழி பாயும் அந்த காதல் ரச வாசனை...நீங்களும் முகர்ந்துக் கொள்ளுங்கள்....

ரூமி கவிதைகள்:

சலிக்கவில்லை நீ எனக்கு...
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே...

நீர்க்குடுவை
நீர்க்கலயம் 
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்...

தாகங்கொண்ட மீனொன்று 
என்னுள் இருக்கின்றது..
ஒருபோதும்  கூடவில்லை அதற்கு 
முழுத்தாகமும் தணிக்க..

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு !
உடைத்தெறியுங்கள் ,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை..

மனமுயக்கத்தையும் 
பெருந்துக்கத்தையும் கூட

 நெஞ்சின் மையத்தில் 
 யாருமறியா முற்றத்திலிருந்து 
 நேற்று இரவு எழும்பிய அலையில்  
 மூழ்கடிக்கப்படட்டும்
 எனது வீடு.
 
 ஒரு நிலவினை போல
 எனது கிணற்றினுள் விழுந்தார் .
 அடித்து செல்லப்பட்டது 
 நான் காத்திருந்த விளைச்சல் ..
 ஆயினும் 
 அதுவொரு பொருட்டல்ல .


எனது கல்லறையி்ன் மீது
 மூண்டுள்ளது நெருப்பு 
 படிப்பு 
 கௌரவம் 
 அல்லது மரியாதை
  இவை ஏதும் வேண்டாம் எனக்கு 


இந்த இசை 
இந்த புலரி 
உன் கன்னக் கதுப்பு 
எனக்களிக்கும்  வெதுவெதுப்பு  
இவை போதும் எனக்கு

 துக்கத்தில் இருப்போர் பெரும் சேனைகளாக குமுறுவார்கள் .
 நான் சொல்லப் போவதில்லை  
அவர்களோடு.

கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது ,
மாபெரும் மௌனம் 
என் மீது கவிகிறது. 
வார்த்தைகளை பயன்படுத்த
 ஏன் எண்ணினேன் என்ற
  தவிப்பே எஞ்சுகிறது..

Thursday 13 August 2020

ஆடிமாதமும் சித்த மருத்துவமும்

ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)

ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).

இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)

இப்போ சுவை பார்ப்போம்..

அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…

மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..

நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…

அதாவது,

இனிப்பு – மண்+ நீர்

புளிப்பு- நெருப்பு + மண்

உப்பு – நீர் + நெருப்பு

கசப்பு – ஆகாயம் + காற்று

காரம் – நெருப்பு + காற்று

துவர்ப்பு – நிலம் + காற்று

இந்த அமைப்புலதான் இருக்கு…

ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)

அதுக்கு என்னா பண்ணணும்?…

ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..

இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன

இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…

அம்புட்டுதான்…

ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…

இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..

Saturday 13 June 2020

Professional and personal..(shhhh....weight loss..)


Thing is that.. நாம எப்டி இருந்தாலும் ,இந்த சமூகம் (சமூகம்  means நம்மள சுத்தி இருக்க நபர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் etc) ஏதாவது ஒரு குறை கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கும்...

Compliments வரதுலாம்,ஏதோ, அத்திப் பூத்தாற் போலோ, எட்டாவது அதிசயமாகவோ வேண்டுமானால் நடக்கலாம்...

ஆனாலும் சிந்தித்துப் பார்த்தால் ,அதிலும் ஒரு பொடி இருக்கும்...


Mental state  பத்திலாம் அதிகமா அவிங்க கருத்துரைக்க முடியாது...அதிகபட்ச சந்திப்புகளே பல மணி நேரங்கள் மட்டுந்தான்...

ஆனால் உடலமைப்புப் பற்றி பேசி அனாடமி வாத்தியார தோக்கடிச்சுருவாய்ங்க...

ஏன்-டி வெயிட் போட்டுட்ட...(ஆமா..அதுக்கென்ன).

எதோ இந்த இடத்துலலாம் சதை புடிச்ச மாறி இருக்கு...(ஆமா...என்ன இப்ப)..

என்னடி வீட்ல நல்ல சாப்பாடோ....
(நீயா சோறு போடுற நாயே..இல்லல..ஓடிரு ஆமா)...

என்னடி அதுக்குள்ள aunty ஆகிட்ட ...(நா aunty ஆகுறேன் ...பாட்டி ஆகுறேன்...உனக்கென்ன மூடிட்டு கெளம்பு...)

சொந்தக்காரங்கதான் இப்டினா...இந்த frnds நாய்ங்க அவிங்களுக்கு மேல...
😒
குண்டூஸ் மயிரூஸ்னு...😫

சிலர்லாம்...
புஸு புஸுன்னு இருக்க....😜
(இதுக்கு நீ என்ன குண்டா இருக்கேனே சொல்லிருக்கலாம்...😴)

ஒவ்வொரு முறை வீட்டுக்கு வந்துட்டு காலெஜ் ஹாஸ்டல் போகும்போதும்...மென்மேலும் கமெண்டுகள் அதிகரிக்கும்...

