Friday, 24 March 2017

உயிரற்ற ஜீவன்..

முதன் முதலில்...

நாளை ஒரு உயிரற்ற மனிதரின் தோலை பிரித்து பாடம் கற்பிக்க பட உள்ளது என்று உற்சாகமாகதான் இருந்தேன்...ஆனால் அடுத்த நாள் ,அந்த அறைக்குள் நுழைய முடியாதவளாய் மனம் இறுக்கியது...

ஆனாலும் வேறு வழியில்லை..கடைசியாய் உள்ளே நுழைந்தேன்...

ஆம்...இறந்து நான்கு வருடங்களாகிய உயிரற்ற உடல் அது...பிணவாடை ஒன்றும் இல்லை...முழுதும் பார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்ட நெடி தான் அந்த அறை முழுதும்...

முழு நிர்வாணமாய் ,உடலிலுள்ள மயிர்களெல்லாம் வலித்து எடுக்கப்பட்டு,தலைகீழாய் அந்த மேசையின் மேல் படுக்க வைக்கப்பட்டிருந்தது...
உடல் அங்கங்கு கிழித்து வைக்கப்பட்டிருந்தது...

ஆசிரியர், ஒவ்வொரு  தசைகளாய் விரித்து விரித்து கற்பிக்க ஆரம்பித்தார்...தலைக்குள் எதுவும் நுழையவில்லை..

ஒரு பக்கமாக தெரிந்த அந்த தோல் சுருங்கிய அந்த முகம்,அந்த இரண்டு பற்களின் மேல் தான் என் கண்ணெல்லாம் இருந்தது...என்ன நினைத்து கொண்டு இந்த மனிதர் இங்கு படுத்திருப்பார் என்றெல்லாம் யோசித்தது...உயிர்தான் இல்லையே..😡

கையுறைக் கொண்டு தொட மனம் ஒப்ப வில்லை...வெறும் கைகளினாலே அந்த உயிரற்ற தசைகளை தொட்டு பார்த்தேன்...


வெறும் தசைகளும் எலும்புகளும் நரம்புகளும் ,ரத்தக்குழாய்களும்தான் உடல்...என்னன்னவோ எண்ணங்கள்..

உயிரற்ற மனிதன் தான் நிறைய கற்பித்தான் அன்று,ஆசிரியரை விட...😐😐

No comments:

என் பழைய பனை ஓலைகள்📜💝🐾

என் பழைய பனை ஓலைகள் - வைரமுத்து முதல்...முதல் என்பதை கடக்கத்தான் திராணி,அது இது என்று வேண்டும் ...பின் எல்லாம் பழகி விடும்.. முதன்முதலில...