Thursday 30 May 2019

வீட்டு சோறு..💝👯

ஒருத்தருக்கு போய்டு என்னத்த சமைக்கனு சமைக்காமலே விட்ருவாங்க நிறைய தனிவாசிங்க...

வீட்ல எல்லாரும் இருந்தா அவங்க எல்லாருக்குமே ஒரளவுக்கு புடிக்கிற மாதிரி ,பொதுவாதான் சமைக்க முடியும்...

அண்ணனுக்கு வெண்டைக்காய் புடிக்காது.தம்பிக்கு சாம்பார் புடிக்காது,அம்மாட்சிக்கு உருளைக்கிழங்கு ஆகாது..
காரம் கொஞ்சம் ஜாஸ்தியா..அம்மாக்கு பெருங்காயம் ஆகாது...அப்பாக்கு எண்ணெய் கம்மியா ஊத்தி சமைக்கனும்...இப்டி அப்டி பெரிய லிஸ்டே வைச்சுருப்பாங்க...(போடுறத திண்ணுனும்,கிடைக்கிறத திண்ணுக்கனுங்கிறதுலாம் வேற கதை...)


எனக்கு-
கொஞ்சமா சோறு....
நிறைய காய்கறிங்க....
கீரை பொறியல்-ல தேங்கா வேணா...
உருளைக்கிழங்குனா நிறைய இஷ்டம்..
கருவாடு குழம்பா இல்லாம கொஞ்சம் பிறட்டுன மாதிரி இருந்தா நல்லாருக்கும்..
பெருங்காயம் சேர்த்தாலே அதிகமா சுவை கூடுன மாதிரி எண்ணம்...
என்னதான் வெஜ்னாலும்,கொஞ்சம் nonveg touch இருக்கனும்
நமக்கு புடிச்ச மாதிரி சமைச்சு சாப்டனுனா தனியா இருந்தாதான் முடியும்...
(அப்டிதான் இன்னைக்கும்...என்னைக்காதுதாம் அமையும்....)





சரி..இவ்ளோவும் சாப்டுட்டு,ஒரு அரை மணி நேரம் டீவி பாத்துட்டு....சம்மர் தானே...பகல் நேரந்தான் ரொம்ப..அதுனால சின்னதா தூங்குனா தப்புலாம் இல்ல...👯
இல்லனா இப்டி டைப்பிச்சு போஸ்ட் கூட பண்ணலாம்...

Nd மறந்துடாதிங்க...
Self care isnt selfish.....
#சுய_நலம்_போற்றல்...

#கோடை_விடுமுறை..
#வீட்டு_சோறு


Tuesday 28 May 2019

மொன்னைஸ்..🐾🎻🍭🍬💝👯

20 வயசுக்கு மேல,என்னடா பொறந்த நாளுலாம்...எல்லா நாளி.மாதிரிதானே அதும்ங்கிற இடத்துல....
ஒரு கழுத 25 வயசாகிருச்சுனு 'சில்வர் ஜீபிலி'ய முட்டாயி குடுத்து கொண்டாடிக்கிட்டு இருக்கு ஒரு d o g-dog...💝🍫🍬🍬🍬🍬🍭

தன்னை கொண்டாடிக்கிறதுல எந்த குறையும் வைச்சுக்கிறதுல இந்த குட்டி...(நம்மல நாம கொண்டாடலனா ,வேற யாரு கொண்டாடுவாம்பா......

சரி மூடிட்டு முட்டாயி குடுத்துட்டு போ போ..)

Life is easy with frnds dashங்கல...அது இதுக்குதான்..(ஈஈ...எப்ப என்ன கேட்டாலும் வாங்கி தரும்..)

யோசிக்காம நா help பண்றேனு சொல்லுவா...(இந்த மாதிரி சொல்லக்கூட ஒரு தைரியம் வேணும்ல...)

சொல்ல மறந்துட்டனே ....பாப்பையனோட little princess இவங்க...(..ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா....ஒத்த புத்த பெத்தாங்களே..அது யாரு எங்க அப்பா...

