Friday 17 January 2020

சமந்தா-சக்தி💝

ஓ பேபி..
யெஸ்...நிறைய பேரு பாத்துருப்போம்..

பொதுவா டப்பிங் படம்னாலே கடுப்புதான்...:(
அதும் தெலுங்கு படம் சொல்லவே தேவ இல்ல...

ஆனால்..ஓ பேபி...ரொம்ப அழகான விஷயங்களை தாங்கி நிக்குது..

படம் ஆரம்பிக்கிறப்ப வழக்கமான மாமியார் கொடும கூட இல்ல அது ஒரு வகையான வதை..நாம ஒருத்தங்க மேல உள்ள அக்கறைல அடுத்தவங்கள அதிகமா கோவபடுத்துவோம்..அந்த kind of characterதான் லட்சுமி..
அவங்களுக்கு நடக்கிற மேஜிக்,இளமை திரும்ப கிடைக்கிறது..அது கொஞ்சம் பில்டப்தான்..புள்ளையார கைல குடுத்ததும் இளமை திரும்பிடுமாம்...
ஆனாலும் ,கனவுல நடக்குற விஷயங்களை படமாக்குனா நல்லாதானே இருக்கும்...
(படம் நிஜம்தான்)

சின்ன வயசுலயே காதலிச்சு கைபிடிச்ச கணவர இழந்துட்டு,தன்னோட ஒரே மகனோட வாழ்ற கொடுமையான வாழ்க்கைதான் லட்சுமியோடது...

இளமை திரும்பியாச்சு...
சமந்தாதான் இளமையான லட்சுமி..
உடல்வாகுல மட்டும் இளமை..
எண்ணம்,மனசு லாம் பழைய லட்சுமிதுதான்...

சமந்தா,பின்னி பெடல் எடுத்துருச்சு..அப்டி ஒரு நடிப்பு...
ஒவ்வொரு சீன்லயும் ஸ்கோர் பண்ணுது...

ஆனா சொல்ல வந்தது இதுலாம் இல்ல..
இந்த படத்துல சக்தினு ஒரு கதாபாத்திரம்.
சமந்தாக்கு கல்யாணம் பண்ணிக்கிற முறை...

சமந்தாக்கு, ரத்தம் உடம்புல இருந்து வெளில வந்துட்டா,இளமை மாறி முதுமை வந்துடும்..தன்னோட பேரனோட ஆப்ரேஷனுக்கு ரத்தம் தரனும்னு கட்டாய சூழ்நிலை ல ,சக்தி  சொல்லுவாரு,வேண்டா நீ இளமையோடவே இரு...நீ இழந்த வாழ்க்கைய சந்தோஷமா அனுபவினு...

சமந்தா:என்னடா பேசுற நீ..உனக்கு ஒரு 65 வயசு இருக்குமா...60 வருஷமா என்னத் தவிர வேற நினைப்பே இல்ல உனக்கு..நீ பாத்துக்க மாட்டியா,நா கெழவி ஆகிட்டானு கேப்பா...

யெஸ்...நாம எல்லாருக்கும் நிச்சயமா அப்டி ஒருத்தங்க நம்ம வாழ்க்கைல இருப்பாங்கல..

சக்தி...முறை பையன்கிட்டனே,பொண்ணுங்களுக்கு உள்ள தனி உரிமை,அதிகாரத்த அழகா அந்த சீன்ல நந்தினி சொல்லிருக்காங்க...
உள்ளுக்குள்ள ஒரு நல்ல உணர்வ நிச்சயம் குடுக்கும் அந்த படம்....

நந்தினி(படத்தோட இயக்குனர்) -அந்த பொண்ணு அவ்ளோ அழகா கொண்டு வந்துருக்கு படத்த...

தட் பேரன் ஆல்சோ ச்சோ க்யூட்..அழகன்..

படம் வந்து ரொம்ப நாளாச்சு..இப்ப ஏன் பினாத்துறனு கேக்காதிங்க...பொங்கலுக்கு தான்பா டீவில போட்டாங்க.  பாத்தேன்....

நல்ல படம்ல...சொல்லனும்ல...அதேன்...









Wednesday 15 January 2020

🚲 மிதிவண்டி பயணங்கள்...💝

 ஈருருளி...(சைக்கிள்)


(History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க...
)
சைக்கிள் பெல்...

அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்னு கொஞ்சம் கூச்சத்தோட கூச்சல் கலந்தாற்போல படபடப்பான ஒரு வகையான நல்ல ஓசை...

அத கேட்டதும் அட்ரீனலின் சுரக்க ஆரம்பிச்சுடும்..(இது இப்போதைக்கு தேவ இல்ல..நாம விஷ்யத்துக்கு போவோம்..).

