Wednesday 14 February 2018

"காதலும் இறப்பும்" எழுத்துரை

வரும் ஞாயிறு "காதலும் இறப்பும் " என்ற எழுத்துரை பதிவேற்றப்படும்..

Sunday 11 February 2018

MOST PLAY LIST

Play list..
 என்னதான் shuffling all போட்டுட்டு பாட்டு கேக்க ஆரம்பிச்சாலும் நம்ம மனசு நமக்கு புடிச்ச பாட்டதான் தேடும்..
 ‎அப்டி அதிகமா ஒடுற பாட்டுதான் பாக்க போறோம்...(mostly அப்பப்ப trending ல இருக்க பாட்டுதான் most played ஆ சாங்கா இருக்கலாம்)..
ஆனா சில பாட்டுலாம் எப்பவுமே இருக்கும்...
அது மாதிரி என்னோடதுல..

1.மறு வார்த்தை பேசாதே..
2.சண்டாளி உன் அசத்துற அழகுல
3.சந்தோஷ கண்ணீரே
4.சினேகிதனே
6.தென்றல் வந்து தீண்டும் போது..
7.ரோஜா ரோஜா
8.புது வெள்ளை மழை
9.ஒரு கோப்பை தேநீர்
10.சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
11.சின்ன சின்ன ஆசை..
12.கல்யாண தேனிலா
13.மௌனமே பார்வையாய்
14.நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
15.நியுயார்க் நகரம்
16.நீ நிலா
17.உன்ன பார்த்தா போதும்...
18.இன்னும் கொஞ்ச நேரம்
19.கண்ணத்தில முத்தமிட்டால்..
20.காட்டுக்குயிலு
21.வசிகரா
22.வா வா என் தேவதையே
23.நறுமுகையே..
24.இதழில் கதை எழுதும்
25.உன்னை பார்த்தனே முதல் முறை..

இன்னும் நிறைய.....

Saturday 10 February 2018

டோபமைன் & ஆக்ஸிடோசின்


சுஜாதா...
எனக்கு ரொம்ப புடிக்கும் அவரோட கதை..கட்டுரைலாம்...

எழுத்து நடையே
நல்ல காமெடி சென்ஸோட ,
ஆங்கிலம் தமிழ் கலந்து,
எல்லாருக்கும் புரியிற மாதிரி,
அவரு காலத்து வாழ்க்கை முறைய பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும்...

அவரோட கதையோ கட்டுரையோ படிச்சாலே எதொ ஒரு technical wordனாச்சும் கத்துக்கலாம் கண்டிப்பா..(GVM இவரு fan போல)...
இவரு எழுதுன scientific fiction கதைக்குலாம் நா ரொம்ப பெரிய  விசிறி...   நிறைய   அறிவியல், நிறைய நிறைய தமிழ்...அதி புத்திசாலி...





நம்மில் எத்துணை பேர்கள் சுஜாதாவின் "காதல் என்பது" என்ற கட்டுரையை படித்திருப்போம் என்று தெரியவில்லை..படிக்காதவர்கள்...வாசித்து பாருங்கள்..நிச்சயம் பிடிக்கும்...


வாசிக்க தொடவும்...

நேற்றைய நாள் முழுதும்....சுக போகம்...


(யாராது ஓசில சோறு வாங்கி குடுத்துறுப்பாங்கனு யோசிச்சா அது சரியான விடை இல்லை..நீங்க அடுத்த ரவுண்டுக்கு போக முடியாது ...சாரி...அப்டினுலாம் சொல்ல மாட்டேன்..)😜😜😜😷


சண்டையே வராம குளிக்க bathroom கிடைக்கிறதுலாம் ஆக சிறந்த வரம்..(GOVT. Hostel ல இருந்து பார்....அப்ப தெரியும் அந்த கஷ்டம்..)..😤😤😤😤


7.15 க்குலாம் சாப்ட போயாச்சு..சுட சுட பூரி ப்ளஸ் சுண்டல் குர்மா...ப்ரமாதம்...


