Tuesday 18 September 2018

பொதுவானா காதல் பக்கங்கள்..

நடுப்பக்கங்கள்..



வழக்கம் போல் மரியாதையாக தொடங்கி டி டா இயல்பானது...

இரவின் நீளம் தெரியாமலும் ,விடிந்தும் கொஞ்சலும் கெஞ்சலும் நீண்டது ..

அப்றம் ...அப்றம்...என்ற வார்த்தைக்கு அடுத்தும் பேச தொடங்கிவிட்டார்கள்...

ஒவ்வொரு தொடுதலிலும் oxytocin அளவு அதிகரிக்காமல் இல்லை.....

சொற்களின் உபயோகம் குறைந்து,விழியானது மேனியையும் சேர்த்து தழுவியது....

பகிர்ந்து கொள்ளாதவைகளே இல்லை என்றானது...
-இராப்பகலின் நாயகன்


Monday 17 September 2018

அடிமையாக்கியவன்...

மீ:ஏய் அழகிபுள்ள ...நல்லாருக்கியாடி தங்கம்...☺

புஸ்கி:அழகிபுள்ள நல்லாருக்கேண்டி..😍😍

மீ:என்னடி பண்ற...😘😘

புஸ்கி:நான் சாப்பிட்றேன்...டாட்டா....நா ஸூல் போறேன்..அமலா நர்சரி ஸூல்....😄😄

மீ:யாரையும் கடிக்காத... அடிக்காதடி ...தங்கக்குட்டி....
உம்ம்ம்மா குடு...☺☺

புஸ்கி:உம்ம்ம்ம்மா...
டாட்டா....😛

மீ:லவ் யூ...மிஸ் யூ டி....😍
புஸ்கி:வ் யூ   ..ஸ்யூ....😘
உன் குழந்தை பருவத்துள் குடிபுகுந்து நிரந்தரமாய் வாழப்போகிறேன்...
உன் எச்சில் மெழுகிய உதடும்,முழுதாக முடிக்காத சொற்களுமே என் சொத்துக்களாகி போகட்டும்...💋💃

Sunday 16 September 2018

💃முந்தானை ☂️ குடை...

சண்டையினூடே
நா போறேன்... என்றாள்

எங்கேயோ போ..எனக்கென்ன...என்றான்...

சிறிது நேரத்திற்கு பின்...

வீட்டருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தாள்...(அவனுக்கும் தெரியும் அவள் அங்கே இருப்பாளென்று)

அவளுக்கு தெரியாமல் அருகில் அமர்ந்தான்..

ஊடலின் மிச்சத்தையும் கரைத்து
ஏன் வந்த...போ என்றாள்...

அவள் காதுக்கருகில் வந்து...குழைந்த தொனியில்..
"என் ஆள அப்டிலாம் விட முடியாது" என்றான்...

மழைத்தூரல் மண் நனைக்க,காதல் கண் நனைத்தது...

முந்தானை குடையாகி, கூடலின் உரசல் தொடங்கியது...

மகுடிக்கு மயங்காத பாம்பெங்கே...🙏

The recent love...

The recent love...

நா:Hi d...
அழகி:Hi அக்கா...
நா: பேரென்னடி

அழகி: ரோஷினிக்கா...

நா: சரி வா...
அழகி: சாப்டலாம்....

நா:  சாப்டும்போது நிறைய தண்ணிக்குடிக்க கூடாதுடி அழகி.....

அழகி.:..அதுவா..எனக்கு தெரியும்க்கா. ..ஆனாலும் நா குடிப்பேன்...

நா: நீ free time ல என்ன பண்ணுவ..

அழகி: நா ஊர் சுத்துவேன்...


நா:சரி..சொல்லு...உனக்கு என்ன புடிக்கும்...
அழகி: எனக்கு என் frnd ஆ தான் புடிக்கும்...

சைக்கிள் கூடைல ஒரு பப்பி நாய்க்குட்டிய வைச்சுக்கிட்டு அழகா வலம் வர என் அழகிக்குட்டி..
Love you d paaapppu...
#ஊர்க்காரி..
உண்மையிலே 7 வது தான் படிக்கிறாளா...?..
இந்த வயசுல இவ்ளோ தெளிவா பேசுறா....

அழகி...

Monday 10 September 2018

கொண்டாடி தீர்ப்போம்...

அவளுக்கென்றொரு தோரணையில்
வரையறுக்கப்படாத வாழ்வியலில் வாழ்கின்ற  இயல்பான ஒருத்தி...
சரியென்றும் தவறென்றும் இன்னும் சரிவர கட்டமைத்துக் கொள்ளாமல் நகர்கிறவள்...

இவளிடம் பிடித்ததே...
எளிதில் மன்னிப்புக்கேட்டு விடுவாள்...
(அப்டியே அசால்ட்டா கால்ல விழுந்துடனும்...)

