Sunday 26 March 2017

அவளு(னு)ம்....ம்ம்ம்ம்ம்.....

அவள்: உனக்கான வரிகளெல்லாம் மை-யலினால் வரைகிறேன். . .

அவன்: மை தீர்ந்ததும் மெய்யினால் எழுதுவாயாக தோழி ....

அவள்: மையல் தீரா மான்விழி ...

அவன்: உளறிகொட்டும் பேனாவினால் திணறிக்கொண்டிருக்கும் காகிதத்தில் பிழைகள் யாவும் என் கவியே..

 அவள்: என் சினுங்களெல்லாம் உன் பிழைகளாக ...

அவன்: தாவணி சினுங்களில் பூக்குமென் நத்தவனம் ....பிழைகளற்று

அவள்: உன் ஸ்பரித்தால் சிலித்தே இந்த இரவு இன்னும் நீள்கிறது
அவன்: நீளும் இரவில் யாத்திரை பயணம் இன்னும், விடியும்வரை கேலி பேச்சில் கிறங்கிடிக்கறது உன் பூனைமுடி பென் மீசை

அவள்: உன் ஆசைகளெல்லாம் முத்த மொழியில் பேச இசையமைக்கிறது உன் ஆண் மீசை. .இரவு முழுதும் கச்சேரியாய். .

அவன்: கச்சேரியில் ஜதி சேர்க்கிறது உன் கால்கொலுசும், பூச்செண்டு வியற்வைதுளியும் ...

அவள்: உன் ரோமம் போர்த்திய நெஞ்சே என் பஞ்சனையாக. .

 அவன்:பஞ்சனையை மிஞ்சம் உன் பரதம்

அவள்:விரல்களெல்லாம் நெற்றி முடியின் மீது கதைபேசியே.,தொடங்கிய இடத்திலே மு(வி)டிகிறது இரவு...

அவன்: கதிரவன் இன்னும் வரவில்லை கதகலி இன்னும் பாக்கியிருக்கேடி என் பத்தினியே !!

 அவள்: 😘😘😘கதிரவன் வந்தும் இதழ் மூடி,இழுத்தணைத்ததும் நானும் நம்பி விடுகிறேன் . . காதலனை !

அவன்:குளியலறை வரையிலும் நீண்டதாகும் என்னிரவு என்னவளே....உனைபிரிந்து வேறின்பம் எனக்கேதடி என்னுயிர்தோழியே

அவள்: உன் மீது விழும் நீர் துளியிலும் எனக்கு பங்குண்டு .....

Friday 24 March 2017

நுனிச்சிட்டு



இங்கு முதன் முதலில் வனங்கள்,கடல்கள்,ஆறுகள்,ஏரிகள்,அருவிகள்,நுண்ணுயிரிகள்,விலங்குகள்,பறவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று உரையாடி உறவாடி மகிழ்ந்துதான் இருந்திருக்கும் நிச்சயமாக...
மனிதன் இங்கு மனிதனாகதான் நுழைந்தான்...அவன் என்று வியாபாரியாய் மாரி மனிதம் தொலைந்ததோ ,அன்று இயற்கையின் சமநிலை மாறத் தொடங்கியது...
  போராடி போராடி,இன்னும் போராடிக்கொண்டே தான் இருக்கிறது...
    இன்று ஏதோவொரு நுனியில் அதன் வாழ் நிலை நகர்ந்துக் கொண்டிருக்கிறது...
     நாம் கண்டிப்பாக அவைகளுக்கு நல்லதெல்லாம் செய்பவர்கள் அல்லர்...
     முடிந்தளவு தொந்தரவு செய்யாமளாவது இருப்போம்...


இப்படிக்கு,
நுனிச்சிட்டு காதல்க்காரி...

உயிரற்ற ஜீவன்..

முதன் முதலில்...

நாளை ஒரு உயிரற்ற மனிதரின் தோலை பிரித்து பாடம் கற்பிக்க பட உள்ளது என்று உற்சாகமாகதான் இருந்தேன்...ஆனால் அடுத்த நாள் ,அந்த அறைக்குள் நுழைய முடியாதவளாய் மனம் இறுக்கியது...

