Sunday 26 June 2016

மாஞ்சோலை

மாஞ்சோலை.  


             

 நண்பர்களோடு கலகலப்பாக தொடங்கியது காலை பயணம்.                            
கல்லிடைக்குறிச்சியில் கச்சிதமான சிற்றுண்டி....மன நலம் பாதிக்கப்பட்ட அந்த மனிதனின் கை சுழற்றி செய்த அந்த நடனம்    -நெஞ்சம் நீங்காதவை..


கல்லிடை-மாஞ்சோலை.                  


              பின் இருக்கையில் காற்றோட்டமான மலைப்பயணம் ஆரம்பம்...            
            
              மணிமுத்தாறு தலைவாய்க்கால் -                 நதியே!சிறு சிறு நெளிவுகளும்,சிதற விட்ட அலைகளும் தான் உன் அழகு...    

              முகில் போர்த்தி,இயற்கை மஞ்சத்தில் வீற்றிருந்தது மாஞ்சோலை...மலைக்கொஞ்சும் மணிமுத்தாறுதான் உச்சம்....  
       
               பேருந்து அளவுதான் சாலையே...மலையின் அத்துனை வளைவுகளிலும், சாலையின் மோசமான நிலையிலும் ,அசராமல் பாதுகாப்பாக ஓட்டிய ஓட்டுனரைப் பாரட்டியே ஆகவேண்டும்...


        இதமான தென்றல் காற்று இதயம் நனைத்தது...சாளரம் வழி கண்கள் அலைப்பாய்ந்தது.

        மணிமுத்தாறின் குட்டி அருவியிலிருந்து புலிகள் சரணாலயம் தொடக்கம்..(ஒரு புலி கூட பாக்கல ..அது வேற விஷ்யம்...mind voice:புலி இருந்தாதனே பாக்க).

        ஊட்டியின் வனப்பைப் போல் வழியெங்கும் வண்ணப்பூக்கள்....மரங்களின் அணிவகுப்பு...செந்தில்லையின் நிறக்கவர்ப்பு...ஆரஞ்சு நிற ஆர்க்கிட் தான் அள்ளிச்சென்று விட்டது மனதை...


         தேயிலைத் தோட்டத்திற்குள் உள்ள வீடுகளையும்,மலர்களையும் ,மழலைகளையும் ரசித்துக்கொண்ட  நடைப்பயணம்...    

        தொட்டால் சுருங்கி,முகம் மலர்ந்த மனிதர்கள்தாம் அதிகம்...

        தேயிலைத்தோட்டத்தில்  உள்ள தேன்க்கூடுதான்... கானக கண்டுபிடிப்பு...

         விளையாட்டு, நகைச்சுவை என்று நகர்ந்து.....தேயிலை பானம் பருகிவிட்டு,மீண்டும் அதே பேருந்தில் த்ரிலான பயணம் பாபநாசம் நோக்கி.........

 போகும் வழியில்  வண்டிமறித்தம்மன் பிரமாண்டம்....                     மயில்தோகை  வண்ணங்களில் ஒர் கோபுரம் ஈர்ப்பு...              
           பாபநாசம்-அகத்தியர் அருவி.........                      
           தண்ணீர் பார்த்ததும் கால்கள் நிற்கவில்லை தமையனுக்கு....ஆசையை அருவியில் நனைத்துவிட்டு வந்தான்....      
   
         சாரல் காற்று சுவாசம்,கால் நனைத்ததால் உச்சந்தலை குளிர்ச்சி..

         அருவியை தொடர்ந்துக்கொண்டே மலை ஏறல்... சின்ன அருவிகள்...சின்ன சின்ன நீரோட்டங்கள்..(சின்ன சின்ன ஆச...நெஞ்சில் திக்கி திக்கி பேச,மலைச் சாரல் வாசம் கொஞ்சம் காத்தோட வீச)....மலைக்கேற்ற மரஞ்செடிகள்......அங்கு அங்கு நிழல்களில் நிழற்படங்கள்......விட்டுப்பிரிகிறோம் என்ற தவிப்பு ....

         நண்பர்களின் கைக்கோர்த்து,கதைப்பேசி,கலாய்த்து,வாய்விட்டு சிரித்து,குரங்குக்கு பயந்து,தேயிலையை குரங்குகளுக்கு பரிசளித்து(தொலைச்சதுக்கு இப்டி ஒரு buildupனுலாம் கேக்காதிங்க),பாடல் பாடி(சரி...... வாசிச்சு),மன திருப்தியுடன் தோழி தோழர்களோடு உரையாடி திருநெல்வேலி திரும்பினோம்...

         கண்களில் நிழல்களைப் பதியவைத்து,இமை மூடி,எண்ணற்ற நினைவிடம் கொண்ட எண்ண சீவத்தில் ஊன்றி விடுகிறேன்..

         எதிர் பாரத நட்பு, புரிந்துக்கொள்ளும் முன்னமே பிரியும் குழந்தைப் பிரியம்,புதிய மனதர்களின் புன்சிரிப்பு,அணுகிறாத சூழ்நிலைகள்...இயற்கையின் மேல் வியப்பு...

          ஒவ்வொரு முறையும் இயற்கை புதிய அனுபவங்களை அனுபவிக்க வைத்து,சுகமான நினைவுகளுடன் வாழ வைக்கிறது.....

இயற்கைக்கு நன்றி....

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...