Sunday 31 December 2017

மேற்கு தொடர்ச்சி மலையும் ...நாங்களும்..

      திருக்குறுங்குடி (எங்கடா மே.தொ.மலைனுலாம் சொன்னானு பார்க்கப்பிடாது...வரும்...இனிதான்)



திருநெல்வேலி  --) ஏர்வாடி --)திருக்குறுங்குடி.....


ண்ணா...! திருக்குறுங்குடிக்கு மூணு டிக்கெட்...
  நோகாமா போய் இறங்கியாச்சு...அப்டியே மே  .தொ.மலைய  நோக்கி நடக்க ஆரம்பிச்சாச்சு..
இடம்:திருக்குறுங்குடி வீதி.. கதாபாத்திரம்:நாங்க மூனு பேரு.அந்த குழந்தை.. நேரம்:9.அஞ்சு இருக்கும்..
போற வழில ஒளிஞ்சி சிரிக்குக்கிட்டே டாட்டா காட்டுன அந்த குழந்தை தேவதை அவ்வளவு அழகு...(உம்ம்ம்ம்ம்மா புள்ள)

            இயற்கையோட ததும்புற வாழ்க்கை முறைதான் அங்க...( நம்ம இந்த ஊரா இருந்துருக்கக் கூடாதங்கிற மொமெண்ட்)
மரம் செடி கொடிலாம் முழுக்க பச்சை போர்வை போத்தியிருந்துச்சு..(தலகாணி வைக்கலையானுலாம் கேட்றாதிங்க...)

நாலஞ்ச்சு மூலிகை செடியோட பேர கதைச்சுக்கிட்டே நடை பயணம் தொடந்தது...(8 கி.மீ நடக்கனும்-நு நினைக்கும்போதுதான்  நாக்கு தள்ளுது...நடந்துருவோம்)...

வட்டகுளம் வரவேற்கிறது.....



         எஸ்.....பெரிய வட்டகுளம்...
குட்டி குட்டியா அலை அடிட்டுக்கிட்டே நம்ம கால தொடும்பொது நிச்சயம் மனசு குளிந்து போகும்...(குளம் எப்டி அலை அடிக்கும்னு அறிவாளி தனமா யோசிக்கப்பிடாது....அதல்லாம் அடிக்கும்....)

மலையோட அழக ரசிச்சுக்கிட்டே நடந்தோம்.....

போற வழில உள்ள மக்கள்-லாம் அவ்ளோ அன்பா வழி நடத்துனாங்க...சாரி..வழி சொன்னாங்க....

அவ்வளவு மூலிகை செடி அங்க...மருத்துவமே தேவை இல்லை ..அந்த செடிங்க வாசைனைல வாழ்ந்தாலே போதும்.. நோயே வராது...

அங்க மலை நெல்லிக்கா மரந்தான் அதிகம்..திருடி திங்கிறதுக்கு சுவையே தனி..இத ஏன் இந்த புள்ள இங்க சொல்லுதுனு எப்டியும் யோசிச்சிருப்பிங்க......(திருடி திங்கிறதுக்கு இப்டி ஒரு பிட்டா...அதானே.....இட்ஸ் ஓ.கே..நோ துப்பல்ஸ் ஹான்.....)




அங்க அங்க ஓடுற ஓடை....மிதமான இதவெயில்...அழகா மேனி பூசுற குளிந்த காற்று...மேற்கு தொடர்ச்சி மலை...நடக்குறதுக்கு அழகான வெளி-ன்னு அஞ்சு பூதமும் முத்தமிட்டுக்கிட்டே அரவணைச்சது..(அப்டி ஒரு climate)


அங்க அங்க ஓடுற ஓடை தான் ஸ்பெஷல் அழகு...அதுல கிடக்குற குட்டி பாறையும் குட்டி குட்டி கல்லும்தான் extra அழகு...(ம்ம்ம்ம்..தண்ணி செம taste-u)

அப்டியே வேடிக்க பாத்துக்கிட்டே காட்டு வழிக்கு வந்தாச்சு..(எஸ்....4 கி.மீ ஓவர்)




இடம்:காட்டு வழி கதாபத்திரங்கள்;மூன்று அழகிகள்..ச்சரி விடுங்க...மூனு பொண்ணுங்க..  நேரம்:அதலாம் தெர்லப்பா...

வனம்-னாலே இயற்கை கொஞ்சம் நஞ்சம் உயிரோட இருக்க இடம்..இங்கையும் இப்டிதான்...

Entry.....

புகைப்படம் எடுக்க அனுமதியில்லை...board....(க்ளிக்கியாச்சு)...

பாறை கல்லு மண்ணுனு குட்டி பாதைதான்...


எங்கள roundup பண்ணுன அந்த குரங்கு பாஸ்-அ கண்டிப்பா மறக்க முடியாது....(மறக்கமுடியுமா....வூம்.......)

