Thursday 8 December 2016

சரியாக ஒரு வருடம்




நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தது..
  இன்றுதான் ஏதொ பேனா கைகளுக்கு எட்டியது...
போதும்.  STRAIGHT –ஆ MATTER-க்கு போவோம்.(ஆசையப்பாரு....அந்த MATTERலாம் இல்லீயே :D )
ஆம்...இக்கல்லூரி வாழ்க்கையில் சரியாக ஒரு வருடம் முடிந்தது..
முதல் நாள் தமிழ் மருத்துவம் படிக்கப்போகிறோம் என்று மிகுந்த எதிர்பார்ப்புடனும்,ஆர்வத்துடனும்தான் நுழைந்தேன்..(அப்புறம் என்னாச்சு???அதானே...சொல்றேன்.. சொல்றேன்....)
பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த துடிப்புடன் இருந்தேன்...(அட அதான்-பா L.R, H.R)
வகுப்பிலே நான் தான் பெரியவள்..(வயசுல..வயசுல...எத்தன வயசு இருக்கும்???  அதலாம் சொல்ல முடியாது)
முதலில் அனைவரும் பேச தயங்கினார்கள்.( நாம அவ்ளோ பெரிய ரவுடிலாம் இல்லீயே)....பின், இன்று வரை நல்ல நட்புடன் தொடர்கிறது...
நன்றாக படிக்க ஆரம்பித்தேன்...(சரி..சுமாரா....அந்த காலேஜ்லதான் படிக்கலயே..இங்க நாச்சும் படிக்கலானுதான்..மத்தபடி ச்சா ச்ச)....
கல்லூரி ஆரம்ப காலத்திலயே SENIOR ஒருவருடன் முட்டிக்கொண்டது..(ஜெனிலியா SCENE லாம் இங்க இல்ல ராசா....RECORD தான் எழுதி தரமுடியாதுனு சொன்னேன்..அம்புட்டுதேன்...)
சரியாக மூன்று மாதங்கள் நன்றாகதான் சென்றது..(இல்லயே..ப்ரச்சன வந்துருக்கனுமே....அதானே...வந்துச்சே..)
வகுப்பசிரியர்கள் அனைவரிடமும் கேட்டுதான் விடுமுறை எடுத்தோம்..(பொங்கலுக்குதான்)ஆனால் பிரச்சினை என்றதுமே,அனைவரும் இல்லை என்று கைவிரிக்க, எல்லாம் என் தலையில்தான் விடிந்தது...(சின்ன புள்ளனா கூட விட்ருப்பானுங்க...கொஞ்சம் பெரிய புள்ளங்கவும் வச்சு செஞ்சுட்டாங்க..  ஏய்...அதலாம் இல்ல...U R UNFIT FOR L.Rனு சொல்லி போமா உன் வேலைய பாருமானு சொல்லி அனுப்பிட்டாங்க)..(இன்னும் ப்ரச்சனைய சொல்லலயேமா?...அதெப்டி பொத்தாம் பொதுவலாம் சொல்லிற முடியாது)....
மிகுந்த வருத்தம் என்னவெனில்,C.Rயும் மாத்திவிட்டார்கள்(அட அதான்பா BOY REP)..அவர் வேலையை அவர் திறமையாய் செய்தார்...(VERY SORRY PA)
மனது பாரமாக இருந்தது..முதன் முதலாக வகுப்பை CUT அடித்து விட்டு குற்றாலம் சென்றோம்( நீ ஊர் சுத்துறதுக்கு இது ஒரு சாக்கா...ஹிஹிஹி)
பின் வகுப்புகள் சாதாரணமாக நடந்தது..தினமும் புதிய புதிய ஆச்சரியங்களுடன் வகுப்புகள் பறந்தது..(என்னா வேகம்..அதுக்குள்ள ஆறு மாசம் முடிஞ்ச்சு)
மரு.முகிலன் ஐயா  வகுப்பு எப்பொழுதுமே ஒரு சுவையான தகவலுடன்தான் துவங்கும்.மூளையை சுறுசுறுப்பாக்கி அது சோர்வடைவதற்குள் வகுப்பு முடிந்துவிடும்.அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியர்,மருத்துவர்...
எங்கள் அனைவரின் அடுத்த பிரியம்,Dr.சுதா மேம்.கனீர் குரல்..அழகான பேச்சு நடை.மாணவர்களின் போக்கிலே விட்டுப்பிடிப்பவர்.நல்ல ஆசிரியை..
