Friday 19 April 2019

சுலைகா ...💞

மனுஷி...
.சுலைகா
ராத்தா...

         ராத்தாவென்றால் அக்கா முறை...
அவங்கள எங்க கிராமத்துல எல்லாரும் அப்டிதான் கூப்டுவாங்க.. ..
நல்ல கலர்..
50 வயசு மாதிரிலாம் தெரியாது...
ஊர்லயே முதல மச்சி வீடு கட்டுனவங்க...
9 குழந்தைங்க ராத்தாவுக்கு...
சின்ன வயசிலருந்தே எல்லாருக்கும் உதவுற குணம் ..

        சின்ன வயசுல குளத்துக்கு, குளிக்க போகும்போது முதுகு தேய்க்க கல் எடுத்துட்டு போகுமாம்...
குளத்துல குளிக்கிற எல்லா பொம்பலைங்களுக்கும் முதுகு தேய்ச்சு விட்டு கடைசியா குளிச்சிட்டு வருமாம்...

       ஊர்ல இறந்தவங்கள குளிப்பாட்ட யாருக்கும் பெருசா ஒத்துகாதாம்..
ராத்தா ..ஊருக்குள்ள எங்க சாவுனாலும் அவங்கள குளிப்பாட்ட போய்டுமாம்...
(அவங்க வழக்கப்படி..குதம் குய்யம் எல்லாத்தையும் நல்லா சுத்தம் பண்ணி குளிப்பாட்டுவாங்களாம்).
மூஞ்சி சுழிக்காம வேல செய்யுமாம்...

        யாராது வீட்டுக்கு போனா கூட சும்மா இருக்காதாம்...
எங்க வீட்டுக்கு வந்தா கூட,
சுமையா மிஸ் குடுங்க காய்கறிலாம் வெட்டித் தரேனு சொல்லிட்டு,செஞ்சு குடுத்துட்டுதான் போகும்...

       மினிமம் எப்பவும் மணிபர்ஸ்ல 500ரூவாவாது வச்சுருக்கும்..
யாரு காசு கேட்டாலும் குடுக்கும்...கணக்குல எழுதி வச்சுக்கோங்க...என் காலத்துக்கப்றம் என் புள்ளைங்களுக்கு குடுத்துருங்கனு சொல்லிடும்..


        நல்ல ராத்தா...எல்லாருக்கும் பிரியமானவ..
ஆனா வீட்ல இருக்க பிள்ளைகளுக்கு,எல்லாருக்கும் அம்மா வேல செய்யுதுனு வருத்தம்...ஆனா எல்லா புள்ளைங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சு பேர குழந்தைங்களையும் நல்லா பாத்துக்குச்சு...
இப்படியே அதோட வாழ்க்க ரொம்ப நிறைவா போய்ட்டுருந்துச்சு...
ஒரு நாள்...

       வயிறு ரொம்ப வலிக்குதுனு படுத்ததுதான்...
வயிறு குடல்-ல புத்து நோய்னு சொல்லிட்டாங்க...(colon cancer)
வயிறுல புத்துக்கட்டி அங்கிட்டும் இங்கிட்டும் உருளுது.
ஆப்ரேசன் பண்ணாலும் ரிஸ்க்னு சொல்லிட்டாங்க...
ஊரே ரொம்ப வருத்தப்பட்டுச்சு...

       வயிறு வலில சுருண்டு சுருண்டு படுத்துக்கும்...யாருக்கும் கேக்காம அழுதுகிட்டே இருக்கும்...சாப்டவும் முடியாம சாப்டது வெளியவும் போக முடியாம நரக வேதனை அதுக்கு....பட்டினியாவே கிடந்துச்சு..உடம்புல ஒன்னுமே இல்லாம ரொம்ப இளைச்சு போச்சு ..

        அது அந்த நிலைமைலயும்,
நா இந்த வாழ்க்கைல பண்ண பாவத்துக்கு, அல்லா! என்ன இப்பவே தண்டிச்சிட்டாருனு சொல்லி அந்த நோயயும் அர்த்தமுள்ளதா ஆக்கிகிச்சு ....இனி எனக்கு பிறப்பே இருக்காதுனு பெருமையா சொல்லிக்கும்..
.

        எங்க அண்ணன்-னா அதுக்கு ரொம்ப  இஷ்டம்...அவன் போய் பாத்ததும்..அவனோட மடில படுத்துக்கிச்சு..
அவனுக்கு தொண்டலாம் வறண்டு,அழுக முட்டிட்டு நிக்குது..
வீட்டுக்கு வந்து சொல்லிக்கிட்டே சத்தம் போட்டு அழுதான்..


       ஒரு மாசத்துக்கு முன்னாடி ராத்தாக்கூட எடுத்த செல்பி frame பண்ணி வீட்டு சுவர்ல தொங்குது ...அந்த குளத்துக்கரையும் அவள் பெயரை சுமந்தே நிற்கிறது...


        ராத்தா ..ராத்தா...🐾

(கதைக்கும் நேரங்களில் தோழி கூறியது)...



என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...