Sunday 28 April 2019

சோழனின் காதலி-ராஜகுரு..📜

சோழனின் காதலி-ராஜகுரு..📜


படங்கள்: ப்ரசன்யா கலை

பேசிக்கலி,love story எல்லாருக்கும் புடிக்கும்...
இதுல இருக்க நியாயம் வெங்காயம்லாம் பாக்கம படித்தால் நல்ல புத்தகம்..

          ராஜ மிடுக்கு குறையாமல் வரைந்திருக்கிறார்..
கிட்டத்தட்ட 36 பக்கங்கள் கொண்ட குறு நாவல் ,பெருநில மன்னனின் காதல் பற்றியது...

         அது இது என்று இல்லாமல் கச்சிதமாக முடித்திருக்கிறார்...

          வர்ணனை அழகு...வார்த்தைகள் அலங்கரிப்புகளும் சிறப்பு..

          வரலாற்று நாவல்கள் வாசிப்போருக்கு மதிய இடைவேளை நேரங்களில் வாசித்து மகிழ நல்ல புத்தகம்...

           புத்தகம் வாசித்து நம் கற்பனையை உயிர்ப்போடு வைத்திருப்போம்...

புத்தகத்திலிருந்து...



மாமன்னன் ராஜபுரவியில் ஆரோகணித்திருந்தாலும், அவன் சிந்தையெல்லாம் தன் சிந்தைக்கவர்ந்த சிந்தினிப் பாவையின் சிற்ப அழகிலும்,கிண்கிணி சிரிப்பிலும்,கிள்ளை மொழியிலுமே சுழன்று சென்றது...








Thursday 25 April 2019

கியாங் மியாங் குள்ளச்சி...🐾


         பப்பி,ஜாக்கி,ஷீரோ,டாமி,ஜூடோ போன்றவைகளின் வரிசைகளில்

கியாங் மியாங் குள்ளச்சி...

(என்னடா சைனீஸ் பேரு மாதிரி இருக்குனுலாம் யோசிக்காதிங்க...இது நம்ம தமிழ் அழகிதான்...)


        இது பூனைக்குட்டி , நாய்க்குட்டிலாம் இல்ல...எஸ்...கோழிக்குஞ்சே.....




        சுமையா மிஸ் வீட்ல ,முன்னவே நிறைய கோழி,சேவல்,மற்றும் அவற்றின் குட்டிகள் எல்லாம் அனேகம்..

        வண்ணம்னாலே குழந்தைங்களுக்கு அளப்பரிய ஆனந்தம்,அதீத ஆர்வம்...
கலர் கோழிக்குஞ்சு...(நம்ம சின்ன பிள்ளைல எல்லாரும் எவ்ளோ அடம் பிடிச்சுனாலும், வாங்கிருப்போம்..நாள் முழுக்க அது பக்கத்துலயே உக்காந்து ,அத பாத்துக்கிறேனு பாத்துக்கிறேனே கொண்ணுடுப்போம்...)


         ஆனா இது கொஞ்சம் பெரிய குழந்தை...சுமையா மிஸ்ஸேதான்...

         5 கலர் கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்தாங்க...அதுல 4  செத்துபோயிடுச்சு...
பொழச்சது ,நம்ம கியாங் மியாங் தான்...

      Who is the hero?who is the hero? காக்க வந்த வாத்தியாரோ...back ground music add பண்ணிக்கோங்க...


       கொஞ்சம் கெத்து அதுக்கு...ஆனா வீட்ல முன்னாடி இருந்த கோழிங்க அதுங்களோட இருப்பிடத்த தக்க வைச்சுக்க,நம்ம கியாங் மியாங் கிட்ட சண்ட போட வேண்டியாதாகிருச்சு...
சண்டைல ,நம்ம சேவல் சார்(சுமார் 4-5 கிலோ...நல்ல உயரம்...) கி.மியாங்கோட கழுத்தாம் பட்டைலையே கொத்த ,அது வாயில கொஞ்சம் ரோஸ் கலர் முடி..ஃப்ப்ப்ப்-னு ஊதுது...

         தலைக்கு வந்தது ,தலைப்பாவோட போச்சுனு கி.மி யெஸ் ஆகிட்டா...
வீரத்தழும்போட அன்னைல இருந்து வீட்டுக்குள்ள மட்டுந்தான் அதோட ராஜங்கம்...


        அதோட வீடு சுமையா மிஸ் மடிதான்...

