நா போறேன்... என்றாள்
எங்கேயோ போ..எனக்கென்ன...என்றான்...
சிறிது நேரத்திற்கு பின்...
வீட்டருகே இருந்த பார்க்கில் அமர்ந்திருந்தாள்...(அவனுக்கும் தெரியும் அவள் அங்கே இருப்பாளென்று)
அவளுக்கு தெரியாமல் அருகில் அமர்ந்தான்..
ஊடலின் மிச்சத்தையும் கரைத்து
ஏன் வந்த...போ என்றாள்...
அவள் காதுக்கருகில் வந்து...குழைந்த தொனியில்..
"என் ஆள அப்டிலாம் விட முடியாது" என்றான்...
மழைத்தூரல் மண் நனைக்க,காதல் கண் நனைத்தது...
முந்தானை குடையாகி, கூடலின் உரசல் தொடங்கியது...
மகுடிக்கு மயங்காத பாம்பெங்கே...🙏


No comments:
Post a Comment