இப்போ இருக்க கிட்ஸ் பத்தி அவ்ளோவா தெரில..
நா கிட்-டா இருந்தப்பலாம்...இதான்...

அப்பாயி ஊர்ல,பிரபு அண்ணானு ஒருத்தர் இருப்பாரு..நல்ல உயரம் ..வாட்ட சாட்டமா இருக்க ஒரு வாலிபர்னு கூட சொல்லலாம்..
எப்பவும் கைல ரெண்டு மகாலேக்டோ சாக்லேட்னாச்சும் வச்சுருப்பாரு...(அவரு ஆளு பேரு மகா..💙)..அந்த அக்கா வீட்ட தாண்டி போகும் போதெல்லாம் அந்த சைக்கிள் பெல் அடிப்பாரு...அந்த அக்காவும் கரெக்ட்டா வந்து பாக்கும்..


நா குட்டி புள்ள..சைக்கிள் பெல் அடிச்சதும் ,ப்ரியானு கூப்டுவாரு...
சொல்லு பிரபுனு சொன்னா...சும்மா கூப்டேனு சொல்லிட்டு போய்டுவாரு...

காலாண்டு அரையாண்டு லீவுலாம் இதான் நடக்கும்..
என்னோட லீவு முழுக்க அப்பாயி ஊர்லதான்..
பெரிய புள்ள ஆகுற வரைக்கும்..

இப்போ பிரபுக்கு சொட்டலாம் வந்துருச்சு..மாமா வீட்டு விஷேசத்துல ,மகா இல்ல அந்த அக்கா,வேறொரு அக்கா கூட வந்திருந்தாரு...

ஆனா அதே சைக்கிள் பெல் சத்தம்..மகா லேக்டோ வாசம் இன்னும் ரெண்டு பேருக்கும் நினைவுல இருக்கு...

குட்டி குட்டி பசங்கலாம்,வேற மாதிரி அந்த பீம்பாம் சவுண்ட் வர மாதிரிலாம் செட் பண்ணிப்பாங்க...பாட்டுலாம் ஓடுற மாதிரி.. ஆசையா இருக்கும்..

எட்டாங்கிளாஸ் படிக்கும்போது ,சைக்கிள் வாங்கி தந்தாதான்  ஸ்கூல்க்கு போவேனு அடம் புடிச்சு சைக்கிள் வாங்குனேன்...

குட்டி வாடகை சைக்கிள்-லதான் சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்...1மணி நேரத்துக்கு நாலு ஒரூவா..தாத்தா கடைக்கு பக்கத்து கடை..

சைக்கிள் ஓட்றதே ஒரு நல்ல உணர்வுல...அதும் கைய விட்டு ஓட்டி பாக்றது..இந்த வித்தக்காட்ற வேலலாம்..எதோ பெருசா சாதிச்ச மாதிரி...

அப்பாவோட பெரிய சைக்கிள்-ல குரங்கு பெடல் போட்டு ஓட்டி கீழ விழுந்த தழும்பு 90% 90ஸ் கிட்ஸ்க்கு இருக்கும்ல...

பெல் அடிக்கனும் அவசியமே இருக்காது..ஆனாலும் சும்மா அடிச்சுக்கிட்டே போறது...
காலைல 6 மணிக்கு டியூசன்..நீயூஸ் பேப்பர் போடுற பையன் பெல் அடிச்சுதான் நியூஸ்பேப்பர் போட்டுட்டு போவான்...

அந்த பால் ஊத்த வர அண்ணா வண்டி சவுண்ட் ... அத்தைப் பொண்ணோட கொலுசு சத்தம்... அம்மாவோட நடை சத்தம்..அதுலாம் பதிஞ்சு போய் இருக்கும்.. தனியா கேக்கும்ல காதுல..

சைக்கிள் பெல்...சைக்கிள் பெல்..மறந்துட்டேன் பாருங்க...

கோவம் வந்தா டொக்க் டொக்குனு அதேயே தட்றது..
அம்மா ஸ்கூல்க்கு லேட் ஆச்சு,சீக்கிரம் லன்ச் பேக் எடுத்துட்டுவானு அடிச்சுக்கிட்டே இருக்றது...
சைட் அடிக்கிற பையன் வீட்ட தாண்டிப்போகும்போது ரெண்டு தட்டு தட்றது....
ரோட்ல அவ்ளோ கும்பல் இருக்காது..என்னமோ நாமதான் எல்லாரையும் காப்பாத்த போற மாதிரி அத்தன தட்டு தட்றது....
Frnd முன்னாடி போனான சைக்கிள் பெல் அடிச்சுதான் கூப்பிடுறது...