       கி.மி. அதுக்கப்றம் மனுசங்க கூட அதிக இணக்கமா இருக்க ஆரம்பிச்சிட்டா...சுமையா மிஸ் வாசத்துக்கூடவே சுத்துவா ...

       அத கண்டுக்கலனா கியாங்க் மியாங்க்னு கத்தும்...
பொழுதா பொழுதிக்கும் திண்பதையே மட்டும் வேலையாக கொண்டிருப்பாள்..
தொண்ட வரைக்கும் சாப்டுவா...
வயிறு கல்லு கணக்கா ஆகிடும்...தண்ணிக் குடிச்சதும் கொழுக்கு மொழுக்குனு ஆகிடும் அழகிக்கு...

        எல்லாக் கோழிக்குஞ்சும் நின்னுக்கிட்டே தூங்கும்னா,மேடம் மட்டும் கால தரைல விரிச்சு,கழுத்த தரைல வச்சு தூங்கும்...பாக்கவே ஆசையா இருக்கும்...


       இப்டி வீட்டுக்குள்ளவே பொழுத போக்கிட்டு இருக்கனால,உடம்புல கொஞ்சம் கூட சூரிய வெளிச்சம் படல...எம்புட்டு சாப்புட்டும் கொஞ்சம் கூட வளராம குக்னிகூயுவாவே இருந்து....


        அதுக்கு சுமையா மிஸ் வீட்டுக்காரரு incubator ஒண்ணு ரெடி பண்றாரு...
குண்டு பல்ப் மாட்டி ,கி.மியவும் உள்ள அனுப்பியாச்சு...
அதுக்கு அவ்ளோ சுகம்ம்...ரெக்கையா விரிச்சுட்டு திரும்பி திரும்பி நின்னு சூட சுகமா வாங்கிக்கிது...
(கார்ட்டூன் பாத்துட்டு பீத்தல்ஸ்லாம் விடல..நிஜமலே கி.மி இப்டிதான்..)


        சுமையா மிஸ் வெளியூர் போறப்ப,தனியா போகனும்னா கொஞ்சம் uncomfortable ஆ feel பண்ணுவாங்க...
ஆனா இந்த வட்டம்,ரொம்ப நிதானமா உற்சாகத்தோட கெளம்புனாங்க...


       வீட்ல தனியா விட்டுட்டு போக மனசில்லாமா,ஒரு கூடைக்குள்ள துணிலாம் போட்டு கி.மி யா தூக்கிக்கிட்டே ,நைட் சென்னைக்கு air பஸ்-ல ஏறிட்டாங்க...


       பஸ் நகர நகர கொஞ்சம் அலுப்புல அசந்துட்டாங்க மிஸ்...
எப்பவும் கிங் மிங்-னு கத்திட்டு இருக்கவளோட குரளயே காணோம் ரெண்டு மணி நேரத்துக்கு...
கோழிக்குஞ்சு செத்துருக்கும்...என்ன பண்றதுனே புரியாமா கூடைல பாத்தப்ப...செத்து போன மாதிரியே கிடந்துச்சு...


        ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கப்ப திடீர்ன்னு.....கிங் மிங்....கிங் மிங்-னு ...சத்தம்...


       அடியேய் கியாங் மியாங் குள்ளச்சி என்று செல்லமாக அடித்து மடியோடு அணைத்துக்கொண்டார்கள்...
ஆசுவாசமடைந்தோம்....😄🐾💝
தொடரும்....


படங்கள்-இஜாஸ்
கதை-மல்லிகை...






Wednesday 24 April 2019

செல்லத்தாயி💞🐾




ஒரு புளிய மரத்தின் கதை..


தலைப்பே விஷ்யத்த சொல்லிருச்சு ..

நம்ம ஊருலலாம் ஒரு சில இடம் இருக்கும். அதை சொல்லி அழைக்கிற அடையாளமே அழிஞ்சு போனாலும்,அதனோட பெயரை அடையாளமா சுமந்து நிக்கும்..அத பத்தின நாவல் தான்..

மனித  சௌகரியத்துக்கு ஏற்றாற்போல்தான் எல்லாவற்றையும் ஆட்டி வைப்பான் மனிதன்..அதற்காக என்னவெல்லாம் காலம் காலமாக செய்து வந்துக்கொண்டிருக்கிறான் என்பது இந்நாவலை வாசிக்கும் போது, கண்முன் ஓடும்..அதில் அதிகம் அடிவாங்கியது இயற்கைதான் என்பதும் புரியும்..


