Thursday 2 May 2019

பேய் சேவல்...🐓🐣🐤🐥


        




         உண்மைய சொல்லனும்னா ,இது பேரு சாம்ப சேவதான்...

         சுமையா மிஸ்ஸோட அம்மா வீட்ல இருந்து ,இந்த சாம்ப சேவல கொண்டு வந்தாங்க...மிஸ் விட்ல இருக்க எந்த கோழி கூடவும் இது சேர்ந்துக்கல.....

         சாம்ப சேவ வளரும்போது ,எப்போதும் போல சேவலுக்குரிய குறிகுணங்களோட தான் இருந்துச்சு...

         ஒரு கட்டத்துல, சேவல் sir வயசுக்கு வந்துருச்சு....
         அதுக்கப்றம் தான் கூத்தே...
(என்னடா பொம்பள விஷ்யமா,அது இதுனு நினைக்கக்கூடாது...)


          இரவு 12 மணி...

          சேவல் கொக்கக்கரிக்க ஆரம்பிக்குது...
(கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
குத்து வாங்கும் அன்பிலே-லாம் இல்ல...)


        சும்ம்மா...நடுராத்திரி பேய் மாதிரி கத்துது...வீட்ல யாரும் தூங்க முடில அன்னைக்கு...

         சரி ...சரியாகிறும்னு இருந்தா....தினம் ராத்திரியானாலே இதே அட்டகாசம்தான்...

        அது பேரு பேய் சேவனே ஆகிருச்சு...

        அக்கம்பக்கத்துல உள்ளவங்களாம் சண்டைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க...


         என்னடா இந்த சேவ இப்டி பண்ணுதேனு போய்ட்டே இருக்க....

        ஒரு நாளு சுலைகா ராத்தா ,அவங்க பேரன கூட்டிக்கிட்டு சுமையா மிஸ் வீட்டுக்கு வந்துருந்தாங்க....


        எல்லாரும் வெளில நின்னு பேசிட்டுருக்காங்க....

       இந்த சேவலுக்கு பித்தம் தலைக்கேறிருச்சு...
      அந்த சின்னப் பையன் மேல வந்து றெக்காயால அடிக்குது...அத துறத்த துறத்த திரும்ப திரும்ப அடிக்க வருது....


        உள்ள வந்து கதவ அடைச்சிட்டாங்க..
றெக்கய விரிச்சிக்கிட்டு,அவ்ளோ கோவத்தோட வந்து அந்த கதவுல இருக்க இரும்பு கம்பில.....டமார்.......


        என்னடா செத்துருச்சானுலாம் பாக்காதிங்க...அவ்ளோ மொக்கலாம் இல்ல அது ..

மோதுனதுகப்றம்தான் அடங்குச்சு....


அடுத்த நாள்,

         ரெண்டு தெரு தள்ளி இருக்க ,
தெரிஞ்ச பையன் ஒருத்தன் மிஸ் வீட்டுக்கு வரான்..

        முயின் காகா(அண்ணன்) இருக்காறானு கேட்டுக்கிட்டே உள்ள வந்து, சேவலுக்கு சாப்பாடு போடுற முயினையும் பாக்றான்...சேவலையும் பாக்றான்.

       ஓடி வந்து,மிஸ் பையன் முயின் கிட்ட,


"முயின் காகா,முயின் காகா....என்கிட்டயும் ஒரு சேவல் இருக்கு...நாம சண்டைக்கு விடலாமானு கேட்ருக்கான்..."

         எவன்-டா இவன் லூசுனு...அதலாம் வேணாடா தம்பி...உன் சேவல் செத்துரும்னு- நல்லது சொல்லிர்க்கான் முயினு...

       அந்த அடங்காத பையன் கேக்காம ஒரு சனிக்கிழமை காலைல,,அவனோட சேவல தூக்கிட்டு முயின் வீட்டுக்கு வந்துட்டான்....

       சரி...இந்த பையன் அடங்க மாட்டானு....

முயின் வீட்டு கொள்ளப்புறம்...
கொஞ்சம் காலி இடம் ..
அத சுத்தி  வீட்டு மரங்க...

சண்டைக்கு களம் தயார்...
போட்டியாளர்,பார்வையாளர்கள் எல்லோரும் தயார் நிலையில் இருக்கின்றனர்...இன்னும் சிறிது நேரத்தில் சேவல் சண்டை தொடங்கவிருக்கிறது .....


சமைச்ச கையோட சுமையா மிஸ் கதவோரமா நிக்க,
என்னடா நடக்க போகுதுனு மிஸ்ஸோட குட்டி பொண்ணு எட்டிப்பாக்க,
என்னமோ நடக்க போகுதுனு முயின் பாக்க,
என் சேவல்தான் ஜெயிக்க போகுது அந்த பைய பாக்க....


சண்டைக்கு விட்டாச்சு ...


       முதல அந்த பையனோட சேவல்தான்,பேய் சேவல அடிக்குது...


அடுத்த 10 வினாடி மரண அமைதி....


அடுத்து, மண்ணுல புழுதி கெளப்பிக்கிட்டு,றெக்கய விரிச்சுக்கிட்டு ...மட்டு மட்டு மட்டுனு அவ்ளோ கொத்து கொத்துது பேய் சேவ...


அந்த சேவலுக்கு இரத்தம் ஒழுகுது....
ஒரு அடி அடிச்சது கூட அதுக்கு மறந்து போயிருக்கும்...


பாத்துட்டுருந்த பையன் பதறிப்போயி ,என் சேவ செத்தேப்போயிரும்னு எடுத்துட்டு ஓடுனவந்தான், மிஸ் வீட்டு பக்கம் தலை கூட வைச்சு படுக்கல....


சுமையா மிஸ் வீட்லையும்,
இதுக்கு மேல இத வீட்ல வச்சுருந்தா சரி பட்டு வராதுனு,அவங்க அம்மா வீட்டுக்கே பார்சல் பண்ணிட்டாங்க.....


மறுநாள் 11 மணி இருக்கும்...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு....சுமையா மிஸ் ரிங்டோன்....

மிஸ்ஸோட அம்மா,அந்த பக்கம்...

ஏய்,அந்த சேவல் கறியே நல்லாலடி,...சக்க சக்கையா....குழம்பு கூட டேஸ்ட் வரலனு சொல்லி சலிச்சுக்கிட்டாங்க...

சுமையா மிஸ் ,ஃபோன வச்சுட்டு அடுத்த சேவல் வாங்க ப்ளான் போடுறாங்க....

தொடரும்...




கதை:மல்லிகை
படங்கள்:ரோஜா

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...