மருத்துவ தாவரவியலுக்கு கடைசியாக ஒரு ஆசிரியர் வந்தார்.(LAST BUT NOT LEAST)எங்களின் வளர்ச்சிகளைப் பாராட்டி,குறைகளை சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்தியவர். Dr.ரஜேஷ் சார்.
எங்கள் கல்லூரியிலேயே மிகுந்த வருடம் அனுபவம் வாய்ந்த,அனைவரின் மரியாதைக்கும் உரிய ஆசிரியை உயிர் வேதியியல் துறை ஆசிரியை தான்..(பெண் சிங்கம்,ONE WOMAN ARMY).என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஆசிரியை.தகுந்த நேரங்களில் தேவையான அறிவுரையை வழங்கி  நன்றாக வழிநடத்தினார் அனைவரையும்..
வகுப்பில் பாடம் தவிர ஒரு வார்த்தைக்கூட பேசாத அன்பான ஆசிரியை மரு.ஏஞ்சலின் மேம்.(ஆனா copy  அடிச்சா correct ஆ கண்டுப்பிடிச்சிருவாய்ங்க)
இந்த முதல் வருடத்திலேயே மிகவும் உற்சாகத்துடனும் வியப்புடனும் படித்தப்பாடம் தோற்றக்கிரம ஆராய்ச்சிதான்..
மரு.மலர்விழி மேம்,அழகான தமிழில் அமைதியான முறையில் அன்புடன் கதைகளுடனே பாடம் சொல்லித்தரும் அருமையான ஆசிரியை..யோகா வகுப்பு குரு.சிறந்த மனிதி..
மரு.மல்லிகா மேம் பார்த்துதான் எங்கள் வகுப்பில் உள்ள அனைத்து பெண்களுக்கும்  கண்டிப்பாக இவர்கள் போல் மருத்துவராக ஆக வேண்டும் என்று தோன்றியது.CLINICAL-ஆ அதிகம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை..
மரு.ஜெயா மேம்,கொள்ளை அழகு..அதிகம் வகுப்பு சொல்லிக் கொடுத்தவர். நல்ல ஆசிரியை..
மரு.செல்லதுரை ஐயா எங்கள் கல்லூரியின் பொக்கிஷம்..தாவரங்களின் encyclopedia.
ஆங்கிலம் என்றொரு பாடமும் இருந்தது போலும்.அதிகம் அந்த வகுப்புக்கு சென்றதுமில்லை( நான் மட்டும் இல்லப்பா..எல்லாரும்தான்....)
பின் ஏப்ரல் மாதத்தில் கல்வி சுற்றுலாவிற்காக ஊட்டி,மேட்டுப்பாளையம்(BLACK THUNDER)  வகுப்பில் உள்ள அனைவரும் சென்றோம்..(அங்க என்னடா கல்வி இருக்கு..அதானே...அதலாம் இருக்கு..அப்டீனுதான் கெளம்புனோம்)
பிறகு தனிப்பட்ட பயணங்கள்(அட இது வேறாயானுலாம் கேட்கப்பிடாது என்ன)
மாஞ்சோலை,பாபநாசம்,நாங்குனேரி,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,குற்றாலம்,கழுகுமலை,குழிப்பள்ளம்....நண்பர்களுடன் இனிமையான பயணங்கள்(நியாபகங்கள் சேகரித்த பயணங்கள்)
பின் கடைசியாக(அப்ப இன்னும் முடியலையா..இல்லையே இல்லையே...)
காளிகேசம்..மீண்டும் வகுப்பில் உள்ள அனைவரும் கல்வி சுற்றுலா(இது உண்மையிலே கல்வி சுற்றுலாதான் பா)
செப்டம்பர் மாதம் தொடங்கியது,தேர்வு நெருங்கியகியது...இதற்கிடையிலும்,உணவு திருவிழா,மூலிகை கண்காட்சி என்று எதனையும் தவற விடவில்லை...
புதிய நட்புகள்,புதிய தொடர்புகள் என அழகான நினைவுகளுடனும்,அன்பான உறவுகளுடனும்,சின்ன சின்ன கசப்புடனும் இனிதே  நினைவுகளை இன்பமாய் சுமக்க தயாரானது முதல் வருட கல்லூரி வாழ்க்கை...
விடுதியில் உள்ள குட்டி அறை அழகான நினைவுகளுனும் இன்றும் என் கிறுக்கல்களை சுமந்து அடுத்த வருட மாணவர்களுக்காக காத்திருக்கிறது