கதைக்கு வருவோம்..
நிறைய தலைமுறைகள பார்த்த அந்த அலட்டிக்காத புளியமரம்தான் ஹீரோ..
கதை சொல்லியா வர தாமோதர ஆசான் மாதிரி ,நமக்கும் ஒருத்தர், இருக்க மாட்டாங்களானு ஏங்க வைக்கக்கூடிய எதார்த்தமான மனுஷன்..


எளிமையான நடைல,நாகர்கோவில் வழக்குல  சுவாரஸியமா கதைய தெறிக்க விட்ருக்காரு ஆசிரியர் சு.ரா..


புளியமரம்,காத்தாடி தோப்பு,தாமோதர ஆசான்...அந்த செல்லத்தாயி ...மனதோடு பதிந்து விட்டது...

புத்தகத்தில் இருந்து,








1956-57  ஆண்டுகளில்,சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரியவில்லை என்று எண்ணிக்கொள்வேன்...


#thank you chandu for this book
#கண்மணி..💞

பையித்தியம்...🐾

நான் சண்டையிடும் நேரங்களில்
என்னை நான் எட்டி நின்று பார்த்து
ச்சை..கருமத்தை என்று சபிக்க வேண்டும் போலுள்ளது...🙄

அன்பு செய்யும் நேரங்களில்
நானே எனக்கு முத்தமிட்டு கொண்டு
ப்பா ...லட்டுக் குட்டி...எவ்ளோ அழகு! என்று கொஞ்ச வேண்டும் போலுள்ளது ..😄

Tuesday 23 April 2019

புத்தக தின வாழ்த்துக்கள் 🐾



எழுத்து,உலக தத்துவங்களுக்கும் சட்டை மாட்டுவதாய் இருக்க கூடாது-சு.ரா..

எழுத்தின் நடையும்,வார்த்தைகளின் லாவகமும் உபயோகிக்க உபயோகிக்கதான் பழக்கத்திற்கு வரும்.


தாம் எழுதியதை எல்லோரும் படிக்க வேண்டும்.பாராட்ட வேண்டும் என்றெல்லாம் இல்லை.(ஆனால் அப்ப்டி நடந்தால் மகிழ்ச்சிதான்...இல்லையென்று சொல்வதற்கு ஒன்றுமில்லை..)
அதற்கெல்லாம் மேல் எழுத்தின் மேலுள்ள பித்து அவர்களை ஆட்டி வைக்கும் போது ,அணைத்து முத்தமிடும் போதும்,தேனீர் கோப்பையே நீட்டி அவனை எழுத வைத்தேத் தீரும்..(உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் தேனீர் கோப்பை பெற்ற இடத்தை,பிரியாணி தட்டுகளால் கூட பெற முடியவில்லை...)


தரமான எழுத்துக்களை தேடி படிக்கலாம்.  
மேதாவிகள்..சரி மேதைகள் பரிந்துரைக்கும் எழுத்துகளைப் படிக்கலாம்...மற்றவர்கள் விருதளித்து கொண்டாடுவதை வாசிக்கலாம் என்று இல்லாமல்,
அதையெல்லாம் ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு எந்த வகையான எழுத்துகளில் விருப்பம் என்று தெரிந்தறிந்து ,புத்தகங்களை தேர்வு செய்து வாசியுங்கள்...(எல்லா புத்தகத்தையும் வாசிக்க முடியாதுல நம்மளால).
(மற்றவர்களுக்கு பிடித்திருக்கும் எழுத்துக்கள் தங்களுக்கும் பிடித்திருக்கும் என்றெல்லாம் இல்லை..)


கலைகளில் வழி வலிகள் தீரும்..மாயும்..
புத்தக வாசிப்பு ஒரு வகையான கலைதான்...
வலிகளை தீர்க்கும்.மாய்ந்தே விடும்..
(கலைகளை தேர்ந்தெடுப்பதும்,அதுவே தேடி வருவதும் சுயம் சார்ந்ததே..).

புத்தக வாசிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவெல்லாம் இல்லை..
பிடித்தால் வாசியுங்கள்..(நேரமில்லை என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லாதீர்கள்..பிடித்த விஷயங்களுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்க நம்மால் முடியும்..)


புத்தகங்கள்
பேசும்,தொண்டை வறளச் செய்து அழ வைக்கும்,அரவணைக்கும்,அதட்டும்,கிண்டல் செய்யும்,கிச்சு கிச்சு மூட்டும்,பித்தனாக்கும்,புத்தனாக்கும்..
புத்தகங்களை காதலித்து பாருங்கள்..


