Friday 10 January 2020

பித்தனின் யோசைனைக்குள் வாழ்பவர் யவரோ?

காவிரி ஆற்று பாலம்..

நெடு வாக்கில் நான்கைந்து பானிபூரி கடைகள்...
பள்ளிக்குழந்தைகளும்..கல்லூரி மாணவர்களும்..பொது ஜனங்களும்...

பள்ளி சீருடை அணிந்த சிட்டு ஒன்று ,கல்லூரி மாணவனுடன் சிறகடித்துக் கொண்டிருக்கிறது...

சிலர் நடைப்பயிற்சி...

சாமியார் வேடம் அணிந்த ஒரு மனிதர்..ம்ம்..மனிதர்தான்...

ஒரு அம்மா படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்...

அவருக்கு அருகே ஒரு நாயும்...

காவிரியில் அவன்தான் கதிரவன்,அவன் கதிர்களால் பொன் பூசிக்கொண்டிருக்கிறான்...

பாலத்தின் ஒரு சந்தின் இடுக்கில் மட்டும்
அழுக்கு வேட்டி சட்டையுடன் சுவருடன் ஒடுங்கி ,மெல்ல ஓடும் நதியை பார்க்கும் அந்த வெள்ளை முடி மனிதரின் மனதில் அப்படி என்ன யோசனை இருக்கும்...


வீட்டிற்கு செல்ல பேருந்திற்கு பணமில்லையோ..

பசியின் கொடுமைக்கு ஒடுங்கியிருப்பாரோ...

ஞாபக மறதி சம்மந்தமான நோயாகா இருக்குமோ...

நிஜமாகவே மனநிலை பாதித்துள்ளாரா...

உணவைப் பற்றியா...உயிரைப் பற்றியா...உலகத்தைப்பற்றியா....

ஐஸ்வர்யா எதும் இந்த முருகன் பிண்ணனியில் இருப்பாளோ...

எப்படி இங்கு வந்திருப்பார்...
இவரை தேடி இன்னும் இவர் வாரிசுகள் கண்டுப்பிடிக்க வில்லையா...

செய்தித்தாளிலோ ,துண்டுச் சீட்டிலோ இவரை காணவில்லை அன்று பிரசுரிக்கப்பட்ட தாளின் மேல அமர்ந்திருப்பாரோ...

குளித்து நாளாவதனால் குளிக்கலாம் என்று நதியைப்பார்த்துக் கொண்டிருக்காரா...

மருமகளின் கொடுமையால் வாடுபவரா...

பெற்றப் பிள்ளைகள் பார்த்துக்கொள்ளவில்லையா...

மனைவி எவருடனாவது ஓடி விட்டாரா...

இல்லை இறந்து விட்டாரா....

பவானி தேடி வருவார் என்று இந்த கணபதி காத்திருக்கிறாரா...

இவரின் நினைவலைகள் எந்த வயது வரை இருக்கும்...

நிச்சயம் தாயின் மடியில் அமிர்துண்டது நினைவிருக்காது....

சிறுவனாய் இருக்கும் போது,டவுசர் கூட இல்லாமல் நதியில் நண்பர்களுடன் நீந்திய நினைவோ....


வாலிப வயதில்,ஆற்றங்கரையில் எவறும் அறியாமல் காதலிக்கு முத்தமிட்ட நினைவாக இருக்குமோ...

மனைவியுடன் முதலிரவு (முதலிரவாக இருக்க வேண்டியதில்லை) பொழுதுகள் நினைவிலிருக்குமா...

காதலியின் நினைவதினை திண்றிருக்குமா...

வயல் வெளியில் மனைவி சோறு உருட்டித் தர,அவளுக்கு ஊட்டியதை நினைத்துக் கொண்டிருப்பாரோ...

பேரப்பிள்ளைகளுக்கு ஆற்றங்கரையில் அமர்ந்து நிலா சோறு ஊட்டிய நினைவாக இருக்குமோ....

ஒரே இடத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் வந்த கண்ணீர் என்று எடுத்துக் கொள்ளட்டுமா...இல்லை,,,,


இவள் இன்னும் இந்த பாலத்தை கடந்து முடிக்க வில்லை...பேருந்து கடந்து மணியாகிவிட்டது....

2 comments:

Vigneswaran M said...

டாக்டர்! அடுத்த புத்தக கண்காட்சி ல நீங்க எழுதுற புத்தகத்தை வெளியிடுவோம்!💗💗😍

சந்திரா ப்ரியதர்ஷினி said...

😂

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...