Monday, 10 September 2018

கொண்டாடி தீர்ப்போம்...

அவளுக்கென்றொரு தோரணையில்
வரையறுக்கப்படாத வாழ்வியலில் வாழ்கின்ற  இயல்பான ஒருத்தி...
சரியென்றும் தவறென்றும் இன்னும் சரிவர கட்டமைத்துக் கொள்ளாமல் நகர்கிறவள்...

இவளிடம் பிடித்ததே...
எளிதில் மன்னிப்புக்கேட்டு விடுவாள்...
(அப்டியே அசால்ட்டா கால்ல விழுந்துடனும்...)

உணவின் உலகத்திற்குள் மிக லகுவுடன் லாவகமாக பயணிக்கும் சோற்றின் காதலி...(சோறு சாமி சோறு...)

சுற்றித்திரியும் சுதந்திரக்காடு..(அப்டியே இடைல மானே தேனேனுலாம் போட்டுக்கனும்...)


உடைந்தழுவதில் இவளை மிஞ்ச எவருமில்லை...

வாய் பேசாதவைகளிடம் அதிகம் பேசும் வாய்சேட்டைக்காரி...

எந்த சூழ்நிலைக்கும் தன்னை இயல்பாக இணைத்துக்கொள்பவள்..(நாய்க்கு வேற வழி இல்ல)...

தன்னை கொண்டாடுவதில் ஈடு இணையில்லாதவள்...(... Self celebrations. Self gifts போன்றவைகள்...இதலாம் ஒரு பொழப்பானு கேப்பிங்க...its okay...)..

தம்பிகள் சூழுலகில் என்றும் நலமுடன் வாழ்பவள்...

ஆயிரம் ஆயிரம் நட்பெல்லலாம் இல்லை...அளவான நண்பர்களுடன் இந்த இன்புறு வாழ்க்கையை ருசிக்க வந்தவள்...

#அம்மா புள்ள
#வாயாடி
#சண்டக்காரி
#திமிர்பிடிச்சவ
#சீன்மூதேவி
#அவசரக்காரி
#அடங்காபிடாரி
#அராத்து
#பிரியாணி_பயித்தியம்
போன்ற பெயர்களுடன் சுற்றித்திரியும் நம் தேவதை(ச்சரி..விடுங்க...இன்னைக்கொரு நாளைக்கு சொல்லிக்குவோம்...) #சந்திரா_ப்ரியதர்ஷினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....💃💃💃💃💃


நம்மள நாம கொண்டாடுலனா வேற யாரு கொண்டாடுவா....











No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...