எழுத்தாளனை , இறந்த பிறகுதான் கொண்டாட வேண்டுமெல்லாம் இல்லை..

வாசகர்களாவோம்..

பிடித்த எழுத்துக்களையும்,எழுத்தாளனையும் கொண்டாடுவோம்..

புத்தக தின வாழ்த்துக்கள்...


-இப்படிக்கு வாசகி..


Friday 19 April 2019

சுலைகா ...💞

மனுஷி...
.சுலைகா
ராத்தா...

         ராத்தாவென்றால் அக்கா முறை...
அவங்கள எங்க கிராமத்துல எல்லாரும் அப்டிதான் கூப்டுவாங்க.. ..
நல்ல கலர்..
50 வயசு மாதிரிலாம் தெரியாது...
ஊர்லயே முதல மச்சி வீடு கட்டுனவங்க...
9 குழந்தைங்க ராத்தாவுக்கு...
சின்ன வயசிலருந்தே எல்லாருக்கும் உதவுற குணம் ..

        சின்ன வயசுல குளத்துக்கு, குளிக்க போகும்போது முதுகு தேய்க்க கல் எடுத்துட்டு போகுமாம்...
குளத்துல குளிக்கிற எல்லா பொம்பலைங்களுக்கும் முதுகு தேய்ச்சு விட்டு கடைசியா குளிச்சிட்டு வருமாம்...

       ஊர்ல இறந்தவங்கள குளிப்பாட்ட யாருக்கும் பெருசா ஒத்துகாதாம்..
ராத்தா ..ஊருக்குள்ள எங்க சாவுனாலும் அவங்கள குளிப்பாட்ட போய்டுமாம்...
(அவங்க வழக்கப்படி..குதம் குய்யம் எல்லாத்தையும் நல்லா சுத்தம் பண்ணி குளிப்பாட்டுவாங்களாம்).
மூஞ்சி சுழிக்காம வேல செய்யுமாம்...

        யாராது வீட்டுக்கு போனா கூட சும்மா இருக்காதாம்...
எங்க வீட்டுக்கு வந்தா கூட,
சுமையா மிஸ் குடுங்க காய்கறிலாம் வெட்டித் தரேனு சொல்லிட்டு,செஞ்சு குடுத்துட்டுதான் போகும்...

       மினிமம் எப்பவும் மணிபர்ஸ்ல 500ரூவாவாது வச்சுருக்கும்..
யாரு காசு கேட்டாலும் குடுக்கும்...கணக்குல எழுதி வச்சுக்கோங்க...என் காலத்துக்கப்றம் என் புள்ளைங்களுக்கு குடுத்துருங்கனு சொல்லிடும்..


        நல்ல ராத்தா...எல்லாருக்கும் பிரியமானவ..
ஆனா வீட்ல இருக்க பிள்ளைகளுக்கு,எல்லாருக்கும் அம்மா வேல செய்யுதுனு வருத்தம்...ஆனா எல்லா புள்ளைங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சு பேர குழந்தைங்களையும் நல்லா பாத்துக்குச்சு...
இப்படியே அதோட வாழ்க்க ரொம்ப நிறைவா போய்ட்டுருந்துச்சு...
ஒரு நாள்...

       வயிறு ரொம்ப வலிக்குதுனு படுத்ததுதான்...
வயிறு குடல்-ல புத்து நோய்னு சொல்லிட்டாங்க...(colon cancer)
வயிறுல புத்துக்கட்டி அங்கிட்டும் இங்கிட்டும் உருளுது.
ஆப்ரேசன் பண்ணாலும் ரிஸ்க்னு சொல்லிட்டாங்க...
ஊரே ரொம்ப வருத்தப்பட்டுச்சு...

       வயிறு வலில சுருண்டு சுருண்டு படுத்துக்கும்...யாருக்கும் கேக்காம அழுதுகிட்டே இருக்கும்...சாப்டவும் முடியாம சாப்டது வெளியவும் போக முடியாம நரக வேதனை அதுக்கு....பட்டினியாவே கிடந்துச்சு..உடம்புல ஒன்னுமே இல்லாம ரொம்ப இளைச்சு போச்சு ..

        அது அந்த நிலைமைலயும்,
நா இந்த வாழ்க்கைல பண்ண பாவத்துக்கு, அல்லா! என்ன இப்பவே தண்டிச்சிட்டாருனு சொல்லி அந்த நோயயும் அர்த்தமுள்ளதா ஆக்கிகிச்சு ....இனி எனக்கு பிறப்பே இருக்காதுனு பெருமையா சொல்லிக்கும்..
.

