Tuesday 24 April 2018

காரையாரில் .....


மீண்டும்.... நீண்ட நாட்களுக்கு பிறகுதான்....

2 பேராக ஆரம்பிக்க இருந்த பயணம்...6 பேராக தொடர்ந்தது...

Mostly unplanned trips works right...yeah this too...

நானும் நண்பியும்...
நண்பி:எங்க போறோம்...
நா:எங்கயோ போறோம்..வரியா?...
நண்பி:வரலனா விடவா போற...
நா:அப்றம் என்ன கெளம்ப வேண்டியதுதானே....
நண்பி:கெளம்பியாச்சு....கெளம்பியாச்சு....

அடுத்து mess அக்காட்ட... "மதியம் நோ சாப்பாடு,,, வீ கோ அவுட்டிங்னு " சொல்லிட்டு .....

அக்கா:எங்க போறீங்க...
நா:அங்கதான்கா..காரையாருக்கு...
அக்கா:ஹை...அது என் சொந்த ஊரு...9.25 க்கு train இருக்கு...அதுல போய் அம்பை போயிட்டு பாபநாசம் போங்கனாங்க....(ச்ச...எம்புட்டு பாசம்....உம்ம்ம்ம்ம்ம்மா க்கா😪😘😘)
(கப்கப்புனு சின்னதா(அவ்ளோ சின்னதுனு சொல்லிட முடியாது..😁😁.)...வேணுங்கிற அளவுக்கு சாப்டு கெளம்பியாச்சு..


திலி சந்திப்பில்..:
(பின் வரும் கூத்து பெருங்கூத்து)...

Sir,6 அம்பை...
60 ரூவா குடுங்க...(60 ரூவா நோட்டு இன்னும் வரல சார்...)..
சரி முறைக்காதிங்க...
50+10 நோட்டுகள் கைமாற...train ticket கையேறியது....
உள்ள நுழைஞ்சா...ஏய் ஏய்.....train.... train
... train....... அது போயே போச்சு...
அதுதான் நாங்க போக வேண்டிய train-னு கூட தெரியாம டாட்டா சொல்லி அனுப்பி விட்டதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்னு சொல்ல தெரில...(ச்ச...ஒரு வார்த்த சொல்லிருக்க மாட்டிங்க...)
அப்றம் போன trainகாக கால் கடக்க காத்துட்டுருந்து (இருந்தோமா)....இதுக்கு இடைல போட்டோ வேற......(இதான் குறைச்சல்.....😁😁😁😁😁)

1லி தண்ணி 5 ரூவா....தண்ணி வாங்கிட்டு ..
காசுலாம் வேணாம்னா...பரவால இருக்காட்டும்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள சிரிச்சுட்டான் அந்த பையன்...
நீங்கதாங்க காசு தரணும்...ஓ அப்டியா....
(தந்தீங்களா ...இல்லையாடி....
ஹா ஹா...we r very decent guys u know
...குடுத்தாச்சு குடுத்தாச்சு..அந்த பாவம் நமக்கெதுக்கு....)..
அப்றம் எப்டியோ train எப்பவோ போயிருச்சுனு தெரிஞ்சுட்டு
...
Train ticket return பண்ணிக்குவிங்களானு கேட்டா...
1.50 க்கி திரும்ப train இருக்கு ..அதுல போங்க...
அதுவரைக்கும்.....
யோவ் யோவ்....சிரிக்காதயா....
(நாங்க பஸ்லயே போய்க்கிறோம்ம்...போயா...)..

பழைய பேருந்து நிலையத்துல...;

ஒரு பையன் ரோஜா பூங்கொத்தோட ஓடி வர..நா வாங்க போக...(அப்றம் என்ன...அவரு ஆட..நா பாட....
அட ச்சீ...)
அந்த பையன் சிரிச்சுட்டே ஓடிட்டான்.....(பட் நைஸ் coincidence)....
அட எப்டியோ பஸ் ஏறியாச்சு...
6*36 (எவ்ளோ பெரிய கணக்கு)....

அம்மா ஃபோன்..:(எங்கம்மா ஃபோனுங்க)..

