Monday, 10 September 2018

சமுத்திரா...😚


சமுத்திரா...
     அந்த கடல் போல ஓயாத பேச்சுக்காரி...அடாவடியானவள். கல்லூரி கேண்டீனில் தான் அதிக நேரம் அவளை பார்க்க முடியும்...சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பார்ப்பதில்லை...
     ‎ஏய் ..பவுடர்  அதிகமா இருக்கு..தொடச்சிட்டு போடா  ..
     ஷேவ் பண்ணியா...கேவலமா இருக்க...
என்று ஓப்பன் கமெண்டுகள் தான் எப்போதும்..
மருத்துவ மாணவிதான்...வெள்ளை கோட் போட்டால் நம்புவார்கள் என்பதற்காகவே எப்போது அணிந்திருப்பாள்...அவளை போலதான் மதியும்...
வழக்கம் போல் ஆசிரியரிடமிருந்து தப்பித்து உள் நோயாளி பிரிவிலிருந்து வெளியே நடந்து வந்தார்கள் மதியும்,சமுத்திராவும்...
இதலாம் வீண் கதை...அதை விடுங்கள்
.
ஒருவர் கையில் நோட்டீஸ் கொண்டு வந்து சமுத்திராவிடம் கொடுத்தார்...
"வட்டியில்லா கடன்" விளம்பர நோட்டீஸ்...
கள களவென சிரிக்கும்போதே..அவர் பின்னால் திருப்பி காட்டினார்....
"இரண்டு முழங்காலிலும் வலி அதிகமாக உள்ளது..வேதனை தாங்க முடியவில்லை.." என்று எழுதியிருந்தது...
இவள் மேலும் வினவ  சைகையாலே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்..
ஆம்..அவரால் பேச இயலாது...எழுதுகாட்டினால் மட்டுமே வாசித்து பதிலளிக்கிறார்...
அவளே அன்று அவரை  மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள்...
அவரை அமர வைத்துவிட்டு மருந்து வாங்க சென்று விட்டாள்...
மது எண்ணெய் வாங்க புட்டி எடுத்துவர சென்று விட்டாள்...
துடுக்கு தேவதை மருந்து வாங்கும் இடத்திலும் சென்று கலாய்த்து சிரித்து மருந்து வாங்கி வாங்கி அதில் அளவையும் துணை மருந்தையும் எழுதி தந்தாள்....
அவர்..அவள் வருவதற்கு முன்பே அதிகம் சீவப்படாத காய்த குச்சியால் நோட்டிசின் பின்புறம் ..
"மிக்க நன்றி...உதவிக்கு"
என்றெழுதி வைத்திருந்ததை காட்டி கையெடுத்து கும்பிட்டார்...
அடாவடியானவளும்....அன்பு சூழுலகில் ஐக்கியமானாள்...
பின் தலையை தட்டி விட்டு....யோசித்தபடியே நகர்ந்தாள் நாயகி...
அடவடியானவள் 

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...