        எங்க அண்ணன்-னா அதுக்கு ரொம்ப  இஷ்டம்...அவன் போய் பாத்ததும்..அவனோட மடில படுத்துக்கிச்சு..
அவனுக்கு தொண்டலாம் வறண்டு,அழுக முட்டிட்டு நிக்குது..
வீட்டுக்கு வந்து சொல்லிக்கிட்டே சத்தம் போட்டு அழுதான்..


       ஒரு மாசத்துக்கு முன்னாடி ராத்தாக்கூட எடுத்த செல்பி frame பண்ணி வீட்டு சுவர்ல தொங்குது ...அந்த குளத்துக்கரையும் அவள் பெயரை சுமந்தே நிற்கிறது...


        ராத்தா ..ராத்தா...🐾

(கதைக்கும் நேரங்களில் தோழி கூறியது)...



Tuesday 16 April 2019

ஆதி அத்தி🐾📜

ஆதி அத்தி...
ஆதிமந்தி💞ஆட்டனத்தி💝மருதி...

வரலாற்று நாடக நூல்..
ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் காவிய நூல்-அப்டிங்கிறது ஆசிரியர் குறிப்பிட்டது..
ஆனால் மருதிதான் -காதல்க்காரி..🐾💝

கி.பி.முதல் நூற்றாண்டுல நடந்தது மாதிரி கதைக்களம்..ஒரு வரலாற்று நிகழ்வ தொகுத்து ஆசிரியர் அழகான நயமிக்க தமிழ்-ல கொடுத்திருக்காரு..

நீ என்ன எவ்ளோ love பண்றங்கிற கேள்வி காலாங்காலமா கேட்டுட்டு வராங்க😂..
அதுக்கு உவமையோட பதில் சொல்லி பிச்சுருக்காய்ங்க....

மருதி -பொன்னி
மருதி-அத்தி
ஆதி-அத்தி
வசன அமைப்புகள்
கிலுகிலுப்பு...

மருதி-பொன்னி...தோழிகள் பேசுவது போல் ஒரு காட்சி வரும்...(இன்று வரை பெண் பிள்ளைகள் அப்படிதான் பேசிக்கொள்கிறார்கள்...😂😄🤗)

சங்க கால பாடல்களுடன் சேர்த்து அருமையான படைப்பாக உள்ளது.  ஒரே மூச்சில் முடித்து விடலாம்...

வாசிப்பிற்கு பின் காவிரி,காவிரி பூம்பட்டினம் பற்றியதொரு பெரிய மதிப்பு வருமென்பது உறுதி..

காதலின் நாயகி மருதி...
அந்த பாடல்.


"பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை யாரறிவார்..?

ஆதிமந்தி பாடுவது:

பெண்ணணங்கே போய் வருவாய்- உன் 
பேரன்பை நானறிவேன்..

ஆட்டனத்தி பாடுவது:

அன்புடனே கால்வருடி ஆதரித்தாய் பெண்மணியே
என்றனுயிர் தான் கொடுத்த தெய்வமன்றோ நீ யெனக்கே?

ஆதிமந்தி:

இன்பமெல்லாம் எனக்களித்தாய்- நம்
இருவருள்ளம் ஒன்றலவோ?

இருவரும் இணைந்து..

பெண்ணணங்கே போய் வருவாய்-உன்
பேரன்பை மறவோமே...!


முடிவில் கண்முன்னே ஒரு நாடகம் அரங்கேறியதை,நம் கற்பனைகள் அரங்கேற்றியதை நிச்சயம் உணரலாம்...



Monday 15 April 2019

நிழல்கள் - நகுலன்📜📚

நிழல்கள் - நகுலன்

மனதின் பைத்திய நிழல்கள்...

எழுத்தாளன் மற்ற எழுத்தாளனிடம் அபிப்ராயம் கேட்பதில்லை...அவனுக்கு சரியென்றால் சரிதான்...

புரிந்துக்கொள்ளவே கடினம் என்பதை புரிந்துக்கொள்பவர்களைதான் இவ்வுலகம் பேசும் .....
அதை உருவாக்கியவனை கொண்டாடும்...
நகுலனைக் கொண்டாடுவோம்...
மனம் எனும் பையித்திய நிழல்...💗🐾

"மனம்தான் மதத்தைவிட பெரியது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..." என்று எழுதியதையெல்லாம் கணக்கில் சேர்க்காமல் எழுத்தின் மீதுள்ள காதலையும்,கலையின் ரசத்தையும் மட்டும் ரசித்தால் நல்ல நாவல் தான்...💗💞

ஆன்ம தேடல்..