பாடும் பாடித்தொலையும்👈💃💃)

எப்பவும் யங்-கா,துருதுருன்னு....எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி நடந்துக்கனும் நினைக்கிறதே பெரிய விஷ்யம்....இவ வாழ்ந்துக்கிட்டு இருக்கா...

கூட இருக்க எல்லாரையும் கொண்டாட தெரிஞ்சவ...உறவுகளோட வசந்ததை எல்லாரோட கண்ணு வழியாவும் பார்ப்பா..(சுத்தி அண்ணா,தம்பி,அக்கா,darling,லவ்,டாடி...மம்மி...ஹா ஹா...இப்டிதான் மனசாற கூப்டு நிறைவா வாழ்றா)..

பள்ளிப்பருவ நட்பு still remains....இவதான் அந்த சிறுக்கி...

இதுதான் வாழ்க்கை,இப்டிதான் இருக்கனும்ங்கிறதுலாம் இல்ல..சரி ,தப்புக்குலாம் வரையறையே வச்சுக்காம வாழ்ற என்னோட இந்த வாழ்க்கைக்கான மிகப்பெரிய சொத்து இந்த முண்டம் தான்...

நல்லாரு மொன்ன..
கொண்டாடி சேமிச்சுக்கோ நினைவுகள
..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ள....







Friday 10 May 2019

யாஸ்மீ.....🐾🎻

நாம யாரையும் புடிக்காம,எதுவுமே புடிபடாம தனிமைல இருக்கும் போது,நம்ம பக்கத்துலையே உக்கார ஒரு துணை கிடைச்சா....,அவளும் அழகா அழகா கதை சொல்லி சிரிக்க வைச்சா....அவதானே தேவதை...
ஆமா..நிச்சயம் எனக்கு தேவதைதான் அந்தக்குட்டி....


வெளிப்படையா இருக்க மனுசங்ககிட்ட மனசு சீக்கிரமா இணக்கத்தை உண்டாக்கிரும்..(வெளிப்படையானவ...)

எதாது வேல செஞ்சுட்டு இருக்கும் போது,யாராது எனக்கே தெரியாம என்ன photo எடுக்க மாட்டாங்களானு?...சொல்லிட்டே இருப்பா...(candid காதலி…)

ஒரு ஊர்-லனுலாம் இவ கதை ஆரம்பிக்காது...
அவ வீட்டு சொந்த கதைதான் சொல்லுவா..அவ்ளோ சுவாரசியமா...நடந்த மாதிரியே அச்சு பிசறாம சொல்லுவா....அப்டியே ஆழ்ந்து போய்....அவ்ளோ உணர்வுகளையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டுவா...( எங்களோட கதை சொல்லி...நேரம் போறதே தெரியாது...)

எல்லார்கிட்டையும்லாம் பேச மாட்டா...எதாது ஒன்னுனா சட்டுனு அழுதுருவா அழகி...(ஆனா பேசுற எல்லாருக்கும் இந்த குட்டி நல்ல நெருக்கம்...)

Artist-calligraphy பயித்தியம்..( note முழக்க கிறுக்கி வச்சுருப்பா)...

Dressing sense-பக்காவா இருக்கும்...புர்கா போட்டு மூடிக்குவா மெ
ன்டல்...


சொல்ல மறந்துட்டனே...

நல்லா பாட்டு பாடுவா...இல்ல...நிஜமாவே நல்லா பாடுவா...
அவ குரலுக்கு எது பொருத்தமா இருக்கோ ,அத மட்டுந்தான் பாடுவா...( பாடகி மொமென்ட்)...


எல்லாருக்குமே வீடுனா இஷ்டம்தான்...
ஆனா இந்த குட்டிக்கு என்னேரமும் வீடுதான்...
சுமையா மிஸ்,வாப்பா,முயின்.....இதான் அவ வாய்ல இருந்து அதிகமா வர வார்த்த...இந்த மாதிரி புள்ளலாம் பொறக்க குடுத்து வச்சுருக்கனும்னு சொல்லுவாங்கல...அது மாதிரி இருக்கும் இவள பாத்தா...

