Sunday 23 December 2018

அரையாண்டு லீவு..பாட்டி வீடு...









இடம்: Trainலதான்

பங்கேற்பாளர்கள்: சுதர் (4th std வாழு பையன்),சித்து(5th std), அம்மாட்சி மற்றும் ஏதோ ஒரு ஆன்ட்டி, அப்றம் கொஞ்சம் பயணிகள்..

நேரம்:காலைல சாப்டு முடிக்கிற நேரம்..

(அரையாண்டு பரீட்சை லீவ்க்கு அம்மாட்சி வீட்டுக்கு கூட்டிட்டு போகும் பொழுது)

(பாதில இருந்துதேன் கவனிச்சேன்....)


சித்து: மனுஷனுக்கும் டைனோசர்னு பேரு வச்சா மனுஷன் தான் டைனோசர்...

அது நீளமா இருக்கு..நம்ம இல்ல..
அது animal..நம்ம human..
அது முட்டை போடும்...நம்ம குட்டி போடுவோம்..
அது இப்போ இல்ல..நம்ம இப்போ இருக்கோம்...ஒரு நாள் இல்லாமலே போய்டுவோம்..

சுதர்::  நமக்கு முட்ட வயித்துக்குள்ளயே உடைஞ்சிறும்..அத குழந்த ஆஃப் பாயில் போட்டு சாப்ட்றும்...ஈஈஈஈஈஈ


சுதர்: நா train ல இருந்து இறங்கி கார்ல போறேன் பாட்டி....(அவன் கைல இருக்குற கார மட்டும் பாருங்க ...மக்களே...)..

சுதர்:அம்மாட்சி ,,train seat-ல ஒன் ட்டூ த்ரீ தப்பா போட்ருக்காங்க..ஒன்-அ காணோம்...

அம்மாட்சி: அது அங்க இருக்குடா ..பாரு...

சுதர்: அப்ப zero -அ காணோம்...(அடிங் கொக்கா மக்க...பயபுள்ள என்னாமா கேள்வி கேக்குது...உன்னலாம் trainல இருந்து வெளில தள்ளி விட்றனும்...பாத்துக்க...)

எதோ ஒரு ஆன்ட்டி:ச்சேட்ட பண்ணுதாம்ல..விளையாட்டுல சேத்து விட்டுடுதுங்க...பெரிய sachin tendulkarஆ வாடா...


சுதர்: எனக்கு cricket லாம் interest இல்ல..Wrestlingதாம்...

சுதர்:அம்மாட்சி ,train கிடு கிடுன்னு ஆடுது...train driver dance ஆடிக்கிட்டே ஓட்றாரு போல....


அம்மாட்சி: டேய்...மணியாச்சி வந்துருச்சுங்ளே...

சுதர்: எங்க  மணி ஆச்சி நிக்கிறாங்க....(அடேய்களா....ஏன்டா இப்பிடி செய்றீங்க)...

அம்மாட்சி: பைய உதைக்காதல..
பைக்கு வயசாகிட்டு...

சுதர்: அப்ப பைக்கு retirement கொடுத்துட
 வேண்டிதானே...(ராசா டேய்...நீயெல்லாம் எங்கயோ போக வேண்டியவன்டே)





Sunday 16 December 2018

லவ்வி💝

உன்னைக்கண்டதும் கண்ணில் இதயம் பறக்கும் ஸ்மைலிகளை பறக்க விடுகிறேன்...

உன் முத்த ஸ்மைலிகளுடன் இணைத்துக்கொள் வா..

ஏதுமற்ற வனாந்திர இரவு....



சுழியமாய் சுழன்று கொண்டிருக்கிறது இம்மீள் வாழ்வு...

இம் ஏதுமற்ற மனநிலையை கடக்க ...


உங்கள் ஆறுதல் பேச்சுகளையெல்லம் எதிர்காலத்திற்கு தாங்களே பயன்படுத்திக்கொள்ளுங்கள்...

வனாந்திர இரவில்,
இக்குளிரில்
விறகுகளை தீமூட்டி,
இவ்வுடலை கம்பளிக் கொண்டு போர்த்தி
கையில் ஒரு தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு போய் வாருங்கள்..
எனக்கு இவைகளே ஆகச்சிறந்த ஆறுதல்...ம்ம்ம்....ஒரு நாய்க்குட்டியை விட்டு செல்ல மறந்துவிடாதீர்கள்...


Wednesday 5 December 2018

1 year of OP வாழ்க்க...


1 year of OP...

நாங்க 13 பெண் பிள்ளைகள்...2015-2020 பேட்ச்..(batch tour, batch treat,birthday celebration போன்ற கெட்ட வார்த்தைகளெல்லாம் அறியாப்பிள்ளைகள் இவர்கள்...வேற என்னதான் பண்ணுவிங்கனு கேட்டா...ஒன்னா op போவோம்...அவ்ளோதானுவாங்க)...
பின் வருவன சா(சோ)தனைகள்..

SURGERY-

தட் மங்களகரமாக ஆரம்பிச்ச moment...
(அடப்பாவிகளா)...
  ஒரே formula...sharp 7.30 AM..(கரீக்ட்டா போன தப்பிச்ச....இல்லனா....)
மொத நாள் clinical methods வாங்க சொன்னாங்க...
ரெண்டா நாளு வாங்கிட்டு வரலனு வெளில அனுப்பிட்டாய்ங்க....(ஹை..ஜாலி)..
என்ன நடக்குதோ இல்லையோ...வாரத்துக்கு ரெண்டு நாள் வடை காபி வந்துரும்...😜
எனக்கு தெரிஞ்சு மாசம் முழுக்க house fullஆ இருக்க op இதான்...
அவர்னா தான் கொஞ்சம் 😱 பயம்ங்க...மத்தப்படி  நாங்க okay தாங்க....