Wednesday 10 April 2019

சமுத்திரா...😍💝


திருச்சி பொண்ணு...(இத எதுக்கு இந்த நாயி இப்போ சொல்லுது...அதானே..மேட்டர் இருக்கு பையா)...😄
எங்க ஊர்ல கடல்-லாம் கிடையாது(அதான் உலகத்துக்கே தெரியுமேடா....)
காவிரி ஆறுதான்...(ஹச்ச்ச்ச்சோ..விஷ்யத்துக்கு வா....)🤗
ஆத்துலலாம் குளிக்க எனக்கே கூச்சமா இருக்கும்...(அதலாம் பொண்ணுங்களுக்குதானே இருக்கனும்...உனக்கு ஏன் இருக்குது...)..😎😎
என்னோட நியாபக வளையங்கள சுத்தவிட்டு...(சொயிங் சொயிங்.....சொயிங்)😍😍😍😍🎯🎯
2004 ல போய் நிறுத்துவோம்...
ஆறாங்கிளாஸ்...
அமலாஸ் ஸ்கூல்...
Higher secondary வேற...
Christian school..(அவிங்க கோயிலுக்கு போகனும்னா டூர் கூட்டிட்டு போவாங்கள..அதே group தான்..).
😂😋
School டூரு...
எப்படியோ அழுது புரண்டு ...அம்மா போ கூடாதுனு சொல்லி..அப்பாட்ட நைஸா ஐஸ் வச்சு, ஒரு வழியா.. டூர் போக நைட் school -ல இருந்து கிளம்பிட்டோம்...
😅
அடுத்த நாள்...காலைல...
வேளாங்கண்ணி கடல்...அன்னைக்குதான் முத முறை கடல்-ல பாக்குறேன்...☺☺☺
மேகமா...வானாமா...இல்ல கடல்னா இவ்ளோ தண்ணி இருக்குமா....முன்னாடியே கடல் பாத்த புள்ளைங்க சொன்ன கதலாம் வேற.... அறியா பிள்ளை...school டீச்சருக்கு டிமிக்கி குடுத்துட்டு கால் மட்டும் நனைச்சுட்டு வந்து....கொஞ்ச நேரம் வெயில் ல நின்னா...ஒரே உப்ப்ப்ப்புபுபு கால்ல...😌😌😌
ஓ..இதான் கடலா....என்ற ஆச்சரியத்தோடவே டூர் முடிஞ்ச்சு...(இதுல என்னானா....போற வரைக்கும் தெரியாது..வேளாங்கண்ணில கடல் இருக்கும்னே...அடிப்பாவினு தலைல அடிச்சுக்காதிங்க)...😏😏
காலங்கள் கடந்து போய்டுச்சு...(எதுவரைக்கும்னு கேக்காதிங்க...பழைய காமெடி...)
🤕🙃
2011...
12ங் கிளாஸ் result வந்து....engg. counselling....🤑🤑
அந்த counselling அப்பதான் சென்னையவே மொத மொத பாக்குற பல caseல நானும் ஒருத்தி.....(ஈஈஈஈஈஈஈஈ...)😬😬😬😬😬
அப்ப நாச்சும் அந்த மெரினாவ கண்ணுல பாத்துடலானு இருந்தேன்...ஆனா...நான் வளத்தத் தாய், என்னய counselling முடிச்ச கையோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துருச்சு....(idiot பெல்லோ....)😱😬
காலேஜ்க்கு போறதுக்கு முன்னாடி நாள்....
அந்த..."பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா......இந்த பூமிக்கு நான் வந்தது குத்தமாம்மா"...பாட்டு கேட்டுட்டு கண்ணாலயும் மூக்காலயும் அம்புட்டு அழுக.....(நம்ம சோக்ஸா இருக்கும்போதுதான் இந்த பாட்டுலாம் போடுவாய்ங்க...)😩😩😩😩
அடுத்த நாள் காலேஜ் கோயமுத்தூர்-ல சேர்ந்தாச்சு...😤😲
வாழ்க்கைல எவ்வளவோ விஷயம் எத்தன தடவ நடந்தாலும் ,முதல் முறைங்கிறது...மறக்கவே முடியாதது...(எங்க சொல்லுனுலாம் கேக்காதிங்க)...😷😕😔
முதன் முதலா....விடுதி..... Girls hostel...😰😰😰😰