நா: ம்மா...நா வெளில போறேன்...
ம்மா: நீ-லாம் திருந்தவே மாட்டியாப்ள...
நா:ச்ச ..ச்ச...noo way...
ம்மா: எத்தன் பேரு...
நா :.6
ம்மா:பத்ரமா போய்டு வாங்க...
(என்ன ஒரு வார்த்த எங்க போறனு கேட்டுருக்கலாம்...)...

நட்பு..:

ஃபோன் use பண்ணமா enjoy பண்ணு போ...(நீங்களே சொல்லிட்டிங்க...எப்டி கேக்காம இருக்க முடியும்...)...👫👍

தாமரை குளம்...(அவ்ளோ பெருசு..😮.)


பூவும் இலையும் :நீ பூத்திருக்க நான் மிதக்கிறேன்னு பாடிட்டே போயாச்சு..💖
பாதி பக்கிங்க தூங்க..அட இடம் வந்துருச்சுமா...இறங்குங்கனு இறக்கி விட்டுட்டு ஒரு ஆட்டோ புடிச்சாச்சு...

அங்க இருந்து start...(ம்ம் ம்ம்ம்ம்...போட்டோ எடுத்தாச்சு...)
போற வழில இறங்கி இறங்கி ஆடிக்கிட்டும் ஓடிகிட்டும் ரசிச்சுகிட்டும்...இயற்கை கொஞ்சிகிட்டும்...வெயில திட்டிக்கிட்டும்....பயணம் நீண்ண்ண்ண்டது...(அம்புட்டு நீளம்தாம்)...💟💟

நாக்கு வறண்டுருச்சு...யாராது யாராது...(அட தண்ணிதான்...வேற ஒண்ணுமில்லப்பா)....
அங்க ஓடைய பாத்ததும் காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி இறங்கியாச்சு....💞
ஓடுற தண்ணீல விளையாடுறதே ஒரு தனி சுகம்தான்...💓💜

அது தேவாங்கு இல்லமா...மந்தி..(auto driver அண்ணா guide ஆன மொமெண்ட்..)👈

அவங்களாம்...அதான் பா அந்த மந்தி,மந்தி குட்டிலாம்...கொஞ்சி கொஞ்சி அலைகளாடனு....சாரி....கிளைகளாடனு கூட்டமா சந்தோஷமா இருந்தாங்க.....(உனக்கு அந்த குடுப்பனைலாம் இல்லடி எங்கேயோ இருந்து ஒரு குரல்....)..👊

ஊர் சுத்துனா மட்டும் பசியே எடுக்க மாட்டிக்கிது...(ஆமால...மனசு நிறைஞ்சுட்டா பசி தெரியாதுல...)
ஆனா அதலாம் உன்வயிறுக்குதான்..என் வயிறுக்கு இல்லனு நட்பு கடிக்க....


அண்ணா எங்க சாப்பாடு...
காரையார் மீன் சாப்படும்மா.
.போய்டலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல....

ம்மா..டேம் போய்டு சாப்டலாம...இல்ல...இழுக்க...

எங்க நா டேம் போய்டு வந்து சாப்டலானு சொல்லிருவனோனு ...மரண பீதி வேற புள்ளைங்களுக்கு....


சரி சரி...பதறாதிங்க...பதறாதிங்க...சாப்ட்டுட்டே போவோம்னு சொன்னதும் எல்லா உசிரும் வந்துருச்சு...(ஹப்ப்படா)...
போகிற வழியெல்லாம்...:


வெயில் தான்...ஆனா இதமாதான் இருந்துச்சு...
இலை இல்லதான்..ஆனா மரம் அழகுதான்...
பூ இல்ல..(இல்ல இருக்கு) சத்தியமா மனசு கரைஞ்சுடுச்சு...
(துப்புனாலும் துடைக்கப்படும்...😜😜😜).


ஒரு வழியா சோறு சாமி சோறு....



