Friday 14 August 2020

தாகம்...

காதல் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்....

அதற்கு ஏதாவது ஒரு வழியை காதலே தேடிக் கொள்ளும்...

சுகம் கொள்ளு(ல்லு)ம்..

பகிர்தலின் வழி உயிர்ப்பு பெற்றுக்கொண்டே இருக்கும்.....

காதலர்கள்தான் தனித்துவமானவர்கள்...

காதல் பொதுவானவைதான்...

அதன் ஆழமும்,உச்சமும்...அனைவருக்கும் ஒன்றுதான்....
அது காதலாய் இருக்கும் பட்சத்தில்....

நான் வாசிப்பவைகளனைத்தும் உங்கள் விழி வழி பாயும் அந்த காதல் ரச வாசனை...நீங்களும் முகர்ந்துக் கொள்ளுங்கள்....

ரூமி கவிதைகள்:

சலிக்கவில்லை நீ எனக்கு...
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே...

நீர்க்குடுவை
நீர்க்கலயம் 
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்...

தாகங்கொண்ட மீனொன்று 
என்னுள் இருக்கின்றது..
ஒருபோதும்  கூடவில்லை அதற்கு 
முழுத்தாகமும் தணிக்க..

கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு !
உடைத்தெறியுங்கள் ,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை..

மனமுயக்கத்தையும் 
பெருந்துக்கத்தையும் கூட

 நெஞ்சின் மையத்தில் 
 யாருமறியா முற்றத்திலிருந்து 
 நேற்று இரவு எழும்பிய அலையில்  
 மூழ்கடிக்கப்படட்டும்
 எனது வீடு.
 
 ஒரு நிலவினை போல
 எனது கிணற்றினுள் விழுந்தார் .
 அடித்து செல்லப்பட்டது 
 நான் காத்திருந்த விளைச்சல் ..
 ஆயினும் 
 அதுவொரு பொருட்டல்ல .


எனது கல்லறையி்ன் மீது
 மூண்டுள்ளது நெருப்பு 
 படிப்பு 
 கௌரவம் 
 அல்லது மரியாதை
  இவை ஏதும் வேண்டாம் எனக்கு 


இந்த இசை 
இந்த புலரி 
உன் கன்னக் கதுப்பு 
எனக்களிக்கும்  வெதுவெதுப்பு  
இவை போதும் எனக்கு

 துக்கத்தில் இருப்போர் பெரும் சேனைகளாக குமுறுவார்கள் .
 நான் சொல்லப் போவதில்லை  
அவர்களோடு.

கவிதையை முடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான் ஆகிறது ,
மாபெரும் மௌனம் 
என் மீது கவிகிறது. 
வார்த்தைகளை பயன்படுத்த
 ஏன் எண்ணினேன் என்ற
  தவிப்பே எஞ்சுகிறது..

2 comments:

Nvikey said...

இந்த இசை
எனக்களிக்கும் வெதுவெதுப்பு
போதும்!!

சந்திரா ப்ரியதர்ஷினி said...

😍😍

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...