Be good for no reason ல... Yes...she is being gud for no reason...நல்லவங்களாதான் இருக்கனும்னு சொல்லுவா...யாரையும் கஷ்டபடுத்துற மாதிரி எதும் பண்ண மாட்டா...(ஆச்சரியாமா இருக்கும் இந்த புள்ளையா பார்த்தா).....

Frnd ஆகனும்னா,we have some similaritiesனு ஒன்னுனாச்சும் இருக்கும்ல...
அதான்....நல்லா திங்கும் இந்த நாய்........

ம்ம்ம்...இந்த தேவதைக்குதான் பொறந்த நாள் இன்னைக்கு...

சந்தோஷமா வாழுடி தங்க புள்ள...
Happy happy bday Yasmeen...
Love you sooo much டி பொம்பல....உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா....(தட் லிப்ஸ்டிக் emoji)....
#Last_benchies...(யெஸ்...வெற்றிக்குறி)....
#கியாங்_மியாங்_குள்ளச்சி...











Sunday 5 May 2019

பிரமிள்...🎻🐾


விக்கிதான் அடிக்கடி சொல்லிட்ருப்பான்...பிரமிள் கவிதைகள் புக்கு வாங்கி குடுடி-னு...

நானும் கொஞ்சம் விசாரிச்சேன் கிடைக்கல...

த.ராஜனோட,ஏன் பிரமிளை வாசிக்கவேண்டும் கட்டுரை வாசிச்சேன்...

கண்டிப்பா வாசிக்க வேண்டிய மனுசன் இவருனு கொஞ்சம் தீவிரமா தேடுனதுல
எப்டியோ e-book கிடைச்சிருச்சு...

அது ஒரு முழு தொகுப்பு இல்ல...சில தொகுப்புல இருந்த கவிதைகள்-ல சில பல கவிதைகளை தொகுத்து வச்சதுதான்...

வார இறுதி நாள் சாய்ந்தரம்னாலே சவகாசம்தான்..
நல்லா தூங்கி எழுந்து ,
தலை குளிச்சிட்டு,
ஈரம் முழுசா உலராத தலையோட,
தளர்வா டிரெஸ் போட்டுகிட்டு,
சூடான ஒரு கப் டீ,
கொஞ்சம் தின்பண்டம்லாம் வச்சுக்கிட்டு...
வாசிக்கலானு தொடங்கியாச்சு...





நான் என்னனேய தேடிச் செல்கிறேன் .
இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான்
நடந்து செல்லும் பாதை கவிதையினுைடயது - பிரமிள்
(தட் முதல் பக்கமே impressive).

ஒவ்வொரு கவிதையும் முடியும் போது,அவ்வளவு ஒன்றிப்போய் நகராம மனசுக்குள்ளயே பதிஞ்சிருச்சு...
மனுசன காதலிக்கவே ஆரம்பிச்சுட்டேன்...
நீங்களும் வாசிங்களேன்...








ரஸவாதம் - பிரமிள்

இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புைதந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முைல சுரந்தாள்
சொரந்ததுேவா
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.


காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..

Friday 3 May 2019

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵

புதிய எழுத்தாளர்களுக்காக 🎵 -
சுஜாதா பேசுகிறார்..

1.என் எழுத்து நடையை பின்பற்றாதீர்கள்.இதை parody செய்வதுபோல் ஆகிவிடும்.அது உங்களுக்குள் ஒலிக்க வேண்டும்.

2.முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது.நான் பார்த்த,கேட்ட,பங்குபெற்ற சம்பவங்களை அப்படியே எழுதாமல் பெயர்,இடம்,காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதுகிறேன்.இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்.

3.நிறைய ,மிக நிறையப் படிக்க வேண்டும்.கதை எழுதுவதற்கு மட்டுமின்றி சில கதைகளை எழுதாமலிருப்பதற்கும் அது உதவும்.

4.பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.அது நம் மரபு மட்டுமன்றி இந்த மொழியின் பல்வேறு வாய்ப்புகளை நமக்கு காட்டும். நல்ல தமிழ் எழுதப் பழகுவது நல்ல பேனாவை நல்ல தூரிகையை வைத்துக்கொண்டு சித்திரம் வரைவது போல்.