அழுதுக்கிட்டே...நா நம்ம ஊர்ல இருக்க arts college லயே சேந்துக்கிறேன்.என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுமானு..சின்னப்புள்ள மாறி ...அம்மாவோட  முந்தானைய புடிச்சுட்டு விடல....(ஹாஸ்டல் சேந்ததுக்குலாம் இவ்ளோ சீனா-னுதானே தோணுது....i am லாம் 90'ஸ் kid...Scl லாம் கூட வீட்ல இருந்துதான் போனேன்...ஹா ஹா.........)🙋🙋😿😿
ராட்சசி...அப்டிதான் பினாத்துவானு .....எங்கம்மா சொல்லிட்டு வீட்டுக்கு போய் அழுதுருக்கு...(இதுக்கு கூட்டிட்டே போயிருக்கலாமா...அழுத விஷ்யத்தையும் அப்டியே மறைச்சுட்டாய்ங்க அப்ரசண்டிங்க...)🙇🕴
கடல்...கடல் ...மறந்தாச்சு பாத்திங்களா....(பின்னாடி பாப்போம்..)👶👶
கோயமுத்தூர்லயும் சிறுவானிதான்...(அட..இந்த புள்ள வேற...)🕵
4 years completed....🙊🙉🙈
What next....
எல்லாரும் என்ன என்னமோ நினைக்க...அக்கா கரீட்டா....சித்தாக்கு அப்ளிக்கேஷன் போட்டு....counselling நாளைக்குனா...இன்னைகுதாம் வீட்லயே சொல்றோம்ல...(அடி..படுகாலிங்கிறீங்களா....அப்டிதான் எங்கம்மாவும் சொல்லுச்சு....)🙆💁
இந்த முறையும் counselling முடிச்ச கையோட, ஊருக்கு வந்தாச்சு....(தாய்....)🏃🚶
2015...
அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி-திருநெல்வேலி...
🙋👰
GCTian becomes GSMCian....(த்தூ ..மேட்ட்ருக்கு வா...)💁
நா வந்தப்ப இங்க நல்ல குளிரு...அப்டியே அந்த காலேஜ்ல வச்சிருந்த sweater,குரங்கு குல்லாலாம்...வேற மாட்டிட்டு...sceneஆ இருந்துச்சு..(வெயில பத்தி தெரில இந்த குட்டிக்கு தெரியலனு சீனியர்ஸ் சிரிச்ச விஷமம் இப்பதான் புரியுது கருமம்....
)🙇🙇
புள்ள படிச்சா அந்த ஊர்க்கு mini tour போகுமே...அந்த கும்ப்ளிங்கே தான்...👪👪👭👬
வீட்ல இருக்கவங்கலாம் வந்து....👪
எஸ்ஸ்.....
கன்னியாகுமரி...💕💃(வெற்றிக்குறி போட்டுக்கோங்க...)💪
இன்னும் கொஞ்சம் பில்டப் பண்ணுனா...🌏
இந்திய பெருங்கடல்.....(எப்டி...😂💕💃)
6ங் கிளாஸ்ல கடல பாக்கும்போது இருந்த அதே பீலிங்க்தான்....🏖
ம்மா...இந்த தண்ணிலாம் எங்கம்மா போகுது....
விட்ரீ..எங்கயோ போய்டு போகுது...என்றார் தாய்...அந்த ரெண்டு ப்ளேஸ்க்கும் போட்-ல போய்ட்டு வந்தாச்சு...🏖
அப்ப .....புடிச்சது ,இந்த  சங்கு சிப்பி கடல் பயித்தியம்....🏝🏝🏝
எங்க போலானு கேட்டா....கடல் பாக்க போலாம்....(நல்ல வேல திஸ் ஊரு ஹேஸ் மெனி கடல்ஸ்....)😘💙💃
நமக்கு ஒன்னு தெரிஞ்சுட்டா ,பெரிய...ம... மாதிரி சொல்லுவோம்ல...அப்டி சொல்லி...18 வயசு முடியிறதுக்குள்ள கடல பாருன்னு சொல்லி...கூட்டிட்டு போனது  திருச்செந்தூர்க்கு...ப்ரசன்யாவ...😎
(அவளும் மேகமா...வானமா...என்று சேம் பினாத்தல்...)...
(U remember this dialogue..., இந்த நாய் இந்த நாய்க்கூடதான் சேந்தாகனும்ங்கிறது விதி..)😂
மீண்டும்.....மீண்டும்....
கடல் பெரும் ஆறுதல்....
அதுக்கப்றம் எந்த ப்ரச்சனனாலும்...கடல போய் பாக்கலாம்...
எவ்ளோ....ஆராவாரத்துலயும் அமைதியா இருக்க மாதிரி தோணும்...
மனசு எவ்ளோ கஷ்டம்னாலும் லைட் ஆகிறும்....(ஒரு கப் ஃகாபி் ப்ளீஸ்....)
💕💗

















Saturday 6 April 2019

சனிக்கிழமைகள்...