Sunday 9 October 2016

நிலா தோழிக்கு

பாதி நிலவிலும் உருக வைக்கிறாள்....

ஒளிந்து ஒளிந்து விளையாட்டு காட்டினாலும் ஓய்ந்து போக மாட்டேனடி கண்மணி😘😘😘😘

நிலா தோழிக்கு

பயணங்கள்

மழை(லை) மேக பித்துக்காரி...
நுனிச் சிட்டின் காதல்க்காரி...
மரங்களின் வளைவு நெளிவுகளின் பயித்தியக்காரி....
மயில் தோகை வண்ணங்களில் தொலைந்துப்போகிறேன்....
கொடைக்கானல் மலையில் குழந்தை யானவள்...
பச்சை நிறங்களில் இச்சைக்கொண்டவள்...
அந்தி வானத்தின் வண்ணங்களை அள்ளிப்பூசிக் கொள்கிறேன்....
பறவையின் சிறகுகளில் மிதக்க நினைத்தவள்....
அந்த ஒற்றை வெள்ளியை ஓயாமல் பார்க்கிறேன்...
பிறை நிலவில் அமர்ந்து கொள்கிறேன்...


கண்கள் நிறைய இயற்கை வண்ணம் தீட்டிக்கொள்கிறேன்....
கரம் நீட்டிக் காத்திருக்கிறேன் உன்னுடன் பயணிக்க தோழனே...

இப்படிக்கு
உன் கவிஞை

தனிப்பயணங்கள்தான் என் கவிஞையை கண்விழிக்கவைக்கிறது....

உன் நிழல் விழும் இடங்கள் மட்டும் இதமாக...

Wednesday 27 July 2016

முத்தம்

என் ஆன்மா என் உடலை முத்தமிடுகிறது......😘😘😘😘

Sunday 26 June 2016

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு...

கவிதை தொகுப்பு என்பதை விட ஒரு இயற்கையின் காதலன்😍,குழந்தை பிரியன்💞💟,ஒவ்வொரு கணத்தையும் ரசித்து 👌வாழும் ஒரு கடவுளின் வாழ்க்கைத் தொகுப்புதான் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு💐....

கொக்கின் அலகில் மீனாக ஆழமான அன்புடனும் ஏக்கத்துடனும் அழைத்து 🏃....

சுமதியக்காவின் கூந்தல்-கவிதையாகி போனது அவள் காதலால்💝..

கடவுள்களுக்கும் பசிக்கும்போதும் ,கடவுள்களும் மாமிச பட்சினிகள்தான்....-வேற level ண்ணா👏👏👏👏...

மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்ட மனைவியின் கதறல்😭😭-இதுக்குதானா 8 லட்சம் செஞ்சி கட்டி வந்த...

பத்திரிக்கையாளனின் வலி....