சுஜாதா - எழுத்தின்பம்...





நிறைய தமிழ் படங்கள் சின்ன வயசுல பாத்தது...(90s kid-ல)

காலேஜ் வந்ததுகப்றம் கொஞ்சம் பாட புத்தகம் தாண்டி வாசிக்க ,சின்ன புள்ளைல பார்த்த படங்கள எல்லாம் திருப்பி பார்க்க ஆரம்பிச்சக்காலம்.
சுஜாதாவும்,வைரமுத்துவுதான் முதல வாசிச்சேன்..

Straightஆ directed by தாண்டிதான் படம் பத்து பழக்கம்..
அன்னைக்கும் அப்டிதான்.
கண்ணத்தில் முத்தமிட்டால் ...
பாதி போகுறதுக்குள்ளவே...இதுமாதிரி நாம எங்கயோ அனுபவ பட்ருக்கமே....சுஜாதவா இருக்குமோனு பார்த்தா.. Yes...அவரேதான்...
Dialogue by-சுஜாதா...
அப்றம் இன்னும் ஆர்வமா சுஜாதவ வாசிக்க ஆரம்பிச்சுட்டேன்...


அடிப்படை நன்றாக இருந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்..
அப்படிதான் வாசிப்பும்..
எனதடிப்படை வாசிப்பு சுஜாதாதான்..
கதைகளில் புது நோக்கு...
அதிக அறிவியல் புணைவு கதைகள்...
எதாவது ஒரு புது விஷ்யங்கள் தெரிஞ்சுக்கலாம்...
அதிக வழ வழ கொழ கொழன்னு இல்லாம இருக்கிறது தனி சிறப்பு..


இவரின் கதைகளில் எதிர்பாரத திருப்பங்கள்  மிகவும் எதிர்பார்ப்பாக இருக்கும்...
வாசிக்க மிக சுலபமாக இருக்கும்...
வித்தியாசமான கதைக் களங்களில் புகுந்து விளையாடியவர்..ஆங்கில வார்த்தைகளும்,அறிவியலும் அதிகம் ஈம்ர்க்கும்...
எழுத்தின் வழி இன்பம் காண விளைபவர்களுக்கு சுஜாதாவின் படைப்புகள் நிச்சயம் நல்ல விருந்துதான்...
வாசித்து இன்புறுவோம்...


#பிறந்தநாள்_வாழ்த்துகள்_சுஜாதா

Thursday 2 May 2019

புத்தகமும்...புகைப்படங்களும்....

நாமலாம் பொதுவாவே sentimental kind of மனுசங்க தான்....
புடிச்சத பண்ணனும்னா பாத்து பாத்து பண்ணுவோம்...
மனசுக்கு நெருக்கமான பல விஷ்யத்துக்கு sentiment பாப்போம்...

அதே மாதிரிதான் புத்தகமும்,புகைப்படமும்...எழுத்தும்,ஓவியமும்....
மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கக்கூடியது...

அதப்பத்தி எழுதனும்னா மைபேனாலதான் எழுதனும்னு ரொம்ப நாளுக்கப்றம் parker பேனால மை கடன் வாங்கி நிரப்பிட்டு எழுதிட்ருக்கேன்...

ஓய்வே இல்லாதது..நம்ம எண்ண அலைகள்தாம்...

அதிகபட்சமா எல்லாரும் எழுதுனதுதான்...சொல்லப்பட்டதுதான்...

அது அது எழுதுறவங்களோட,வாசிக்கிறவங்களோட பாணிக்கு,கோணத்துக்கு ஏத்தாப்ல மாறுபடும்....

அந்த பார்வை நமக்கு பிடிச்சா கொண்டாடுவோம்...இல்லனா கண்டுக்காம விட்றுவோம்...அப்டியும் இல்லனா கழுவி ஊத்துவோம்...

அப்டியான என் பார்வையில்...

புத்தகமும்,புகைப்படமும்..
எழுத்தும்,ஓவியமும்....