உணவின் உலகத்திற்குள் மிக லகுவுடன் லாவகமாக பயணிக்கும் சோற்றின் காதலி...(சோறு சாமி சோறு...)

சுற்றித்திரியும் சுதந்திரக்காடு..(அப்டியே இடைல மானே தேனேனுலாம் போட்டுக்கனும்...)


உடைந்தழுவதில் இவளை மிஞ்ச எவருமில்லை...

வாய் பேசாதவைகளிடம் அதிகம் பேசும் வாய்சேட்டைக்காரி...

எந்த சூழ்நிலைக்கும் தன்னை இயல்பாக இணைத்துக்கொள்பவள்..(நாய்க்கு வேற வழி இல்ல)...

தன்னை கொண்டாடுவதில் ஈடு இணையில்லாதவள்...(... Self celebrations. Self gifts போன்றவைகள்...இதலாம் ஒரு பொழப்பானு கேப்பிங்க...its okay...)..

தம்பிகள் சூழுலகில் என்றும் நலமுடன் வாழ்பவள்...

ஆயிரம் ஆயிரம் நட்பெல்லலாம் இல்லை...அளவான நண்பர்களுடன் இந்த இன்புறு வாழ்க்கையை ருசிக்க வந்தவள்...

#அம்மா புள்ள
#வாயாடி
#சண்டக்காரி
#திமிர்பிடிச்சவ
#சீன்மூதேவி
#அவசரக்காரி
#அடங்காபிடாரி
#அராத்து
#பிரியாணி_பயித்தியம்
போன்ற பெயர்களுடன் சுற்றித்திரியும் நம் தேவதை(ச்சரி..விடுங்க...இன்னைக்கொரு நாளைக்கு சொல்லிக்குவோம்...) #சந்திரா_ப்ரியதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....💃💃💃💃💃


நம்மள நாம கொண்டாடுலனா வேற யாரு கொண்டாடுவா....











சமுத்திரா...😚


சமுத்திரா...
     அந்த கடல் போல ஓயாத பேச்சுக்காரி...அடாவடியானவள். கல்லூரி கேண்டீனில் தான் அதிக நேரம் அவளை பார்க்க முடியும்...சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பார்ப்பதில்லை...
     ‎ஏய் ..பவுடர்  அதிகமா இருக்கு..தொடச்சிட்டு போடா  ..
     ஷேவ் பண்ணியா...கேவலமா இருக்க...
என்று ஓப்பன் கமெண்டுகள் தான் எப்போதும்..
மருத்துவ மாணவிதான்...வெள்ளை கோட் போட்டால் நம்புவார்கள் என்பதற்காகவே எப்போது அணிந்திருப்பாள்...அவளை போலதான் மதியும்...
வழக்கம் போல் ஆசிரியரிடமிருந்து தப்பித்து உள் நோயாளி பிரிவிலிருந்து வெளியே நடந்து வந்தார்கள் மதியும்,சமுத்திராவும்...
இதலாம் வீண் கதை...அதை விடுங்கள்
.
ஒருவர் கையில் நோட்டீஸ் கொண்டு வந்து சமுத்திராவிடம் கொடுத்தார்...
"வட்டியில்லா கடன்" விளம்பர நோட்டீஸ்...
கள களவென சிரிக்கும்போதே..அவர் பின்னால் திருப்பி காட்டினார்....
"இரண்டு முழங்காலிலும் வலி அதிகமாக உள்ளது..வேதனை தாங்க முடியவில்லை.." என்று எழுதியிருந்தது...
இவள் மேலும் வினவ  சைகையாலே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்..
ஆம்..அவரால் பேச இயலாது...எழுதுகாட்டினால் மட்டுமே வாசித்து பதிலளிக்கிறார்...
அவளே அன்று அவரை  மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள்...
அவரை அமர வைத்துவிட்டு மருந்து வாங்க சென்று விட்டாள்...
மது எண்ணெய் வாங்க புட்டி எடுத்துவர சென்று விட்டாள்...
துடுக்கு தேவதை மருந்து வாங்கும் இடத்திலும் சென்று கலாய்த்து சிரித்து மருந்து வாங்கி வாங்கி அதில் அளவையும் துணை மருந்தையும் எழுதி தந்தாள்....
அவர்..அவள் வருவதற்கு முன்பே அதிகம் சீவப்படாத காய்த குச்சியால் நோட்டிசின் பின்புறம் ..
"மிக்க நன்றி...உதவிக்கு"
என்றெழுதி வைத்திருந்ததை காட்டி கையெடுத்து கும்பிட்டார்...
அடாவடியானவளும்....அன்பு சூழுலகில் ஐக்கியமானாள்...
பின் தலையை தட்டி விட்டு....யோசித்தபடியே நகர்ந்தாள் நாயகி...
அடவடியானவள் 

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...