Thursday 8 December 2016

சரியாக ஒரு வருடம்




நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தது..
  இன்றுதான் ஏதொ பேனா கைகளுக்கு எட்டியது...
போதும்.  STRAIGHT –ஆ MATTER-க்கு போவோம்.(ஆசையப்பாரு....அந்த MATTERலாம் இல்லீயே :D )
ஆம்...இக்கல்லூரி வாழ்க்கையில் சரியாக ஒரு வருடம் முடிந்தது..
முதல் நாள் தமிழ் மருத்துவம் படிக்கப்போகிறோம் என்று மிகுந்த எதிர்பார்ப்புடனும்,ஆர்வத்துடனும்தான் நுழைந்தேன்..(அப்புறம் என்னாச்சு???அதானே...சொல்றேன்.. சொல்றேன்....)
பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த துடிப்புடன் இருந்தேன்...(அட அதான்-பா L.R, H.R)
வகுப்பிலே நான் தான் பெரியவள்..(வயசுல..வயசுல...எத்தன வயசு இருக்கும்???  அதலாம் சொல்ல முடியாது)
முதலில் அனைவரும் பேச தயங்கினார்கள்.( நாம அவ்ளோ பெரிய ரவுடிலாம் இல்லீயே)....பின், இன்று வரை நல்ல நட்புடன் தொடர்கிறது...
நன்றாக படிக்க ஆரம்பித்தேன்...(சரி..சுமாரா....அந்த காலேஜ்லதான் படிக்கலயே..இங்க நாச்சும் படிக்கலானுதான்..மத்தபடி ச்சா ச்ச)....
கல்லூரி ஆரம்ப காலத்திலயே SENIOR ஒருவருடன் முட்டிக்கொண்டது..(ஜெனிலியா SCENE லாம் இங்க இல்ல ராசா....RECORD தான் எழுதி தரமுடியாதுனு சொன்னேன்..அம்புட்டுதேன்...)
சரியாக மூன்று மாதங்கள் நன்றாகதான் சென்றது..(இல்லயே..ப்ரச்சன வந்துருக்கனுமே....அதானே...வந்துச்சே..)
வகுப்பசிரியர்கள் அனைவரிடமும் கேட்டுதான் விடுமுறை எடுத்தோம்..(பொங்கலுக்குதான்)ஆனால் பிரச்சினை என்றதுமே,அனைவரும் இல்லை என்று கைவிரிக்க, எல்லாம் என் தலையில்தான் விடிந்தது...(சின்ன புள்ளனா கூட விட்ருப்பானுங்க...கொஞ்சம் பெரிய புள்ளங்கவும் வச்சு செஞ்சுட்டாங்க..  ஏய்...அதலாம் இல்ல...U R UNFIT FOR L.Rனு சொல்லி போமா உன் வேலைய பாருமானு சொல்லி அனுப்பிட்டாங்க)..(இன்னும் ப்ரச்சனைய சொல்லலயேமா?...அதெப்டி பொத்தாம் பொதுவலாம் சொல்லிற முடியாது)....
மிகுந்த வருத்தம் என்னவெனில்,C.Rயும் மாத்திவிட்டார்கள்(அட அதான்பா BOY REP)..அவர் வேலையை அவர் திறமையாய் செய்தார்...(VERY SORRY PA)
மனது பாரமாக இருந்தது..முதன் முதலாக வகுப்பை CUT அடித்து விட்டு குற்றாலம் சென்றோம்( நீ ஊர் சுத்துறதுக்கு இது ஒரு சாக்கா...ஹிஹிஹி)
பின் வகுப்புகள் சாதாரணமாக நடந்தது..தினமும் புதிய புதிய ஆச்சரியங்களுடன் வகுப்புகள் பறந்தது..(என்னா வேகம்..அதுக்குள்ள ஆறு மாசம் முடிஞ்ச்சு)
மரு.முகிலன் ஐயா  வகுப்பு எப்பொழுதுமே ஒரு சுவையான தகவலுடன்தான் துவங்கும்.மூளையை சுறுசுறுப்பாக்கி அது சோர்வடைவதற்குள் வகுப்பு முடிந்துவிடும்.அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியர்,மருத்துவர்...
எங்கள் அனைவரின் அடுத்த பிரியம்,Dr.சுதா மேம்.கனீர் குரல்..அழகான பேச்சு நடை.மாணவர்களின் போக்கிலே விட்டுப்பிடிப்பவர்.நல்ல ஆசிரியை..
