அன்பினூற்று...
வாழ்க்கை ஏதோ ஒரு விளிம்பில் நிறுத்தி ,"வாழ்க்கை நீ நினைத்தது போல் எல்லாம் இல்லை" என 'சப்'பென்று அறைந்து விட்டு, மீண்டும்.."வா...வாழ்வை தொடங்கு "என்று தேனீர் கோப்பையை நீட்டும்.மீண்டும் மீண்டு வாழச் செய்யும். அற்பமோ ,அதிசயமோ வாழ்ந்தாக வேண்டும்..இவ்வாழ்வை அன்பின்கண் நகர்த்துவோம்...💝
Wednesday, 12 July 2023
என் பழைய பனை ஓலைகள்📜💝🐾
முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்..
முதன்முதலில் எழுதிய எழுத்துக்கள்..
என்ன என்னவோ எழுதிருப்போம் ...வாசிச்சிருப்போம்....
எப்டினா...
எத்தன குழந்த பெத்தாலும் முத குழந்த மேல எப்பவும் ஒரு தனி அக்கற இருக்கும்ல..அது மாதிரி...
எப்படி இருப்பினும் அதுதான் தொடக்கம்...அப்படி கொண்டாட பட வேண்டிய எழுத்துக்கள் தான் அவை...
#இளங்குருதி_இயக்கியவை💗👌🐾
Sunday, 30 August 2020
XS Gallery..
Yes..
And finally..
இன்னைக்கும் எழுதலாம் போல...(ஹப்பாடா என்று திருப்தியடைவோர் மண்டைலயே ஒரு மொட்டு...).
நாமளும் எதோ கிறுக்கிறோம்...(ஆணவம்லாம் இல்ல குமாரு...)
அத கொஞ்சம் காட்டலாமேனு தான்...
Colours makes life colourful (சாரல் தெரிக்குது..).
அது என்னவோ தெரில ,என்ன மாயமோ புரில..
வண்ணங்கள்...(மேல சொல்லு...)..
Whenever i see colour,colour,co..lo...ur....அது கலரு...அம்புட்டுதான்..
என்னோட
XS Size gallery...
ஆனால்,வரைதலில் ஒரு நல்ல உணர்வு..தீர்க்கமான ,ஒழுங்கான அமைப்பு என்றெல்லாம் இல்லை..கனவு போல் அழகான ஒரு அமைவு..மகிழ்தலின் போது வாழ்க்கை இன்னும் வண்ணமுறுகிறது..மன அமைதியின் போது மேலும் அர்த்தமுறுகிறது..ஒரு நல்ல காதலன் போல,வரைதலும் அவ்வாறுதான்..உணர்வுகளை வார்த்தைகளின் வழி உரையாடி யார்தான் வெல்வார்..அது ஒரு அமைதியான உணர்வு..நடு வனம் ,ஆழ்கடல் போன்று...
#Corona holidays...
(இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்கோ..).
Friday, 14 August 2020
தாகம்...
Thursday, 13 August 2020
ஆடிமாதமும் சித்த மருத்துவமும்
ஆக ஆடி மாதம் ,கோடையின் முடிவு,மழையின் தொடக்கம்..(காலம் மாறி போச்சு கண்ணுனு வசனமெல்லாம் பேசக்கூடாது..பாடத்த கவனிக்கனும்..)
ஆடி காத்துல அம்மியும் நகரும்..
ஆடிப்பட்டம் தேடி விதை…(பழமொழி..இருக்கட்டும்).
இந்த மாசத்துல வாயு(காற்று)வின் சீற்றம், பித்தத்தின் வளர்ச்சி இருக்கும்..(சித்த மருத்துவ நூல்கள் சொல்லுது குமாரு…)
இப்போ சுவை பார்ப்போம்..
அனைத்தும் பஞ்சபூதமயமாதுதானே…
மண்,நீர் ,நெருப்பு,காற்று,ஆகாயம் அல்லவோ பஞ்சபூதங்கள்…(அதுலாம் எங்களுக்கே தெரியும்…மேல சொல்லுங்கிறிங்களா)..
நம்ம சாப்பிடுற உணவுகளும் பஞ்சபூதமயம்,
அறு சுவைகளில்,ஒவ்வொரு சுவையும் ரெண்டு பஞ்சபூதம் இணைந்து உருவாகியிருக்கு….(எப்பா…புரிஞ்சுதா)…
அதாவது,
இனிப்பு – மண்+ நீர்
புளிப்பு- நெருப்பு + மண்
உப்பு – நீர் + நெருப்பு
கசப்பு – ஆகாயம் + காற்று
காரம் – நெருப்பு + காற்று
துவர்ப்பு – நிலம் + காற்று
இந்த அமைப்புலதான் இருக்கு…
ஆடி மாசம் முழுக்க காற்றோட(வாயுவோட) சீற்றம் அதிகம்..அத நம்மளோட உடம்புல தன்னிலைப்படுத்தனும்..(படுத்தலனா,வாத சம்பந்த பிரச்சனை வரும் ..பாத்துக்கோங்க..)
அதுக்கு என்னா பண்ணணும்?…
ம்ம்..காத்து பூதம் இல்லாத சுவைகள சாப்டனும்..
இப்ப காற்று இல்லாத சுவைகள் என்னன்ன
…
இனிப்பு புளிப்பு உப்பு இந்த சுவைகளை அதிக படுத்திக்கிட்டு,மற்றத கம்மி படுத்தி சாப்டனும்…
அம்புட்டுதான்…
ஆடி மாச விஷேஷ உணவுகள் ,அதிகமாக இந்த சுவைகள அடிப்படையா கொண்டு தான் இருக்கும்…
யோசிங்க மக்களே…
இதுல எங்க மருத்துவம் வருதுன்னு கேக்கலாம்…
End card-ae இங்கதான்…
உணவே மருந்து..மருந்தே உணவு ..
Saturday, 13 June 2020
Professional and personal..(shhhh....weight loss..)
Thursday, 28 May 2020
பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்..
Tuesday, 26 May 2020
மாயமான்..
என் பழைய பனை ஓலைகள்📜💝🐾
என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...
-
மேடம் ஒரே பிசி.... Yes.. And finally.. இன்னைக்கும் எழுதலாம் போல...(ஹப்பாடா என்று திருப்தியடைவோர் மண்டைலயே ஒரு மொட்டு...). நாமளும் எதோ ...
-
என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...
-
ஈருருளி...(சைக்கிள்) (History வகுப்புலாம் இல்ல...அத விக்கிபீடியால பாத்துக்கோங்க... ) சைக்கிள் பெல்... அந்த ஓசை...கிளிங் கிளிங்ன்ன...