7.30 க்கு ச்சரி ஒரு 7.40 பக்கம்லாம் op wardக்குள்ள நுழைஞ்சாச்சு..(இந்த புள்ள எதுக்குடா ஹாஸ்பிட்டல்க்கு போகுதுனு தோணுமே...நானும் இங்க 3 rd year student தான்..ஓபி duty)..😨

Patient வராத நால நம்ம நட்பையே patient ஆக்கி கொஞ்ச நேரம் time pass பண்ணது...😱😛

சார்..எப்பவும் வழக்கம் போல ஒன்னுமே பேசல...(ஆனா சார் செம வாயாடி)..😳😳


The Hindu செய்தித்தாள் ல வந்த கஷ்டமான சுடோகுவ ஈசியா solve பண்றதெல்லாம் எப்பையாதுதான் நடக்கும்...அது போலதான் நேத்தும்...(yes..cracked it...இதெப்டினு கேக்கும் போது ...அதலாம் அப்டிதான் பீத்திக்கொண்டது...😛😜😜😜).


9.30 க்கு முடியிற duty 9.25 க்கு முடிஞ்சா எம்புட்டு சந்தோஷம் தெரியுமா..(5 நிமிஷம் தானேனு நினைப்பிங்க...பட் ...அதெல்லாம்..ஒரு wow feel.😜..)..கேட்டவுடனே விட்டுறதெல்லாம் தெய்வ level...(super staff).👴😘😘


11 மணி class க்கு 11.30 க்கு வந்து 11.45 க்கு முடிக்கிற திறமைலாம் எங்க research methodology  class எடுக்கிர மேம்னாலதான் முடியும்👩...😍😍😍(12 மணி வகுப்புக்கு 11.55 க்கே வந்து 1.5 க்கு விடுறதெல்லாம் pathology சார்-ஆலதான் முடியும்)...👨


வெள்ளிக்கிழமைனால மெஸ்ல புளிமிளகாய்னு ஒரு அரிய அம்சமான டிஷ் ஒன்னு வைப்பாங்க...கூட்டம் அலைமோதும்...நிறைவா சாப்டு ஒரு கோப்பை மோர் குடிச்சாலே ஆக திருப்தி...😻😻😻


மதியம் ஒரு Clas தான் ..எப்பவுமே lateஆ விடுற அம்மா 15 நிமிஷம் முன்னாடியே விட்டுட்டாங்க ..(Clas வந்தா யாரையும் திட்டாமா போ மாட்டாங்க....ஆனா நேத்து ஒரு வார்த்த திட்டல)...⛄😸😸😸


காலேஜ்ல உள்ள கோவில் எதோ சாமி கும்பிடுதல்...அதுக்கு speaker கட்டி அமர்க்கள படுத்திட்டாங்க...(எப்டி class நடக்கும்னு பாத்தா போய் off பண்ண சொல்லிட்டாங்க)...🌅


3-5 ஒரு நல்ல சுகமான நித்திரை...


5 மணிக்கு அப்டியே புக் fair பக்கம் போயாச்சு....பிஸ்கட்ட் கொறிச்சுகிட்டே உலாவிட்டு இருந்தோம்..🍪🍪🍪


மீ.சு சார்அ( எங்க physiology professor)photo எடுத்ததுதான் பெரிய டாஸ்க்...🍭🍭


கரிசல் குழு பாடல் நிகழ்ச்சி..🎺🎧🎤🎵🎹🎼🎶.(அதுல கத்திரிக்காய்க்கு குட போட்டது யாரு யாரு யாரு...காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு..பாட்டு அசத்தல்...)அந்த தாத்தா ஒரு லவ் பாட்டு பாடுனதுக்கு பக்கத்துல இருந்தவரு ,"பெரிய மனுசன் பாட வேண்டிய பாட்டா இது"கமெட் வேற..(எது எப்டியோ நமக்கு நல்ல time pass)...💁💁


