Showing posts with label birthday. Show all posts
Showing posts with label birthday. Show all posts

Wednesday, 26 June 2019

பிரியாணி கேக்🙈

Its not about bday girl...
It's  about on the bday celebrations...

Yes...
காட்சி 1:

இடம்:பெண்கள் விடுதி..எங்க ரூம்...

நேரம்:குத்து மதிப்பா  நைட் பதினொன்னே முக்கால் இருக்கும்..

பங்கேற்பாளர்கள்: ப்ரியா,ப்ரஸ்ஸு,சுஷ்..இன்னொரு ப்ரியா...

சுஷ்:அக்கா ....தீப்பெட்டி இருக்கா....?

ப்ரியா:  (ஓ.கே..இன்னைக்கு பொறந்தா நாள் கொண்டாட போறாங்க....கேக் ரெடின்னு..யோசிச்சுக்கிட்டே)...எதுக்குடி தீப்பெட்டி???🔎🔍

சுஷ்: மெழுகுவர்த்தி கொளுத்தக்கா....🕯

பின்வருவன மைட் வாய்ஸ்...
அடிப்பாவி...ஒரு பிறந்தநாளுக்கு கேக் வெட்ட கூப்ட மாட்டிக்கிறாளுங்க....😁😁

ப்ரசன்யா:இதுக்கு நீ தூக்கு மாட்டி தொங்கிருடி ப்ரியா..😫

இன்னொரு ப்ரியா..:அக்கா தெய்வாக்கு கேக் வெட்றோம்..வந்துருங்க...😜

(ஹப்பாடா)😜😜😜😜




இன்னும் சில நிமிடங்களில்...

நா:சரி வாடி ப்ரசன் யா...போலாம்..
ப்ரசன் யா:எவ்ளோ பட்டாலும் நமக்குலாம் வெக்கமே இருக்காதுல...வா..போலாம்...
😌😌😌😌
காட்சி 2:

பங்கேற்பாளர்கள்: பிறந்தநாள் பொண்ணு-தெய்வா...அவங்க ரூம் புள்ளைங்க...ப்ரியா...பிரசன்யா...🙄🙄



Cream cake இல்ல...அது...fruits லாம் வச்சு cake   மாதிரி ரெடி பண்ணிருந்தாங்க...🤓🤓

(500ரூபாய்க்கு கேக் வாங்குனமா..வெட்டுனமானு இல்லாம...இதலாம் ஒரு வேலையா....)

இல்ல...நாம ஒருத்தங்களுக்காக எவ்ளோ மெனக்கெடுங்குறோம்ங்கிறதுல இருக்கு அந்த பாசம்..😍😍😍😋

மெனக்கெட்டு நல்லா அழகா பண்ணிருந்தாளுங்க அந்த புள்ளைங்க....😘

மூஞ்சில க்ரிம் பூசிக்கிறத compensate பண்ண கலர் பொடி வச்சுருந்தாளுங்க...😻😻😻

அப்டியே....எல்லாருக்கும் சாக்லேட் கொடுன்னு கேரட் slice பண்ணி வச்சுருந்தாளுங்க.. 🙈

அவளும் எல்லாருக்கும் ஊட்டி விட்டுக்கிட்டே ,என்ன தாண்டி உள்ள புள்ளைக்கு ஊட்ட போனா...🙊

ப்ரியா:ஏய் நானும் இருக்கேண்டி.....🙊🙊

தெய்வா:  க்கா....நீங்க போட்டோ எடுக்கதானே வந்திங்க..  🙉🙉🙉

ப்ரியா:  அடிப்பாவவிகளா...அவ என்னடானா மெழுகுவர்த்தி கொளுத்த தீப்பெட்டி வேணுங்கிறா...நீ என்னடானா போட்டோ எடுத்து குடுக்க👶 வந்துருக்கேங்குற....என்னடி நினைச்சிட்டு இருக்கிங்க....🐣🐦📱📱📸📷

சரி சரி விடுங்க....அந்த பழத்த எடுங்க....

கலகல...கல கல....

பரிசுகள் பகிர்ந்துகிட்டதும்,கலர் தண்ணிலாம் ஊத்தி அந்த புள்ளைய அலங்கார படுத்துனதும் கொண்டாட்டம் முடிஞ்சிரும் அப்டிதானே....
ஆனா இல்ல....

அந்த இடத்தலாம் க்ளீன் பண்ணி விட்டுட்டுதான் தூங்குனாளுங்க....(ஆயா வேல பார்த்ததுக்கு இவ்ளோ பில்டப்பா....)