மரங்களின் மேல் கொண்ட காதல்,💖 இயற்கையின் மேல் கொண்ட ஆர்வத்தால் ,அவற்றின் அவல நிலை கண்டு அழுதவை..-தலையணை கண்ணீராக இல்லாமல், சாவு கண்ணீராக கணக்கிறது நெஞ்சில் ...😪😪😪

சமூக அக்கறை கொண்ட புலம்பல்கள்-யாரின் சாபமோ திரவ வடிவில் புட்டியடைத்துக் கிடக்கிறது சாத்தான்...🍻🍷🍹

பெயர் கேட்காமல் போனதால் கடவுள் என்ற பெயர் பெற்ற நெற்றி முத்தமிட்ட சிறுவன்......🍬🍭

தெளிவாக புரிந்தது-எனது கைகளில் இருக்கும் பெண்மை என் அம்மாவும் என் பாட்டியும் என்று....👍👌

அப்பாவின் பொறுப்புகளின் வழி பதிய வைத்த முகம்,பெயர் சொல்லி அழைக்காத அப்பா-அப்பா....📖

சொல் தீவிரவாதிகள் தான் அதிகம் இங்கே....-நாவில் ஆயுதம் ஏந்தியவர்கள்...📌🎶

ஆம் ,கடவுள் சகமனிதனாய் வாழ்ந்துக் கொண்டிதான் இருக்கிறார்கள்.....

சில கவிதைகள் எத்தனை முறை படித்த போதிலும் இன்னொரு முறையென மனது ஏங்க வைக்கும்.-உங்கள் கவிதைகளும்தான்....🎶🎼🎻🎷🎸📓📕📖


ரொம்ப நாள் கழிச்சு படிச்சதும் மட்டும் தான் வருத்தம்.....😭

நித்தம் ஒரு முத்தம் தா....

நீ அசதியில் படுக்கைக்கு வரும் போது,உன் காமமெல்லாம் வேண்டப்போவதில்லை நான் . .காமமில்லா கழுத்து முத்தம் மட்டும் போதும்,என் மார்போடு உனைத்தாங்கி கடந்துவிடுவேன் இந்த இரவை...

ஆனாலும் நீங்க ரொம்ப அம்மாவ இருக்கிங்க...

பிரியா எல்லாத்துக்கும் செல்லம்..
ஆனா cavities பத்திதான் பயமா இருக்கு....



என்னடா இது கூத்தா இருக்கு...
எப்ப பாரு cavities cavitiesனு...நாங்களும் அததானேடா சாப்டு வளந்தோம்....


ஆனா இந்த காலத்து அம்மாங்க ரொம்ப அம்மாவா இருக்காங்க...


#ads_tv

கருவறைத் தோழனுக்கு பிறந்தநாள்

கருவறைத் தோழனுக்கு பிறந்தநாள் இன்று.  .
கருவறைத் தோழன்,நண்பன்,எதிரி,தம்பி,அண்ணன்,அப்பா என்று அப்பப்ப அவதாரம் எடுத்து இ(எ)ன்றும் பார்த்துக்கொள்(வாய்)கிறாய். எனக்கு விவரம் தெரிந்து நீ விட்டுக் கொடுத்ததுதான் அதிகம். பொறுமையில் மலைப்போல்,கோபத்தில் மின்னல்போல்.   . ஆயிரம் ஊடல் வந்தாலும் அடுத்த நொடி அரவணைத்துக் கொள்ள செய்து விடுவாய்.  நம் வீட்டின் செல்லக்குழந்தை. வளர்ந்தும் பழகுவதில் குழந்தை தான் நீ இன்றும்.  .ஆனால் அக்கறைக்காட்டுவதில் தந்தை நீ.  .அனைத்தும் பகிர்வாய். அறிவுரைக் கேட்பாய்.  .நீ எப்படி என்றால் உன்னைப்போல் தான் என்பாய். உன்னை எவ்வாறு வழி நடத்துகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் என்றும் உன் வளர்ச்சிக்கு தாய்ப்போல் துணை நிற்பேன்.கல்வி துணைக்கொண்டு வளர்வாய். நல்ல மனிதனாக தொடர வாழ்த்துக்கள்.  .