தண்ணி குடிச்சு,குடிச்சு...நடக்க நடக்க...இன்னும் இன்னும் தூரம் பா

தீரன் மூவி டயலாக்தான்...
கித்னா கி.மீ பையா... தோ கி.மீ .கணக்குதான்.....

ஒரு வழியா அப்டி இப்டினு கோயில பாத்தாச்சு(ஓ.....நீங்க கோயிலுக்குதான் வந்திங்களா........ ச்ச ச்ச)


அங்க நோ கடை..நோ சsnacks...only water....

அன்னதானத்த அடிச்சு புடிச்சு வாங்கி வயித்துக்கு வழி சொல்லியாச்சு...(ஹப்பாடா....TASK COMPLETED...)

ச்சரி போகும் போது ஜீப்-ல போய்ருலாம்னு போய் கேட்டா அந்தண்ணே 1000-ரூவாங்குது...மலையும் இடமும் நல்லருக்குண்ணேன்னு நடந்தே போய்டுறோம்னு வந்தாச்சு...


Finally what is the moral of the story-னா
கோயிலோ மலைக்குள்ள இருக்கு...மலையோ காடோ அது விலங்குகளோட வீடு தான்...அங்க போய்ட்டு மனுச மிருகம் விலங்குகள அடிக்கிறது,துன்புறுத்துறதுனும் இல்லாம மூடிக்கிட்டும் வரலாம்....அவ்வளவுதான்...



  200ரூபாக்குள்ளதான் செலவாகும்...காட்டு வழி மலைல நடந்து போறது நல்ல அனுபவமா இருக்கும்...முடிந்தால் போய் மேற்கு தொடர்ச்சி மலையின் குட்டி பகுதியை கொஞ்சி வாருங்கள்.......<3



     



Sunday 24 December 2017

கிறிஸ்து-மஸ்..

இன்று கிறிஸ்துமஸ் ...

       பொ.மு. வில் உள்ள ஒருவரின் பார்வையில்..
       ‎***கிறிஸ்துவ வரலாறு முழுமையாக தெரிந்தவர் அல்ல...

        கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்...
        ‎மக்களின் ஆழமான நம்பிக்கையும் பிடிப்பும் பொருந்தியோ,பொருத்தபட்டோ இருந்தால் மட்டுமே வரலாற்றில் சில விடயங்கள் அழியாமல் இருந்திருக்க முடியும்...
        ‎அப்படிதான் மதங்களும்,கடவுள்களும்...(அரசியல் பேச போவதில்லை...ஆன்மீகமும் இல்லை)....
        ‎மதங்கள் எதுவாகினும்
        ‎போதிப்பது பலவாகினும்
        ‎நம்பிக்கையும் அன்பும் தான் ஊன்று கோள்...
        ‎

         அவ்வாறுதான் கி.மு. கி.பி..(விளக்கம் தாங்களுக்கே தெரியும்)
         ‎இருந்தும்,கிறிஸ்து பிறப்புக்கு முன்,பின்...
         ‎ஆனால் கி.மு-6-லே கிறிஸ்து பிறந்து விட்டார் என்று வரலாறு உள்ளது
         ‎(கிறிஸ்து பிறந்தார் என்றும் வரலாறுதான் சொன்னது)
          B.C-BEFORE CHRIST கிறிஸ்து பிறப்புக்கு பின்..
          ‎A.D- ANNA DOMINI
          ‎ANNA DOMINI என்பது கிறிஸ்து பிறந்த ஆண்டு என்று பொருள்படுமாம்..( நாம் கிறஸ்து பிறந்த ஆண்டிலிருந்து என்று வைத்துக்கொள்வோம்)
          ‎நமக்கு பள்ளிக்கூட வரலாறு A.D -After death என்றும் கற்பித்துள்ளது...
          ‎ஒரு மனிதனின் ..மன்னிக்கவும்..கடவுளின் பிறப்பு மன்னிக்கவும் வாழ்வு எவ்வளவு புனிதமாக இருந்திருந்தால் கி.மு கி.பி வந்திருக்கும்...
          ‎இப்பிரபஞ்சத்தில் வரலாறு,தோற்றம் போன்ற பல கோட்பாடுகள் யூகம்தான்...
          ‎(யார் கண்டார்...யூகம் சில சமயம் உண்மையாகவும் இருக்கலாம்)
           பொதுவாக....பொதுவாக....ஒரு தினம் என்றால் நாம் ஒரு குழந்தை  பிறந்தவுடனையேலாம் பொதுமக்கள் கொண்டாடும் தினமாக ஆகியிருக்காது(அரச குழந்தைகள் கதையெல்லாம் இல்லை)...
           ‎அவர்கள் வாழ்க்கையின் சாரம் உண்மை,நேர்மை,அன்பாக இருந்திருந்தாலோ,வீரராகவோ,மக்களுக்காக உழைத்தவராகவோ அல்லது உயிரிழந்தவர்களாகவோஇருந்தாலொழிய...
           ‎அவர் ,மக்களை நல்வழி நடத்தி,அன்பை போதித்து அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக..நம்பிக்கை நட்சத்திரமாக... ஒளிர்ந்திருக்கலாம்...