அந்த புள்ளைங்க....
Nice girls...😍😍😍😍
தெய்வா...u had nice frnds டி பாப்பா......


(அக்கா..விடுங்க...உங்களுக்கு பிரியாணி கேக் வெட்டிடலாம்...😂😂😂😂)...














Tuesday, 28 May 2019

மொன்னைஸ்..🐾🎻🍭🍬💝👯

20 வயசுக்கு மேல,என்னடா பொறந்த நாளுலாம்...எல்லா நாளி.மாதிரிதானே அதும்ங்கிற இடத்துல....
ஒரு கழுத 25 வயசாகிருச்சுனு 'சில்வர் ஜீபிலி'ய முட்டாயி குடுத்து கொண்டாடிக்கிட்டு இருக்கு ஒரு d o g-dog...💝🍫🍬🍬🍬🍬🍭

தன்னை கொண்டாடிக்கிறதுல எந்த குறையும் வைச்சுக்கிறதுல இந்த குட்டி...(நம்மல நாம கொண்டாடலனா ,வேற யாரு கொண்டாடுவாம்பா......

சரி மூடிட்டு முட்டாயி குடுத்துட்டு போ போ..)

Life is easy with frnds dashங்கல...அது இதுக்குதான்..(ஈஈ...எப்ப என்ன கேட்டாலும் வாங்கி தரும்..)

யோசிக்காம நா help பண்றேனு சொல்லுவா...(இந்த மாதிரி சொல்லக்கூட ஒரு தைரியம் வேணும்ல...)

சொல்ல மறந்துட்டனே ....பாப்பையனோட little princess இவங்க...(..ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா....ஒத்த புத்த பெத்தாங்களே..அது யாரு எங்க அப்பா...

பாடும் பாடித்தொலையும்👈💃💃)

எப்பவும் யங்-கா,துருதுருன்னு....எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி நடந்துக்கனும் நினைக்கிறதே பெரிய விஷ்யம்....இவ வாழ்ந்துக்கிட்டு இருக்கா...

கூட இருக்க எல்லாரையும் கொண்டாட தெரிஞ்சவ...உறவுகளோட வசந்ததை எல்லாரோட கண்ணு வழியாவும் பார்ப்பா..(சுத்தி அண்ணா,தம்பி,அக்கா,darling,லவ்,டாடி...மம்மி...ஹா ஹா...இப்டிதான் மனசாற கூப்டு நிறைவா வாழ்றா)..

பள்ளிப்பருவ நட்பு still remains....இவதான் அந்த சிறுக்கி...

இதுதான் வாழ்க்கை,இப்டிதான் இருக்கனும்ங்கிறதுலாம் இல்ல..சரி ,தப்புக்குலாம் வரையறையே வச்சுக்காம வாழ்ற என்னோட இந்த வாழ்க்கைக்கான மிகப்பெரிய சொத்து இந்த முண்டம் தான்...

நல்லாரு மொன்ன..
கொண்டாடி சேமிச்சுக்கோ நினைவுகள
..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ள....







Friday, 10 May 2019

யாஸ்மீ.....🐾🎻

நாம யாரையும் புடிக்காம,எதுவுமே புடிபடாம தனிமைல இருக்கும் போது,நம்ம பக்கத்துலையே உக்கார ஒரு துணை கிடைச்சா....,அவளும் அழகா அழகா கதை சொல்லி சிரிக்க வைச்சா....அவதானே தேவதை...
ஆமா..நிச்சயம் எனக்கு தேவதைதான் அந்தக்குட்டி....


வெளிப்படையா இருக்க மனுசங்ககிட்ட மனசு சீக்கிரமா இணக்கத்தை உண்டாக்கிரும்..(வெளிப்படையானவ...)

எதாது வேல செஞ்சுட்டு இருக்கும் போது,யாராது எனக்கே தெரியாம என்ன photo எடுக்க மாட்டாங்களானு?...சொல்லிட்டே இருப்பா...(candid காதலி…)

ஒரு ஊர்-லனுலாம் இவ கதை ஆரம்பிக்காது...
அவ வீட்டு சொந்த கதைதான் சொல்லுவா..அவ்ளோ சுவாரசியமா...நடந்த மாதிரியே அச்சு பிசறாம சொல்லுவா....அப்டியே ஆழ்ந்து போய்....அவ்ளோ உணர்வுகளையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டுவா...( எங்களோட கதை சொல்லி...நேரம் போறதே தெரியாது...)

எல்லார்கிட்டையும்லாம் பேச மாட்டா...எதாது ஒன்னுனா சட்டுனு அழுதுருவா அழகி...(ஆனா பேசுற எல்லாருக்கும் இந்த குட்டி நல்ல நெருக்கம்...)