மருத்துவ தாவரவியலுக்கு கடைசியாக ஒரு ஆசிரியர் வந்தார்.(LAST BUT NOT LEAST)எங்களின் வளர்ச்சிகளைப் பாராட்டி,குறைகளை சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்தியவர். Dr.ரஜேஷ் சார்.
எங்கள் கல்லூரியிலேயே மிகுந்த வருடம் அனுபவம் வாய்ந்த,அனைவரின் மரியாதைக்கும் உரிய ஆசிரியை உயிர் வேதியியல் துறை ஆசிரியை தான்..(பெண் சிங்கம்,ONE WOMAN ARMY).என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆசிரியை.தகுந்த நேரங்களில் தேவையான அறிவுரையை வழங்கி  நன்றாக வழிநடத்தினார் அனைவரையும்..
வகுப்பில் பாடம் தவிர ஒரு வார்த்தைக்கூட பேசாத அன்பான ஆசிரியை மரு.ஏஞ்சலின் மேம்.(ஆனா copy  அடிச்சா correct ஆ கண்டுப்பிடிச்சிருவாய்ங்க)
இந்த முதல் வருடத்திலேயே மிகவும் உற்சாகத்துடனும் வியப்புடனும் படித்தப்பாடம் தோற்றக்கிரம ஆராய்ச்சிதான்..
மரு.மலர்விழி மேம்,அழகான தமிழில் அமைதியான முறையில் அன்புடன் கதைகளுடனே பாடம் சொல்லித்தரும் அருமையான ஆசிரியை..யோகா வகுப்பு குரு.சிறந்த மனிதி..
மரு.மல்லிகா மேம் பார்த்துதான் எங்கள் வகுப்பில் உள்ள அனைத்து பெண்களுக்கும்  கண்டிப்பாக இவர்கள் போல் மருத்துவராக ஆக வேண்டும் என்று தோன்றியது.CLINICAL-ஆ அதிகம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை..
மரு.ஜெயா மேம்,கொள்ளை அழகு..அதிகம் வகுப்பு சொல்லிக் கொடுத்தவர். நல்ல ஆசிரியை..
மரு.செல்லதுரை ஐயா எங்கள் கல்லூரியின் பொக்கிஷம்..தாவரங்களின் encyclopedia.
ஆங்கிலம் என்றொரு பாடமும் இருந்தது போலும்.அதிகம் அந்த வகுப்புக்கு சென்றதுமில்லை( நான் மட்டும் இல்லப்பா..எல்லாரும்தான்....)
பின் ஏப்ரல் மாதத்தில் கல்வி சுற்றுலாவிற்காக ஊட்டி,மேட்டுப்பாளையம்(BLACK THUNDER)  வகுப்பில் உள்ள அனைவரும் சென்றோம்..(அங்க என்னடா கல்வி இருக்கு..அதானே...அதலாம் இருக்கு..அப்டீனுதான் கெளம்புனோம்)
பிறகு தனிப்பட்ட பயணங்கள்(அட இது வேறாயானுலாம் கேட்கப்பிடாது என்ன)
மாஞ்சோலை,பாபநாசம்,நாங்குனேரி,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,குற்றாலம்,கழுகுமலை,குழிப்பள்ளம்....நண்பர்களுடன் இனிமையான பயணங்கள்(நியாபகங்கள் சேகரித்த பயணங்கள்)
பின் கடைசியாக(அப்ப இன்னும் முடியலையா..இல்லையே இல்லையே...)
காளிகேசம்..மீண்டும் வகுப்பில் உள்ள அனைவரும் கல்வி சுற்றுலா(இது உண்மையிலே கல்வி சுற்றுலாதான் பா)
செப்டம்பர் மாதம் தொடங்கியது,தேர்வு நெருங்கியகியது...இதற்கிடையிலும்,உணவு திருவிழா,மூலிகை கண்காட்சி என்று எதனையும் தவற விடவில்லை...
புதிய நட்புகள்,புதிய தொடர்புகள் என அழகான நினைவுகளுடனும்,அன்பான உறவுகளுடனும்,சின்ன சின்ன கசப்புடனும் இனிதே  நினைவுகளை இன்பமாய் சுமக்க தயாரானது முதல் வருட கல்லூரி வாழ்க்கை...
விடுதியில் உள்ள குட்டி அறை அழகான நினைவுகளுனும் இன்றும் என் கிறுக்கல்களை சுமந்து அடுத்த வருட மாணவர்களுக்காக காத்திருக்கிறது

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...