Eve கருத்தரங்குக்கு Dr.சிவராமன் சார்,Dr.சுபாஷ் சார் Dr.பொன்னம்பலம் சார்...இயற்கை விவாசாயி...தச்சை....எல்லாரும் வந்துருந்தாங்க...செம கூட்டம்...👪👫👬👭👯👥👮💁💂👳👲👱👱🎅🎅👰


எங்களோட முன்னாடி வரிசைல 5std பள்ளிக்கூட 👬👬👬👬...(எந்த இடம்னாலும் குழந்தைங்க இருந்தா தனி சந்தோசம்...அதும் போகும் போது   டாட்டா காட்டுனதுக்கப்றம் ஒரு குட்டி வாண்டு வந்து,கன்னத்த கிள்ளி முத்தம் 😘😘குடுத்துட்டு போறதுலாம் அன்பின் எல்லை...வேறென்ன வேணும் உலகத்துல)💖💖...


முடிச்சுட்டு கெளம்பலானு சொல்லி புக் stall வழியா போனோம்..தும்பி stall க்குள்ள எத்தன தடவ போனாலும் எனக்கு சலிக்காது...👍👍அந்த அண்ணாட்ட தும்பி கேட்டுட்டே இருந்தேன்...அந்த அண்ணா இன்னைக்கு வர சொல்லிர்க்காரு.✋.அப்றம்...தோழிகள கட்டாய படுத்தி ஒரு stallக்கு கூட்டிட்டு போனேன்...நமக்கு புடிச்சவங்க அங்க நின்னா எப்டி இருக்கும்..அழகு குட்டி பையன்...(அந்த முத்துச்சிரிப்பும் ,வெக்கம் மட்டும் போதும்)👶👶....



அப்டியே காலேஜ்க்கு நடந்து வந்து மெஸ்ல சாப்டோம்..(food stallல போண்டா,வெங்காய தோசை அமுக்கியதுலாம் பத்தாத 🙊🙈..)


நம்ம காலேஜ் கோவில் functionக்கு லைட் கட்டிருந்தாங்க...(போய் போட்டோ எடுத்துட்டுருந்தேன்..ஒரு அண்ணன் நல்லா ரசிச்சு எழுதுறமா...நல்லா photo போடுறமானு சொன்னாரு...how sweet..🙈.🙏)..




வேறென்ன வேணும்...அன்பு சூழ் உலகு...😍😍😍😍🙏





















Friday 9 February 2018

வரைதலும் புரிதலும்...

நேற்றய எழுத்துரையின் தொடர்ச்சிதான் இன்று....
வாசித்துவிட்டு தொடரவும் ..
தொடுங்கள்..

பில்லியன் வருஷத்துக்கு முன்னாடி இருந்தே மனுஷனுக்கு அடுத்தவன் மனசுல இருக்குறத தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் அதிகம்...(ஆனா அத கண்டுபுடிக்கிறது அவ்வளவு சாதாரணம் இல்ல பாஸ்)...


வாழ்க்கைல எல்லா நிலையிலையும்,பேனால,பென்சில்-அ,அழி ரப்பர்ல,கறில,மணல்-அ,மண்ணுல,தண்ணில ,பூ வச்சு,மை வச்சு,பேப்பர் கிளிச்சு,துணில இப்டி எதுலயாது வரைஞ்சுகிட்டுதான் இருக்கோம்...(சரி..கிறுக்கிக்கிட்டு தான் இருக்கோம்)...


நம்மளயே அறியாமலோ அறிஞ்சோ சில உருவங்களும் வடிவங்களும் வரைவோம்...
அதுல சிலத வரையும் போது வரையுரவங்க மன நிலைய கணிக்கலாம்..
அத பத்திதான் கீழ பாக்க போறோம்..(சார்...கீழ பாக்காதிங்க.. கட்டுரைல கீழ பாருங்க..ஹ்ம்ம்ம்)...

இந்த எழுத்துரைக்கு "மனச காட்டிக்கொடுக்கும் உருவங்கள்"னு இல்ல "வரைதலின் புரிதல்கள்"னு  தலைப்பு வச்சுப்போம்...


யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்படும்....

அன்புக்காக ஏங்கிட்டு இருக்கவங்க...வட்டமாகவும்,வளையங்களாகவும் போன்ற உருவங்களை யோசிச்சுக்கிட்டே வரைவாங்க(எக்சாம்பிள்க்கு லவ்வர் கூட சண்ட போட்டுட்டா)...

Practicalஆ இருக்கவங்க நேரான கோடுகளையும் ,ஒழுங்கான உருவங்களையும்தான் வரையுவாங்க...(நாம practical தான்..ஆனா அந்த ஒழுங்கான உருவம்தான் இடிக்குதுல...)

தன்னம்பிக்கை இருக்கவங்க பெரிய (அண்டா) அளவிலான படங்களையும்,தயக்கமுள்ளவங்க மெலிதான (அ) அடர்த்தியான கோடு (sketchy strikes)(கிறுக்கல்ஸ்) வரைஞ்சுட்டு கிடப்பாங்க...

Comics ல வர face வரைஞ்சிட்டு இருந்தா அவங்க ஏதோ தேவையில் உள்ளவங்க...(interval இல்லனா lunch break ஆ இருக்கும்..சும்மா சின்னதா பஜ்ஜி போண்டா போன்ற தேவைகளாகவும்..இல்ல பிரியாணி தந்தூரி போன்ற பெரிய தேவைகளாகவும் இருக்கலாம்...அவரவர்களைப் பொறுத்தது)...

பூப்படம்(அந்த பார்வதி பாப்பா inro ஆனா படமானுலாம் கேட்றதிங்க)...

   பொதுவா friendlyஆ இருக்கவிங்க வட்டவடிவ இதழ்களையும்..
     தன் கஷ்டத்தை மறைக்கிறவங்க(எதுக்கு????அப்டினு இருக்கவங்கனு கூட வச்சுக்கலாம்) கூர்மையான இதழ்களை வரைவாங்க...
     ‎சில சோக பறவைகள் கீழ தொங்குற பூப் படங்கள வரைவாங்க....(எங்கே செல்லும் அந்த பாதை...🎶🎶🎤)
      நிறைய friendsப்பா இவங்களுக்கு அப்டிங்கிறவங்க பொதுவா பூங்கொத்து வரைவாங்க...


பட்டாம்பூச்சி:

     ஒரு கஷ்டத்துல,அதையே புடிச்சு தொங்காம,சடார்னு வெளில வரனும்னு நினைக்கிறவங்க பறக்குற தும்பியவோ,பறவையவோ,இல்ல பட்டாம்பூச்சியவோ வரைவாங்க...



இதயம்:

     இதைப்பற்றி அதிகம் கூற தேவையில்லை..(அதாவது தாங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை)...
     ‎புதுசா லவ் பண்ற cases பண்ற வேல தான் இது..
     ‎அம்புடுறது...
     ‎(லவ்வர நினைக்கும்போது அவிங்க initial போட்டு வரையிறது...ஹார்ட்க்குள்ள வரையிரது..💘heart இப்டி இருக்காதுனு தெரிஞ்ச நாயும் இதே தான் பண்ணுது)...



Introverts நல்ல நுணுக்கமான படங்களதான் வரைவாங்க...ஹான் ..புடிச்சத பிரிய முடியாம் தவிக்கிறவங்களும் கூட...


இந்த படிக்கட்டு ,ஏணி இந்த மாதிரி வரையிரவங்க பொதுவா அவங்க ஜெயிக்கிறத பத்தி யோசிச்சிட்டு இருப்பாங்க...(அப்டி என்னா போட்டியா இருக்குனுலாம் யோசிக்க வேணாம்)...


அதிகமா அம்புக்குறி வரையிரவங்க அவங்க குறிக்கோள நினைச்சிட்டு இருப்பாங்க...அதுலையும் முனை கூர்ரா இருந்தா படிப்பு வேல சம்மந்தப்பட்டதாவும்,மழுங்கி இருந்தா காதல் அன்பு சம்மந்தப்பட்டதாவும் இருக்குமாம்...