Artist-calligraphy பயித்தியம்..( note முழக்க கிறுக்கி வச்சுருப்பா)...

Dressing sense-பக்காவா இருக்கும்...புர்கா போட்டு மூடிக்குவா மெ
ன்டல்...


சொல்ல மறந்துட்டனே...

நல்லா பாட்டு பாடுவா...இல்ல...நிஜமாவே நல்லா பாடுவா...
அவ குரலுக்கு எது பொருத்தமா இருக்கோ ,அத மட்டுந்தான் பாடுவா...( பாடகி மொமென்ட்)...


எல்லாருக்குமே வீடுனா இஷ்டம்தான்...
ஆனா இந்த குட்டிக்கு என்னேரமும் வீடுதான்...
சுமையா மிஸ்,வாப்பா,முயின்.....இதான் அவ வாய்ல இருந்து அதிகமா வர வார்த்த...இந்த மாதிரி புள்ளலாம் பொறக்க குடுத்து வச்சுருக்கனும்னு சொல்லுவாங்கல...அது மாதிரி இருக்கும் இவள பாத்தா...

Be good for no reason ல... Yes...she is being gud for no reason...நல்லவங்களாதான் இருக்கனும்னு சொல்லுவா...யாரையும் கஷ்டபடுத்துற மாதிரி எதும் பண்ண மாட்டா...(ஆச்சரியாமா இருக்கும் இந்த புள்ளையா பார்த்தா).....

Frnd ஆகனும்னா,we have some similaritiesனு ஒன்னுனாச்சும் இருக்கும்ல...
அதான்....நல்லா திங்கும் இந்த நாய்........

ம்ம்ம்...இந்த தேவதைக்குதான் பொறந்த நாள் இன்னைக்கு...

சந்தோஷமா வாழுடி தங்க புள்ள...
Happy happy bday Yasmeen...
Love you sooo much டி பொம்பல....உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா....(தட் லிப்ஸ்டிக் emoji)....
#Last_benchies...(யெஸ்...வெற்றிக்குறி)....
#கியாங்_மியாங்_குள்ளச்சி...











Sunday, 5 May 2019

பிரமிள்...🎻🐾


விக்கிதான் அடிக்கடி சொல்லிட்ருப்பான்...பிரமிள் கவிதைகள் புக்கு வாங்கி குடுடி-னு...

நானும் கொஞ்சம் விசாரிச்சேன் கிடைக்கல...

த.ராஜனோட,ஏன் பிரமிளை வாசிக்கவேண்டும் கட்டுரை வாசிச்சேன்...

கண்டிப்பா வாசிக்க வேண்டிய மனுசன் இவருனு கொஞ்சம் தீவிரமா தேடுனதுல
எப்டியோ e-book கிடைச்சிருச்சு...

அது ஒரு முழு தொகுப்பு இல்ல...சில தொகுப்புல இருந்த கவிதைகள்-ல சில பல கவிதைகளை தொகுத்து வச்சதுதான்...

வார இறுதி நாள் சாய்ந்தரம்னாலே சவகாசம்தான்..
நல்லா தூங்கி எழுந்து ,
தலை குளிச்சிட்டு,
ஈரம் முழுசா உலராத தலையோட,
தளர்வா டிரெஸ் போட்டுகிட்டு,
சூடான ஒரு கப் டீ,
கொஞ்சம் தின்பண்டம்லாம் வச்சுக்கிட்டு...
வாசிக்கலானு தொடங்கியாச்சு...





நான் என்னனேய தேடிச் செல்கிறேன் .
இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான்
நடந்து செல்லும் பாதை கவிதையினுைடயது - பிரமிள்
(தட் முதல் பக்கமே impressive).

ஒவ்வொரு கவிதையும் முடியும் போது,அவ்வளவு ஒன்றிப்போய் நகராம மனசுக்குள்ளயே பதிஞ்சிருச்சு...
மனுசன காதலிக்கவே ஆரம்பிச்சுட்டேன்...
நீங்களும் வாசிங்களேன்...








ரஸவாதம் - பிரமிள்

இதயத்தில் உன் மறுப்பின்
வேல் புைதந்து
வாய் பிளந்து
பசி என்ற குரல் எடுத்தது
வடு
குரல் மேட்டு
தாய் மன நிலவு
முைல சுரந்தாள்
சொரந்ததுேவா
துக்கத்தின்
விஷ நீலம்
ஆனால்
பருகிய வடுவின்
இதய வயிற்றுள்
துக்கம் செரித்துப்
பிறந்தது
வேதனை அமிர்தம்.


காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...