ஆனாலும் ..எனக்கு பிரியாணி ,ரசமலாய்,கிரில்ட் சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியம்...(ஃபுட்டி என்று கூட சொன்னால் மிகையேதுமில்லை.)

நம் வாழ்வின் மிக பெரிய அங்கம் சோறுதான்...🤓🤓🤓...

இப்போது என்ன செய்யலாம்...

நம்ம எவ்ளோ குண்டானாலும் நம்ம கண்ணாடில பாக்கும்போது ஒல்லியாதான் தெரியும்...(manufacturing defect...இருக்கும் இருக்கும்....)...

உடம்ப குறைன்னு யாரு சொன்னாலும்....நீயா சோறு போடுற..என் தாய் தந்தைதானே...உனக்கென்ன கவலை..வாயையும் ...... மூடி விட்டு  செல்லலாம் ,என்று கூறிவிட்டு நகர்ந்து விடுவது....

நமக்கே ஒரு கட்டத்துல ரொம்ப அசதியா,மசமசனு இருக்க மாறிலாம் உணர்வு வரும்...
உடம்புல இரத்தம் குறைஞ்சிருக்கும்...நல்லா சாப்பிட்டா சரியாகிரும்னு நினைச்சிக்கிட்டு இன்னும் நல்லா சாப்பிட்டா....


ஒரு ட்ரெஸ் கூட பத்தல..அட பாவமே....

சரி உடம்ப குறைக்கலாம்...

But how?...

உடம்ப குறைக்க என்ன சாப்டுறது...?

தடம் மாதிரிதான்....கேள்வி தப்பு....
யெஸ்....
உடம்ப குறைக்க என்னலாம் சாப்பிடக் கூடாது....

ரீசண்டா ஒரு LMES video பாத்தேன்...பிரியாணி சாப்பிட்டே உடம்ப குறைக்கலானு...
அதலாம் விட்ருவோம்..தினம் சாப்பிட காசுக்கு நாம எங்க போறது..நாம இன்னும் காலேஜ் ஸ்டூடண்ட் தானே....


ஓ.கே தென்..உப்பில்லாம சாப்பிட்டா உடம்பு குறைஞ்சிடும்...(உப்பில்லா பண்டம் குப்பையிலே.....நம்மளால முடியாது குமாரு...உப்பை குறைத்தவன் யோகிதான்...ஆனா நான் யோகியாகி என்னப்பா பண்ணப்போறேன்...)..


அத திங்காத இத திங்காத....அப்டி இப்டி...ஆயிரம் அட்வைஸ்....(போதும் ..உங்க அறிவுரை கூந்தலலாம் நிப்பாட்டுறீங்களா)..

நாமளே பாத்துக்கலானு...களத்துல இறங்கியாச்சு....

நம்ம ஒரு சித்த மருத்துவ மாணவி வேற...
பயோ கெமிஸ்ட்ரி ரெண்டு டீச்சர் சொல்லிக் குடுத்துருக்காங்க.....(gct gsmc)...

சரி ...நாம தினம் திங்கிற சோறு என்ன ஆகுது...

தேவையான சத்த உறிஞ்சுக்கிட்டு ஆய்யா வெளில போய்டுது....

அதிகமா சாப்பிட்டா,அதிகமா ஆய் போகும்...ச்சீ த்தூ...

அதிகமான சத்து கொழுப்பா (fat) தங்க ஆரம்பிச்சுடும்...

நாம என்னா தின்னாலும் கடைசியா krebs cycle தான் விதி....

அத விடுங்க...

கொஞ்சம் உயிரியல் பூர்வமா பேசுவோமா...
ஒரு நாளைக்கு சாதரணமா  ஒரு மனுசனுக்கு ,மனுசிக்கு தேவைப்படுற சாப்பாட்டோட அளவு..-2000 கிலோ கலோரி...

சரி..
(நல்லா ஓடி ஆடி வேலை செய்றவிங்களுக்குப்பா...நாமலே நாளு நாள் ஸ்கூல் போவோம்..மீதி நாள் மட்டம் போட்ருவோம்...)...

ஆனாலும் நாம எல்லாரும் சாப்பிடுற 2000 கிகலோரி சாப்பிடுறோம்...

இருக்கட்டும்...

சோத்துல மூணு இல்ல நாளு பெரிய சார்ங்க இருக்காங்க....

1.கார்போஹைட்ரேட்
2.புரதம்
3.கொழுப்பு
4.நார் சத்து...
நிறைய விட்டமின் ,மினரல்ஸ்னு சின்ன சின்ன சார்ங்களும் இருக்காங்க...