          அனைவருக்கும் புரியும் வகையில்,
          ‎    அவர் ஒரு நல்ல அரசியல் தலைவராக விளங்கியிருக்கலாம்..அவர் காலத்தில் நாடும் ,நாட்டு மக்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக,அமைதியாக வாழ்ந்திருக்கலாம்...      
          ‎மனிதன் கடவுளான கதை(உண்மை) பற்றியெல்லாம் நான் பேசவர வில்லை..
          ‎அன்பை அடிப்படையாக கொண்டு ஆட்சி புரிந்தவரை மக்கள் கடவுளாக பாவித்திருக்கலாம்...(TV,fan,laptop,mixer,grinder,gas stove குடுத்தவங்களையே நம்ம கடவுளா பாக்குறோம்...இப்ப cooker குடுத்தாக்கூட)
          ‎christ-mass..mass என்பது இறந்தவர்களுக்காக அனுசரிக்கப்படும் ஒரு அனுசரனை....ஆனால் இந்த விளக்கமெல்லாம் பல்லாயிரம் வருடமாக நம்பி வருவர்களின் நம்பிக்கையை குழைப்பதாகும்..ஏனெனில் விட்டு விடுவோம்...(இல்லையெனில் நேரமிருந்தால் ஆராய்ந்து உண்மையைக் கூறுங்கள்)....
          ‎வரலாற்றை விட நம்பிக்கை முக்கியம்...
          ‎அன்பினை பரிசுகள் மூலமாகவோ,முடியாதவர்கள் முத்தங்கள் மூலமாகவோ பகிர்ந்து கொள்வோம்...

                    MERRY X-MAS...

*****யூகம் சில வேளைகளில் உண்மையாகலாம்...

கொண்டாட மட்டும் அல்ல....

விவசாயிகள் தினம்...
  சில தினங்கள் கொண்டாடவோ,நினைவு கூறவோ,பாதுகாக்கவோ,விழிப்புணர்வு ஏர்படுத்தவோ போன்ற ஏதோவொரு காரணங்களுக்காக அரசாங்கமோ,காலம்காலாமாகவோ ஏற்படுத்தியும் ,ஏற்பட்டும் உள்ளன..
இன்று,அவை அனைத்துமான காரணங்களும் கூடிய நாள்....
‎ஆம்..
‎        விவசாயிகளையும்,விவசாயத்தையும் 'கொண்டாடவும்",
‎         தற்கொலைக்கு ஆளான விவசாயிகளையும்,
‎உணவே மருந்தாக,விவாசாயியே கடவுளாக இருந்த காலம் பற்றி "நினைவு கூறவும்",
‎          அழிந்துக்கொண்டே,நாம் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் "பாதுகாக்கவும்",
‎            விவசாயத்தை மேம்படுத்த "விழிப்புணர்வு"ஏற்படுத்தவும் தான்..

பல தினங்களில் இதுவும் ஒன்றாக நினைத்துக்கொள்ளாமல், முகப்புத்தகத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றி விட்டதோடு இல்லாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்போம்...

        நாட்டு விதைகளையும்,இயற்கை உரங்களையும் பயன்படுத்தி நலமான விளைச்சலை உருவாக்க அறிவியலை உபயோகிப்போம்..
        ‎
        ‎எருவை உரமாக்கி
        ‎    மண்ணை வளமாக்கி
        ‎          விளைச்சலை பெருக்கி
        ‎                விஷமற்ற உணவை உண்போம்....
        ‎உணவு அமிர்தமாகட்டும்..உடல் உரமாகட்டும்..மனிதம் நிலைக்கட்டும்..
        ‎
        ‎விவசாயம் உயிர் பெறட்டும்...

Sunday 5 November 2017

நரைத்த போதும்....நகராமல் நான்...

உன்னுடன் ஒரே குடை பிடித்து செல்லும் அந்த நாள்...
உன்னுடன் உட்கார்ந்து ரவி மறைவை ரசிக்கும் அந்த நாள்....
உன்னுடன் கைக்கோர்த்து செல்லும் அந்த நாள்...
உன் மடியில் துயில் கொள்ளும் அந்த நாள்...
உன் கட்டி அணைத்து உறங்க போகும் அந்த நாள்...
உன் குழல் கோதி கொஞ்சும் அந்த நாள்...
உன் இதழ் பருகி இன்புறும் அந்த நாள்....
நம் குழந்தை தாங்க போகும் அந்த நாள்....
காதல் காலம் பற்றி கதைக்கும் அந்த நாள்...
நரைக்கும் போதும்...நகராமல் உன்னுடன்...👫👫👫👫

Sunday 6 August 2017

பெண் கதைகள்...