எப்படா இந்தம்மா விடும்...எப்படா இந்த மீட்டிங் முடியும்னு இருக்கவங்க மிதிவண்டி,கார்,பைக்,விமானம் ,கப்பல்னு வரைவாங்கங்கோ....





Insecure ஆ feel பண்றவங்க வீடு வரைவாங்க...தனிமையில் வாடும் தங்கங்கள் மலை வரைஞ்சு அது மேல வீடு கட்டி பக்கத்துல ஒரு பொம்மைய நட்டு வைப்பார்கள் ..😒😒


எப்டிடா மாட்னோம்...எப்டிடா மாட்ட வைக்கலானு யோசிக்கிற சிங்கங்கள் சிலந்தி வலை வரைவாங்க...(எத்தன apology....rest is history)....

பொதுவா centre of attentionஐ விரும்புற நபர்கள் அவங்க பேரையே எழுதுவாங்க...

பெரிய ஆசை இருக்கவங்க விண்மீன் வரைவாங்க...
நன்னம்பிக்கைல இருக்கும்போது குட்டி குட்டியா நிறைய விண்மீன்கள்( விண்மீன் தோட்டம்) வரைவாங்க....
உறுதியான குறிக்கோள்(அட ..இதான்பா)என்று இருப்பவர்கள் பெரிய ஒரே விண்மீனை வரைவாங்க....


ச்ச..போதும்டா சாமினு...ஒரு பிரச்சனைல இருந்து வெளில வர நினைக்கிறவங்க சதுரம்,கனசதுரம்   (அதான் அந்த cube) வரைவாங்க...
உற்சாகமா இருக்கவங்க zigzag சொய்ங் சொய்ங்னு வரைவாங்க....


என்ன மாதிரி சிலர்,என்ன நடந்தா என்னனு பாண்டா கரடி மாதிரி தூங்கிற caseஎல்லாம் நிறைய உண்டு என்றும் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது...



Thursday 8 February 2018

வகுப்பு நேர வரைதலும்(கிறுக்குதலும்)...

எப்படி பார்த்தாலும் யார் பாத்தாலும் எல்லார்க்குள்ளயும் ஒரு ஓவியனும் கவிஞனும் ஒளிஞ்சு உள்ளுக்க எங்கயோ இருக்காங்க...👊✋

எப்டி Clas timeல தூங்காதவங்க இல்லையோ,அது மாதிரிதான் Clas timeல வரையாதவங்க இல்ல..✌✌
நம்மளும் எப்டி எப்டிலாமோ வரையுவோம்..முடிலனா,ஒரு star-ஓ ❄இல்ல பூவோ.🌺..இலையோ.."வீடு மலை மனுசன் ஒரு ஆறு ஒரு மரம்...".போன்ற universal drawing கள்,..அதுலையும் தமிழ்நாட்டு பொண்ணுங்க கோலமோ,அதுவும் இல்லன ஒரு வட்டமோனாச்சும் போட்டுருப்போம்...🌕

புக்குல உள்ள படத்துக்கு நம்மளால முடிஞ்ச அர்ச்சனைய சிறப்பா செய்வோம்(பொண்ணுனா பொட்டு வச்சுடுறது,ஆம்பளைக்கு மீச தாடி போடுறதுனு நம்ம  வேற level   creativity ல இருப்போம் )...🌇🎑🌄🌅

சிலர்...சாரி..பலர் கோவமா இருந்தாலோ,இல்ல ,Clas ல மிஸ் -ஓ மேம்-ஓ திட்டிடாலோ,கோவத்த நம்மளால அவங்ககிட்ட காட்ட முடியாதப்ப எல்லாரும் ஒரு பேப்பர்ல கிறுக்கித் தள்ளுவோம்..🔨🔨🔨

