Tuesday, 23 January 2018

காதலுக்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லை...

Sightகள் பலவிதம் ...ஒவ்வொன்றும் ஒரு விதம்...
Sight அடிக்காதவங்க யாருமே இல்ல..நாம நிறைய பேர sight  அடிப்போம்...🙌🙌

குட்டியா cuteஆ இருக்க பையன்..😜

Manly ஆ handsomeஆ இருக்க பையன்...😜

Rosy lips,chubby cheeks பையன்...😜

முடிதான் அழகுக்கலாம் அழகு...foot board -ல நின்னுட்டு பறக்குற முடிய கோதி விடுறத ரசிக்காத பொண்ணுங்களே இருக்க மாட்டாங்க..😄😄.(இனிமேல் try பண்ணி கால உடைச்சுக்கிட்டா company பொறுப்பேற்காது)😵😵

முறுக்கு மீசை...கள்ளச்சிரிப்பு😉...அப்பட்டமா நம்மளதான் பாக்குறானு காட்டிக்குடுக்கிற கண்ணு...
அரும்பு மீசை..குறும்பு பார்வை...
தாடி வைச்ச பசங்களுக்கு extra marks..

பழம் மாறி இருக்க பசங்களுக்கு அந்த வெகுளித் தனம் கூட அழகுதான்...

இந்த பையன்லாம் நம்ம காலேஜ்லதான் படிக்கிறானங்கிற அளவுக்கு இருக்கும் campus interview getup...
இவ்ளோ நல்ல பையனா ,பால் வடியிற முகம்லாம் பாக்கனும்னா practical exam ஹால் side போனாலே போதும்...

மடிச்சு கட்டுன வேஷ்டி...மடிச்சு விட்ட sleeve...அம்சமான தோரணை.(அதுலயும் முட்டிக்கு மேலையும் இல்லாம கீழயும் இல்லாம லுங்கி கட்டுற style கூட அழகு தான்)..👌👌👌

எவ்ளோ திட்டு வாங்கனாலும் ஈஈஈன்னு இளிக்கிற கெத்தே தனிதான்...😁😁.

விரைப்பா வீராப்பா  திரியுற பசங்க பொண்ணுங்கள்ட பேசும் போது தயங்குற தயங்கு இருக்கே...ப்பா...💖

அதுலயும் பசங்க வெட்க படுறத பாக்க தவமே இருக்கலாம்....💕

ஓரக்கண்ணழகன்கள்தான் அதிகம்....
நாங்களும் ரசிப்போம்...
அழக அழகா ரசிப்போம்...💝


Makeupக்கு மெனக்கெடாம likes அள்ளுவாங்க...(Facebook likesஅ சொல்லல)....💟💟💟

காதலுக்கும் இதற்கும்
சம்மந்தமில்லை என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி முடிக்கிறேன்...👊👊👊👊


No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...