இப்டியே நிறைய...

ஸ்கூல் cycle stand ல நின்னுட்டுதான் அவ்ளோ கத பேசுவோம்..அவ்ளோ நேரம் இருக்கும்..ஆனா கெளம்பும்போது நேரமே பத்தாது கத பேசி முடிக்க...

காத்து புடுங்கி விட்றது..பஞ்சர் பண்ணி விடுறது...கை புடிக்கிற இடத்துல மெஹந்தி தடவி விட்றது...சைக்கிள் கூடைல லெட்டர் போட்டு விளையாட்றது...(க்ளாஸ்ல இருக்க எல்லோரோட கையெழுத்தும் இருக்கும்..).
சைக்கிள் ல sticker ஒட்றது...வீல்க்குலாம் ஜிகு ஜிகு பேப்பர்லாம் ஒட்டுவாங்க...
சைக்கிள் jewellery... ம்ம்ம்ம்..
சைக்கிள் செயின்ல ஷால் மாட்டி,அத எடுத்துவிட்டுலாம் நட்பு அமைந்ததெலாம் வரலாறில் உண்டு.

குழந்தைகள உக்கார வச்சுட்டு போக ஒரு கூட இருக்கும்...
குட்டி புள்ளைல அப்பா அதுலதான் உக்கார வச்சு கூட்டிட்டு போவாரு...அந்த குட்டி சீட்ல...அவரோட முன்னாடி ஹேண்ட்பர்ல மாட்டிருக்கும்..கதை சொலிக்கிட்டே கூட்டிட்டு போவாரு...
(அந்த தவமாய் தவமிருந்து படத்தெல்லாம் யோசிக்காதிங்க...அத விட கம்மிதான்)...ஊருக்கு போன தாத்தா இருந்த வரைக்கும் சைக்கிள்-லதான் வந்து கூட்டிட்டு போவாரு பஸ்ஸ்டாப்ல இருந்து வீட்டுக்கு..


எல்லாரோட வீட்லையும் சைக்கிள் இருக்கும்ல..(எதுக்கு இந்த குட்டி இப்ப நெஞ்ச நக்குதுனு பாக்காதிங்க... நேரம் போகனும்ல...)..



இந்த லேடி பேர்ட் சைக்கிள் வாங்கிடனும் இன்னும் ஆசை...வாங்கனும் கண்டிப்பா...

வாங்கி sticker ஒட்றோம்ம்...











Friday 10 January 2020

பித்தனின் யோசைனைக்குள் வாழ்பவர் யவரோ?

காவிரி ஆற்று பாலம்..

நெடு வாக்கில் நான்கைந்து பானிபூரி கடைகள்...
பள்ளிக்குழந்தைகளும்..கல்லூரி மாணவர்களும்..பொது ஜனங்களும்...

பள்ளி சீருடை அணிந்த சிட்டு ஒன்று ,கல்லூரி மாணவனுடன் சிறகடித்துக் கொண்டிருக்கிறது...

சிலர் நடைப்பயிற்சி...

சாமியார் வேடம் அணிந்த ஒரு மனிதர்..ம்ம்..மனிதர்தான்...

ஒரு அம்மா படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்...

அவருக்கு அருகே ஒரு நாயும்...

காவிரியில் அவன்தான் கதிரவன்,அவன் கதிர்களால் பொன் பூசிக்கொண்டிருக்கிறான்...

பாலத்தின் ஒரு சந்தின் இடுக்கில் மட்டும்
அழுக்கு வேட்டி சட்டையுடன் சுவருடன் ஒடுங்கி ,மெல்ல ஓடும் நதியை பார்க்கும் அந்த வெள்ளை முடி மனிதரின் மனதில் அப்படி என்ன யோசனை இருக்கும்...


வீட்டிற்கு செல்ல பேருந்திற்கு பணமில்லையோ..

பசியின் கொடுமைக்கு ஒடுங்கியிருப்பாரோ...

ஞாபக மறதி சம்மந்தமான நோயாகா இருக்குமோ...

நிஜமாகவே மனநிலை பாதித்துள்ளாரா...

உணவைப் பற்றியா...உயிரைப் பற்றியா...உலகத்தைப்பற்றியா....

ஐஸ்வர்யா எதும் இந்த முருகன் பிண்ணனியில் இருப்பாளோ...

எப்படி இங்கு வந்திருப்பார்...
இவரை தேடி இன்னும் இவர் வாரிசுகள் கண்டுப்பிடிக்க வில்லையா...