அண்ணா ...6 மீன் சாப்பாடு....
சோறா..போடுங்க் போடுங்க...
குழம்பா...ஊத்துங்க் ஊத்துங்க...
மீன்னா-வைங்க வைங்க...அதிகமா ஒன்னு வைங்க....
பொறிச்ச மீன்ம்மா..(அதில்லாமலா...கொண்டு வாங்க கொண்டு வாங்க...)..
சுக போகம்....(😍😍😍)


ஒரு ஊர பத்தி ஊருக்காரங்கள்ட விசாரிக்கிறதே ....விசாரிக்கிறதே.....(அதான் விசாரிக்கிறோம்ல..விடுங்க)...
ஆயிரம் ஆயிரம் இயற்கை அழகா நிம்மதியா வாழ வழி கொடுத்தாலும்...அடிப்படை வசதி இல்லனா வருத்தம்தான்...)??

அவ்ளோ அன்பா..அவங்க புள்ளைங்க மாதிரி கவனிச்சுக்கிட்டாங்க...(நினைச்சேன்...சாப்பாட்டுக்கு காசு வாங்கலையானு கேப்பிங்க...அதெப்டி...அதலாம் வாங்கிட்டாங்க...வெவரம்...😛😳😳)

பானர்ஜான்♠சாதனா ஸ்ரீ♥அனுஷா..♣

மூணு குட்டி புள்ளைங்க...👶👶👶
முயல் குட்டி..🐰🐰
சிட்டு குருவி...🍸🍸
பெரிய பெரிய நாய் குட்டி...🐶🐶
அழகான ஆட்டுக்குட்டி...
அவ்ளோ மிளகு கொடி...🍃🌿
மாங்கா மரம்...🌿🍃
வீட்டுக்கு பிண்ணாடி அடக்கமான தோட்டம்🍃🍂🌾🌾🌽🌼🌹🌸🌻🌺...
ஓடிக்கிட்டே இருக்க ஆறு...☔
அழகா பேசுற தாத்தா..பாட்டி...👵👴
அப்பப்ப அவங்க வீட்டுக்கு மான் ,சிறுத்தைலாம் வருமாம்....😍😍😍
அங்க இருக்க பொம்ம முத கொண்டு எல்லாத்துக்கும் உயிர் குடுத்து வச்சுருந்தான் பானர்ஜான்...😍😍😍
அவங்க பாட்டி...தமிழ் இல்ல இல்ல...மழையாளம்....அட இல்லப்பா...ரெண்டு கலந்து....ப்பா..என்ன தொனி அது..கரைச்சிட்டாங்க....
திரும்ப கண்டிப்பா வருவோம்னுட்டு...
அடுத்தென்ன ப்ரியாவிடைதான்...








Next DAM...

Ultimate aim-  பானத் தீர்த்தம் அருவி தான்.. ஆனா boatingஅ🚣 நிப்பாட்டிட்டானுங்க பாவி பயலுங்க....(எங்களுக்கும் சின்னசின்ன  ஆசை சிறகடிக்கும் ஆசை பாட்டெல்லாம் பாடனும்னு ஆசைலாம் இருக்காதா என்ன) ..


சரி டேம்னாச்சும் பாப்போம்னு கெளம்பியாச்சு....

அங்க போற வழில ...ஒரு ஆவேசம் (ஆசம் தான்...ஆசம்ம ஆவேசம் படிச்சு இன்னைக்கு வரைக்கும் சிரிக்க எங்க ரூம்க்கு மட்டும்தான் தெரியும்...GCT  Hostel memories....gundoos)...லொக்கேஷன்...எல்லாரையும் உக்கார வச்சு ஒரு க்ளிக்📷...(கூட இருங்கவங்களோட நியாபகத்த சேகரிச்சு குடுக்கிறது ஒரு சுகம்தான்)...


நட நடன்னு நடந்தாச்சு...🏃🏃🏃.மேலையும் போயாச்சு...🏆

ஐஸ் வித்த அண்ணாட்ட ஒரு வட்ட மேசை மாநாடு நடத்திட்டு...ஐஸும் வாங்கி கரைச்சுட்டு கெளம்பியாச்சு..(ஒவ்வொரு வாக்கியம் முடியிறப்பையும்...இருக்க அந்த ம்மா...அவ்ளோ பாதுகாப்பா இருந்துச்சு..💛 )அவரு அழகா வாக்கியம் அமைக்கிறதாவும் நட்பு சொன்னா...💞


Frndy:நானும் நல்லாதான் ரசிக்கிறேன்...
நா:அப்ப எழுதிடலாம்ல...
Frndy:first நா தாது ஜீவம் எழுதுறேன்...அப்றம் ரசிச்சதெல்லாம் எழுதுறேன்..✋.ஹாஹா...
(ஆனா செம timing...)....