மனமுருகிய வாழ்த்துகள் .....👍🎂🎂🎈

துணை..

நீ துணை இருக்கையில் ,குறை ஏதுமில்லை இயற்கையே....

தோழியுடன்....

ஆத்மநிலைய வேளாண் பூந்தோட்டம் -கேரளம்
      தமிழகத்தின் தென் எல்லை முடிவு,


கேரளத்தின் எல்லைத் தொடக்கத்தில் உள்ள பூந்தோட்டம்,குளிர்ச்சியுடன் வரவேற்றது. நுழைவுவாயிலிலே,வண்ண வண்ணப் பூக்கள்-மனத்தை திறந்தன அந்த அழகியல்.  .ஏகாந்த பயணம் ஆரம்பமானது பூந்தோட்டத்தில்.  .மீன்களின் செல்ல கொஞ்சல்கள்,ஆர்கிட்களின் அணிவகுப்பு,கொஞ்சும் புறா,பேசும் கிளி,தோகை கொண்ட கோழி,வைரம் பதித்தது போன்ற புறா,அதன் அந்திவான ஆதவன் நிறங்கொண்ட கண்வளையம்,காதல் பறவைகள், போன்றவைகளின் இனியோசை,பட்டாம்பூச்சிகளின் ரீங்காரம்,மூலிகைச்செடிகளிலிருந்து வீசிய மணங்கள்,சுண்டி இழுக்கும் நிறங்களில் மனதைக்கவரும் மலர்கள்,அபூர்வ மரங்களிடம் வியப்பு,பிரியும் போது மன இறுக்கத்தைப் பரிசளித்த கீச்சிட்டு அழைத்து பேசிய அந்தக் கிளி,கூண்டுக்குள் சோகத்தில் தவித்த அந்தக் குட்டி நாய்,யாராவது கொஞ்சம் கொஞ்சிப் பேசி விட்டு செல்லமாட்டார்களா என்று கெஞ்சும் கண்கள்தான் அனைத்து அடைக்கப்பட்ட செல்லக்குட்டிகளுக்கும் . .

பச்சைக்குள் இச்சைக்கொண்டு திரிந்து,அனைத்து அலைவரிசையும் ஆன்மாவோடு பொருந்தியதால்,மனதை அங்கேயே உலவ விட்டுவிட்டு,உடலை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.  .

மாஞ்சோலை

மாஞ்சோலை.  


             

 நண்பர்களோடு கலகலப்பாக தொடங்கியது காலை பயணம்.                            
கல்லிடைக்குறிச்சியில் கச்சிதமான சிற்றுண்டி....மன நலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதனின் கை சுழற்றி செய்த அந்த நடனம்    -நெஞ்சம் நீங்காதவை..


கல்லிடை-மாஞ்சோலை.                  


              பின் இருக்கையில் காற்றோட்டமான மலைப்பயணம் ஆரம்பம்...            
            
              மணிமுத்தாறு தலைவாய்க்கால் -                 நதியே!சிறு சிறு நெளிவுகளும்,சிதற விட்ட அலைகளும் தான் உன் அழகு...    

              முகில் போர்த்தி,இயற்கை மஞ்சத்தில் வீற்றிருந்தது மாஞ்சோலை...மலைக்கொஞ்சும் மணிமுத்தாறுதான் உச்சம்....  
       
               பேருந்து அளவுதான் சாலையே...மலையின் அத்துனை வளைவுகளிலும், சாலையின் மோசமான நிலையிலும் ,அசராமல் பாதுகாப்பாக ஓட்டிய ஓட்டுனரைப் பாரட்டியே ஆகவேண்டும்...


        இதமான தென்றல் காற்று இதயம் நனைத்தது...சாளரம் வழி கண்கள் அலைப்பாய்ந்தது.

        மணிமுத்தாறின் குட்டி அருவியிலிருந்து புலிகள் சரணாலயம் தொடக்கம்..(ஒரு புலி கூட பாக்கல ..அது வேற விஷ்யம்...mind voice:புலி இருந்தாதனே பாக்க).