பொண்ணுங்கனாளே இந்த பிரபஞ்சத்தோட ரொம்ப பெரிய வரம்...மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்...பாவையில்லையேல் பாரதியே இல்லை..மது மாதுக்கு தான் உலகத்துல அடிமைகள் அதிகம்...அப்டி இப்டினு.  ..ப்ளா..ப்ளா..ப்ளா.....
பசங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை பொண்ணுங்கதான்....ஆனா பொண்ணுங்களுக்கு இருக்க பெரிய பிரச்சனை பசங்க அப்டினுதானே சொல்லனும்னு நினைச்சிங்க...ஆனா அப்டி இல்ல..அப்றம் வேறென்ன ம..ர் பிரச்சனை-னு கேக்றீங்களா...அதேதான் அதேதான்..அதே மயிரில் உள்ள பேன்கள்தான்...
அதிலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களிடம்...சாரி...மாணவிகளிடம்...
அந்த பேன் கடிக்கும்போது...எல்லோர் முன்னிலும் சொரியவும் முடியாம,சொரியாம இருக்கவும் முடியாம் இருக்க மன நிலை இருக்கே...அது கொடுமை.....சாய்ந்தரம் வீட்டுக்கு வந்த உடனே தலைய அவுத்து பேன் சீவியே ஆகனும்..கூட்டமா இருந்தாக்கூட அரிக்காது..ஆனா ஒன்னு ரெண்டு இருந்துட்டு தலைல மேயும் போது வர உணர்வு இருக்கே..வாயால சொல்ல முடியாது......ஞாயிறன்று பெரிய வேளையே தாய்களுக்கெல்லாம் பேன் பார்ப்பதுதான்..பேன்பார்க்கும் போது ஒரு சில இடத்துல ரெண்டு மூனுனு இருக்கும்..அதுல ஒன்ன விட்டா கூட வர மனசு கஷ்டம் இருக்கே..அப்பப்பா...நிறைய பேன் இருக்க தலைல பேன் பார்த்தாதான் சுவாரசியமே...அதுலயும் இந்த அம்மாங்க இருக்காங்களே,அவங்க தலைல அதிகமா பேனே இருக்காது..ஆனா நம்மள பாரு பாரு-னு நாஸ்தி ஆக்கிருவாங்க...ஆனா இதுலாம் ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி....இப்போ எல்லாரும் டீவி..மொபைல்தான்...

இந்த தலைமுறைக்கு தலைல எண்ணைய் பட்டாலே அலர்ஜி..அதுலயும் கைல ஊத்தி தலைக்கு எண்ணைய் தேக்கிறதுல்ல அப்டி ஒரு வெசனம்(என்னையும் சேர்த்துதான்)....

ஆக கருத்து என்னான பேன் போக்க வழி உங்களுக்கே தெரியும்...திரும்ப சொல்லி போர் அடிக்கல..
இதுலயும் பொண்ணோட முடிக்காகவே காதலிச்சு பேதலிச்சவன்லாம் வரலாற்று அசையாம நிக்கிறாப்டி....தலைல மூளை இல்லனா கூட பிரச்சனை இல்ல...ஆனா முடி இல்லானா அம்புட்டுதான்...

Tuesday 27 June 2017

என்னோட நாலு வருசம்

படிச்சனோ இல்லையோ..பட்டம் மட்டும் வாங்குன நாள்...
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய்   professor  கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு  (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரி காலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....

அவளு(னு)ம்-2

அவன்;காதலின் தூரல் மெல்ல வீச💑
 அவள்: காதலன் காதோரமாய் பேச ❤

அவன்: நாணம் செல்லமாய் கூச ...💟
அவள்: விரல்கள் இதமாய் உரச ...💘

அவன்: கைகள் வலையோசை பாட💖
அவள்: நமதாசை பாடாய் பட 💕

அவன்: கண்கள் விழிக்கிறது கவி எழுத ...💞
அவள்: இதழ் விரிகிறது இன்னிசையமைக்க💞

அவன்: மேனியெங்கும் மோதும் காற்று சுடுகிறது இதமாக..💗
அவள்: உன் மூச்சின் இன்ப உஷ்ணம் என் உடலெங்கும் பரவ💗

அவன்: உயிர் குளிக்கிறது உன்னிதழின் தீப்பிழம்பில்...💜
அவள்: உன் மார்புச்சூட்டில் வெட்கம் கரைகிறது...
💜
அவன்: வழிந்தோடுகிறது உன் வழியே என்னுயிர்...💛

அவள்: என் ஜீவன் தேடி நான் உன்னில் தஞ்சம் ....💝
அவன்: காதலில் கூடலுக்கேது பஞ்சம் 😉💝

அவள்: என் ஒவ்வொரு அணுவும் கொஞ்சும் உனை...💓
அவன்: அனைத்திலும் மிஞ்சுவேன் உனை 💓

அவள்: உன் ஆண்மையெல்லாம் அறிவேன்💞💞💞
அவன்: பெண்மையாலும் உன்னை சூழ்ந்திடுவேன் ...💞💞💞

அவள்: உன் அன்புச்சிறை நீங்கேன் 💝
அவன்:கைதியாய் பணிவேன் 💟

அவள்: கெஞ்சியே அடிமை செய்வேன் 💝
அவன்: கொஞ்சியே அடிமையானேன்...💟💟

The worst bus journeys???