உள்ள போய் ஒவ்வொருத்தரா அவங்க அவங்கள்ட்ட இருக்க சத்த பிரிச்சு குடுப்பாங்க...

மீதி இருக்குறத சேர்த்து வச்சுப்பாங்க....நாம விரதம் ,நிஜமான உண்ணாவிரதம் இருக்க நாட்களில அதலாம் பயன்படுத்தி ,நம்மள உசிரோட வச்சிருக்கும்...
(ஆனா அதலாம் நாம எங்க இருக்கோம்...கழுத கெட்டா பானிபூரி கடை...)..

Carbohydrate தான் முதல metabolism பண்ணி தேவையான சத்த தருது..அது முடிஞ்சதும் புரதம்...அதுக்கப்பறம்தான் கொழுப்பு...

சரி...நாம உடம்ப குறைக்கனும்னா என்னா பண்ணனும்....அதாவது சேர்த்து வச்சுருக்குற கொழுப்பக் கறைக்கனும்...

நாம எடுத்துக்கிற உணவுல Carbohydrate அளவ கம்மிப் படுத்துனாதான்,அடுத்து நடக்குற புரதம் கொழுப்போட வளர்சிதை மாற்றம் நடந்து கொழுப்போட சத்த உடம்பு பயன்படுத்தி வாழ ஆரம்பிக்கும்.... கொழுப்பும் கறையும். உடம்பும் குறையும்...
(அதான் low carb diet)...

எது எதுல அதிக carb இருக்குனு கேக்குறீங்களா...(google  ஆண்டவர்ட்ட கேளுங்க)...
சரி...ஒரு கிலோ குறைக்க எவ்ளோ கலோரி எரிக்கனும்......

1 kg-7700 kcal..இவ்ளோதான் கான்செப்ட்....


இத டயட் மூலமாவும் ,உடற்பயிர்ச்சிகள் மூலமாவும் burn பண்ணலாம்...

இதான் கணக்கு...இத வச்சு...நமக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணிக்கலாம்...(என்ன என்ன சாப்ட கூடாதுனு youtube ஷைனி சுரேந்திரன் வீடியோ பாருங்க)

(விளம்பரங்கள நம்பாதிங்க...இந்த மூனு நாள்-ல உடம்ப குறைக்கலாம்..நாளு நாள்-ல குறைக்கலாம்ங்கிறதெல்லாம்..என்னாங்கடா கதை....)


ஒவ்வொரு உணவுக்கும் எவ்ளோ கலோரிங்கிற கணக்கு,google -la பார்த்துக்கோங்க....

அதிகமான எண்ணெய் பண்டங்கள்,சர்க்கரையோட அளவ குறைச்சிட்டு, கீரைகள் காய்(கறி)கள் பழங்கள்,நட்ஸ் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்..
இதுலதான் நிறைய சாப்பிட்டாலும் கம்மி கலோரி....பாத்துக்கோங்க...கலோரி முக்கியம் அமைச்சரே....

ரெகுலரா மானிட்டர் பண்ணுங்க...

அதுக்கலாம் முன்னாடி ஒரு மருத்துவர பார்த்து ,உடம்புல எதும் ஹார்மோன் குறைபாடு,கருப்பை சார்ந்த பிரச்சனைகள்,metabolic disease,மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கானு பாத்துட்டு,மருத்துவத்தையும் மேற்கொண்டுகிட்டே, அதுக்கேத்த மாதிரி சாப்டுங்க...

உடல் பருமன் தான் பல நோய்க்கு காரணம்னு வழவழன்னு எதுக்கு பேசிக்கிட்டு....

எல்லாரும் நல்லாருப்போம்...
எல்லாத்தையும் நேர்மறையான எண்ணங்களோட நகர்த்துவோம்...

நன்றி....(நல்ல feel ல..எனக்கும்தான்...)..


Thursday 28 May 2020

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்..

பட்டாம்பூச்சி கூட்டத்திலிருக்கும் ஒரு பட்டாம்பூச்சிக்கு பிறந்தநாள்....

மொன்ன....

பட்டாம்பூச்சி அவ...
சிறகடிச்சு பறந்துக்கிட்டே இருப்பா...

மொன்ன நீ, ஊர்குருவிலாம இல்ல...
நீ இன்னும் இன்னும் மேல மேல பறந்துக்கிட்டே இருப்ப...

26 வயசாச்சு மொன்ன..

பொறுப்புகள் கை நீட்டி கூப்டுது...
கைய இருக்கமா புடிச்சுக்கிட்டு வாழ்க்கைல நகந்துக்கிட்டே இரு மொன்ன...

எல்லாத்தையும் நிதானமா  யோசிச்சு முடிவு பண்ணு ....

எல்லாரும் திருப்பி அன்பதான் தருவாங்கனு அதிகமா நம்பிக்க வைக்காத மொன்ன...

