Tuesday 24 July 2018

அந்த இரண்டு நாட்கள்..


























அந்த இரண்டு நாட்கள்..(மூணு நாள்-லாம் இல்லீப்பா...ஒரு பேட்ச்க்கு ரெண்டு நாள்தானாமே )
Yesssss...autopsy clas...(செத்து போனவங்கள பக்குவமா சிதைச்சு செல்ல நோண்டி பாக்றது...)..
குறிப்பு:
1.இதயம் பலவீனமாக உள்ளவர்கள்..
2.18 வயசுக்கு கீழ உள்ளவங்க...
3.ப்ரெக்னண்ட் லேடீஸ்
இந்த போஸ்ட படிக்காத்திங்க..
டவுசர் வழியா ஒன்னுக்குதான் போல...பயமும் ரணமும் பிச்செடுத்துருச்சு...(நீலாம் பயப்படுவியானு கேட்டா உனக்கு நாதான் postmortem பண்ணுவேன் பாத்துக்கோ..)
அனாடமி க்ளாஸ்லயும் பழைய தாத்தாக்கு பவுடர் போட்டே பழ வருசம் ஓட்டுனனால அப்போ பயம் இல்ல...(இப்போ உண்மையா ..அதும் கிட்டக்க...அய்யோ)..
நிசமா உசிரில்லாத சடம் முன்னாடி நின்னு அத அறுக்குறத வெற்று கண்ணால பாக்கனும்..(கண்ணாடி போட்டு பாக்கலாம்லனு மொக்க போட வேண்டாம்)...
எப்டியோ திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கெளம்பி போயாச்சு....
அங்க பொம்பள புள்ளைங்க விடுதி பேரு...House of angels...(அடேங்கப்பா...இங்கையும் தான் வச்சுருக்காங்களே c- block a - blockன்னு.)
ஒரு கதவுல moods 18+னுலாம் எழுதியிருந்தாங்க...(பேரு வைக்கிறதுனாலும் ஒரு நியாயம் தர்மம் வேணாமாப்பா...DOPE நியாபகம் தான் வந்துச்சு...)
இடம்:Forensic medicine& toxicology department
பங்கேற்பாளர்கள்:10 பன்னிகள்..
Wall paintings வரவேற்க நிறைய photos கிளிக்கிட்டு museumகுள்ள நுழைஞ்சா...
ஒரே எலும்புங்க...(மனுசன் மிருகம் அப்டின்னு வகை வகையா...)எப்டிலாம் மனுசன் சாவுறான்கிற புகைப்படங்கள்...(ஏன்டா நுழைஞ்சதும் பயம்புடுத்துறீங்க...)
அத்தனைக்கும் நடுவுல உடம்புல உள்ள எல்லா எலும்பும் தெரிய ஒட்டி போன வயிறோட சோறில்லாம செத்துபோனவரோட படம் ரொம்ப உலுக்கிடுச்சு...
அங்கயிருந்த photosல for teaching purpose...not displayed in public placesனு எழுதியிருந்துச்சு...(ethics முக்கியம்ல...)
இறந்தவர்களோட உடல் உறுப்பு பாகங்கள படிப்பு நோக்கத்துக்காக formalin குடுவையில அடைச்சு வச்சுருந்தாங்க....(படிக்கிற இடத்துல உனக்கென்ன வேலனுதானே கேக்றீங்க....hello boss...நா இன்னும் student தான்)..
கீழ இறங்குனா mortuary...(கைப்புள்ள பயப்படாத...இறங்குனாலும்...நகத்த மிடியல...)
ஆனாலும் வேற வழி இல்ல...
அடுத்து Temple of surprise--->(பேருலாம் நல்லாதான் இருக்கு...ப்ரியா நுழைஞ்சுடு...ஒத்தயா ஒத்த அடி கூட வைக்க முடியாது....)
போய்கிட்டே இருக்கு...என்னடா இது...cold storage room(சடத்தை பதப்படுத்தி வச்சுருக்கும் ரூம்) தாண்டுனா...ஒரு பிணத்தோட இருக்க post mortem பண்ற ஹால்..
இடம்:post mortem hall..
பங்கேற்பாளர்கள்:பயத்தோடு 13 பேர்கள்..
63 வயசு தாத்தா..தூக்குமாட்டி செத்துட்டாராம்...
Convict-so எட்ட நின்னு பாக்க சொன்னாங்க..video ரெக்காட்டு பண்ணாங்க...(என்னடா இவ்ளோ seriousஆன இடத்துல நிக்க வைச்சுடீங்க)..