சுமூகமாக இருந்திருக்க வேண்டிய பயணங்கள்.....

   எல்லா பயணங்களும் சுமூகமாக அமைந்து விட(வதும்)வில்லை. .

சிலருக்கு பேருந்து பயணம் எளிது..சிலருக்கு ரயில் பயணம் வசதி....

5 நிமிடம் முதல் 15 மணி நேரம் வரையும் ,அதற்கு மேலாயும் பயணங்கள் அமைகிறது...

குறுகிய பேருந்து பயணங்களில்...
திடிரென்று ஒரு குரல்...உங்களை தான் இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...(பார்த்து பத்து நிமிடம் கூட இருக்காது) நீங்கள் அழகு,உங்கள் கண்கள் அழகு...ரயில் போகும் போது எட்டி பார்த்தது அழகு,...அது இது.....

ரசிப்பதில் தவறில்லை...ஆண்கள் பெண்கள் இருவரும் தான் சைட் அடிக்கிறார்கள்...
ஆனால் இந்த அழகு அழகி என்ற வார்த்தையில் மயங்குவோம் என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்டாதீர்கள்...

நீங்கள் பேசுவதை கண்டிப்பாய் ஒரு பெண்மகள் தவிர்ப்பாள்...மீறியும் உங்கள் பேச்சு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
அப்போது அவள் அமைதியாய் இருப்பதற்கு நீங்கள் பேசுவதற்கு சம்மதம் என்றில்லை...நீங்கள் மேற்படி அவளை தொடலாம் என்று அர்த்தம் இல்லை...நிச்சயம் அந்த அண் மகனுக்கு செருப்பு பிஞ்சுறும் என்ற அவளின் இயலாமையின்  பதிலாவது கிடைத்திருக்கும்....அடக்க முடியாத கோவமும்,ஆதங்கமும் நிச்சயம் ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும்



அதிலும் இரவு நேர பயணங்கள் அதை விட கொடுமை...

அவள்கள் அமைதியாய் இருப்பதற்கு ,
அருகில் அவளின் குடும்பத்தார் இருந்திருக்கலாம்...அவர்கள் நிம்மதியை ஏன் குழைக்க வேண்டும் என்று இருக்கலாம்...

அதற்கும் மேல் இங்கு தப்பு செய்தவனக்கு தண்டனையை விட,தப்பு செய்யாதவர்களுக்கு தான் அதிகம்...இன்னும் "நீ பல்ல இளிச்சுருப்ப" " ஈ எறும்பு வருவதற்கு முன் பண்டத்த மூடு" "பஸ்ல உன் புள்ளகிட்ட எவன் எவனோ வந்து பேசிட்டுருக்கான்" என்பதெல்லாம் வழக்கத்தில் இல்லாமல் இல்லை...அவளின் சுதந்திரம் பறிபோய்விட கூடாது என்பதற்காகவும்,அம்மா அப்பாவிடம் ஏன் நண்பர்களிடம் கூட பெண்கள் பகிர்ந்துக்கொள்வதில்லை...


பேருந்து என்பது அனைவரும் நிம்மதியாய் பயணம் செய்வதற்குதான்....ஆனால் பெண்களுக்கு அவ்வளவு சுமூகமாக பயணங்கள் அமைவதில்லை...

இன்னும் நிறைய பெண்களுக்கு தனியாய் பேருந்து பயணம் என்றால் பயம்,வீட்டில் உள்ளோருக்கும் இதை அனுமதிப்பதில் பயம்...

நச்சரிக்காதீர்கள் பெண்களை...
அழகு என்ற வார்த்தை பெண்களின் போதை மாத்திரை ஒன்றும் இல்லை...


அவர்களுடைய பயணமும் சுமூகமாய் இருக்கட்டும்....

Sunday 26 March 2017

அவளு(னு)ம்....ம்ம்ம்ம்ம்.....

அவள்: உனக்கான வரிகளெல்லாம் மை-யலினால் வரைகிறேன். . .

அவன்: மை தீர்ந்ததும் மெய்யினால் எழுதுவாயாக தோழி ....

அவள்: மையல் தீரா மான்விழி ...