Reached டேம்:🌉


அங்க போனா "புகைப்படம் எடுத்தல் கூடாதுனு பெரிய பலகை"...(நமக்குதான் கை நடுங்க ஆரம்பிச்சுடுமே....ஏய் ஏய்...அதில்ல)...
அடுச்சு புடிச்சு...எப்டியோ எடுத்தாச்சு...💪
Electricity board க்கும் forestryக்கும் முட்டிகிச்சாம்...சோ boatingம் ஊத்திக்கிச்சாம்..அதனால்...சொல்ல வரது என்னவென்றால்...
"ஆண்டவன் படைச்சான்...எங்கிட்ட குடுத்தான்...அனுபவி ராஜான்னு அனுப்பிவைச்சான்..."🎤🎵🎶🎼 கிடைச்ச வரைக்கும் சந்தோஷம்னு சுத்தி முத்தி திரிஞ்சுட்டு...மனச மட்டும் பானதீர்த்தம்  அருவிக்கு அனுப்பியாச்சு...ஏக்கத்தோடையே கெளம்பியாச்சு...🎷🎷🎹





அண்ணா...அந்த மஞ்சள் காமாலைக்கு மருந்து குடுக்கிறாங்கள..அந்த இடத்த காட்டுங்கண்ணா.....
அவரு எந்த நியாபகத்துல போனாரோ...மறந்துட்டாரு.. 🐱🐱


நேரா..கோவில்...

அங்க ஓடுற தண்ணில ஒரே ஆட்டம்...
‎எதுக்கு வந்தோம்...🍸🍺🍨🍧🍫🍭🍭
‎ஜாலியா இருக்க...
‎இயற்கைய அனுபவிக்க...(அப்றம் என்ன ....சிறப்பா கொண்டாடியாச்சு..அதும் வழுக்கி வழுக்கி....).



மான்🦌பாத்ததும் எல்லாரும் மனசும் துள்ளிக்குதிச்சுருச்சு...(ஹை மான்😍😍....)

அடுத்து அகத்தியர் அருவி...🌁

நீராடிட்டு சீராடிட்டு பாராட்டிட்டு வந்தாச்சு...(குச்சி வச்சு குரங்குக்கிட்ட விளையாண்ட அந்த குட்டி பையன் சிரிக்க,,எல்லா கவலையும் மறந்துருச்சு)....🌿🌾🌽

அப்றம்....
          தேனீர் கோப்பை....☕
          ‎ மிளகா பஜ்ஜி.....🍱
           ‎நண்பி....💃
           ‎அந்த நாள் கதை.....👑👑
Finally....அண்ணா thank u...🎉 பாப்போம்ண்ணா....👋👋

Tired செல்ஃபியோட hostel வந்தாச்சு...

அங்கயே இருந்திருக்கலாம்...-இதான் இது மட்டும்தான்...💝💝💝💝



  ‎


Friday 6 April 2018

டைரி டேஸ்னு வச்சுப்போம்...

சில நாட்களைதான் நாம் கொண்டாடி தீர்ப்போம்...சில நாட்களை கொண்டாட வேண்டுமென்றே கட்டாய படுத்தப்படுவோம்....
இன்றைய போன்றவையெல்லாம்..சாதாரணமாகவே நம்மை கொண்டாடி குதூகலிக்க வைக்கிறது....🎧🎤🎵🎼🎶

ஒரு வாரமா ஒருத்திட்ட பேசல(அப்டி என்ன பஞ்சாயத்துனுலாம் கேக்காதிங்க....அது ஒரு பஞ்சாயத்து)...இன்னைக்கு காலைல எழுந்ததுமே பேசிட்டேன்..😜

நமக்கு புடிச்சவங்க கொஞ்ச நாளுக்கப்றம் நம்ம கூட இருந்தாலே கொண்டாட்டம்தான்...(போடு ...தகிட தகிட...)..😍😍😍

120 ml எழுதி குடுத்த அம்மாக்கு அரை லிட்டர் வேணுமாம்...(இதென்னடா எனக்கு வந்த சோதனை)....😔😔😔