செய்தித்தாளிலோ ,துண்டுச் சீட்டிலோ இவரை காணவில்லை அன்று பிரசுரிக்கப்பட்ட தாளின் மேல அமர்ந்திருப்பாரோ...

குளித்து நாளாவதனால் குளிக்கலாம் என்று நதியைப்பார்த்துக் கொண்டிருக்காரா...

மருமகளின் கொடுமையால் வாடுபவரா...

பெற்றப் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளவில்லையா...

மனைவி எவருடனாவது ஓடி விட்டாரா...

இல்லை இறந்து விட்டாரா....

பவானி தேடி வருவார் என்று இந்த கணபதி காத்திருக்கிறாரா...

இவரின் நினைவலைகள் எந்த வயது வரை இருக்கும்...

நிச்சயம் தாயின் மடியில் அமிர்துண்டது நினைவிருக்காது....

சிறுவனாய் இருக்கும் போது,டவுசர் கூட இல்லாமல் நதியில் நண்பர்களுடன் நீந்திய நினைவோ....


வாலிப வயதில்,ஆற்றங்கரையில் எவறும் அறியாமல் காதலிக்கு முத்தமிட்ட நினைவாக இருக்குமோ...

மனைவியுடன் முதலிரவு (முதலிரவாக இருக்க வேண்டியதில்லை) பொழுதுகள் நினைவிலிருக்குமா...

காதலியின் நினைவதினை திண்றிருக்குமா...

வயல் வெளியில் மனைவி சோறு உருட்டித் தர,அவளுக்கு ஊட்டியதை நினைத்துக் கொண்டிருப்பாரோ...

பேரப்பிள்ளைகளுக்கு ஆற்றங்கரையில் அமர்ந்து நிலா சோறு ஊட்டிய நினைவாக இருக்குமோ....

ஒரே இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வந்த கண்ணீர் என்று எடுத்துக் கொள்ளட்டுமா...இல்லை,,,,


இவள் இன்னும் இந்த பாலத்தை கடந்து முடிக்க வில்லை...பேருந்து கடந்து மணியாகிவிட்டது....

Wednesday 1 January 2020

1 year of op வாழ்க்க - பாகம் 2..





எடுத்ததும் O&G..(சூல் மற்றும் மகளிர் மருத்துவம்)

(மங்களகரமான ஆரம்பம்தான்..)
மகளிர் மட்டும்(எங்க பேட்ச் பேரு) பேட்சோட விதி அப்டி...ஒன்றும் செய்வதற்கில்லை
.(அதாவது மழைக்கு கூட பசங்க பேசண்ட் கிடையாது ..மகளே! கிடையாது...)
பெருசா ஒன்னும் கிளிக்கல...

15 நாளை அழகாய் ஓ.பி அடித்துவிட்டு அலேக்காய் அபேஸாகி அடுத்த ஓபியான சர்ஜரியிடம்.
.(சொல்வதற்கு ஒன்றுமில்லை...எங்க டிசைன் அப்டி...).....

ரெண்டாவது ரவுண்டு:..
மேலப்பாளையம் மருத்துவமனை..


நல்ல அனுபவம் அங்க...
அங்க ஒரு சார்...நல்லா மோட்டிவேட் பண்ணாரு(எல்லாருக்கும் இதானே வேணும்..எனக்குலாம் வேணாமேனு பிகு பண்ணுனினா போய் சாவு போ..)-யாருக்கிட்டனாலும் ஒரு விஷ் பண்ணிட்டு smile பண்ணிட்டு தொடங்குங்கனு சொல்லிக் குடுத்தாரு...அது நல்லாருக்கும்ல...எங்கனாலும் ஈசியா வேல நடக்கும்...அப்டி பண்றனால நாம ஒன்னும் குறைஞ்சு போய்ட்றதில்லையே...(நல்ல மனுஷன்)..
நர்ஸ் பானு(இங்கதான் சித்தா காலேஜ்ல 25 வருஷம் வேல பாத்தவங்க)-காலேஜ் கதைலாம் சொன்னாங்க...சிரிச்சிட்டே இருப்பாங்க...நல்ல வைப்....
அமுதா சிஸ்டர்..(பிரசவம் பாக்குறவங்க)..
அப்டி இருக்க எல்லாருக்கும் எப்டி பட்ட மனநிலை இருக்கும்...அய்யோ...சோ க்ரேட்...அந்த சகிப்புத்தன்மை.. பொறுமை...கொஞ்சம் சிடு சிடுதான்..பட் பரவால...
சாந்தி டாக்டர்...
அவங்க  c-section பண்ணததான் முதல் முதலா பாத்தோம்.
அந்த குழந்தை...
கண்ணுக்குள்ளவே நிக்குது..எத்தனை தடவ ஒரு விஷ்யம் பண்ணாலும்..முதல் முறைங்கிறது special தான் இல்ல....அவங்க வீட்டு கதைலாம் பகிர்ந்துகிட்டாங்கல...
வெங்கடேஸ்வரி டாக்டர்...-வந்த புள்ளைங்களுக்கு சொல்லிக்குடுக்காம அனுப்ப மாட்டங்க...செம மேம்....
அந்த சிஸ்டர்...ஊசிய கைல புடிக்க வச்சு இப்டிதான் போடனும்னு சொல்லிக்குடுத்தவங்க...
ராஜேஸ்வரி டாக்டர்...சுகப்பிரசவம் பார்த்தது...அன்னைக்குதான் தெரிஞ்சது புள்ளை பெத்தெடுக்கிறது எவ்ளோ பெரிய விஷ்யம்னு...(தட் தாய்மையை உணர்ந்த பொழுது அவை)...
                        -----*----
சர்ஜரி ஐ.பி...ஓ.பி