நாம ஒரு மேற்கோள் பாத்துருப்போம்
"Photography is the story i fail to put into words".

எழுதினத வாசிக்கும் போது கற்பனையா நாமளே ஒரு காட்சிய உருவகப்படுத்தி மனத்திரைல பாப்போம்...

புகைப்படம்
காட்சியாவே நம்ம கண் முன்னாடி இருக்கும்...அதை எடுக்கிறவங்க கற்பனை இருக்குமே,பாக்குறதுல கற்பனையோட பங்கு குறைவுதான்...

பல கவிதை புத்தகத்துல கவிதைக்கு தகுந்தாப்ல படம் வரைஞ்சிருப்பாங்க...
அந்த படத்தையும் கவிதையையும் சில சமயம் பொருத்தியே பாக்க முடியாது...புரியாதும் வேற...
கவிதையோட வாசிப்புல கற்பனைய மிதக்க விட்ட அதவிட அருமையான ஒரு படம் நமக்கே கிடைக்கும்..

படங்கள பாக்க அதிக மெனக்கெடல் தேவை இல்லை...ஆனா வாசிப்புக்கு ஆர்வமும் கொஞ்சம் மெனக்கெடலும் தேவை...

கற்பனை,நிஜம் இதுதான் ஆதாரம் எல்லாத்துக்கும்..

ரெண்டுலையிலும் லயிக்கலாம்...
ஆனா கற்பனைலதான் ஆர்வமதிகம்...

கலைகளை வளர்த்து
கவலை மறந்து
காற்றுப்போல் அன்பு செய்வோம்...🐾💙





பேய் சேவல்...🐓🐣🐤🐥


        




         உண்மைய சொல்லனும்னா ,இது பேரு சாம்ப சேவதான்...

         சுமையா மிஸ்ஸோட அம்மா வீட்ல இருந்து ,இந்த சாம்ப சேவல கொண்டு வந்தாங்க...மிஸ் விட்ல இருக்க எந்த கோழி கூடவும் இது சேர்ந்துக்கல.....

         சாம்ப சேவ வளரும்போது ,எப்போதும் போல சேவலுக்குரிய குறிகுணங்களோட தான் இருந்துச்சு...

         ஒரு கட்டத்துல, சேவல் sir வயசுக்கு வந்துருச்சு....
         அதுக்கப்றம் தான் கூத்தே...
(என்னடா பொம்பள விஷ்யமா,அது இதுனு நினைக்கக்கூடாது...)


          இரவு 12 மணி...

          சேவல் கொக்கக்கரிக்க ஆரம்பிக்குது...
(கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
குத்து வாங்கும் அன்பிலே-லாம் இல்ல...)


        சும்ம்மா...நடுராத்திரி பேய் மாதிரி கத்துது...வீட்ல யாரும் தூங்க முடில அன்னைக்கு...

         சரி ...சரியாகிறும்னு இருந்தா....தினம் ராத்திரியானாலே இதே அட்டகாசம்தான்...

        அது பேரு பேய் சேவனே ஆகிருச்சு...

        அக்கம்பக்கத்துல உள்ளவங்களாம் சண்டைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க...


         என்னடா இந்த சேவ இப்டி பண்ணுதேனு போய்ட்டே இருக்க....

        ஒரு நாளு சுலைகா ராத்தா ,அவங்க பேரன கூட்டிக்கிட்டு சுமையா மிஸ் வீட்டுக்கு வந்துருந்தாங்க....


        எல்லாரும் வெளில நின்னு பேசிட்டுருக்காங்க....

       இந்த சேவலுக்கு பித்தம் தலைக்கேறிருச்சு...
      அந்த சின்னப் பையன் மேல வந்து றெக்காயால அடிக்குது...அத துறத்த துறத்த திரும்ப திரும்ப அடிக்க வருது....


        உள்ள வந்து கதவ அடைச்சிட்டாங்க..
றெக்கய விரிச்சிக்கிட்டு,அவ்ளோ கோவத்தோட வந்து அந்த கதவுல இருக்க இரும்பு கம்பில.....டமார்.......