உன்னோட உணர்வுகள் ரொம்ப இளகுனது....அத தங்கம் மாதிரி பாத்துக்கிறவங்கள்ட நியாயமா காட்டு மொன்ன...

Fit ஆகிட்ட மொன்ன...
26 வயசுல...(இத ஏன்-டி அடிக்கடி சொல்றனு கேக்றியா...விடு மொன்ன...)..

Single girl child மொன்ன நீ...
நிறைய வளந்துட்ட....

சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அழகா அட்ஜஸ்ட் பண்ணி போற...

சூப்பரா பைக் ஓட்ற மொன்ன அதும் அந்த ஊருல...எனக்கு அந்த ரோட்லாம் பாக்கவே பதட்டமா இருக்கும்...

உடலளவுளையும் மனதளவுளையும் நல்ல தேர்ச்சி அடைஞ்சிருக்க மொன்ன...


அந்த மரத்துக்கு நடுல இருக்க மயில் மாதிரி அழகா இருக்க மொன்ன...

நல்லாருப்ப மொன்ன...

நாங்க இருக்கோம் உனக்காக...

We always love you soooo soooo much monna...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொன்ன...

Tuesday 26 May 2020

மாயமான்..






பொய்மான் கரடு -
அமரர் கல்கி எழுதிய அமர இலக்கியம்தான்...
சாகா இலக்கியம்...யாரையும் சாகடிக்காத,யாரும் சாகாத "கொப்பனாம்பட்டி கொல கேஸ் " -விறுவிறுப்பான கதை...

பொய்மான் என்கிற மாயமானைக் கருவாகக் கொண்டு கதை நகர்கிறது...

வெகுளி,கருமியான நாயகன் செங்கோடன் 
தைரியமான  அழகு சுந்தரி செம்பளவள்ளி....

வேகமான கதைக்களம்...
விறுவிறுப்பான கதை....
Asusual கதை திருப்பங்கள்...


இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் என்ன நிகழுமென்பதை உணர்த்தும் ஒரு கதை...

ஆண்களின் புனை சுருட்டை கபளீபரமாக காட்டியுள்ளார்...

கொஞ்சல்கள்....-இன்னும் கொஞ்சம் மிகப்படுத்திருக்கலாம்...ஆனால் அந்த சூழ்நிலையில் வாழும் கதாநாயகனுக்கு கணக்கச்சிதம் இவைதான்...

"என் கண்மணியே! என் செல்லக் கிளியே ஆடும் மயிலே பாடும் குயிலே உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா?


"காதலுக்கு கண்ணில்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்...அறிவுக்கூடவா இல்லை"-யோசிக்கக்கூடிய ஒன்றுதான்...


சேலம் - நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த பொய்மான் கரடு. சேலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள பொய்மான் கரடு அமைந்துள்ளது...இப்பகுதியில் அமைந்துள்ள கரடின் கிழக்குப் பகுதியில் உள்ள சமதளத்தில் இருந்து பார்த்தால் கரடின் இரு பாறைகளின் மத்தியில் உள்ள குகை ஒன்றில் இரு கொம்புகள் கொண்ட மான் இருப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால், அந்த மலையை நெருங்க நெருங்க அந்த மான் இருப்பது போன்ற மாயத்தோற்றம் மறைந்து விடும். அதனாலேயே இப்பகுதிக்கு பொய்மான் கரடு என்று பெயரிடப்பட்டது.

Sunday 24 May 2020

சந்திரிகை...


சந்திரிகையின் கதை...

நீண்ட நாட்களுக்கு பின் நிகழ்ந்த ஏகாந்த வாசிப்பு...
பெரும்பாலும் பாரதியாரின் புத்தகங்களை வாசிப்பது வழக்கமில்லை என்றாலும் சந்திரிகை என்ற பெயர் ஈர்த்து விட்டதால் ,இவ்வாசிப்பு நிகழ்ந்தேறியது...
1904-1905களில் இப்புத்தகத்தின் கதை பெரிய புரட்சியாக நிச்சமிருந்திருக்கும்...
இந்த புத்தகம் அந்த காலத்தின் சமூக நிலையை ,கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எழுதியுள்ளார்...
பெண்...பெண்களைப் பற்றி ,அவர்களின் உரிமை,தைரியம்,பொறுமை,தெய்வீகத் தன்மையை பேசியுள்ளார்...
ஆனால் சந்திரிகை கதை,என்ற தலைப்புதான் எதற்கென்று தெரியவில்லை...
விசாலாட்சிதான் கதையின் நாயகி...
முத்தம்மா துணை நாயகி ....

ஜீவ காருண்யம் ,மகா சுந்தரி, காதலி ராணி,குதலைச் சொல், ரோஜா பூ நகை,பொன் வினை நாதம்,நாகணவாய் புற்கள்,மைக்கூடு,
முகமொற்றி முத்தமிடுதல்,சுவர்க்க போகம்...
வாசித்தலின் சுவைகள் இவைகள்...