SPM :

நம்ம sight அடிக்கிற பையன் நம்ம opலயே இருந்தா எப்ப்டி இருக்கும்....
அவிங்களும் சும்மா இருந்தாங்க....அப்ப நீங்க என்னத்தக் க்-னு  கேக்கலாம்...(நாங்களும் அதேதான்😔)
அப்பப்ப அந்த தொக்கணம் செய்ற இடத்த எட்டிப் பாக்றதோட சரி....

GM...

Mass....
அப்டி என்ன?...
BP மட்டுமே பார்த்து மொத்த நாட்களையும் ஓட்டிற்லாம்...
நீர்க்குறி நெய்க்குறி....(அதிகப்ரசங்கம் பேசி வாங்கிக்கட்டிக்கிட்டதுதான் மிச்சம்)..
Assignmentங்கிற பேருல அலப்பறஸ்...
பட் -நோ டீ வடை டா...🙄🙁

DISPENSARY:

சாரி...no attendance...😜
பொட்டலம் போடலாம் கத்துக்கிட்டாச்சே😴

Pharmacy:

Assignmentலிருந்தும்..மருந்து டப்பா வாங்கி தருவதிலிந்தும் மற்றும் ___தப்பித்ததை மிகவும் பெருமையுடன் ஆவணபடுத்துகிறோம்...😅

மருந்துருட்டல்,போட்டோ எடுத்தல் போன்ற வேலைகள் சிறப்பாக செய்யப்பட்டது...😂
A/Cஇருக்கு..அப்ப தினம் போலாமே...
அப்டியும் அப்பப்ப அவுட் ஆயாச்சு...😆
(என்னா வேணாலும் பண்ணுங்க...நாங்க இப்டிதான்...)🤔🤔

Toxicology:

கண்ணு டாக்சி புக்க பாக்கும்..மனசு எங்க எங்கயோ பறக்கும்...😘
தட்...அண்ணா...srilankan தமிழன்...😍
Pathology:
Jolly op...
Filariasis case-
ஆஷ் t shirt....🤗

OG:

சொல்வதற்கொன்றுமில்லை...எல்லாரும் அமைதியா PRAY பண்ணுங்க...🙇

Again surgery...:

மருந்து செஞ்சோம்..🙌
சேம் டீ..பட் வடை மிஸ்ஸிங்...🙄
Ipக்கும் opக்கும் மாத்தி மாத்தி அலைஞ்ச பரிதாபங்கள்...😔
பாட்டிங்க கதைகள்...📢
கொசுதினம் -கொசுக்காக எழுதிய கவிதைகள்..😜
மறந்துட்டனே...IP food tasting..(உப்புமா...-நைஸ்)...🙈



அப்றம் பரிட்ச்சை...லீவ்...இப்போ final years...
Batch tour plan பண்ணதோட நிக்கி...😝
எந்தந்த op க்கு பேஷண்ட் அனுப்பனும்னு நிஜமா தெரிஞ்சுக்கிட்டோம்...(கேளிக்கைக்குரியதல்ல)...
தட் சீனியர்ஸ்தான் தெய்வம் opல...😘
-தொடர்கிறது...

எய்ட்ஸ்..-அன்பின் அரவணைப்பும்..முத்தங்களும்...

நாம எல்லாருக்குமே எப்டி love ங்கிற வார்த்த தெரியுமோ ,அதே போல AIDS/HIV ங்கிற வார்த்த தெரியும்...( பாலிஷ் ஷீ போட்டவங்களிருந்து பல்லுப்போன கெழவியர்கள் வரைக்கும்)

பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச இருக்க காரணம்...கண்டவங்க கூடலாம் படுக்கிறது....கொஞ்சம் decentஆனா(நிறைய sex partners) ....(homosexuals (gays)க்கு அதிகம் வரும்...அந்த கதைலாம் எதுக்கு...)


ஆனா உலகத்துல உள்ள AIDS, நோயளிகளுக்கு புணர்ச்சி (sexual inter course) மூலமா 0.1-1% தான் பரவும்..

 மலவாய் புணர்ச்சி(anal sex) மூலம் பரவும் விகிதம் அதிகம்..(oral sex ,vaginal sex ஆ விட)...

இதுக்கான நோய்க்காரணி (HIV VIRUS) நோயாளியோட கண்ணீர்,எச்சில்,வியர்வைல லாம் கலந்திருக்காது...(அரவணைத்து முத்தமிட முற்றிலும் தகுதியானவர்கள்தான் அவர்கள்😘💝.ஒதுக்கிவைத்து ஓரங்கட்டக்கூடியவர்கள் அல்லர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....புரியுதுங்களா..ம்ம்ம்ம்ம்.)

தனக்கு இருக்குனு தெரிஞ்சும் சில நாய்கள் அலையுதுங்க...அதுங்களாம் மனசாட்சியோட நடந்தா மட்டும்தான் முடியும்...


இதுக்கு எங்க மருந்து கிடைக்கும்னு குறியா இருக்குறது,அத அடக்குறதுல இல்ல...
முடிஞ்சவரைக்கும் மூடிக்கிட்டு இருங்க..முடியலனா அத மூடிக்கிட்டு பண்ணுங்க...

#single sex partner
#wear_condom
#be_loyal
#AIDS_FREE_WORLD..













என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...