Friday 9 February 2018

வரைதலும் புரிதலும்...

நேற்றய எழுத்துரையின் தொடர்ச்சிதான் இன்று....
வாசித்துவிட்டு தொடரவும் ..
தொடுங்கள்..

பில்லியன் வருஷத்துக்கு முன்னாடி இருந்தே மனுஷனுக்கு அடுத்தவன் மனசுல இருக்குறத தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் அதிகம்...(ஆனா அத கண்டுபுடிக்கிறது அவ்வளவு சாதாரணம் இல்ல பாஸ்)...


வாழ்க்கைல எல்லா நிலையிலையும்,பேனால,பென்சில்-அ,அழி ரப்பர்ல,கறில,மணல்-அ,மண்ணுல,தண்ணில ,பூ வச்சு,மை வச்சு,பேப்பர் கிளிச்சு,துணில இப்டி எதுலயாது வரைஞ்சுகிட்டுதான் இருக்கோம்...(சரி..கிறுக்கிக்கிட்டு தான் இருக்கோம்)...


நம்மளயே அறியாமலோ அறிஞ்சோ சில உருவங்களும் வடிவங்களும் வரைவோம்...
அதுல சிலத வரையும் போது வரையுரவங்க மன நிலைய கணிக்கலாம்..
அத பத்திதான் கீழ பாக்க போறோம்..(சார்...கீழ பாக்காதிங்க.. கட்டுரைல கீழ பாருங்க..ஹ்ம்ம்ம்)...

இந்த எழுத்துரைக்கு "மனச காட்டிக்கொடுக்கும் உருவங்கள்"னு இல்ல "வரைதலின் புரிதல்கள்"னு  தலைப்பு வச்சுப்போம்...


யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்படும்....

அன்புக்காக ஏங்கிட்டு இருக்கவங்க...வட்டமாகவும்,வளையங்களாகவும் போன்ற உருவங்களை யோசிச்சுக்கிட்டே வரைவாங்க(எக்சாம்பிள்க்கு லவ்வர் கூட சண்ட போட்டுட்டா)...

Practicalஆ இருக்கவங்க நேரான கோடுகளையும் ,ஒழுங்கான உருவங்களையும்தான் வரையுவாங்க...(நாம practical தான்..ஆனா அந்த ஒழுங்கான உருவம்தான் இடிக்குதுல...)

தன்னம்பிக்கை இருக்கவங்க பெரிய (அண்டா) அளவிலான படங்களையும்,தயக்கமுள்ளவங்க மெலிதான (அ) அடர்த்தியான கோடு (sketchy strikes)(கிறுக்கல்ஸ்) வரைஞ்சுட்டு கிடப்பாங்க...

Comics ல வர face வரைஞ்சிட்டு இருந்தா அவங்க ஏதோ தேவையில் உள்ளவங்க...(interval இல்லனா lunch break ஆ இருக்கும்..சும்மா சின்னதா பஜ்ஜி போண்டா போன்ற தேவைகளாகவும்..இல்ல பிரியாணி தந்தூரி போன்ற பெரிய தேவைகளாகவும் இருக்கலாம்...அவரவர்களைப் பொறுத்தது)...

பூப்படம்(அந்த பார்வதி பாப்பா inro ஆனா படமானுலாம் கேட்றதிங்க)...

   பொதுவா friendlyஆ இருக்கவிங்க வட்டவடிவ இதழ்களையும்..
     தன் கஷ்டத்தை மறைக்கிறவங்க(எதுக்கு????அப்டினு இருக்கவங்கனு கூட வச்சுக்கலாம்) கூர்மையான இதழ்களை வரைவாங்க...
     ‎சில சோக பறவைகள் கீழ தொங்குற பூப் படங்கள வரைவாங்க....(எங்கே செல்லும் அந்த பாதை...🎶🎶🎤)
      நிறைய friendsப்பா இவங்களுக்கு அப்டிங்கிறவங்க பொதுவா பூங்கொத்து வரைவாங்க...


பட்டாம்பூச்சி:

     ஒரு கஷ்டத்துல,அதையே புடிச்சு தொங்காம,சடார்னு வெளில வரனும்னு நினைக்கிறவங்க பறக்குற தும்பியவோ,பறவையவோ,இல்ல பட்டாம்பூச்சியவோ வரைவாங்க...



இதயம்:

     இதைப்பற்றி அதிகம் கூற தேவையில்லை..(அதாவது தாங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை)...
     ‎புதுசா லவ் பண்ற cases பண்ற வேல தான் இது..
     ‎அம்புடுறது...
     ‎(லவ்வர நினைக்கும்போது அவிங்க initial போட்டு வரையிறது...ஹார்ட்க்குள்ள வரையிரது..💘heart இப்டி இருக்காதுனு தெரிஞ்ச நாயும் இதே தான் பண்ணுது)...



Introverts நல்ல நுணுக்கமான படங்களதான் வரைவாங்க...ஹான் ..புடிச்சத பிரிய முடியாம் தவிக்கிறவங்களும் கூட...


இந்த படிக்கட்டு ,ஏணி இந்த மாதிரி வரையிரவங்க பொதுவா அவங்க ஜெயிக்கிறத பத்தி யோசிச்சிட்டு இருப்பாங்க...(அப்டி என்னா போட்டியா இருக்குனுலாம் யோசிக்க வேணாம்)...


அதிகமா அம்புக்குறி வரையிரவங்க அவங்க குறிக்கோள நினைச்சிட்டு இருப்பாங்க...அதுலையும் முனை கூர்ரா இருந்தா படிப்பு வேல சம்மந்தப்பட்டதாவும்,மழுங்கி இருந்தா காதல் அன்பு சம்மந்தப்பட்டதாவும் இருக்குமாம்...



எப்படா இந்தம்மா விடும்...எப்படா இந்த மீட்டிங் முடியும்னு இருக்கவங்க மிதிவண்டி,கார்,பைக்,விமானம் ,கப்பல்னு வரைவாங்கங்கோ....





Insecure ஆ feel பண்றவங்க வீடு வரைவாங்க...தனிமையில் வாடும் தங்கங்கள் மலை வரைஞ்சு அது மேல வீடு கட்டி பக்கத்துல ஒரு பொம்மைய நட்டு வைப்பார்கள் ..😒😒


எப்டிடா மாட்னோம்...எப்டிடா மாட்ட வைக்கலானு யோசிக்கிற சிங்கங்கள் சிலந்தி வலை வரைவாங்க...(எத்தன apology....rest is history)....

பொதுவா centre of attentionஐ விரும்புற நபர்கள் அவங்க பேரையே எழுதுவாங்க...

பெரிய ஆசை இருக்கவங்க விண்மீன் வரைவாங்க...
நன்னம்பிக்கைல இருக்கும்போது குட்டி குட்டியா நிறைய விண்மீன்கள்( விண்மீன் தோட்டம்) வரைவாங்க....
உறுதியான குறிக்கோள்(அட ..இதான்பா)என்று இருப்பவர்கள் பெரிய ஒரே விண்மீனை வரைவாங்க....


ச்ச..போதும்டா சாமினு...ஒரு பிரச்சனைல இருந்து வெளில வர நினைக்கிறவங்க சதுரம்,கனசதுரம்   (அதான் அந்த cube) வரைவாங்க...
உற்சாகமா இருக்கவங்க zigzag சொய்ங் சொய்ங்னு வரைவாங்க....


என்ன மாதிரி சிலர்,என்ன நடந்தா என்னனு பாண்டா கரடி மாதிரி தூங்கிற caseஎல்லாம் நிறைய உண்டு என்றும் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது...



No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...