திருக்குறள், பகவத் கீதை ,சீவக சிந்தாமணி மேற்கோள் கொண்டு மேலும் இனிமையாக்கியுள்ளார்...
உணவினும் உண்டதறலினிது காமம் புணர்தலின் ஊட லினிது....
இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்."...
கலப்பு திருமணம்,விதவை மறுமணம்,பெண்ணின் பெருமை,பெண்களை பூஜித்தல்,துறவறம் ,இல்லறமன்றி நல்லறமில்லை, மெய்யறிவு,வைத்தியம், பசியின்றி உண்ணுதலின் தீமைகள்,ஊடல்,கூடல்...அனைத்தையும் தெளித்திருக்கிறார்....
பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், "சந்திரிகையின் கதை" முற்றுப்பெற இயலாமல் போனது...
உயிரோடி இருந்திருந்தால்,சந்திரிகையின் கதை தயாராகி இருக்கலாம்....


Sunday 1 March 2020

அந்த மாதிரியான உணர்வு....

புத்தகங்களும்,சினிமாக்களும் அந்தந்த காலத்தினது சமூகத்தின் கலாச்சாரத்தை பறைச்சாற்றி வளர்ந்து நிற்கின்றன...

பெரிய ஈடுபாடெல்லாம் முன்பிருந்ததில்லை...முன்பென்றால் விவரம் தெரிவதற்கு முன்பு...அதாவது என் பள்ளி பருவ பாதிவரை...

ம்ம்ம்..பின்பு எனக்கும் முற்றி விட்டது...சாதரணமாக வாசிக்கத் துவங்கியது...

காதலுன்னை பித்தனாக்கும்...
வாசிப்புன்னை புத்தனாக்கும்...


கடவுளை அடையிற வழிகள் நிறைய பேர் அதிகமான கருத்துக்களை பகிர்ந்துட்டு நம்மளலாம் விட்டுட்டு கடவுளை பாக்க போனாங்களோ என்னமோ...எனக்கு தெரில ..

The god of small things புத்தகம் ...2011 ல் வாங்கிருப்பேன் ..காலேஜ் சேர்ந்த புதுசு...

பன்னிட்டாங்கிளாஸ் வரை தமிழ் மீடியந்தான்..schoolல English newspaper readingக்கு stage எறுனதோட சரி...
எங்க Englishமிஸ்ஸ ரொம்ப புடிக்கும்...
அது ஒரு நேர்த்தி மிடறு இருக்கும்...

தெரியாத ஒரு விஷ்யம் ,அடுத்தவங்க பண்ணா ஆச்சரியமா இருக்கும்ல ..அதே கதைதான்...

நா அந்த புத்தகம் வாங்குனப்ப,புத்தகத்தோட பெயரோட அர்த்தத்த புரிஞ்சுக்கக்கூட முயற்சித்ததில்ல...
புக்கர் விருது வாங்குன புக்கு..அந்தம்மா பேரென்ன...அவங்கதான் கர்லி hair...that iron lady...அருந்ததிராய் எழுதுனது மட்டும் தெரியும்..

நமக்கு வயசாக வயசாக சில விடயங்களெல்லாம் புரிய ஆரம்பிக்கும்...அப்றம் தான் தெரிஞ்சுது...அந்த புத்தகத்தோட தலைப்புல இருந்த அந்த சுவாரடசியம் ,உண்மை..ரொம்ப ஈர்த்துருச்சு...
சின்ன சின்ன விஷ்யங்களையும் கடவுள் தன்மைய உணர ஆரம்பிச்சுட்டேன்...( கோவில் சாமிலாம் ஒரு நாளும் கும்பிட்டதில்ல...ஆனா அந்த சிலைல இருக்க அந்த கடவுள்தன்மை...வடிச்சவனோட அந்த லயம் ஈர்ப்புதான்...)..








ஆனா இன்னும் அந்த புத்தகத்த தொறந்துக்கூட பார்த்ததில்ல...

இந்தக்கதை எதுக்குனா...ம்ம்ம்ம்..

சைக்கோ படம் பாட்டு கேட்டேன்...
நா எப்பவும் கொஞ்சம் லேட்டுதான்..எல்லாரும் கேட்டு சலிச்சு அந்தப்பக்கம் தூக்கி வச்ச பிறகுதான் தூசி தட்டுவேன்...

உன்ன நினைச்சு ,நீங்க முடியுமா,தாய் மடியில்...மூணு பாட்டும்...200 தடவ கேட்ருப்பேன் (appx தான்)...

கடவுளை அடையிற வழில  இளையராஜா பேரும்,sid  sriram பேரும் எழுதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

நல்ல வேளை...அவங்கலாம் இருக்கப்ப நா பொறந்தேன்..இல்லனா இந்த அனுபவம் இல்லாமலே போயிருக்கும்...