        ஊட்டியின் வனப்பைப் போல் வழியெங்கும் வண்ணப்பூக்கள்....மரங்களின் அணிவகுப்பு...செந்தில்லையின் நிறக்கவர்ப்பு...ஆரஞ்சு நிற ஆர்க்கிட் தான் அள்ளிச்சென்று விட்டது மனதை...


         தேயிலைத் தோட்டத்திற்குள் உள்ள வீடுகளையும்,மலர்களையும் ,மழலைகளையும் ரசித்துக்கொண்ட  நடைப்பயணம்...    

        தொட்டால் சுருங்கி,முகம் மலர்ந்த மனிதர்கள்தாம் அதிகம்...

        தேயிலைத்தோட்டத்தில்  உள்ள தேன்க்கூடுதான்... கானக கண்டுபிடிப்பு...

         விளையாட்டு, நகைச்சுவை என்று நகர்ந்து.....தேயிலை பானம் பருகிவிட்டு,மீண்டும் அதே பேருந்தில் த்ரிலான பயணம் பாபநாசம் நோக்கி.........

 போகும் வழியில்  வண்டிமறித்தம்மன் பிரமாண்டம்....                     மயில்தோகை  வண்ணங்களில் ஒர் கோபுரம் ஈர்ப்பு...              
           பாபநாசம்-அகத்தியர் அருவி.........                      
           தண்ணீர் பார்த்ததும் கால்கள் நிற்கவில்லை தமையனுக்கு....ஆசையை அருவியில் நனைத்துவிட்டு வந்தான்....      
   
         சாரல் காற்று சுவாசம்,கால் நனைத்ததால் உச்சந்தலை குளிர்ச்சி..

         அருவியை தொடர்ந்துக்கொண்டே மலை ஏறல்... சின்ன அருவிகள்...சின்ன சின்ன நீரோட்டங்கள்..(சின்ன சின்ன ஆச...நெஞ்சில் திக்கி திக்கி பேச,மலைச் சாரல் வாசம் கொஞ்சம் காத்தோட வீச)....மலைக்கேற்ற மரஞ்செடிகள்......அங்கு அங்கு நிழல்களில் நிழற்படங்கள்......விட்டுப்பிரிகிறோம் என்ற தவிப்பு ....

         நண்பர்களின் கைக்கோர்த்து,கதைப்பேசி,கலாய்த்து,வாய்விட்டு சிரித்து,குரங்குக்கு பயந்து,தேயிலையை குரங்குகளுக்கு பரிசளித்து(தொலைச்சதுக்கு இப்டி ஒரு buildupனுலாம் கேக்காதிங்க),பாடல் பாடி(சரி...... வாசிச்சு),மன திருப்தியுடன் தோழி தோழர்களோடு உரையாடி திருநெல்வேலி திரும்பினோம்...

         கண்களில் நிழல்களைப் பதியவைத்து,இமை மூடி,எண்ணற்ற நினைவிடம் கொண்ட எண்ண சீவத்தில் ஊன்றி விடுகிறேன்..

         எதிர் பாரத நட்பு, புரிந்துக்கொள்ளும் முன்னமே பிரியும் குழந்தைப் பிரியம்,புதிய மனதர்களின் புன்சிரிப்பு,அணுகிறாத சூழ்நிலைகள்...இயற்கையின் மேல் வியப்பு...

          ஒவ்வொரு முறையும் இயற்கை புதிய அனுபவங்களை அனுபவிக்க வைத்து,சுகமான நினைவுகளுடன் வாழ வைக்கிறது.....

இயற்கைக்கு நன்றி....

Thursday 28 January 2016

அழகு

அலங்கரிக்கப்பட்ட வார்த்தைள் கொண்ட கவிதைகளும்,அழகை அலங்கரித்துக் கொண்ட மங்கைகளும் மனதிலிருந்து நீங்காதவர்கள்.  . .

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...