Saturday 10 February 2018

நேற்றைய நாள் முழுதும்....சுக போகம்...


(யாராது ஓசில சோறு வாங்கி குடுத்துறுப்பாங்கனு யோசிச்சா அது சரியான விடை இல்லை..நீங்க அடுத்த ரவுண்டுக்கு போக முடியாது ...சாரி...அப்டினுலாம் சொல்ல மாட்டேன்..)😜😜😜😷


சண்டையே வராம குளிக்க bathroom கிடைக்கிறதுலாம் ஆக சிறந்த வரம்..(GOVT. Hostel ல இருந்து பார்....அப்ப தெரியும் அந்த கஷ்டம்..)..😤😤😤😤


7.15 க்குலாம் சாப்ட போயாச்சு..சுட சுட பூரி ப்ளஸ் சுண்டல் குர்மா...ப்ரமாதம்...


7.30 க்கு ச்சரி ஒரு 7.40 பக்கம்லாம் op wardக்குள்ள நுழைஞ்சாச்சு..(இந்த புள்ள எதுக்குடா ஹாஸ்பிட்டல்க்கு போகுதுனு தோணுமே...நானும் இங்க 3 rd year student தான்..ஓபி duty)..😨

Patient வராத நால நம்ம நட்பையே patient ஆக்கி கொஞ்ச நேரம் time pass பண்ணது...😱😛

சார்..எப்பவும் வழக்கம் போல ஒன்னுமே பேசல...(ஆனா சார் செம வாயாடி)..😳😳


The Hindu செய்தித்தாள் ல வந்த கஷ்டமான சுடோகுவ ஈசியா solve பண்றதெல்லாம் எப்பையாதுதான் நடக்கும்...அது போலதான் நேத்தும்...(yes..cracked it...இதெப்டினு கேக்கும் போது ...அதலாம் அப்டிதான் பீத்திக்கொண்டது...😛😜😜😜).


9.30 க்கு முடியிற duty 9.25 க்கு முடிஞ்சா எம்புட்டு சந்தோஷம் தெரியுமா..(5 நிமிஷம் தானேனு நினைப்பிங்க...பட் ...அதெல்லாம்..ஒரு wow feel.😜..)..கேட்டவுடனே விட்டுறதெல்லாம் தெய்வ level...(super staff).👴😘😘


11 மணி class க்கு 11.30 க்கு வந்து 11.45 க்கு முடிக்கிற திறமைலாம் எங்க research methodology  class எடுக்கிர மேம்னாலதான் முடியும்👩...😍😍😍(12 மணி வகுப்புக்கு 11.55 க்கே வந்து 1.5 க்கு விடுறதெல்லாம் pathology சார்-ஆலதான் முடியும்)...👨


வெள்ளிக்கிழமைனால மெஸ்ல புளிமிளகாய்னு ஒரு அரிய அம்சமான டிஷ் ஒன்னு வைப்பாங்க...கூட்டம் அலைமோதும்...நிறைவா சாப்டு ஒரு கோப்பை மோர் குடிச்சாலே ஆக திருப்தி...😻😻😻


மதியம் ஒரு Clas தான் ..எப்பவுமே lateஆ விடுற அம்மா 15 நிமிஷம் முன்னாடியே விட்டுட்டாங்க ..(Clas வந்தா யாரையும் திட்டாமா போ மாட்டாங்க....ஆனா நேத்து ஒரு வார்த்த திட்டல)...⛄😸😸😸


காலேஜ்ல உள்ள கோவில் எதோ சாமி கும்பிடுதல்...அதுக்கு speaker கட்டி அமர்க்கள படுத்திட்டாங்க...(எப்டி class நடக்கும்னு பாத்தா போய் off பண்ண சொல்லிட்டாங்க)...🌅


3-5 ஒரு நல்ல சுகமான நித்திரை...


5 மணிக்கு அப்டியே புக் fair பக்கம் போயாச்சு....பிஸ்கட்ட் கொறிச்சுகிட்டே உலாவிட்டு இருந்தோம்..🍪🍪🍪


மீ.சு சார்அ( எங்க physiology professor)photo எடுத்ததுதான் பெரிய டாஸ்க்...🍭🍭


கரிசல் குழு பாடல் நிகழ்ச்சி..🎺🎧🎤🎵🎹🎼🎶.(அதுல கத்திரிக்காய்க்கு குட போட்டது யாரு யாரு யாரு...காரணம் தெரிஞ்சா கூறு கூறு கூறு..பாட்டு அசத்தல்...)அந்த தாத்தா ஒரு லவ் பாட்டு பாடுனதுக்கு பக்கத்துல இருந்தவரு ,"பெரிய மனுசன் பாட வேண்டிய பாட்டா இது"கமெட் வேற..(எது எப்டியோ நமக்கு நல்ல time pass)...💁💁


Eve கருத்தரங்குக்கு Dr.சிவராமன் சார்,Dr.சுபாஷ் சார் Dr.பொன்னம்பலம் சார்...இயற்கை விவாசாயி...தச்சை....எல்லாரும் வந்துருந்தாங்க...செம கூட்டம்...👪👫👬👭👯👥👮💁💂👳👲👱👱🎅🎅👰


எங்களோட முன்னாடி வரிசைல 5std பள்ளிக்கூட 👬👬👬👬...(எந்த இடம்னாலும் குழந்தைங்க இருந்தா தனி சந்தோசம்...அதும் போகும் போது   டாட்டா காட்டுனதுக்கப்றம் ஒரு குட்டி வாண்டு வந்து,கன்னத்த கிள்ளி முத்தம் 😘😘குடுத்துட்டு போறதுலாம் அன்பின் எல்லை...வேறென்ன வேணும் உலகத்துல)💖💖...


முடிச்சுட்டு கெளம்பலானு சொல்லி புக் stall வழியா போனோம்..தும்பி stall க்குள்ள எத்தன தடவ போனாலும் எனக்கு சலிக்காது...👍👍அந்த அண்ணாட்ட தும்பி கேட்டுட்டே இருந்தேன்...அந்த அண்ணா இன்னைக்கு வர சொல்லிர்க்காரு.✋.அப்றம்...தோழிகள கட்டாய படுத்தி ஒரு stallக்கு கூட்டிட்டு போனேன்...நமக்கு புடிச்சவங்க அங்க நின்னா எப்டி இருக்கும்..அழகு குட்டி பையன்...(அந்த முத்துச்சிரிப்பும் ,வெக்கம் மட்டும் போதும்)👶👶....



அப்டியே காலேஜ்க்கு நடந்து வந்து மெஸ்ல சாப்டோம்..(food stallல போண்டா,வெங்காய தோசை அமுக்கியதுலாம் பத்தாத 🙊🙈..)


நம்ம காலேஜ் கோவில் functionக்கு லைட் கட்டிருந்தாங்க...(போய் போட்டோ எடுத்துட்டுருந்தேன்..ஒரு அண்ணன் நல்லா ரசிச்சு எழுதுறமா...நல்லா photo போடுறமானு சொன்னாரு...how sweet..🙈.🙏)..




வேறென்ன வேணும்...அன்பு சூழ் உலகு...😍😍😍😍🙏





















No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...