நில்..காத்திரு...செல்...(என்னடா ரோட் சிக்னல் மாதிரி இருக்குனு பாக்குறீங்களா...fact அதான்...)...
ஆனாலும் சூப்பர் சீனியர்ஸ்...
இந்த அட்டை விடுதல்...கழிவு கிட நீக்கம் செய்தல்...புண்களை பராமரித்தல்...மருந்த்ய் செய்தல்..நோயாளிகளை கவனித்தல் என்று ஒரே பிஸியாகதான் சென்றது...
காபி,டீக்கும் ,பட்டர் பிஸ்கட்டுடன் நிறைவான ஓ.பி...
கும்பிளிங்கா நின்னு திட்டு வாங்குனோம்...(இடம் பொருள் ஏவல் கருதி காரணம் மறைக்கப்படுகிறது...)..
செகண்ட் ரவுண்ட்...
Patient doctor relationship புரிஞ்சது இப்போதான்...
பேசண்ட் 1-மேம் வர அன்னைக்கு மட்டுந்தான் குளிப்பாரு ஒருத்தரு..
ப்ரசன்யாக்கு ஒரு வாழ்க்கைத் துணை கிடைச்சது அங்கதான்...(கடவுளுக்குதான் நன்றி சொல்லனும்
😂)
கூட்டத்தோட கேஸ் ப்ரசண்ட் பண்ணது...
ஓ.பி..
கேஸ் ப்ரசண்ட் பண்றதுக்கும்..லீவு கொஞ்சம் இப்டியே முடிஞ்சு...
நல்ல senior junior relationship build ஆகுறது இங்கதான்...

Class room:

கடைசி வருசத்துக்கு புதுசா ஒரு class ரூம் உருவாக்கி சவுகரியாமாய் படித்த முதல்  பேட்ச் நாங்கள் தான் என்று பெருமையுடன் பதிவு செய்து கொள்கிறேன்..
மைக்..ஸ்பீக்கர்....

கேள்வி கேட்கும் படலம்.:

மொத்த க்ளாஸும் வெளியே நின்றது நினைவில்லையா...

சிறப்பு மருத்துவம் ஓ.பி ஐ.பி..:

பேசண்ட் பார்த்த நேரம் போக ,தம்சரத் விளையாடி சீனியரிடம் திட்டு வாங்கி....
அப்றம்...(அப்றம்லாம் ஒன்னுலங்க ..அவ்ளோதான்...).

பொது மருத்துவம் ஓ.பி ஐ.பி...

லீவ் விட்டுட்டாங்கபா..(சாரிபா)..

குழந்தை மருத்துவம்:

சொல்லியே ஆகனுமா...
சொல்றேன்...
தினேஷ்தான்...(அழகு பையன் 10 வயசு அவனுக்கு)...
எல்லாரையும் அடிப்பான்...அவன்கிட்ட அடி வாங்கதவங்களே கம்மி...வச்சு சாத்து சாத்துனு சாத்துவான்....
கற்பக வள்ளி...-அழகி அவ...
ஓ.பி..
-நல்லாருந்துச்சு( shhhhh...no comments)..
மயக்கம் வர மாதிரி இருக்குனுதானே சொன்னேன் (மூக்குல சிவனார் அமிர்தம் தூவ ஆரம்பிச்சா எப்டி...) ம்ம்ம்..
போங்கடே.
சீனியர் ஜூனியர்:
ஆயிரம் சொன்னாலும் they are the dheivams..
பயணங்கள் மீதமிருக்கின்றன....





என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...