Thursday 1 February 2018

சேவை பணியில் ...


சேவை பணியில் சிறந்தது கண்டிப்பாக மருத்துவம் தான்.
     மருத்துவ துறையில்,அதிலும் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் அனைவர்களுக்கும்....
     நாம் இணைந்திருப்பது மக்களுக்கான சேவையில்..சேவை என்பது மாதம் ஒன்றாம் தேதி ஆனதும் சம்பளம் வாங்கி கொண்டாடும் மற்ற பணிகள் அல்ல..நாமே இணங்கி ஏற்றுக்கொண்ட ஒன்றோ..ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டதோ...எதுவாகினும்..

அவ்வாறு ஈடுபட்டிருக்கும் நீங்கள்,
நோயாளியை ஏளனமாக பார்ப்பது,
அது ,இது என்று பேசுவதெல்லாம் எவ்விதத்தில் நியாயம்..நோயாளிகளெல்லாம் மனிதர்கள்தானே??

நோயாளியின் உடன் வந்தவர்களை( அவர்கள் பாஷையில் attender) அதனினும் மட்டமாக "அது கூட யார் வந்தது?...இன்னும் பல மாதிரியெல்லாம் பேசுகிறீர்கள்..
"நீயாம்மா..உள்ள வாமா" என்றால் எவ்விதத்தில் குறைந்து விடுவோம்...

அதிலும் விபத்து சிகிச்சைப் பிரிவில் security ஆக நிற்பது மிக கடினம் தான்..புரிகிறது..ஒப்புக் கொள்கிறோம்...

   ஆனால் சேவை என்றவைக்கு ஏற்றவாறு நம் மனநிலை சிறிதாவது பக்குவப்பட்டிருக்க வேண்டாமா??..

  நிச்சயமாக ஆம்தான்..விபத்து என்றதும் பதற்றத்தில்தான் இருப்பார்கள்..நம் வீட்டில் நடந்தாலும் தாங்களும் அவ்வாறு தான் பதற்றப்பட்டு கத்தி அழுவீர்கள்..அது அவரவர்களின் ஆதங்கம்..மனித இயல்பு அப்படிதான்...நாம் அனைவரும் யாராகினும் உணர்வுகளால் கட்டுண்டவர்கள் என்பதை  எக்காரணத்திற்காகவும் மறக்க வேண்டாம்... 


தாங்கள் அவர்களிடம் கத்தி,தகாத வார்த்தைகளில் சொல்வதை,கொஞ்சம் நிதானமாகதான் சொல்லுங்களேன்...என்னவாகி விட போகிறது..

  தயவுசெய்து விரல் சுண்டிக் கூப்பிடுவதெல்லாம் விட்டுவிடுங்கள்..
  ஆதங்கத்திலும்,மனோ தைரிதம் அற்ற நிலையிலும் உள்ள அவர்களை தாங்களும் நோகடிக்காதீர்கள் தயவுசெய்து....
  நோயாளியின் உடன் உள்ள அவன் உறவிற்கு (attender) மருத்துவருக்கு அடுத்த நிலை தாங்கள்தான் கண்டிப்பாக...
     ஊழியர்கள் மனிதத்தன்மையோடு,நோயளியையும்,நோயாளியின் உடன் வந்தவர்களையும் சக மனிதனாக பாருங்கள்...

   வன்முறை என்பது செயல்களில் மட்டுமல்ல,வார்த்தைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்...

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...