(பச்சப்புள்ள மாறி படுத்துருந்தாரு...கொலை பண்ணி ஜெயிலுக்கு போனவராம்...)
இப்போ கொஞ்சம் ரணகலமான இடம்..
உயரம், அகலம் ,முடியோட நீளம் (தலை தாடி அரையிடுக்கு இனப்பெருக்க உறுப்பு) அளந்துட்டு...மருத்துவர் கத்தியோட நிக்கிறாரு...
தாடை தொடங்கி தொப்புள் கீழே வரை நேரா சரக்குனு ஒரு கிழி.....(தொண்டைல எச்சில் போற சத்தம் கூட தெளிவா கேட்டுச்சு)...
மேல் தோலை திறந்து வைத்து நெஞ்செலும்பு ,விலா எலும்புகளை வெட்டி எடுத்து தொடைக்கு நடுவே போடுகிறார் எலும்பை...
தொண்டைப்பகுதியில் உணவுக்குழாய், மூச்சுக்குழலை வெட்டி நாக்கோடு புடுங்கி எடுத்து ...நுரையீரலை தனியே எடுத்து பின் அனைத்து பாகங்களையும் வெளியே எடுத்து...அதன் எடையே பார்த்துவிட்டு ..அனைத்து பாகங்களிலும் 50 50 கிராம் எடுத்து ஆய்விற்கு அனுப்ப உப்பு கரைசல் கொண்ட பாட்டிலில் அடைத்து விடுகிறார்...
அடுத்து தலை...
ஒருபுற காதின் மேல்புறத்திலிருந்து மற்றொருபுறமுள்ள காது வரை உள்ள காதை அறுத்து ,மண்டை ஓட்டை  ரம்பம் கொண்டு அறுத்து...மூளையையும் அதே போல் செய்தனர்...
பின் அனைத்து உறுப்புகளையும் மூளை உட்பட நெஞ்சறைக்குள் போட்டு..மண்டையினை பஞ்சைக்கொண்டு நிரப்பிவிட்டு ஊசி நூல் கொண்டு தைத்துவிட்டனர்....
அவ்வளவுதான் ...எல்லாம் முடிந்துவிட்டது...
அவ்ளோதான் வாழ்க்கனு அங்க நின்ன எல்லா மனசும் நினைச்சிருக்கும்..
(பிணம் வாங்க வந்தவர்களை பார்த்து...
ப்ரியா:ஏன் ராம் யாருமே அழல?...
ராம்:மனுசன் வாழ்ந்த வாழ்க்க அப்டி...
ஆமால.. எப்டி வாழ்ந்தாங்கிறது சாவுலதான் தெரியும்....)..
அடுத்தடுத்து நிர்வாணமாய் மொத்தம் 5 சடலங்கள்...பார்த்து பழகிவிட்டது...
27 வயதிருக்கும்...36 வயது பெண்...விசம் குடிச்சு செத்துட்டாங்க...செத்ததுகப்றம் இப்டிலாம் நடக்கும்னு தெரிஞ்சுருந்தா தற்கொலை பண்ணிருக்கவே மாட்டாங்க...
தலைல மட்டும்தான் அடி..செத்துட்டான் மனுசன்...helmet ஓட முக்கியத்துவம் முழுசா புரிஞ்சது...(பக்கத்துல நின்ன ஒரு போலிஸ் தன்னோட கண்ணு ஓரத்துல இருந்த தழும்ப தடவி பாத்ததுல இருந்துச்சு மனுசனோட பயம்)
சக்கரை நோயால ஒருத்தர் இறந்துட்டாரு...(சொந்தங்கள சேர்த்து வைக்காதனால பாத்துக்க ஆள் இல்லாம செத்து போய்ட்டான்...)
சாதல் வரம்தான்...ஆனா இப்டி சாகுறதில்ல...
அங்கு எவ்வளவு பெரிய .........ராக இருந்தாலும் ....இதேதான் நிலை அங்கே...
மரியாத தருல..அப்டி பண்ணல..இப்டி பண்ணல...ego அது இதுன்னு இல்லாம்...வாழ்ற வரை சந்தோஷம வாழ்ந்துட்டு,எல்லாருக்கும் அன்பை பகிர்ந்தும்,அன்பை பெற்றும்...முடிந்தவரை இயற்கை மரணத்தை எய்துவோம்...
(அங்கும் சேட்டைக்கும் களிப்புக்கும் பஞ்சமில்லாமல் இனிமையாக சென்றது..(அங்க போய் எப்டி சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்க முடியுதுனுலாம் கேக்காதிங்க...அவர்கள் இறந்துவிட்டார்கள்...நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....)..
எங்க பேட்ச்சோட அமைப்பு அப்டி...)..
Love you all...














என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...