காலைல சூரியன் உதிக்கிறத பாக்றதுக்காக சீக்கிரம் எழுந்திருக்கிறது...பூத்தும் பூக்காம இருக்க பூவு...வாசல் தெளிக்கிற சத்தம்...காலுல ஒட்டுற மண்ணு...கோலம் தப்பா போறப்ப அத சமாளிக்கிறது..அம்மா செய்ற வேலைய வாங்கி நானே செய்றது...சமைக்கிறது...வானத்த பாத்துக்கிட்டே உக்காந்துக்கிறது...இத கஷ்டப்பட்டோ ,இஷ்டப்பட்டோ வாசிக்கிற நீங்க நினைக்கிற நா...

இப்டியே இன்னும் நிறைய....


கடவுள் ங்கிறது ஒரு உணர்வு...எல்லாருக்கும் உள்ளுக்க இருக்கு...
அந்த கடவுள் தன்மை...ம்ம்ம்ம்...
அவ்ளோ நிம்மதி...அத அனுபவிக்க....

எனக்கு எல்லாமே புடிக்கும்...எதுமே தப்பில்ல...
ஆனா எப்டி அப்டி இருக்க முடியும்...
முடியுதே...என்ன செய்ய...

எல்லாத்லையும் எதோ ஒரு விஷ்யமாது எனக்கு புடிச்சதா அமைஞ்சுடும்.அப்டிதான்...

மறந்துட்டனே....
.
ம்ம்ம்..

கண்ணன் குழல் கதை...
புதுமைபித்தனோடது...ஆமா...ஏன் அந்த மனுஷன் புதுமைபித்தன்னு பேரு வைச்சுருப்பாரு...புதுமை மேல அப்டி ஒரு பயித்தியகாரத்தனமா...
ஹூம்ஹூம்...
பித்தன்ங்கிற நிலைமையே தெய்வ நிலைமதானே...(காதலுன்னை பித்தனாக்கும்...ம்ம்ம்..எஸ்....)


அவரு வாழ்ந்த காலத்த மனசுல படமோட்டி பாத்துக்கலாம்....அந்த ட்ராம் சத்தம்...அந்த பிச்சைக்காரனின் குழலூதல்...அந்த ஆழ்துன்ப லயிப்பு...

உயிரைவிட எனக்கு ஆசையில்லை...என்ற எதார்த்தமான முடிவு....
கதை...
அந்த கதை ஏதோ பண்ணுது...

இந்த உணர்வ விளக்க வார்த்த கிடைக்கல...
நீங்களே வாசிச்சு அனுபவிச்சுகோங்க...

குட்டிக்கதை..
அவ்ளோ பெரிய வாழ்க்கை...


Friday 17 January 2020

சமந்தா-சக்தி💝

ஓ பேபி..
யெஸ்...நிறைய பேரு பாத்துருப்போம்..

பொதுவா டப்பிங் படம்னாலே கடுப்புதான்...:(
அதும் தெலுங்கு படம் சொல்லவே தேவ இல்ல...

ஆனால்..ஓ பேபி...ரொம்ப அழகான விஷயங்களை தாங்கி நிக்குது..

படம் ஆரம்பிக்கிறப்ப வழக்கமான மாமியார் கொடும கூட இல்ல அது ஒரு வகையான வதை..நாம ஒருத்தங்க மேல உள்ள அக்கறைல அடுத்தவங்கள அதிகமா கோவபடுத்துவோம்..அந்த kind of characterதான் லட்சுமி..
அவங்களுக்கு நடக்கிற மேஜிக்,இளமை திரும்ப கிடைக்கிறது..அது கொஞ்சம் பில்டப்தான்..புள்ளையார கைல குடுத்ததும் இளமை திரும்பிடுமாம்...
ஆனாலும் ,கனவுல நடக்குற விஷயங்களை படமாக்குனா நல்லாதானே இருக்கும்...
(படம் நிஜம்தான்)

சின்ன வயசுலயே காதலிச்சு கைபிடிச்ச கணவர இழந்துட்டு,தன்னோட ஒரே மகனோட வாழ்ற கொடுமையான வாழ்க்கைதான் லட்சுமியோடது...

இளமை திரும்பியாச்சு...
சமந்தாதான் இளமையான லட்சுமி..
உடல்வாகுல மட்டும் இளமை..
எண்ணம்,மனசு லாம் பழைய லட்சுமிதுதான்...

சமந்தா,பின்னி பெடல் எடுத்துருச்சு..அப்டி ஒரு நடிப்பு...
ஒவ்வொரு சீன்லயும் ஸ்கோர் பண்ணுது...

ஆனா சொல்ல வந்தது இதுலாம் இல்ல..
இந்த படத்துல சக்தினு ஒரு கதாபாத்திரம்.
சமந்தாக்கு கல்யாணம் பண்ணிக்கிற முறை...