ஆனாலும் வேறு வழியில்லை..கடைசியாய் உள்ளே நுழைந்தேன்...

ஆம்...இறந்து நான்கு வருடங்களாகிய உயிரற்ற உடல் அது...பிணவாடை ஒன்றும் இல்லை...முழுதும் பார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்ட நெடி தான் அந்த அறை முழுதும்...

முழு நிர்வாணமாய் ,உடலிலுள்ள மயிர்களெல்லாம் வலித்து எடுக்கப்பட்டு,தலைகீழாய் அந்த மேசையின் மேல் படுக்க வைக்கப்பட்டிருந்தது...
உடல் அங்கங்கு கிழித்து வைக்கப்பட்டிருந்தது...

ஆசிரியர், ஒவ்வொரு  தசைகளாய் விரித்து விரித்து கற்பிக்க ஆரம்பித்தார்...தலைக்குள் எதுவும் நுழையவில்லை..

ஒரு பக்கமாக தெரிந்த அந்த தோல் சுருங்கிய அந்த முகம்,அந்த இரண்டு பற்களின் மேல் தான் என் கண்ணெல்லாம் இருந்தது...என்ன நினைத்து கொண்டு இந்த மனிதர் இங்கு படுத்திருப்பார் என்றெல்லாம் யோசித்தது...உயிர்தான் இல்லையே..😡

கையுறைக் கொண்டு தொட மனம் ஒப்ப வில்லை...வெறும் கைகளினாலே அந்த உயிரற்ற தசைகளை தொட்டு பார்த்தேன்...


வெறும் தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் ,ரத்தக்குழாய்களும்தான் உடல்...என்னன்னவோ எண்ணங்கள்..

உயிரற்ற மனிதன் தான் நிறைய கற்பித்தான் அன்று,ஆசிரியரை விட...😐😐

அந்த நாட்கள்...



படிச்சனோ இல்லையோ..பட்டம் மட்டும் வாங்குன நாள்...
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய்   professor  கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு  (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரிலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....

அன்பு சூழ் உலகு



தமிழ் அக்கா அன்பை அள்ளித் தந்த இனிப்பிலிருந்து இனிதாயும் இனிப்பாயும் தொடங்கியது நேற்று மதியம்....

50 நாட்களுக்குப்பின் சொந்த ஊர்..பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் புகைவண்டி நிலையம் வந்தாயிற்று..