அவன்: உளறிகொட்டும் பேனாவினால் திணறிக்கொண்டிருக்கும் காகிதத்தில் பிழைகள் யாவும் என் கவியே..

 அவள்: என் சினுங்களெல்லாம் உன் பிழைகளாக ...

அவன்: தாவணி சினுங்களில் பூக்குமென் நத்தவனம் ....பிழைகளற்று

அவள்: உன் ஸ்பரித்தால் சிலித்தே இந்த இரவு இன்னும் நீள்கிறது
அவன்: நீளும் இரவில் யாத்திரை பயணம் இன்னும், விடியும்வரை கேலி பேச்சில் கிறங்கிடிக்கறது உன் பூனைமுடி பென் மீசை

அவள்: உன் ஆசைகளெல்லாம் முத்த மொழியில் பேச இசையமைக்கிறது உன் ஆண் மீசை. .இரவு முழுதும் கச்சேரியாய். .

அவன்: கச்சேரியில் ஜதி சேர்க்கிறது உன் கால்கொலுசும், பூச்செண்டு வியற்வைதுளியும் ...

அவள்: உன் ரோமம் போர்த்திய நெஞ்சே என் பஞ்சனையாக. .

 அவன்:பஞ்சனையை மிஞ்சம் உன் பரதம்

அவள்:விரல்களெல்லாம் நெற்றி முடியின் மீது கதைபேசியே.,தொடங்கிய இடத்திலே மு(வி)டிகிறது இரவு...

அவன்: கதிரவன் இன்னும் வரவில்லை கதகலி இன்னும் பாக்கியிருக்கேடி என் பத்தினியே !!

 அவள்: 😘😘😘கதிரவன் வந்தும் இதழ் மூடி,இழுத்தணைத்ததும் நானும் நம்பி விடுகிறேன் . . காதலனை !

அவன்:குளியலறை வரையிலும் நீண்டதாகும் என்னிரவு என்னவளே....உனைபிரிந்து வேறின்பம் எனக்கேதடி என்னுயிர்தோழியே

அவள்: உன் மீது விழும் நீர் துளியிலும் எனக்கு பங்குண்டு .....

Friday 24 March 2017

நுனிச்சிட்டு



இங்கு முதன் முதலில் வனங்கள்,கடல்கள்,ஆறுகள்,ஏரிகள்,அருவிகள்,நுண்ணுயிரிகள்,விலங்குகள்,பறவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று உரையாடி உறவாடி மகிழ்ந்துதான் இருந்திருக்கும் நிச்சயமாக...
மனிதன் இங்கு மனிதனாகதான் நுழைந்தான்...அவன் என்று வியாபாரியாய் மாரி மனிதம் தொலைந்ததோ ,அன்று இயற்கையின் சமநிலை மாறத் தொடங்கியது...
  போராடி போராடி,இன்னும் போராடிக்கொண்டே தான் இருக்கிறது...
    இன்று ஏதோவொரு நுனியில் அதன் வாழ் நிலை நகர்ந்துக் கொண்டிருக்கிறது...
     நாம் கண்டிப்பாக அவைகளுக்கு நல்லதெல்லாம் செய்பவர்கள் அல்லர்...
     முடிந்தளவு தொந்தரவு செய்யாமளாவது இருப்போம்...


இப்படிக்கு,
நுனிச்சிட்டு காதல்க்காரி...

உயிரற்ற ஜீவன்..

முதன் முதலில்...

நாளை ஒரு உயிரற்ற மனிதரின் தோலை பிரித்து பாடம் கற்பிக்க பட உள்ளது என்று உற்சாகமாகதான் இருந்தேன்...ஆனால் அடுத்த நாள் ,அந்த அறைக்குள் நுழைய முடியாதவளாய் மனம் இறுக்கியது...

ஆனாலும் வேறு வழியில்லை..கடைசியாய் உள்ளே நுழைந்தேன்...

ஆம்...இறந்து நான்கு வருடங்களாகிய உயிரற்ற உடல் அது...பிணவாடை ஒன்றும் இல்லை...முழுதும் பார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்ட நெடி தான் அந்த அறை முழுதும்...

முழு நிர்வாணமாய் ,உடலிலுள்ள மயிர்களெல்லாம் வலித்து எடுக்கப்பட்டு,தலைகீழாய் அந்த மேசையின் மேல் படுக்க வைக்கப்பட்டிருந்தது...
உடல் அங்கங்கு கிழித்து வைக்கப்பட்டிருந்தது...

ஆசிரியர், ஒவ்வொரு  தசைகளாய் விரித்து விரித்து கற்பிக்க ஆரம்பித்தார்...தலைக்குள் எதுவும் நுழையவில்லை..