சமந்தாக்கு, ரத்தம் உடம்புல இருந்து வெளில வந்துட்டா,இளமை மாறி முதுமை வந்துடும்..தன்னோட பேரனோட ஆப்ரேஷனுக்கு ரத்தம் தரனும்னு கட்டாய சூழ்நிலை ல ,சக்தி  சொல்லுவாரு,வேண்டா நீ இளமையோடவே இரு...நீ இழந்த வாழ்க்கைய சந்தோஷமா அனுபவினு...

சமந்தா:என்னடா பேசுற நீ..உனக்கு ஒரு 65 வயசு இருக்குமா...60 வருஷமா என்னத் தவிர வேற நினைப்பே இல்ல உனக்கு..நீ பாத்துக்க மாட்டியா,நா கெழவி ஆகிட்டானு கேப்பா...

யெஸ்...நாம எல்லாருக்கும் நிச்சயமா அப்டி ஒருத்தங்க நம்ம வாழ்க்கைல இருப்பாங்கல..

சக்தி...முறை பையன்கிட்டனே,பொண்ணுங்களுக்கு உள்ள தனி உரிமை,அதிகாரத்த அழகா அந்த சீன்ல நந்தினி சொல்லிருக்காங்க...
உள்ளுக்குள்ள ஒரு நல்ல உணர்வ நிச்சயம் குடுக்கும் அந்த படம்....

நந்தினி(படத்தோட இயக்குனர்) -அந்த பொண்ணு அவ்ளோ அழகா கொண்டு வந்துருக்கு படத்த...

தட் பேரன் ஆல்சோ ச்சோ க்யூட்..அழகன்..

படம் வந்து ரொம்ப நாளாச்சு..இப்ப ஏன் பினாத்துறனு கேக்காதிங்க...பொங்கலுக்கு தான்பா டீவில போட்டாங்க.  பாத்தேன்....

நல்ல படம்ல...சொல்லனும்ல...அதேன்...









Wednesday 15 January 2020

🚲 மிதிவண்டி பயணங்கள்...💝

 ஈருருளி...(சைக்கிள்)


(History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க...
)
சைக்கிள் பெல்...

அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்னு கொஞ்சம் கூச்சத்தோட கூச்சல் கலந்தாற்போல படபடப்பான ஒரு வகையான நல்ல ஓசை...

அத கேட்டதும் அட்ரீனலின் சுரக்க ஆரம்பிச்சுடும்..(இது இப்போதைக்கு தேவ இல்ல..நாம விஷ்யத்துக்கு போவோம்..).

இப்போ இருக்க கிட்ஸ் பத்தி அவ்ளோவா தெரில..
நா கிட்-டா இருந்தப்பலாம்...இதான்...

அப்பாயி ஊர்ல,பிரபு அண்ணானு ஒருத்தர் இருப்பாரு..நல்ல உயரம் ..வாட்ட சாட்டமா இருக்க ஒரு வாலிபர்னு கூட சொல்லலாம்..
எப்பவும் கைல ரெண்டு மகாலேக்டோ சாக்லேட்னாச்சும் வச்சுருப்பாரு...(அவரு ஆளு பேரு மகா..💙)..அந்த அக்கா வீட்ட தாண்டி போகும் போதெல்லாம் அந்த சைக்கிள் பெல் அடிப்பாரு...அந்த அக்காவும் கரெக்ட்டா வந்து பாக்கும்..


நா குட்டி புள்ள..சைக்கிள் பெல் அடிச்சதும் ,ப்ரியானு கூப்டுவாரு...
சொல்லு பிரபுனு சொன்னா...சும்மா கூப்டேனு சொல்லிட்டு போய்டுவாரு...

காலாண்டு அரையாண்டு லீவுலாம் இதான் நடக்கும்..
என்னோட லீவு முழுக்க அப்பாயி ஊர்லதான்..
பெரிய புள்ள ஆகுற வரைக்கும்..

இப்போ பிரபுக்கு சொட்டலாம் வந்துருச்சு..மாமா வீட்டு விஷேசத்துல ,மகா இல்ல அந்த அக்கா,வேறொரு அக்கா கூட வந்திருந்தாரு...

ஆனா அதே சைக்கிள் பெல் சத்தம்..மகா லேக்டோ வாசம் இன்னும் ரெண்டு பேருக்கும் நினைவுல இருக்கு...

குட்டி குட்டி பசங்கலாம்,வேற மாதிரி அந்த பீம்பாம் சவுண்ட் வர மாதிரிலாம் செட் பண்ணிப்பாங்க...பாட்டுலாம் ஓடுற மாதிரி.. ஆசையா இருக்கும்..

