Thursday, 4 January 2018

குட்டி பயணம்..குட்டி தேவதைகளோடு.....😘

திரவியங்களைத் தேடிதான்  திடீர் திடீர் பயணங்கள்..(ஆஹான்-லாம் சொல்லப்பிடாது என்னல💁💁)

வழக்கம்போல் "பாப்பின்ஸ் ,ஆரஞ்சு மிட்டாய்" என்ற பரிச்சயமான ராகத்துடன் தான் இனிப்பாய் இனிதாய் தொடங்கியது ...
(எஸ்...சேம் தட் திருநெல்வேலி-2nd platform😴)

வெள்ளி மேகங்களில் துள்ளிக் குதித்துக்கொண்டே குதுகலமாய் குட்டி பேருந்து பயணம்
(மேகம் சத்தியமா கீழ விழல..எப்பூடி..யாருகிட்ட😇💪)

வல்லநாடு-புள்ளி மான் சரணாலய வனத்திலே தொலைந்துபோய் மீண்டும் பயணம் தொடர்ந்தது(அதான் அதே comment  தான்😬😬)

உப்பு காற்றுடன் கலந்த கடல் வாசம்...-தூத்துக்குடி வந்தாச்சு..😁

கடற்கரை செல்லும் வழி-இருபுறமும் கடல் ...நடுவில் பாதை(ஆமா Ecr தான்...ஆனா சின்னது...🌊🗻)

15 நாட்களாக விளையும் உப்பு பற்றிய 15 நிமிட கதை(பக்கத்துல உக்கார்ந்துருந்த அக்காதான்)

மிகப்பெரிய அண்டாவிலுருந்து மேகத்துடன் கலந்த புகை☁☁(அதுதான் அனுமின் நிலையமாம்..எனக்கும் ஆஹான் moment தான்🎅🎅)

ரோச் பூங்காவில்(ரோச் தான்...ரோஸ் இல்ல)
கடல் பாதை குட்டி பாறை தான் உச்சம்...👌👌

கடற்கரை வந்தாச்சு🌊🌊🌊...

ஆதவன் 🌞அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த பொழுதிலும்..
குளிர்ந்த தென்றல் மேனி பூசியது🌌..

பாதி பெயரை எழுதுகையிலே அலை🌊 வந்து ..வந்து..
...
....
வர்லயே ..எழுதிட்டனே💪💪....

குட்டி குட்டி சுயமிகள்📷...
நிறைய நிறைய சிரிப்புகள்😹😹...
கடல் ஆராய்ச்சியாளர்களை மிஞ்சிய தருணங்கள்....(தட் சேம் டயலாக்,இவரு பெரிய கப்பல்⛵ வியாபாரி...

ச்சரி..பரவால.. தொடச்சாச்சு😼😼)

குட்டி சங்கு பித்து கொண்டு சேகரித்த குட்டி குழந்தைகள் கொஞ்சம்💂💂...

கரை ஒதுங்கி மாய்ந்த பல ஆன்மா கண்டு கவலைபட்டு நகர்ந்தும் ..நகராமலும்.😾😾...(நீ ..இத நாங்க நம்பனும்...

வேற வழி இல்ல...நம்பிதான் ஆகனும்👶)..

பறவைகளிடம்  போட்டோக்கு போஸ் கெஞ்சியதெல்லாம் வேற கதை🙅🙇(நாம அவ்ளோ  terror pieceலாம் இல்லீயே...அப்றம் ஏன் moment தான்😭)

சிகை அலங்காரம் 👸பார்த்து "அது எப்டீனு சொல்லி தரியாமானு" கேட்ட அக்கா(...நானாக்கா...இந்தா சொல்லித் தரேன்...🙋🙋)

10 ATM  🏦சென்று 11 வதில் பணம் கிடைத்த மகிழ்ச்சி(மோடி எரும ..உன்னாலதான்😏😏)

நீ நிறைய சாப்டல...நிறைய நேரம்தான் சாப்ட்ற என்று சிதம்பர ரகசியத்தை உடைத்த தோழி😌😌....

நான் எப்பதான் சாப்டு முடிப்பேனு காத்திருந்த சரவணன்🙅...
(அட ,அந்த கடைக்காரன் பையன்பா😿...பில் பில்காக)


காபி🍵 வேண்டும் என்றதும் முடியாது ..அதலாம் வேண்டாம் என்று மறுத்த தோழி👭(எனக்கு பித்தம் அதிகமாம்..
நம்ம health மேல எம்புட்டு அக்கற..எங்கம்மா (not சின்னம்மா😜) இருந்த இவ்ளோ நாளா பீலிங்கு😭😭)

ஜன்னலோர பயணம்🚌...அழகியலாக முடிந்தது💖...

..

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...