ஒரு பக்கமாக தெரிந்த அந்த தோல் சுருங்கிய அந்த முகம்,அந்த இரண்டு பற்களின் மேல் தான் என் கண்ணெல்லாம் இருந்தது...என்ன நினைத்து கொண்டு இந்த மனிதர் இங்கு படுத்திருப்பார் என்றெல்லாம் யோசித்தது...உயிர்தான் இல்லையே..😡

கையுறைக் கொண்டு தொட மனம் ஒப்ப வில்லை...வெறும் கைகளினாலே அந்த உயிரற்ற தசைகளை தொட்டு பார்த்தேன்...


வெறும் தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் ,ரத்தக்குழாய்களும்தான் உடல்...என்னன்னவோ எண்ணங்கள்..

உயிரற்ற மனிதன் தான் நிறைய கற்பித்தான் அன்று,ஆசிரியரை விட...😐😐

அந்த நாட்கள்...



படிச்சனோ இல்லையோ..பட்டம் மட்டும் வாங்குன நாள்...
Graduation-க்கு போனதே friends - லாம் பாக்கதான்...
இப்ப வரைக்கும் நண்பர்களோட கல்யாணத்துக்கு போறதும்,frnd கல்யாணத்துக்கு கூப்புட்டா அப்டிங்கிறதுலாம் இல்ல...frnds-லாம் பாக்கலானு தான்...சும்மா அப்டியே சந்தோஷமா வாழ்ந்த நாலு பேர திரும்ப பாக்கலாம் தான்...
பெரிய குற்ற உணர்ச்சிலாம் இல்ல படிக்காம பட்டம் வாங்குனாதனால....class room-ல இருந்தத விட (விட்டாதானே) வெளில ஊர் சுத்துனதுதான் அதிகம்...biotechnology தெரிஞ்சுதோ இல்லையோ,வாழ்க்கனா என்னனு கொஞ்சம் தெரிஞ்சுது...கதைசொல்லியாகவே விடுதி அறையில்...8.50 க்கு எழுந்து 9 மணிக்கு போனது,எப்டியும் உள்ள விட மாட்டாங்கனு canteen போனது,அங்க போய்   professor  கிட்ட மாட்டுனது...mostly first day first show தான் பாத்ததா நியாபகம்...என்றென்றும் புன்னகை படத்த பார்த்த 30 பேரும் மறக்க மாட்டோம்...ஓகே கண்மணி படத்துக்கு project-அ கட் பண்ணிட்டு போய் மாட்னது...department -ல மொட்ட மாடில தான் அதிகம் இருந்துருப்போம்...புரிதல்கள் மட்டும் மாறி இருக்கு...இருந்தாலும் அவரு  (professor)கேட்டதும் மட்டும் இன்னும் குத்திட்டே இருக்கு...அந்த கல்லூரிலம் கொஞ்சம் கசப்பான விஷ்யம் தான்...இப்ப புது கல்லூரி வாழ்க்கை....அழகா நகருது....பழைய கல்லூரி பேர இங்க இருக்க ஒருத்தராவது தினமும் நியாபக படுத்திட்டே இருப்பாங்க..நினைப்பு எப்பவும் இருக்கும்..அங்க கத்துக்கிட்டதுதான் இன்னைக்கு வரைக்கும் வழி நடத்துது(books லாம் இல்ல)
என்ன ஒன்னு,அங்க இருக்கும் போது நீ என்ன doctor-ஆ white coat போட்டு சுத்துற-னு கேட்டாங்க..இப்ப தைரியமா போட்டு போறேன்..
படிச்சுதான் கண்டிப்பா இங்க பட்டம் வாங்குவேன்....

அன்பு சூழ் உலகு



தமிழ் அக்கா அன்பை அள்ளித் தந்த இனிப்பிலிருந்து இனிதாயும் இனிப்பாயும் தொடங்கியது நேற்று மதியம்....

50 நாட்களுக்குப்பின் சொந்த ஊர்..பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் புகைவண்டி நிலையம் வந்தாயிற்று..