சனிக்கிழமை என்றாலே....மேம்ம்ம்ம்ம்...இன்னைக்கு sattturdayyyy என்றும் குழையும் தொனியில் சொல்லும் ஜோதிகாதான் நினைவில் வருவார்...


அந்த படத்திற்கு பின் காதலர்களுக்கு சனிக்கிழமை இரவு என்று சொல்வதே....ஒரு கிலுகிலுப்பாக இருக்கிறது...😍


வெள்ளிக்கிழமைகளின் அந்தி பொழுதுபோல் எதுவும் அவ்வளவு ஆசுவாசத்தை தந்ததில்லை...
எவ்வித மன அழுத்தமும் இன்றி "ஹப்பாடா"  என்று அமரலாம்...(ஏனென்றால் ...நான் இன்னும் student தான்ப்பு...)😂


என்னுடைய சனிக்கிழமைகள்...ஒரு தூங்கும் நாள்...
நாள் முழுக்க கூட தூங்கியிருக்கிறேன்...(வேற என்னத்த கழட்டிட போற...)...
(No Saturday night palsy/party....)


வார இறுதிகளில் விடுதியே மிகவும் அமைதியாக இருக்கும்...(இந்த பக்கத்துல நாகர்கோவில் கோவில்பட்டி ticketலாம் வீட்டுக்கு போய்டும். ஹை
......மெஸ்லையும் கொஞ்ச பேருக்கு சோறு சமைக்கும் போது இன்னும் கொஞ்சம் நல்லார்க்கும்...).


பொதுவாக  மாடசாமி மெஸ்ல காலை- பொங்கல்....என் விருப்பான உணவுகளில் இதுவும் ஒன்னு...(திங்கிறதுல எதுதான் உனக்கு புடிக்காது...ஹ்ம்னு லாம் கேக்காதிங்க....foodie Na...haa haa)


சாப்பிட்டு வந்து மல்லாக்க படுப்பதோடு சரி...அடுத்து மதியம் மீன் குழம்புக்குதான் ...
தூக்கத்திலிருந்து எழுவதே ஒரு பெரும் சோம்பேறித்தனம்...ஆனா மீன்குழம்பு...ஒரு உற்சாகத்தோட,எதோ பெருசா சாதிக்க போற மாதிரி எழுந்துருவேன்...

மெஸ்க்குள்ள என்ரி ஆகும்போதே வாசனை புடிச்சுக்கிட்டு...

சாப்பாடு போட்டு கொஞ்சமா பிசைஞ்சு விட்டுட்டு கொஞ்சம் குழியாக்கி....அதுல அப்டியே.......மீமீன்ன்ன்ன்ன் உடையாம தட்டுல எடுத்து போட்டு.. .ஒரு fish fry( சரி...ரெண்டு...) வாங்கிட்டு......அப்டியே ஒவ்வொரு வாயா சாப்பிட ஆரம்பிச்சா...
நாக்குல இருக்குற சுவை அரும்புகள் அத்துணையும் அழகா முழிச்சு ஒவ்வொரு சுவையும் ....ஆஹான்னு உள்ள போய்.....வாழ்க்கைல வேறென்ன சுவை இருக்க போகுதுனு முடியும்....



சாப்பிட்டதும் திருப்பி ஒருக்கா தூங்கி  சாய்ந்தரமா 5.30 மணி போல எழுந்திரிச்சு டோழி கூட எங்க போகனும்னே தெரியாம....போய்ட்டு சும்மா ஊரச் சுத்திட்டு தின்னுட்டு வந்துடுறது...(டோழியும் நாள் முழுக்க தூங்குறதுனு cooperate பண்ணுவாங்க)...


இரவு முழுக்க ☀️ பகலாய் போகும்....அது இது வரையிறேன் கழட்ட்றேன்னு...முடிச்சுட்டு நம்மளே நல்லார்க்குனு திருப்தி படுத்திட்டு தண்ணீர் குடிச்சுட்டு தூங்க வேண்டிதான்...(வேறென்ன வேல....)...

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...