திருநெல்வேலி-திருச்சிராப்பள்ளி
      குளிச்சியான நீர் இதமாக தொண்டை நனைத்து குதூகலாய் தொடங்கியது பயணம்..
      எப்பொழுதும் அந்த சாளரமோரம்,அந்த ஒற்றை இருக்கைதான்....😀
      குட்டி ராஜ நித்திரைக்கு பின் கண்கள் விருந்துக்கு தயாரானது...
      வாஞ்சி மணியாச்சியை கடக்கும் போதெல்லாம்,வாஞ்சி ,ஆஷ்சை சுட்ட கற்பனைக்காட்சி மூளையை முட்டும்...
      "ஆவாரை பூத்திருந்தால் சாவாரைக் காண்பீரோ".. வறட்சியிலும் வளமாய் வளர்வது ஆவாரையும் தான்....தங்க பூக்கள் போர்த்தி நிலத்தில் நித்திரைக் கொண்டிருந்தன...
      எத்துணை முறை கடந்திருந்தாலும் அத்துணை முறையும் பயம்தான் அந்த பாலத்தைக் கடக்கும்போது...
      முழுதும் பச்சைதான்...ஆனால் அந்த பாலாய் போன கருவேள மரங்கள் தான்...ஒரே ஆறுதல் ஆங்காங்கே வெட்டி வீழ்த்தப்பட்டிருந்த அதே மரங்கள்தான்...
      அடர்ந்த வான வண்ணத்தில் அந்த ஒற்றை மரத்தின் உச்சிக்கிளையில் வீற்றிருந்த ஓய்யார பறவை ..
      ரயில் போகும்போது கையசைக்கும் அந்த மழலைகள் என்றும் அழகுதான்...அதிலும் அந்த மழலைகள்...கையில் காகிதப்பூவோடு அசைத்த அந்த பிஞ்சு கைகள்...பூவுக்கும் வாசனை சேர்த்த அந்தக் காற்று அழகாய் எனை அடைத்தது...பறக்கும் முத்தங்கள் தருவதெல்லாம்,அந்த முத்தத்தின் ஈரத்தென்றல் சத்தியமாய் அவர்களின் கண்ணம் தீண்டும் என்ற அசட்டு நம்பிக்கைதான் எனக்கும்...
      பூந்தோட்டம்,காகிதப் பூக்களின் அணிவரிசை...பயணத்தை இனிமையாக்க...
       திருப்பரங்குன்றம் மலை பார்க்கும்போதெல்லாம் அந்த குட்டி குண்டு அழகன் சொன்னது முகுளத்திலிருந்து வெளிவரும்..அதே யானை .அதே கண்...
       வைகை பாலத்தைத் தாண்டும் போதெல்லாம்,கதையில் படித்தவை,பிறர் சொல்லக்கேட்ட காட்சியெல்லாம் நினைக்கும்போது நிச்சயம் அதிர்ச்சியாய்தான் இருக்கும்...
       சிறிது நேரத்தில் கொடைக்கானல் மலை வரிசை...பனிப்போர்த்திய மலை..இதமான அந்தி மாலை..இதழ் நனைத்த தேனீர்...நெஞ்சம் நிறைத்த கணங்கள்....
       அந்த மலை ,சேய் சுமந்த தாய் பிரசவித்தல் போன்றும்,அடுத்து ஒரு குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பது போன்றும் அழகாய் அணைக்கும்...
       குட்டி குட்டி பறவைகளும்,பட்டாம்பூச்சிகளும் கொக்குகளும்,நாரைகளும்,அழகு காகங்களும் வீடு செல்லும்,அவர்களெல்லாம் பறந்து,நான் அந்த அழகில் கரைந்து...
       பூப்போர்த்தியும்,நிர்வாணமாயும் பல மரங்களும்,குன்றுகளும்...அதிலும் இரண்டு குன்றுகளின் நடுவில் அகல் போன்ற ஒரு பாறை...அந்த அந்தியில்,அதில் பனி நிரப்பி,அந்த இரண்டு விண்மீன்களை போட்டு ஏற்றி விடலாம் என்றெல்லாம்...ஆயிரம் எண்ணங்கள்...
       சில மனிதர்கள் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்...ஆம்,அதே அன்பர்..வெள்ளைத்தாள் அட்டைப்போட்ட புத்தகத்துடன்...இருவருக்கும் பொறித்தட்ட நலம் விசாரித்து கொண்டோம்...ஒரு கணத்தில்,அவர் புத்தகத்தைக் கொடுத்து  ஒரு பகுதியை வாசிக்க சொன்னார்..."ஒரு மருத்துவ மாணவனைப் பற்றியது" அந்த பத்தி...அதில்"ஆழமாய் விதைத்த ஒன்றுதான் இன்று மரமாய் நிற்கிறது "என்றிருந்தது..
     
       காவிரி காற்றுப்பட்டதும் இனம் புரியா புத்துணர்வும்,ஆனந்தமும்...இருட்டிலும் அந்த அல்லிக்குளத்தைத் தேடாமலில்லை...
       குட்டி நாய் ஒன்று வீட்டில் உறுப்பினராய் சேர்ந்திருந்தது...எனக்காய் காத்திருந்து,அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்...
       நாம் நல்லது செய்யும் போது யார் ஊக்குவிக்கிறார்களோ, நாம் தவறு செய்யும்போது யார் கண்டிக்கிறார்களோ அவர்கள்தான் என்று ஒரு குரு போத்திதிருந்தார் ....ம்ம்..நம் அருகில் இருக்கும் பல ஜீவன்கள்தான் கடவுள் போல..
       நாம் அன்பு செய்வதற்க்கும் ,நம்மை அன்பு செய்வதற்க்கும் இங்கு கோடி கோடி ஜீவன்கள் இருக்கிறார்கள்....ஆம்..அன்பு சூழ் உலகு.....
     
      

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...