Sunday 1 March 2020

அந்த மாதிரியான உணர்வு....

புத்தகங்களும்,சினிமாக்களும் அந்தந்த காலத்தினது சமூகத்தின் கலாச்சாரத்தை பறைச்சாற்றி வளர்ந்து நிற்கின்றன...

பெரிய ஈடுபாடெல்லாம் முன்பிருந்ததில்லை...முன்பென்றால் விவரம் தெரிவதற்கு முன்பு...அதாவது என் பள்ளி பருவ பாதிவரை...

ம்ம்ம்..பின்பு எனக்கும் முற்றி விட்டது...சாதரணமாக வாசிக்கத் துவங்கியது...

காதலுன்னை பித்தனாக்கும்...
வாசிப்புன்னை புத்தனாக்கும்...


கடவுளை அடையிற வழிகள் நிறைய பேர் அதிகமான கருத்துக்களை பகிர்ந்துட்டு நம்மளலாம் விட்டுட்டு கடவுளை பாக்க போனாங்களோ என்னமோ...எனக்கு தெரில ..

The god of small things புத்தகம் ...2011 ல் வாங்கிருப்பேன் ..காலேஜ் சேர்ந்த புதுசு...

பன்னிட்டாங்கிளாஸ் வரை தமிழ் மீடியந்தான்..schoolல English newspaper readingக்கு stage எறுனதோட சரி...
எங்க Englishமிஸ்ஸ ரொம்ப புடிக்கும்...
அது ஒரு நேர்த்தி மிடறு இருக்கும்...

தெரியாத ஒரு விஷ்யம் ,அடுத்தவங்க பண்ணா ஆச்சரியமா இருக்கும்ல ..அதே கதைதான்...

நா அந்த புத்தகம் வாங்குனப்ப,புத்தகத்தோட பெயரோட அர்த்தத்த புரிஞ்சுக்கக்கூட முயற்சித்ததில்ல...
புக்கர் விருது வாங்குன புக்கு..அந்தம்மா பேரென்ன...அவங்கதான் கர்லி hair...that iron lady...அருந்ததிராய் எழுதுனது மட்டும் தெரியும்..

நமக்கு வயசாக வயசாக சில விடயங்களெல்லாம் புரிய ஆரம்பிக்கும்...அப்றம் தான் தெரிஞ்சுது...அந்த புத்தகத்தோட தலைப்புல இருந்த அந்த சுவாரடசியம் ,உண்மை..ரொம்ப ஈர்த்துருச்சு...
சின்ன சின்ன விஷ்யங்களையும் கடவுள் தன்மைய உணர ஆரம்பிச்சுட்டேன்...( கோவில் சாமிலாம் ஒரு நாளும் கும்பிட்டதில்ல...ஆனா அந்த சிலைல இருக்க அந்த கடவுள்தன்மை...வடிச்சவனோட அந்த லயம் ஈர்ப்புதான்...)..








ஆனா இன்னும் அந்த புத்தகத்த தொறந்துக்கூட பார்த்ததில்ல...

இந்தக்கதை எதுக்குனா...ம்ம்ம்ம்..

சைக்கோ படம் பாட்டு கேட்டேன்...
நா எப்பவும் கொஞ்சம் லேட்டுதான்..எல்லாரும் கேட்டு சலிச்சு அந்தப்பக்கம் தூக்கி வச்ச பிறகுதான் தூசி தட்டுவேன்...

உன்ன நினைச்சு ,நீங்க முடியுமா,தாய் மடியில்...மூணு பாட்டும்...200 தடவ கேட்ருப்பேன் (appx தான்)...

கடவுளை அடையிற வழில  இளையராஜா பேரும்,sid  sriram பேரும் எழுதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

நல்ல வேளை...அவங்கலாம் இருக்கப்ப நா பொறந்தேன்..இல்லனா இந்த அனுபவம் இல்லாமலே போயிருக்கும்...

காலைல சூரியன் உதிக்கிறத பாக்றதுக்காக சீக்கிரம் எழுந்திருக்கிறது...பூத்தும் பூக்காம இருக்க பூவு...வாசல் தெளிக்கிற சத்தம்...காலுல ஒட்டுற மண்ணு...கோலம் தப்பா போறப்ப அத சமாளிக்கிறது..அம்மா செய்ற வேலைய வாங்கி நானே செய்றது...சமைக்கிறது...வானத்த பாத்துக்கிட்டே உக்காந்துக்கிறது...இத கஷ்டப்பட்டோ ,இஷ்டப்பட்டோ வாசிக்கிற நீங்க நினைக்கிற நா...

இப்டியே இன்னும் நிறைய....


கடவுள் ங்கிறது ஒரு உணர்வு...எல்லாருக்கும் உள்ளுக்க இருக்கு...
அந்த கடவுள் தன்மை...ம்ம்ம்ம்...
அவ்ளோ நிம்மதி...அத அனுபவிக்க....

எனக்கு எல்லாமே புடிக்கும்...எதுமே தப்பில்ல...
ஆனா எப்டி அப்டி இருக்க முடியும்...
முடியுதே...என்ன செய்ய...

எல்லாத்லையும் எதோ ஒரு விஷ்யமாது எனக்கு புடிச்சதா அமைஞ்சுடும்.அப்டிதான்...

மறந்துட்டனே....
.
ம்ம்ம்..

கண்ணன் குழல் கதை...
புதுமைபித்தனோடது...ஆமா...ஏன் அந்த மனுஷன் புதுமைபித்தன்னு பேரு வைச்சுருப்பாரு...புதுமை மேல அப்டி ஒரு பயித்தியகாரத்தனமா...
ஹூம்ஹூம்...
பித்தன்ங்கிற நிலைமையே தெய்வ நிலைமதானே...(காதலுன்னை பித்தனாக்கும்...ம்ம்ம்..எஸ்....)


அவரு வாழ்ந்த காலத்த மனசுல படமோட்டி பாத்துக்கலாம்....அந்த ட்ராம் சத்தம்...அந்த பிச்சைக்காரனின் குழலூதல்...அந்த ஆழ்துன்ப லயிப்பு...

உயிரைவிட எனக்கு ஆசையில்லை...என்ற எதார்த்தமான முடிவு....
கதை...
அந்த கதை ஏதோ பண்ணுது...

இந்த உணர்வ விளக்க வார்த்த கிடைக்கல...
நீங்களே வாசிச்சு அனுபவிச்சுகோங்க...

குட்டிக்கதை..
அவ்ளோ பெரிய வாழ்க்கை...


என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...