Tuesday 31 December 2019

நேற்று இல்லாத மாற்றம்




நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை
படகின் பயணமெல்லாம் நதியை தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை
காற்று வழிபோவதை நாற்று சொல்கிறது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது
இலைகள் வீழ்ந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது
-வைரமுத்து...(புதியமுகம் படம் பாட்டு...
ரொம்பவும் மெல்லிசான குரல்..அவ்ளோ இதம் இந்த பாட்டுல...
யெஸ்....2019...
அவ்ளோதான்...
இன்னைக்கு என்னா பண்ணாலுமே அதுதான் இந்த வருஷத்தோட கடைசி...
அதுபோலதான் இதும்...
.இந்த வருஷத்தோட கடைசி எழுத்துக்கள்...
அப்டி என்ன நேற்று இல்லாத மாற்றம்...
நிறைய உறவுகளோட பிரிவு...
நிறைய உறவுகளோட இணக்கம்...
எல்லாத்தையுமே கடந்து செல்லுற மேகம்னு(அதான் அந்த passing clouds) நம்ம வேகமா நடந்து போய்ட முடியாது ..
சில மேகங்கள் மழைப்பொழிந்தே தீரும்...நாம் நனைந்துதான் ஆக வேண்டியதாய் இருக்கும்...(குடை புடிச்சுக்கலாமேங்கிற மொக்க காமெடிலாம் மனசுல கூட நினைச்சுடாந்திங்க)...
அவ்வாறான இனிப்பும் கசப்புமாய்தான்...
காலேஜ் final year....இந்தா.. இன்னும் 5 மாசந்தான் ..இதும் முடிஞ்சுடும்...(அப்றம் என்ன ?..நாய் பொழப்புதான்)...
இது எதுக்குனா,நா சொகுசா வாழ்ந்த கடைசி வருஷம் இதான்..
இந்தக்கல்லூரி- வாழ்க்கையோட புது புது கோணங்கள அள்ளி கைல தந்து இந்த வாழ்ந்து பாருன்னு நீட்டுது...
(அனுபவத்த கேக்குறது ஒரு விதம்னா..அனுபவிக்கிறது தனி விதம்..)
ஆயிரம் சொன்னாலும் 24 வயசுவரை ஒரு சின்ன புள்ள உணர்வுதாம் எல்லாருக்குள்ளவும் இருக்கும்ம்...(அடுத்த வருஷம் 25 வயசுல...😞)இதுவும் போட்சா...
போன் பயன்படுத்தாத 100 நாள்-இந்த வருஷத்தோட சாதனை...(இதலாம் ஒரு பொழப்பானு துப்பாதிங்க...)..
இந்த முகப்புத்தகம் வாட்சப் போன்ற எல்லா சமூக வலைத்தளங்களும் போர் அடித்து ,மண்டையில் அடித்து வெளியேறின வருடம் இதுதான்...(நாய் எப்டி மழுப்புது பாரு...அதானே.....
😂)
கூட படித்த முக்கால்வாசி நண்பர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்த போதிலும்...(அதுக்குலாம் நீ சரிப்பட்டு வர மாட்ட என்ற நோக்கிலே வாழ்க்கை நகர்கிறது...)
புது  மனிதர்கள்...(Dr.Sundarrajan , parvin akka(சூப்பரா கறிவடை செய்வாங்க),ஊட்டிக்காரரு,நர்ஸ் பானு ,dr.shanthi mam,melapalayam hospital head அவரு,வீரமங்கை,புது குழந்தைங்க..இன்னும்)..

மருத்
ஓ.பி ஐ.பிலாம் ஓரளவுக்கு fun ஆ தான் போச்சு...
க்ளாஸ்ல சண்டக்கோழியாவே வருஷம் போய்டுச்சு...
பிக்பாஸ்...100 நாள்...கவினே முகேனு சாண்டி ....அது வேற லெவல் fun...
(It stands ல)...
ஆக்சுவலி..
என்னடா கல்யாணம் குழந்தைங்கனு தோணும்...
எல்லாருமே எதோ ரெண்டு பேரோட காம இருப்புக்குதானே பொறந்தவங்கனு தோணும்...
ஆனா குழந்தை பெத்துக்கிட்டு அதுக்காக வாழ்ந்துக்கிட்டு ,அவங்க காட்ற அந்த பாசம்...உனக்காக நானும் நமக்காக அவங்களும்னு ஒரு குடும்ப அமைப்புலாம் சூப்பர்ல தோணது அந்த லாஸ்லியா புள்ளனால தான்....
எதுக்கு இதலாம்னு ஒவ்வொருத்தரும் இப்டி யோசிச்சா குடும்பங்கிற ஒரு அமைப்பே இல்லாம போய்டும்ல...
அன்புக்காகதானே சார் இந்த உலகம்...
வேறன்ன...அதான் எல்லாம்...
இந்த வருடத்தோட ஓரளவுக்கான மாற்றங்கள் இதான்....
அடுத்து என்ன புது வருச காலண்டர திருப்பி,
அரசு விடுமுறைகளை எண்ண வேண்டியதுதான்....
..
அன்புடன் அனுப்பி வைக்கிறோம் -2019..
ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறோம்..-2020




..

Saturday 21 December 2019

நினைவுகள்

உன் நினைவுகள்
இன்னும்
நெஞ்சில்
பத்திரம்தான்...

கனவுகளை
நிஜமென்று
நம்பி
நடுராத்திரியில்
உன்னை தேடுகிறேன்...

உனக்கான
தொலைவுகளை
விரல் எட்டில்
அளந்துக்
கொண்டிருக்கிறேன்...

கண்கள்
  பொய்யென்று
கனவுகள் 
   மெய்யென்று
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்...


என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...