        என்னடா செத்துருச்சானுலாம் பாக்காதிங்க...அவ்ளோ மொக்கலாம் இல்ல அது ..

மோதுனதுகப்றம்தான் அடங்குச்சு....


அடுத்த நாள்,

         ரெண்டு தெரு தள்ளி இருக்க ,
தெரிஞ்ச பையன் ஒருத்தன் மிஸ் வீட்டுக்கு வரான்..

        முயின் காகா(அண்ணன்) இருக்காறானு கேட்டுக்கிட்டே உள்ள வந்து, சேவலுக்கு சாப்பாடு போடுற முயினையும் பாக்றான்...சேவலையும் பாக்றான்.

       ஓடி வந்து,மிஸ் பையன் முயின் கிட்ட,


"முயின் காகா,முயின் காகா....என்கிட்டயும் ஒரு சேவல் இருக்கு...நாம சண்டைக்கு விடலாமானு கேட்ருக்கான்..."

         எவன்-டா இவன் லூசுனு...அதலாம் வேணாடா தம்பி...உன் சேவல் செத்துரும்னு- நல்லது சொல்லிர்க்கான் முயினு...

       அந்த அடங்காத பையன் கேக்காம ஒரு சனிக்கிழமை காலைல,,அவனோட சேவல தூக்கிட்டு முயின் வீட்டுக்கு வந்துட்டான்....

       சரி...இந்த பையன் அடங்க மாட்டானு....

முயின் வீட்டு கொள்ளப்புறம்...
கொஞ்சம் காலி இடம் ..
அத சுத்தி  வீட்டு மரங்க...

சண்டைக்கு களம் தயார்...
போட்டியாளர்,பார்வையாளர்கள் எல்லோரும் தயார் நிலையில் இருக்கின்றனர்...இன்னும் சிறிது நேரத்தில் சேவல் சண்டை தொடங்கவிருக்கிறது .....


சமைச்ச கையோட சுமையா மிஸ் கதவோரமா நிக்க,
என்னடா நடக்க போகுதுனு மிஸ்ஸோட குட்டி பொண்ணு எட்டிப்பாக்க,
என்னமோ நடக்க போகுதுனு முயின் பாக்க,
என் சேவல்தான் ஜெயிக்க போகுது அந்த பைய பாக்க....


சண்டைக்கு விட்டாச்சு ...


       முதல அந்த பையனோட சேவல்தான்,பேய் சேவல அடிக்குது...


அடுத்த 10 வினாடி மரண அமைதி....


அடுத்து, மண்ணுல புழுதி கெளப்பிக்கிட்டு,றெக்கய விரிச்சுக்கிட்டு ...மட்டு மட்டு மட்டுனு அவ்ளோ கொத்து கொத்துது பேய் சேவ...


அந்த சேவலுக்கு இரத்தம் ஒழுகுது....
ஒரு அடி அடிச்சது கூட அதுக்கு மறந்து போயிருக்கும்...


பாத்துட்டுருந்த பையன் பதறிப்போயி ,என் சேவ செத்தேப்போயிரும்னு எடுத்துட்டு ஓடுனவந்தான், மிஸ் வீட்டு பக்கம் தலை கூட வைச்சு படுக்கல....


சுமையா மிஸ் வீட்லையும்,
இதுக்கு மேல இத வீட்ல வச்சுருந்தா சரி பட்டு வராதுனு,அவங்க அம்மா வீட்டுக்கே பார்சல் பண்ணிட்டாங்க.....


மறுநாள் 11 மணி இருக்கும்...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு....சுமையா மிஸ் ரிங்டோன்....

மிஸ்ஸோட அம்மா,அந்த பக்கம்...

ஏய்,அந்த சேவல் கறியே நல்லாலடி,...சக்க சக்கையா....குழம்பு கூட டேஸ்ட் வரலனு சொல்லி சலிச்சுக்கிட்டாங்க...

சுமையா மிஸ் ,ஃபோன வச்சுட்டு அடுத்த சேவல் வாங்க ப்ளான் போடுறாங்க....

தொடரும்...




கதை:மல்லிகை
படங்கள்:ரோஜா

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...