அதுவே யோசிச்சிட்டு இருந்தா அப்டியே முட்ட முட்டையா( நாட் தட் முட்ட...round round )ஆ போட்டுட்டு இருப்போம்..🌀🌀🌀

சிலர் லவ்வர் பேர கிறுக்குவோம்.அப்றம் heart போட்டு அம்புடுறது..இது மாதிரி சில பல வேளைகள்..💖💝💘

தமிழ்நாட்டு காரன் பேசாமா இருந்தா செத்துறுவானு பெரியவங்களே சொல்லிர்காங்கள(யாருப்பா அதுனு கேட்றாதிங்க..நேக்கும் தெரியாது..
🙈🙈)

என்ன மாதிரி சிலரால Clas timeல  பேசாம இருக்கவே முடியாது..எப்டியாது பேப்பர்ல எழுதி குடுத்தாது பேசிர்வோம்.👯..(மாட்டி திட்டு வாங்குனதும் இதில் அடக்கம்💁💁)...

அதுலயும் சில சின்னப்புள்ளைங்க படம் பேரு அடிச்சு விளையாட்றது..ஸ்ரீராம ஜெயம் எழுதுறதுனு...🙊🙊நிறையபேர் பேர கூட வரையிறது..பேரோட first letter வரையிரது பல ரகம் இருக்கு....👆👆

இதுக்குள்ள நிறைய psychology இருக்கு..அத அடுத்த எழுத்துரைல பாப்போம்...👍👍

அப்ப இதுல என்ன பாக்க போறோம்னுதானே கேக்றீங்க...
இன்னைக்கு Clas -ல நானும் வரைஞ்சேன்..அத பத்தி நாலு வார்த்த எழுதுலாம்னுதான்...👍








என்னடா blankஆ இருக்கேனு பாக்றீங்களா..அதான் நாலு வார்த்த முன்னாடியே எழுதிட்டனே👻👻...(மொக்கதான்..புரியுது...இருந்தாலும்...சரி விடுங்க👀)..அடுத்து கலக்கிருவோம்👌...மறந்துட்டனே..
இந்தா..படத்த பாருங்க.👇

வரைந்ததில் சிறிது போட்டோகிராபியும் முலாம் பூச எடிட்டோகிராபியும் பயன்பட்டது என்பதையும் ஒப்புக்கொள்வது உங்கள் ....தங்கச்சி அக்கானு எதாது போட்டுக்கோங்களேன்..

Tuesday 6 February 2018

மொக்கை ஆஃப் தி நாள்..

உன்னிடம் உரையாடும் போது மட்டும் ஏன் இவ்வளவு அழகு😘...(ஏன்னாஇது beauty plus ல எடுத்தது...ஈஈஈஈ🙈🙈🙈)...(அடி சிறுக்கினு நினைக்கிறது என் காதுலையே விழுதுனா பாருங்களேன்)....



அகமும் மகிழ்வும்...

ஊட்டச்சத்து குறைவும்
சோர்வும்

காதலும் 
கனவும்

ஆசையும்
இச்சையும்

பொறுப்பும்
குடும்பமும்

கவலையும்
பணமும்

அகமும்
மகிழ்வும்

புறமும்
புரியாமையும்

காலமும்
வெறுமையும்

அன்பும்
மனதில் சுமக்கும் நட்பும்

படிப்பும்
கற்றலும்
கற்பித்தலும்

உறக்கமும்
ஊட்டச்சத்து குறைவும்...








Sunday 4 February 2018

ஆக...மகிழ்ச்சி

இன்னைக்கு சண்டே...

கல்யாணத்துக்கு போலானு ஆரம்பிச்சு எப்டி எப்டியோ முடிஞ்சு போச்சு...

அரக்க பறக்க வரைஞ்ச painting...(நம்ம சித்த மருத்துவ கல்லூரி சுவர்ல)
எப்டியும் prize தர மாட்டாங்கை..(நம்ம எப்பவும் out of theme தானே)..
அட அதாங்க தூய்மை இந்தியா திட்டம்..(நாட்டையே குப்பையக்கிட்டு இதுல இது வேற..)(எது எப்டியோ நம்ம சுவர் நல்லாகிருச்சு..)