திருநெல்வேலி-திருச்சிராப்பள்ளி
      குளிச்சியான நீர் இதமாக தொண்டை நனைத்து குதூகலாய் தொடங்கியது பயணம்..
      எப்பொழுதும் அந்த சாளரமோரம்,அந்த ஒற்றை இருக்கைதான்....😀
      குட்டி ராஜ நித்திரைக்கு பின் கண்கள் விருந்துக்கு தயாரானது...
      வாஞ்சி மணியாச்சியை கடக்கும் போதெல்லாம்,வாஞ்சி ,ஆஷ்சை சுட்ட கற்பனைக்காட்சி மூளையை முட்டும்...
      "ஆவாரை பூத்திருந்தால் சாவாரைக் காண்பீரோ".. வறட்சியிலும் வளமாய் வளர்வது ஆவாரையும் தான்....தங்க பூக்கள் போர்த்தி நிலத்தில் நித்திரைக் கொண்டிருந்தன...
      எத்துணை முறை கடந்திருந்தாலும் அத்துணை முறையும் பயம்தான் அந்த பாலத்தைக் கடக்கும்போது...
      முழுதும் பச்சைதான்...ஆனால் அந்த பாலாய் போன கருவேள மரங்கள் தான்...ஒரே ஆறுதல் ஆங்காங்கே வெட்டி வீழ்த்தப்பட்டிருந்த அதே மரங்கள்தான்...
      அடர்ந்த வான வண்ணத்தில் அந்த ஒற்றை மரத்தின் உச்சிக்கிளையில் வீற்றிருந்த ஓய்யார பறவை ..
      ரயில் போகும்போது கையசைக்கும் அந்த மழலைகள் என்றும் அழகுதான்...அதிலும் அந்த மழலைகள்...கையில் காகிதப்பூவோடு அசைத்த அந்த பிஞ்சு கைகள்...பூவுக்கும் வாசனை சேர்த்த அந்தக் காற்று அழகாய் எனை அடைத்தது...பறக்கும் முத்தங்கள் தருவதெல்லாம்,அந்த முத்தத்தின் ஈரத்தென்றல் சத்தியமாய் அவர்களின் கண்ணம் தீண்டும் என்ற அசட்டு நம்பிக்கைதான் எனக்கும்...
      பூந்தோட்டம்,காகிதப் பூக்களின் அணிவரிசை...பயணத்தை இனிமையாக்க...
       திருப்பரங்குன்றம் மலை பார்க்கும்போதெல்லாம் அந்த குட்டி குண்டு அழகன் சொன்னது முகுளத்திலிருந்து வெளிவரும்..அதே யானை .அதே கண்...
       வைகை பாலத்தைத் தாண்டும் போதெல்லாம்,கதையில் படித்தவை,பிறர் சொல்லக்கேட்ட காட்சியெல்லாம் நினைக்கும்போது நிச்சயம் அதிர்ச்சியாய்தான் இருக்கும்...
       சிறிது நேரத்தில் கொடைக்கானல் மலை வரிசை...பனிப்போர்த்திய மலை..இதமான அந்தி மாலை..இதழ் நனைத்த தேனீர்...நெஞ்சம் நிறைத்த கணங்கள்....
       அந்த மலை ,சேய் சுமந்த தாய் பிரசவித்தல் போன்றும்,அடுத்து ஒரு குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பது போன்றும் அழகாய் அணைக்கும்...
       குட்டி குட்டி பறவைகளும்,பட்டாம்பூச்சிகளும் கொக்குகளும்,நாரைகளும்,அழகு காகங்களும் வீடு செல்லும்,அவர்களெல்லாம் பறந்து,நான் அந்த அழகில் கரைந்து...
       பூப்போர்த்தியும்,நிர்வாணமாயும் பல மரங்களும்,குன்றுகளும்...அதிலும் இரண்டு குன்றுகளின் நடுவில் அகல் போன்ற ஒரு பாறை...அந்த அந்தியில்,அதில் பனி நிரப்பி,அந்த இரண்டு விண்மீன்களை போட்டு ஏற்றி விடலாம் என்றெல்லாம்...ஆயிரம் எண்ணங்கள்...
       சில மனிதர்கள் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும்...ஆம்,அதே அன்பர்..வெள்ளைத்தாள் அட்டைப்போட்ட புத்தகத்துடன்...இருவருக்கும் பொறித்தட்ட நலம் விசாரித்து கொண்டோம்...ஒரு கணத்தில்,அவர் புத்தகத்தைக் கொடுத்து  ஒரு பகுதியை வாசிக்க சொன்னார்..."ஒரு மருத்துவ மாணவனைப் பற்றியது" அந்த பத்தி...அதில்"ஆழமாய் விதைத்த ஒன்றுதான் இன்று மரமாய் நிற்கிறது "என்றிருந்தது..
     
       காவிரி காற்றுப்பட்டதும் இனம் புரியா புத்துணர்வும்,ஆனந்தமும்...இருட்டிலும் அந்த அல்லிக்குளத்தைத் தேடாமலில்லை...
       குட்டி நாய் ஒன்று வீட்டில் உறுப்பினராய் சேர்ந்திருந்தது...எனக்காய் காத்திருந்து,அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்...
       நாம் நல்லது செய்யும் போது யார் ஊக்குவிக்கிறார்களோ, நாம் தவறு செய்யும்போது யார் கண்டிக்கிறார்களோ அவர்கள்தான் என்று ஒரு குரு போத்திதிருந்தார் ....ம்ம்..நம் அருகில் இருக்கும் பல ஜீவன்கள்தான் கடவுள் போல..
       நாம் அன்பு செய்வதற்க்கும் ,நம்மை அன்பு செய்வதற்க்கும் இங்கு கோடி கோடி ஜீவன்கள் இருக்கிறார்கள்....ஆம்..அன்பு சூழ் உலகு.....
     
      

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...