விவசாயிகள் தினம்...
சில தினங்கள் கொண்டாடவோ,நினைவு கூறவோ,பாதுகாக்கவோ,விழிப்புணர்வு ஏர்படுத்தவோ போன்ற ஏதோவொரு காரணங்களுக்காக அரசாங்கமோ,காலம்காலாமாகவோ ஏற்படுத்தியும் ,ஏற்பட்டும் உள்ளன..
இன்று,அவை அனைத்துமான காரணங்களும் கூடிய நாள்....
ஆம்..
விவசாயிகளையும்,விவசாயத்தையும் 'கொண்டாடவும்",
தற்கொலைக்கு ஆளான விவசாயிகளையும்,
உணவே மருந்தாக,விவாசாயியே கடவுளாக இருந்த காலம் பற்றி "நினைவு கூறவும்",
அழிந்துக்கொண்டே,நாம் அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் "பாதுகாக்கவும்",
விவசாயத்தை மேம்படுத்த "விழிப்புணர்வு"ஏற்படுத்தவும் தான்..
பல தினங்களில் இதுவும் ஒன்றாக நினைத்துக்கொள்ளாமல், முகப்புத்தகத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றி விட்டதோடு இல்லாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்போம்...
நாட்டு விதைகளையும்,இயற்கை உரங்களையும் பயன்படுத்தி நலமான விளைச்சலை உருவாக்க அறிவியலை உபயோகிப்போம்..
எருவை உரமாக்கி
மண்ணை வளமாக்கி
விளைச்சலை பெருக்கி
விஷமற்ற உணவை உண்போம்....
உணவு அமிர்தமாகட்டும்..உடல் உரமாகட்டும்..மனிதம் நிலைக்கட்டும்..
விவசாயம் உயிர் பெறட்டும்...
No comments:
Post a Comment