மூணு நாளுக்கப்றம் எப்டியோ இன்னைக்கு breakfast சாப்ட்டாச்சு..( ஹ்ம் ஹ்ம்...பூரிதான்..ஆனாலும் பரவால..)..⏳

வகுப்பு நடக்கலானா வர சந்தோஷம்லாம் பள்ளிக்கூட லீவ் விட்டா கூட அவ்ளோ  வராது..(ஆனா test நடந்துச்சே...அவ்வ்வ்வ்வ்)...🔚

எல்லா டீச்சரும் ஏன் டூர் போல ஏன் டூர் போலனு கேக்க...(அவ அவ டூர் போலனு காண்டுல இருந்தா கேள்விய பாருங்க)...🚩🚩

கூப்புட்ட    ...பேசுறதுக்குள்ள....(who is the disturbance மாதிரி மேம் வந்துட்டாங்க)...அட போயா...🔴🔴

மதியம் சாப்பாடு உள்ள போகல...(பிரியாணினு நினைச்சு சாப்டாலும் உள்ள போகலனா பாருங்களேன்...என்ன ஆச்சரியம்....)...❌

அப்றம் நோய் நாடல் lab...ஆயிரம் சொல்லுங்க...லேப் அசிஸ்டண்ட் slang-ஏ slang...wowwwww....(அப்டியே கண்ணாடி போட்டுட்டு அந்த scootyல போனா....ப்பா...கபாலிடா...)🔱

அப்டியே ஜாலியா முடிச்சுட்டு....என் அழகி பொம்ம கூட போட்டோ எடுத்துட்டு,தோழி கலாய்க்கெல்லாம் நமட்டு சிரிப்பத் தவிர ஒன்னுமில்ல(.. ஒன்னுமில்ல...ஹ்ம்ம்ம்....

ஈஈஈஈ...ஒன்னுல்லயே...ஒன்னுல)🚹


சாய்ந்தரம்...தோழிஸ் கூட பக்கத்துல இருக்க பார்க்கு போயாச்சு...♻

ப்ரண்வ்...😍😍😍



முக்கிய பங்கேற்பாளர்கள்:ஒரு 3 வயசு பாப்பாவும் நானும் 8 மாத குழந்தை ப்ரணவ்✅
மத்த பங்கேற்பாளர்கள்: தோழி 1 நாயி,தோழி 2 நாயி...அந்த குழந்தைங்களோட அம்மா...💫

நேரம்:அதலாம் யாரு பாத்துட்டுருந்தா(போவியா..)..💡

இடம்:ஊஞ்சலாடுமிடம்...அதே பார்க்லதான்...✔



நான்:பாப்புக்குட்டி இது யாரு...உன் தம்பியா ஹ்ம்ம்ம்?...
அந்த 3 வயசு குழந்தை:ஹும்ஹ்ம்ம்...இல்ல...அவன் எங்க வயித்துக்குள்ள இருந்து வந்தான்...
நான்:அம்மா வயித்துக்குள்ள இருந்து வந்தியாடி தங்கம்...அந்த குழந்தை முகம் முழுக்க சிரிப்பு...😍



அவ்ளோ அழகு...😘

அந்த கொழு கொழு...flying kiss  அழகு புஸ்கி.....(ம்ம்ம்ம்ம்)...😘😘😘
நீங்க உடம்ப குறைக்க நா ஏன் டா நடக்கனும்னே மூணு ரவுண்டு...(ஹி....நாக்கு தள்ளிரிச்சு)..😷😷
அப்டியே வந்து நாலு பொறுக்கல்ஸ் வாங்கிட்டு வந்தாச்சு...(அட...fruits தான்....)😎😎...
அடம் புடிக்கிறவங்கள சமாதான படுத்துறதுலாம் என்னா பாடு(இப்பதான் தெரியுது .)..😓

விடு நாயே...ஒரு யிப்பிக்கா இவ்ளோ பெரிய பாடு...விடு.. (விட்றா விட்றா சூனாபானா...)..😷

கைப்பக்குவம்-(ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்)...(சோறு சாமி)...😛😜
இன்னைக்கு நாளே நல்லாருந்துச்சு முழுசும்...😍😍😍


(பாப்போம்)....

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...