Actually casually potentially நம்ம தீம் food வச்சுதான்...kidsக்கும் புரியிற மாதிரி இருக்கனும்னு cartoon மாதிரிதான் வரைஞ்சோம்..(மத்த மாதிரிலாம் வரைய தெரியாது...அது வேற கத)...



குட்டி பசங்க எப்பவுமே cute (Scl  பசங்க அழகா வரைஞ்சுருந்தானுங்க)...(அவனுங்க humor  லாம் chance-ஏ இல்ல இல்ல chance-ஏ இல்ல ...திருநெல்வேலி வேலி 'லே'வேற எங்கயும் இல்ல)...

அதலாம் முடிக்கவே 2 மணி ஆச்சு...பரிசு வழங்கும் நேரம்...இதுல எப்பவுமே politics இருக்கும்ங்கிறது நம்ம எல்லாருக்குமே தெரியும்...  குட்டி பசங்களுக்கு எல்லாருக்குமே குடுத்திர்கலாம்..(participant ஆ மூனா பிரிச்சு மூனு prize எல்லாருக்கும் வர மாதிரி குடுத்தர்லாம்
..அவ்ளோ நேரம் வெயில்ல வரஞ்சானுங்க...)...

அப்றம் வந்து rest...அஞ்சு மணி வாக்குல எந்திரிச்சு நெல்லை புத்தக திருவிழா..(நம்ம voc ground-ல)..முன்னாடியே ஷாஜகான் uncle ஓட article மண்டைக்குள்ள ஓட உள்ள நுழைஞ்சாச்சு..

அப்டியே ஒவ்வொரு stall ஆ பாத்துட்டு நகந்தாச்சு..(ஜோல்னா பை தாத்தா..குறுந்தாடி uncle..kurta போட்ட அண்ணா...நீள தாடி தாத்துஸ்..குட்டி குட்டி பொடுசுங்க...)(நாங்களும் ரெண்டு புத்தகம் வாங்குனோம்ல....)ரொம்ப ஈர்த்தது "தும்பி" பதிப்பகம்...


தும்பி பதிப்பகம்...(art from waste ..அழகா பண்ணிருந்தாங்க)..முழுக்க இயற்கைய பத்தின புத்தகம்...அதுலயும் கொட்டாங்குச்சி(அட சிரட்டை..எங்கூர்ல இப்டிதாங்க சொல்லுவோம்) கார்விங்ஸ் செம.. மிஸ் பண்ணிராதிங்க...




அப்றம் நம்ம cute சந்திப் நந்தூரி..அவரு திருநெல்வேலிக்கு sema smart ஆ வந்த கலெக்டர்னு தான் தெரியும்.. சந்திப்-ப சந்திக்கதான் அம்புட்டு கூட்டம்..(அதுலயும் girls crowd ஓவர்ப்பா)சார் ஒரே பிசி..(ஆட்டோகிராப்,செல்பி...சார்க்கு மனசுக்குள்ள செம குஜால்ஸா இருந்திருக்கும்ல...வாழ்றாப்டி)..




பாப்பாவோட புத்தகம் "ஒளியிலே தெரிவது" -நிவேதா ..தும்பி பதிப்பகத்துல கிடைக்கும் ..கண்டிப்பா வாங்கிற்லாம்...

சொல்ல மறந்துட்டனே..நம்ம புள்ளைங்க மூலிகை கண்காட்சி போட்டுருகாங்க...அனைவரும் மறக்காமல் சென்று இன்புறுமாறு வேண்டி கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்..(பாக்கலனா ரெத்தம் கக்கி சாவுவ .  ..ஆமா..

ஈஈ....பயந்துட்டிங்களா...அதலாம் சும்மா....உலுலாய்க்கு)....



ஆக இன்னைய தினம் சிறப்பு மற்றும் மகிழ்ச்சி.....













என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...