எட்டாங்கிளாஸ் படிக்கும்போது ,சைக்கிள் வாங்கி தந்தாதான்  ஸ்கூல்க்கு போவேனு அடம் புடிச்சு சைக்கிள் வாங்குனேன்...

குட்டி வாடகை சைக்கிள்-லதான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்...1மணி நேரத்துக்கு நாலு ஒரூவா..தாத்தா கடைக்கு பக்கத்து கடை..

சைக்கிள் ஓட்றதே ஒரு நல்ல உணர்வுல...அதும் கைய விட்டு ஓட்டி பாக்றது..இந்த வித்தக்காட்ற வேலலாம்..எதோ பெருசா சாதிச்ச மாதிரி...

அப்பாவோட பெரிய சைக்கிள்-ல குரங்கு பெடல் போட்டு ஓட்டி கீழ விழுந்த தழும்பு 90% 90ஸ் கிட்ஸ்க்கு இருக்கும்ல...

பெல் அடிக்கனும் அவசியமே இருக்காது..ஆனாலும் சும்மா அடிச்சுக்கிட்டே போறது...
காலைல 6 மணிக்கு டியூசன்..நீயூஸ் பேப்பர் போடுற பையன் பெல் அடிச்சுதான் நியூஸ்பேப்பர் போட்டுட்டு போவான்...

அந்த பால் ஊத்த வர அண்ணா வண்டி சவுண்ட் ... அத்தைப் பொண்ணோட கொலுசு சத்தம்... அம்மாவோட நடை சத்தம்..அதுலாம் பதிஞ்சு போய் இருக்கும்.. தனியா கேக்கும்ல காதுல..

சைக்கிள் பெல்...சைக்கிள் பெல்..மறந்துட்டேன் பாருங்க...

கோவம் வந்தா டொக்க் டொக்குனு அதேயே தட்றது..
அம்மா ஸ்கூல்க்கு லேட் ஆச்சு,சீக்கிரம் லன்ச் பேக் எடுத்துட்டுவானு அடிச்சுக்கிட்டே இருக்றது...
சைட் அடிக்கிற பையன் வீட்ட தாண்டிப்போகும்போது ரெண்டு தட்டு தட்றது....
ரோட்ல அவ்ளோ கும்பல் இருக்காது..என்னமோ நாமதான் எல்லாரையும் காப்பாத்த போற மாதிரி அத்தன தட்டு தட்றது....
Frnd முன்னாடி போனான சைக்கிள் பெல் அடிச்சுதான் கூப்பிடுறது...

இப்டியே நிறைய...

ஸ்கூல் cycle stand ல நின்னுட்டுதான் அவ்ளோ கத பேசுவோம்..அவ்ளோ நேரம் இருக்கும்..ஆனா கெளம்பும்போது நேரமே பத்தாது கத பேசி முடிக்க...

காத்து புடுங்கி விட்றது..பஞ்சர் பண்ணி விடுறது...கை புடிக்கிற இடத்துல மெஹந்தி தடவி விட்றது...சைக்கிள் கூடைல லெட்டர் போட்டு விளையாட்றது...(க்ளாஸ்ல இருக்க எல்லோரோட கையெழுத்தும் இருக்கும்..).
சைக்கிள் ல sticker ஒட்றது...வீல்க்குலாம் ஜிகு ஜிகு பேப்பர்லாம் ஒட்டுவாங்க...
சைக்கிள் jewellery... ம்ம்ம்ம்..
சைக்கிள் செயின்ல ஷால் மாட்டி,அத எடுத்துவிட்டுலாம் நட்பு அமைந்ததெலாம் வரலாறில் உண்டு.

குழந்தைகள உக்கார வச்சுட்டு போக ஒரு கூட இருக்கும்...
குட்டி புள்ளைல அப்பா அதுலதான் உக்கார வச்சு கூட்டிட்டு போவாரு...அந்த குட்டி சீட்ல...அவரோட முன்னாடி ஹேண்ட்பர்ல மாட்டிருக்கும்..கதை சொலிக்கிட்டே கூட்டிட்டு போவாரு...
(அந்த தவமாய் தவமிருந்து படத்தெல்லாம் யோசிக்காதிங்க...அத விட கம்மிதான்)...ஊருக்கு போன தாத்தா இருந்த வரைக்கும் சைக்கிள்-லதான் வந்து கூட்டிட்டு போவாரு பஸ்ஸ்டாப்ல இருந்து வீட்டுக்கு..


எல்லாரோட வீட்லையும் சைக்கிள் இருக்கும்ல..(எதுக்கு இந்த குட்டி இப்ப நெஞ்ச நக்குதுனு பாக்காதிங்க... நேரம் போகனும்ல...)..



இந்த லேடி பேர்ட் சைக்கிள் வாங்கிடனும் இன்னும் ஆசை...வாங்கனும் கண்டிப்பா...

வாங்கி sticker ஒட்றோம்ம்...











என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...