Tuesday 7 August 2018

தோரண மலை...

உலகத்துல எவ்ளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் சார் ஜெஸ்ஸியோட தங்கச்சிக்கு frnd-ஆ இருக்கேன்...(ஏன்-னா அந்த நாயாலதான் இந்த நாய மேய்க்க முடியும்....no more sympathy ha haaa)

அப்டி இப்டி போலானு students life ல plan பண்ண எந்த tripஉம் உருப்பிட்டதா சரித்திரம் இல்ல...(பிக்காளி கெளம்புனா ...கெளம்புனும்...)

தோரணை மலை(வாரண மலை)


ஆற அமர 12 .10 க்கு பஸ் ஏறியாச்சு...(அடிச்சு புடிச்சுட்டு ஏறுனதுல ஒரு அம்மா எருமமாட்டுக் __னு திட்டுச்சு...சிரிச்சு விட்டுட்டு ஏறுடி எரும)...

கொஞ்சம் தூரந்தான் போயிருக்கும்...(தலைவர் பொறந்தப்ப போட்ட ரோடு போல...குடல் வெளில வரல நல்ல வேள..ஆனா அதுலயும் தூங்குறவங்களாம்...ப்பா)

பாப்பாக்குடி தாண்டினப்றம்தான் சுய நினைவே வருது..(ஹப்பாடா...நாம உயிரோடதான் இருக்கோம்...)..

கடையம் இறங்கி தோரண மலை பஸ் ஏறி இறங்கியாச்சு


3 கிமீ -(நடக்கலாம்தான் ..ஆனா நாக்கு தள்ளிரும்னு ஆட்டோ option choose பண்ணியாச்சு...வரும் போது நடந்தே வந்துக்கிறோம்னு சொல்லிட்டாச்சு)...


தூரத்துல இருந்து பாக்க ஒரு பெரிய அருவி கொட்றாப்புல இருந்துச்சு...(ஹே ஹே ...அது பெயிண்ட்டு....பல்பா)...


தென் facing usual question
"ஒத்தையிலா வந்தீங்க...?..." (அப்றம் என்ன கத்தை கத்தையா வரது....irritating idiots)...

1000 படியாம்...(எண்ணாமா ஏறிடுடி ராசாத்தி..)

அந்த இடத்துக்கு போய் அதனோட வரலாற கதைக்கிறதே தனி குஜால்ஸ்...

இங்க நிறைய மூலிகை இருக்காம்...
அகத்தியர் uncleஉம் ,அவரோட  student தேரையரும் இங்க ஒரு பெரிய ஆஸ்பத்திரிய கட்டி ஆண்டது ஒரு காலமாம்...

மூலிகை வல்லுனர்கள் இருவர்...(ஹா ஹா...சிரிச்சுக்கலாம்..தப்பில்ல...)










அது ஏன்-டி tripனு வந்துட்டா அருகம்புள்ள கூட ஆ-ன்னு பாக்குற..(அருகம் புள்ளையா இருந்தாலும் சரி...ஆம்பள புள்ளையா இருந்தலும் சரி...அப்டிதான்.....ஹே....just for fun என்ன)....


எல்லாத்தையும் ஆராஞ்சுகிட்டே ...தேரையர் சமாதிய கண்டுபுடிக்கிறோம் ஏறி....ஏறி....
ஏய்...இன்னும் எம்புட்டு தூரம்யா...?

👨இன்னும் 450 படிமா..

👧ச்ச ..அவ்ளோதானா..

👨ஏறுனதுகப்றம் தெரியும்...

👨மேல கொரங்கு இருக்கும்...(ஹா ஹா..கூட கூட்டிட்டுதானே போறேன்..)

👧எங்கள்ட்டதான் எதுமே இல்லீயே...

👨ஹா ஹா...handbag-அ கூட விடுறதில்லையாம்...

👧சண்டாளா...ஒரு வார்த்தகூட நல்லதா வராதாயா....


ஜில்லுனு காத்து...ஜன்னல சாத்து....(wow காத்து....)


பாதி தூரத்துல ஒரு குகை....

🙍ஏய் போகாதடி...

🙋Explore everything -டி...

🙍அப்ப நீயே போய் சாவு...என்னால முடியாது...
(போய் ...உதட்டு மேல ....அய்...முத்தம்லாம் இல்ல....ஏதோ இலை உரசி ஒரே itching...இதான் மிச்சம்..)


அந்த figure .. நல்ல சிவப்பு...(கறுப்பு கட்டெறும்பு மாதிரி இருக்கு)
 ப்ரியா அங்கே பார்....பட்டபகலில் பாலினபெருக்கம்...
(போட்டோ எடுக்குறேனு....gangbang-அ கலைச்ச பாவத்துக்கு ஆளாயிட்டனே இந்த பாவி....)

மரப்பட்டை -ஒவ்வொரு தோலும் ஒவ்வொரு அழகு..





ஒரு இடத்துல super smell...இன்னொரு இடத்துல கேவலமான நாத்தம்...(கண்டிப்பா..இது பீநாறி(பிடங்கு நாறி) மரம்தான்)

அங்கங்க சித்தர் darlings...மருந்திடிச்ச குழி.கல்வம் எல்லாம் பாறைல இருந்துச்சு..(நல்ல வேள...நம்மாளுங்க எண்ணைய ஊத்தி ,திரிய போடல..)



உச்சிக்கு போனா சுனை நீர்...(அது அழுக்கு தண்ணிதான்..).




கண்ணுக்கு நல்ல விருந்து...(ரெண்டு ஆறுக்கு நடுல மலை...டேம்..பச்சை...அப்டி இப்டினு பாத்தாலும் அம்சமான இடந்தான்..)

இறங்கும்போது..அசிங்கமே படமா ஆட்டோ காரனுக்கு போன் பண்ணா...1 கி.மீ நடக்க விட்டுட்டான்...(இதுக்கு மேல வளர்மதி வயசுக்கு வந்தா என்ன ..வர்லனா என்ன...).

கடையம் போய் காசெடுக்கலானு போனா கரண்ட் இல்ல...(சாமி...சிறப்பா செய்றீங்கடா...அம்மா அர்ச்சன பண்ணிரும்...)
அடிச்சு புடிச்சு வந்து சேந்தாச்சு .

Finally only feelings ...(noo figures...😔😔😔😔😔😔😔))..Ne

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...