Sunday 26 June 2016

தோழியுடன்....

ஆத்மநிலைய வேளாண் பூந்தோட்டம் -கேரளம்
      தமிழகத்தின் தென் எல்லை முடிவு,


கேரளத்தின் எல்லைத் தொடக்கத்தில் உள்ள பூந்தோட்டம்,குளிர்ச்சியுடன் வரவேற்றது. நுழைவுவாயிலிலே,வண்ண வண்ணப் பூக்கள்-மனத்தை திறந்தன அந்த அழகியல்.  .ஏகாந்த பயணம் ஆரம்பமானது பூந்தோட்டத்தில்.  .மீன்களின் செல்ல கொஞ்சல்கள்,ஆர்கிட்களின் அணிவகுப்பு,கொஞ்சும் புறா,பேசும் கிளி,தோகை கொண்ட கோழி,வைரம் பதித்தது போன்ற புறா,அதன் அந்திவான ஆதவன் நிறங்கொண்ட கண்வளையம்,காதல் பறவைகள், போன்றவைகளின் இனியோசை,பட்டாம்பூச்சிகளின் ரீங்காரம்,மூலிகைச்செடிகளிலிருந்து வீசிய மணங்கள்,சுண்டி இழுக்கும் நிறங்களில் மனதைக்கவரும் மலர்கள்,அபூர்வ மரங்களிடம் வியப்பு,பிரியும் போது மன இறுக்கத்தைப் பரிசளித்த கீச்சிட்டு அழைத்து பேசிய அந்தக் கிளி,கூண்டுக்குள் சோகத்தில் தவித்த அந்தக் குட்டி நாய்,யாராவது கொஞ்சம் கொஞ்சிப் பேசி விட்டு செல்லமாட்டார்களா என்று கெஞ்சும் கண்கள்தான் அனைத்து அடைக்கப்பட்ட செல்லக்குட்டிகளுக்கும் . .

பச்சைக்குள் இச்சைக்கொண்டு திரிந்து,அனைத்து அலைவரிசையும் ஆன்மாவோடு பொருந்தியதால்,மனதை அங்கேயே உலவ விட்டுவிட்டு,உடலை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.  .

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...