Thursday, 18 January 2018

கொல்லி மலை-ஒரு நாள் ஜாலி பயணம்

கொல்லி மலை...(சின்னதுதான் ..( மலை பெருசுதான்).வாசிச்சிடுலாம்....(என்னடா எடுத்தோனே மொக்கையா ஆரம்பிக்கிதுனுலாம் யோசிக்காம மேட்ருக்கு போவோம்))



"கொல்லு மலை"யோட திரிபுதான் கொல்லி மலை...(என்னடா இந்தப்புள்ள STDலாம் பேசுதுனு பாக்றீங்களா.😳😳..அது சும்மா ...ரெண்டு லைன் தான்😜😜.)...

பக்கத்து ஊர்தான்னு போய்டு வந்தர்லானு பாத்தோம்..இதுல ஒரு நாய் 2 மணி நேரம் தான் ஆகும்னு சொல்லுச்சு..ஆனா போகவே 4 மணி நேரம்...

எழில்மிகு கொல்லி மலை உங்களை வரவேற்கிறது...(எஸ்...பைய நிரப்பிட்டு கிளம்பியாச்சு...வேறென்ன snacksதான்)...

மலை முழுசும் பனி...பனிய சுத்தி மரம்...(என்ன ஒரே பனிமூட்டமா இருக்குங்கிறதுலாம் பழசு....இந்த season-ல பங்குனி வெயில் பல்ல காட்டிட்டா அடிக்கும்னு நீங்க சொல்றதெல்லாம் புரியுது.👍....இருந்தாலும்😐)...





மொத்தம் 70 பெண்ட் ( சுத்தி சுத்தி..சொய்ங் சொய்ங்....முழுசும் பச்சை...)
பச்சைனாலே ஒரு போதைதான்....💖💖💖💖

வழி-ல ரோஸ்வுட் மரமும்...அத பத்தி ஏறுல மிளகு கொடியும்தான்(மிளகு பறிச்சுக்கிட்டே கையாட்டிகிட்டே சிரிச்சான்....ப்பா...காரத்துலையும் ஈரம்...(கேவலமா இருக்குனு தெரியுது...துப்புனாலும்...😁😁😂ஈஈஈ...)





மூங்கில் தோட்டம் ...மூலிகை வாசம்...மலையோரம் வீசும் காத்து...தென்றல் வந்து தீண்டும் போது....அம்புட்டும் அம்சமா அமைஞ்ச feeling..ப்ப்பா.(என்ன்னா peelinggu-லாம் நோ.....😐😐.)மலை அவ்ளோ அழகு...அம்புட்டும் பச்சை...

கதைச்சுக்கிட்டும் நொறுக்கிக்கிட்டும் 70 பெண்டையும் கடந்தாச்சு....😀

"ஆகாய கங்கை" போய்டு அப்டியே "செம்மேடு" அங்க இருந்து "சீக்குபாறை view point" அப்றம் நேரா மாசிலா அருவி ,சந்தன அருவி,நம்ம அருவிலாம் பாத்துட்டு...............
 வரனும்னுதான் எங்களுக்கும் ஆசை...(ஆனா அன்னைக்கு அமைஞ்சது ஆகாய கங்கையும் அறப்பளீஸ்வரரும் தான்😍😍)











மொத்தம் 1086 படி...ஆக up nd down 2000த்தி சொச்சம் படி....(கூட்டல் கணக்கும் மட்டும்..😁😁.வராது ..அவ்ளோதான்...)
(சிலதுலாம் நீளமா கட்டிட்டு படியா எண்ணியிருக்காங்க பாவிங்க..😢.).

சித்தர்கள் வாழுமிடம்-னு போர்டு..(ஒரு சித்தர் கூட தரிசனம் குடுக்கலப்பா...சரி விடுங்க ..நல்லவங்க கண்ணுக்குதான் படுவாங்க போல...உங்களுக்கும்தான் ..வாய்ப்பே இல்ல😲)....


தோழி ஒருத்தி ஒரு dialogue சொல்லி சேர்த்துக்க சொன்னா..(ஆனா வெரி சாரி மொன்ன...மறந்துருச்சு...😜😜)

ஒரு பாப்பாட்ட இன்னும் எத்தன படினு கேட்டதும் தெய்வம் 20 stepsதான்க்கா-னு சொல்லுச்சு..(ஆனா அது போது 100-அ தாண்டி..என்னா ஒரு வில்லத்தனம்...😠😠)

போய் இறங்குனா worthப்பா..😻👌👌
அருவி...அருவிசாரல் ஏத்துற போதை இருக்கே💖💖..அங்கேயே இருந்தர்லானு தோணும்..(குளிர்ல நடுங்கி செத்துருவனு சொல்றதுலாம் புரியுதுங் சாமி..🙏.)...

தோழிகள் அருவியில் சிட்டுக்குருவியாய் சிறகடித்து மகிழ(இப்டிலாம் எழுதுலனா அடிப்பாளுங்கப்பா😷😷)....

மேல ஏறுறப்ப ஒரு uncle பின்னாடியே வந்தாரு(ன்)...சரி அவரு போகட்டும் ..நாம போலானு நின்னா அந்தாளும் நிக்கிறான்..(இதன் கடுப்பாகுறது...வீட்ல வெளில விட்ட பயப்படுறதே இதான்...சாவடிக்காதிங்கயா...நிம்மதியா வந்துட்டு  போகனும் நாங்களும்🙏)...

மூச்சு வாங்குதுனு நின்னா ஒரு எரும 'வீட்ல நிறைய சாப்டா இப்டிதான் மூச்சு வாங்கும்னு சொல்லுது...(ஆனா அந்த மூதேவியே மூச்சு வாங்குதுனுதான் நிக்குது..இதுல comment ம... வேற.✋👊👊👊.)

அப்டியே மீன் கோவில்-ல (அதான் பா அறப்பளீஸ்வரர் கோவில்-ல) விசிட் அடிச்சுட்டு...ம்ம்ம்..போட்டோ எடுத்து திட்டு வாங்கிட்டு...(சண்டைல கிளியாத சட்டை எங்க இருக்கு)..👚


அப்றம் சொல்ல மறந்துட்டேன்...சித்தர்கள் இன்னும் வாழ்றாங்கனு நம்ப படுற மலை🎆🎆...கோவில் சுவர்-ல பதினென் சித்தர்கள்...(இடைக்காரர் மட்டும்  bigboss -ல task குடுத்த மாதிரி நின்னாருப்பா..நீங்களே பாருங்களேன்..🙇.)



பஸ் ஏறியாச்சு...(ash கலர் சட்டை..சிங்க வெள்ளி மோதிரம்,மூணு நாள் தாடி,முகம் முழுக்க சிரிப்பு,கண்ணுல அவ்ளோ தெளிவு,இன்னும் ஆறு மாசத்துல Himalayas போறான்...இவ்ளோதான் தெரியும் அந்த ஊர்சுத்தி பத்தி....செம்மேடுலையே மனசும் இறங்கிருச்சு🎀🎀)...
வீடு வந்தாச்சு...

Jerkin கேட்டதுக்கு ஜட்டி எடுத்து குடுத்ததுலாம் வேற கதை...💁🙊🙊🙅


(பயணிகள் ஓய்வதில்லை)....






2 comments:

காரிகை காதலன் said...

வேடிக்கை காரி தான் இவள்

Anonymous said...


🚣🚣🚣

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...